தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஏ. ஆர். ரகுமான்: வாசிக்கப்பட வேண்டிய வாழ்க்கை

View previous topic View next topic Go down

ஏ. ஆர். ரகுமான்: வாசிக்கப்பட வேண்டிய வாழ்க்கை

Post by ஸ்ரீராம் on Fri May 03, 2013 9:19 am


[You must be registered and logged in to see this image.]
ஏ. ஆர். ரகுமானுடன் எழுத்தாளர் நஸ்ரின் முன்னி.
வாழ்க்கை பற்றிய ஆராய்ச்சிகளுக்கு அளவுமில்லை. முடிவுமில்லை. சோர்வும் இருப்பதில்லை. வாழ்க்கை பற்றியதான விடயங்களை மனிதன் காணத்துடிக்கின்ற நிலையில், அல்லது வாழ்க்கை பற்றிய நிறைவான உண்மையை அறிந்து கொள்கின்ற நிலையில், அடுத்த கணம் அப்படியே மாறியும் விடுகிறது. ஆய்ந்தறியக்கூடியதல்ல வாழ்க்கை என்பதை அது பற்றிய ஆய்வுகள் சொல்லி நிற்கும்.

வாழ்க்கையில் என்னதான் நாம் கோலங்களை போட்டுக் கொண்டாலும், உணர்வுகளில் வீச்சில் அப்படியே அடங்கிவிடுவது இயல்பாக நடக்கும் எளிய விஞ்ஞானம் என்பேன். இது பற்றி உணர்வுகளிடம் நடிக்க முடியாது என்ற தலைப்பில் 2009 ஆம் ஆண்டில் பதிவிட்டிருந்தேன். அது ஆஸ்கார் விருதுகள் வழங்கப்பட்ட நாள். இசையில் நாயகன் ஏ. ஆர். ரகுமான், இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்ற நாள்.
ஒரு பிள்ளை எழுதும் கிறுக்கல் தான் வாழ்க்கையா? அதில் அர்த்தம் தேடி அலைவதே வேட்கையா? அர்த்தம் புரியும் போது வாழ்வு மாறுதே! என்று ஏ. ஆர். ரகுமான் பாடுகின்ற பாடலும், வாழ்க்கை பற்றிய அழகைச் சொல்லிச் செல்லும்.
ஏ. ஆர். ரகுமான் அவர்கள் பற்றிய குறிப்புகளில் உத்வேகம் குடிகொண்டிருக்கும். இசைப் புயல், ஏ. ஆர். ரகுமானின் வாழ்க்கை சரிதத்தைக் கொண்ட உத்தியோகபூர்வ நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. A. R. Rahman: The Spirit of Music என்பதுதான் அதன் பெயர். நஸ்ரின் முன்னி கபீர் என்ற எழுத்தாளரோடு, கலந்துரையாடிய சம்பாஷணை வடிவில் நூல் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
என்னதான் சாதனைகள் செய்துவிட்ட போதிலும், தன்நிலையில் என்றுமே அடக்கமாயிருந்து, தன் காரியங்களில் அமைதியாகவே, கருமங்கள் செய்வதில் ஏ. ஆர். ரகுமானுக்கு நிகர் அவர் மட்டுந்தான். அதிகமே பேசாதவொரு ஆளுமையின் வாழ்க்கை பற்றிய குறிப்புகளை அறிந்து கொண்டு, அதனை நூல் வடிவிற்கு கொண்டுவருவதென்பது அவ்வளவு லேசுபட்ட காரியமல்ல.
அதிகமாகப் பேசாத ஒருவரின் வாழ்க்கை பற்றிய விடயங்களை தொகுப்பதென்பது எப்படிச் சாத்தியமாகும்? நஸ்ரின் முன்னி, எட்டு வருடங்களாக ரகுமானைத் தொடர்ந்து, இந்த சுயசரிதை நூலைத் தொகுத்துள்ளார். இந்த எட்டு வருட காலங்களுக்குள் ஏகப்பட்ட மாற்றங்கள் ஏ. ஆர். ரகுமானின் வாழ்க்கையில் ஏற்பட்டன. தமிழ், ஹிந்தி திரையுலகின் பிரபல இசையமைப்பாளரிலிருந்து, ஒஸ்கார் விருதுகளை வென்ற மேற்கத்திய சினிமாக்களுக்கும் இசையமைக்கும் இசையமைப்பாளராக மாறியதும் இதற்கிடையில் தான் நடந்தது.


தனது இளமைக் காலத்தில், வாழ்க்கை மீதான வெறுப்பு மிகவும் அதிகமாக இருந்ததாக, ஏ. ஆர். ரகுமான் சொல்ல, அதனைக் கேட்ட நஸ்ரின் முன்னிக்கு அதிர்ச்சியாக இருந்துள்ளது.
[You must be registered and logged in to see this image.]“என்னிடமிருந்த அந்தப் பணத்தின் மூலம், எனது முதலாவது Fostex 16-track mixer/recorder ஐ நான் வாங்கினேன். அந்தக் காலத்தில் சென்னையின் சினிமாக்களில், இசை ஒரு தனித்த பாடல் நிலையிலேயே பண்ணப்பட்டது, ஆனால் என்னிடம் 16 பாடல்கள் கொண்ட நிலையிருந்தது. அந்த காலப்பகுதியில் நான் பெற்ற இடர், அவமானம், மற்றவர்களால் நான் கட்டுப்படுத்தப்பட்டமை, எனது குடும்பத்தின் முகத்தில் கவலையைக் கண்டு கொண்டமை, தாழ்வுச் சிக்கலை எப்படி உணர்வேன் என யோசித்தமை, போதிய தன்னம்பிக்கை இல்லாமை, ஏன் சில நேரங்களில் – உயிரையே மாய்த்துக் கொள்வோமா என்று யோசித்தமை போன்ற எல்லா உணர்ச்சிகளும் மெல்லவே மறையத் தொடங்கின.
அந்த இரவில், இசையரங்கில் நான் அமர்ந்திருந்து கொண்டு, எனது புதிய recorder ஐ பார்த்துக் கொண்டிருந்தேன், அப்போது, நான் என்னை அரசனாக உணர்ந்து கொண்டேன். நான் புதியவனாய் உதயமானேன். ஒளிமயமான எதிர்காலம் பற்றிய சமிஞ்சை எனக்குத் தோன்றியது!” என்கிறார் ரகுமான்.


இதனைக் கேட்ட, நஸ்ரின் முன்னியோ அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டார். நிச்சயமாகத்தான் சொல்கிறீர்களா? என்று அவர் கேட்க, ரகுமான் அதற்கு “நம்பிக்கையே இல்லாமலிருந்தது. எப்படித்தான் இந்த விடயங்களிலிருந்து மீளப் போகிறேனோ? என்று பலவேளைகளில் நான் யோசித்துக் கொண்டிருந்திருக்கிறேன்.!” என்று பதிலளித்துள்ளார். அடக்கமாகவே, வாழ்க்கை பற்றிய அழகு நிலைகளைச் சொல்கின்ற இசையமைப்பாளரின் சிந்தனையோட்டம் தெளிவானது. அவரின் தேவைக்கதிமாக கதைக்காத நிலை மாறவேயில்லை. ரகுமானாகவே இருந்தார். இருக்கிறார். இந்த நூல் வெளியீட்டையொட்டி ராயிட்டர் செய்தி நிறுவனத்திற்கு அவர் வழங்கிய ஒரு நிமிட சுருக்கமான பேட்டி, வாழ்க்கை பற்றிய பல விடயங்களை சொல்லி நிற்கிறது.


அந்தக் குறுகிய பேட்டியிலிருந்து, சில பகுதிகளை நான் இப்பதிவின் தேவை கருதி, தமிழாக்கம் செய்கிறேன்.


கேள்வி: நீங்கள் வெறுப்பு, அன்பு ஆகியவற்றிக்கிடையில் தேர்ந்தெடுத்தல் பற்றிக் சொல்லியுள்ளிர்கள். நீங்கள் வெறுப்பை அல்லது ஒருவேளை பகையை, உங்கள் ஆஸ்கார் சாதனைகளின் பின்னர் அனுபவித்ததுண்டா?

ரகுமான்:
ஒவ்வொரு விடயமும் அதற்கான எதிரான விடயத்தைக் கொண்டுள்ளதென நான் நினைக்கிறேன். உங்களிடம் புகழ், அந்தஸ்து என எல்லாமுமே இருக்கின்ற நிலையில், அதற்கெதிரான விடயங்கள் உங்களைத் தேடிவரும் என ஆன்மீகமும் சொல்கிறது. ஆகையால், நான் அதற்காக காத்திருந்தேன். அது வந்தது, ஆனாலும் என்னால் அதனை கையாள முடிந்தது. அது அவ்வளவு நாசகாரமானதாக இருக்கவில்லை: நான் நினைத்தது போலவேயிருந்தது, ஆன்மீகமும் எனக்கு துணையாகியது. அது நடக்குமென்பதை அப்படியே எதிர்வுகூற முடியும். நான் 13 வயதிலிருந்தே பிரபல்யமாகயிருந்தேன் – இப்படியாக பழகிவிட்ட நிலையில், ஒரு விடயம் சார்பாக நல்ல வகையில், பார்ப்பதற்கான ஆர்வம் உங்களுக்கு வரும். அந்த நிலையில், நீங்கள் ஆக்கபூர்வமாக விடயங்களை காண்பதற்கும், அதன் மூலம் என்ன செய்யலாம் என்கின்ற எண்ணங்களாலும் போஷிக்கப்படுவது நிராசையாகவே நடந்தேறும்.கேள்வி:
பொதுநலவாய நாடுகளுக்கிடையான விளையாட்டுப் போட்டிக்கான பாடல் பற்றி நீங்கள் விமர்சனங்களை எதிர்கொண்டீர்கள். அது உங்களை பாதித்ததா?


ரகுமான்:
தோற்றுப் போவதற்கும் எனக்கு சந்தர்ப்பங்கள் வேண்டுமென, எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். ( சிரிக்கிறார்.)கேள்வி:
அதை நீங்கள் தோல்வியாகப் பார்க்கிறீர்களா?


ரகுமான்: ஆம் மற்றும் இல்லை. விளையாட்டு போட்டியின் பின்னர், ஆக்கபூர்வமான பல நிலைகள் தோன்றின. ஆனாலும், சிலருக்கோ, எதிர்மறையான விடயங்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனாலும், அது பரவாயில்லை.
எதுவுமே அலட்டிக் கொள்ளாமல், அமைதியாகவே சாதனை மேல், சாதனை செய்கின்ற ஆளுமைகள் சொல்லிச் செல்கின்ற ஒரேயொரு விடயம் – தன்னம்பிக்கை தான். “தன்னை நம்புகின்ற நிலையில், மனிதன் தன்னைச் சூழவுள்ள மனிதர்களுக்கும் நம்பிக்கையைக் கொடுக்கிறான், இதனால், அன்பினால் வலுப்பெற்ற உறவுகள் பிறக்கிறது. அடக்கம், ஆதரவு என்ற பண்புகள் நிராசையாகவே அவர்களிடையே தோன்றியும் விடுகிறது”.

நன்றி : உதய தாரகை.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233202  உறுப்பினர்கள்: 3600 | புதிய உறுப்பினர்: vinodh

[You must be registered and logged in to see this link.]


avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: ஏ. ஆர். ரகுமான்: வாசிக்கப்பட வேண்டிய வாழ்க்கை

Post by mohaideen on Fri May 03, 2013 1:34 pm

தன்நிலையில் என்றுமே அடக்கமாயிருந்து, தன்
காரியங்களில் அமைதியாகவே, கருமங்கள் செய்வதில் ஏ. ஆர். ரகுமானுக்கு நிகர் அவர்
மட்டுந்தான்

[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.]

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
avatar
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

Re: ஏ. ஆர். ரகுமான்: வாசிக்கப்பட வேண்டிய வாழ்க்கை

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat May 04, 2013 9:17 am

பாடம் படிப்போம்...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ஏ. ஆர். ரகுமான்: வாசிக்கப்பட வேண்டிய வாழ்க்கை

Post by முழுமுதலோன் on Sat May 04, 2013 1:12 pm

கைதட்டல் சூப்பர்
எதுவுமே அலட்டிக் கொள்ளாமல், அமைதியாகவே சாதனை மேல், சாதனை செய்கின்ற ஆளுமைகள் சொல்லிச் செல்கின்ற ஒரேயொரு விடயம் – தன்னம்பிக்கை தான். “தன்னை நம்புகின்ற நிலையில், மனிதன் தன்னைச் சூழவுள்ள மனிதர்களுக்கும் நம்பிக்கையைக் கொடுக்கிறான், இதனால், அன்பினால் வலுப்பெற்ற உறவுகள் பிறக்கிறது. அடக்கம், ஆதரவு என்ற பண்புகள் நிராசையாகவே அவர்களிடையே தோன்றியும் விடுகிறது”.

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 
[You must be registered and logged in to see this image.]
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: ஏ. ஆர். ரகுமான்: வாசிக்கப்பட வேண்டிய வாழ்க்கை

Post by Nanjil karthik on Mon Jul 08, 2013 10:46 pm

எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன் சாதிப்பவன் அதிகம் பேசுவது இல்லை என்பது உண்மை உணர்கிறேன் நன்றி
avatar
Nanjil karthik
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 16

Back to top Go down

Re: ஏ. ஆர். ரகுமான்: வாசிக்கப்பட வேண்டிய வாழ்க்கை

Post by Muthumohamed on Mon Jul 08, 2013 10:48 pm

[You must be registered and logged in to see this link.] wrote:எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன் சாதிப்பவன் அதிகம் பேசுவது இல்லை என்பது உண்மை  உணர்கிறேன் நன்றி

நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா 
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: ஏ. ஆர். ரகுமான்: வாசிக்கப்பட வேண்டிய வாழ்க்கை

Post by முரளிராஜா on Tue Jul 09, 2013 10:20 am

பகிர்ந்தமைக்கு நன்றி

_________________________________________________

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: ஏ. ஆர். ரகுமான்: வாசிக்கப்பட வேண்டிய வாழ்க்கை

Post by ஸ்ரீராம் on Tue Jul 09, 2013 3:31 pm

[You must be registered and logged in to see this link.] wrote:பகிர்ந்தமைக்கு நன்றி

ரொம்ப லேட்டு முழித்தல் 

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233202  உறுப்பினர்கள்: 3600 | புதிய உறுப்பினர்: vinodh

[You must be registered and logged in to see this link.]


avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: ஏ. ஆர். ரகுமான்: வாசிக்கப்பட வேண்டிய வாழ்க்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum