தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» இந்தியன், சாமி, சண்டக்கோழி இரண்டாம் பாகங்களில் நடிக்கும் கமல்ஹாசன், விக்ரம், விஷால்
by rammalar

» ‘மெர்சல்’ படத்தில் ஜல்லிக்கட்டு வீரராக விஜய் -தீபாவளிக்கு வெளியாகிறது
by rammalar

» 2018–ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு ‘நியூட்டன்’ இந்தி படம் பரிந்துரை
by rammalar

» 'சங்கமித்ரா' அப்டேட்: ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக திஷா பதானி ஒப்பந்தம்
by rammalar

» அலசல்: எது பெண்களுக்கான படம்?
by rammalar

» தத்துவ கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நீ என்ன தேவதை - கவிதை
by rammalar

» நாட்டு நடப்பு - கவிதை
by rammalar

» நதிக்கரை - கவிதை
by rammalar

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by rammalar

» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
by rammalar

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by rammalar

» 'டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
by rammalar

» 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
by rammalar

» இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
by rammalar

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by rammalar

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by rammalar

» கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
by rammalar

» திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
by rammalar

» செக்ஸ் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்
by rammalar

» இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
by rammalar

» டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
by rammalar

» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
by rammalar

» அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
by rammalar

» தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
by rammalar

» தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
by rammalar

» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்
by rammalar

» பொது இடங்களில் கட்டிப்பிடிக்கும் தம்பதியை சிறையில் அடைக்க வேண்டும்
by rammalar

» விஷ சேவல் கோழி மீன்
by rammalar

» காலம் கற்றுத் தந்த பாடம்…!
by rammalar

» வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
by rammalar

» கைவிடுதல் – கவிதை
by rammalar

» வேண்டும் – கவிதை
by rammalar

» மிருக உவமை…! – கவிதை
by rammalar

» அது ஒரு காதல் அலை…! – கவிதை
by rammalar

» காதலைக் கற்றுத் தந்தாள் – கவிதை
by rammalar

» நகை – கவிதை
by rammalar

» தலையெழுத்து – கவிதை
by rammalar

» சபதம் எடுப்போம்! -கவிதை
by rammalar

Top posting users this week
rammalar
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அது ஒரு சாதாரண பிள்ளை இல்லை. இணையற்ற ரத்னம்

View previous topic View next topic Go down

அது ஒரு சாதாரண பிள்ளை இல்லை. இணையற்ற ரத்னம்

Post by ஸ்ரீராம் on Mon Apr 15, 2013 3:21 pm

[You must be registered and logged in to see this image.]

காமராஜரைப் போன்றவர்களைக் கொண்டாடத் தவறுவதால்தான், இந்த தேசத்தில் ஒழுக்கமும், நேர்மையும் அழிந்து போய் மனிதாபிமானம் தெருவில் கிழிபட்டுக் கிடக்கிறது.

பெருந்தலைவர் முதல்வராக இருந்த சமயம்…. அவரது அன்னை சிவகாமி அம்மையாரை ஆனந்த விகடனுக்காக எழுத்தாளர் சாவி பேட்டி கண்டிருந்தார்.
அந்தப் பேட்டியை இப்போது படிக்கும் போது, நெஞ்சம் விம்முகிறது. இப்படிப்பட்ட தலைவர்கள் கிடைக்காமல் போனதுதான், ‘அரசியல்வாதிகள் என்போர் சமூக விரோதிகள்’ என்ற புதிய அர்த்தத்தை உருவாக்கியிருக்கிறது.

அந்தப் பேட்டி (2.7.1961):
விருது நகர் தெப்பக் குளம். குளத்தைச் சுற்றிலும் கடை வீதிகள். அந்த வீதிகளில் ஒன்றுக்குள்ளே பிரிந்து செல்லும் சந்துக்குள் புகுந்து சென்றால், அங்கிருந்து வேறொரு சந்து திரும்புகிறது.

அப்புறம் இன்னொரு சந்து. அதற்கப்புறம் மற்றொரு சந்து. அந்த சந்துக்குள்ளேதான் சுலோசன நாடார் வீதி எனும் அந்த சின்னஞ்சிறு சந்துக்குள்ளேதான், தமிழ்நாட்டின் தவப் புதல்வர் காமராஜர் அவர்களை ஈன்றெடுத்த அன்னை சிவகாமி அம்மாள் வாழ்ந்து வருகிறார்.

மிகச் சாதாரணமான ஓர் எளிய இல்லம். நாங்கள் போன சமயம் வாயில் கதவு திறந்தே வைக்கப்பட்டிருந்தது. அங்குள்ள கயிற்றுக் கட்டிலில் அந்த அம்மையார் படுத்திருந்தார். சின்ன இடம்தான். ஆனால் துப்புரவாக இருந்தது. நாலு பக்க சுவர்களிலும் தேச பக்தர்களின் படங்கள். அவற்றுக்கிடையே வேல்முருகன் படம். அதற்குப் பக்கத்தில் சத்யமூர்த்தியின் உருவம்.
கட்டிலில் படுத்திருந்த மூதாட்டியார் எங்களைக் கண்டதும் எழுந்து உட்கார்ந்தார். மூச்சுத் திணறியது.
“வாங்கய்யா…” என்று அன்புடன் இன்முகம் காட்டி அழைத்தபடியே எழுந்துபோய் மின்சார விளக்கின் சுவிட்சைப் போட்டார். விளக்கின் ஒளி அந்த எளிய வாழ்க்கையின் தூய்மையை இன்னும் பளிச்சென்று எடுத்துக் காட்டியது.

பண்புமிக்க அந்த மூதாட்டியார், ‘நீங்கள் யார்?’ என்று கூட கேட்கவில்லை. நாங்களாகவேதான் சொன்னோம் (இன்றைக்கு முதல்வரின் தாயார் அல்லது உறவினரை பேட்டியெடுக்க நேரம் கேட்டு மாதக் கணக்கில் காத்திருக்க வேண்டும்!).

“ஓர் ஒப்பற்ற தேசத் தொண்டனை, தியாகியை,
தலைவனை, தவப் புதல்வனைப் பெற்றெடுத்த, தங்கள் திருமுகத்தைக் கண்டுபோகவே வந்துள்ளோம். அந்த உத்தமனைப் பெற்றெடுத்த பாக்கியசாலி அல்லவா நீங்கள்?”

“ஆமாம் அய்யா… அது ஒரு சாதாரண பிள்ளை இல்லை. இணையற்ற ரத்னம்!” தொட்டிலில் இட்டு, தாலாட்டி வளர்த்த தாயின் உள்ளத்திலிருந்து வெளிப்பட்ட மணிவாக்கு இது.

“தங்கள் திருமகனைப் பற்றி தாங்கள் ஏதாவது சொல்ல வேண்டும்…”

“நான் என்ன சொல்லப் போறேன் அய்யா. எனக்கு
வயதாகிவிட்டது. அத்துடன் ரத்தக் கொதிப்பு வேறு. பேசினால் மூச்சுத் திணறுகிறது. ரெண்டு வருஷம் உப்பைத் தள்ளி பத்தியச் சாப்பாடு சாப்பிட்டேன். இப்போது பரவாயில்லை. சாப்பாட்டில் உப்பு சேர்த்துக் கொள்கிறேன்..”

“சென்னைக்குப் போய் மகனோடு இருப்பதில்லையா… என்று கேட்டபோது, அம்மூதாட்டியார் முறுவலித்தார்…”

“நல்லாச் சொன்னீங்கய்யா… அவன் மந்திரியாகி (முதல்வர்) ஏழெட்டு வருஷமாகுது. இதுவரைக்கும் நானங்கே அஞ்சு தடவைதான் போயிருப்பேன்…”
“போனால் ஒரு மாதம் இரண்டு மாதம் தங்கிவிட்டு வருவீர்களா…?”

“நல்லாச் சொன்னீங்கய்யா… தங்கறதாவது. போன உடனே, என்னை ஊருக்கு திரும்ப பயணம் பண்ணி அனுப்புவதிலேயே குறியாக இருப்பானே! பட்டணம் பார்க்கணும்னா சுத்திப் பாரு, திருப்பதிக்கு போகணும்னா போயிட்டு வா… எல்லாத்தையும் பாத்திட்டு உடனே விருதுநகருக்குப் போய்ச் சேரும்பானே…!”

“இந்த வீட்டுக்கு வந்து உங்களைப் பார்ப்பாரா?”
“உம்.. ஆறுமாசத்துக்கு ஒருக்கா வருவான். இப்படி வாசப்படி ஏறி உள்ளே வருவான். சவுக்கியமாம்மா?, என்று கேட்பான். இப்படியே திரும்பி, அப்படியே போயிடுவான். அவனுக்கு ஏது நேரம்?”

“மாசச் செலவுக்கு உங்களுக்கு பணம் அனுப்புகிறாரா?”
“அனுப்பறான். பொட்டிக் கடை தனக்கோடி நாடார் மூலமாத்தான் பணம் வரும்…”

“எவ்வளவு பணம் அனுப்பறாரு..?”
“120 ரூபாய்… பத்துமாய்யா? தண்ணி வரியே 13 ரூபா கட்டறேன். எனக்கு ஒரு மகள். அவள் புருஷன் இறந்து போயிட்டாரு. அவளுக்கு இரண்டு ஆம்பிளைப் பிள்ளைங்க. ஒருத்தன் வேலைவெட்டி இல்லாம இருக்கான். தங்கச்சி குடும்பம், குழந்தைங்கன்னு கவனிக்க மாட்டான். தங்கச்சி மகன்தானே.. ஒரு வேளை செஞ்சு வைப்பானா… செய்ய மாட்டான்யா.. மாசம் அந்த 120 ரூபாதான் கொடுப்பான். அதுக்குமேல செலவு செய்யக் கூடாதும்பான். அவங்கவங்க உழைச்சுப் பிழைக்கணும்பான்… நானும் பேசாம இருந்துடுவேன். அவன் சொல்றதும் நியாயம்தானேய்யா… ரேசன் வந்தது பாருங்க. அப்ப இங்க வந்திருந்தான். அவனக் கேட்டேன். ‘என்னப்பா, இருந்த வீட்டிலும் கேப்பை சாப்பிட்டதில்ல, வந்த வீட்டிலயும் சாப்பிட்டதில்ல. இப்ப இப்படி கேப்பையும் கம்பும் போடறாங்களே… இதை எப்படி சாப்பிடறது.. நெல்லு வாங்கித் தரப்படாதா?’-ன்னு கேட்டேன்… ‘நெல்லுப் பேச்சுப் பேசாதே… ஊருக்கெல்லாம் ஒண்ணு, நமக்கு ஒண்ணா…”ன்னு கேட்டான். அவன் சொல்றதும் நியாயம்தானேய்யா….”
(அதாவது காமராஜர் முதல்வராகும் முன்பு கூட அவர்கள் நெல்லு சோறு சாப்பிட்டவர்கள்.. ஆனால் அவர் முதல்வரான பிறகு கேப்பையும் கம்பும்தான் உணவு. முதல்வர் வீடாக இருந்தாலும், மக்களுக்கு என்னவோ அதுதான் தன் தாய்க்கும் என்பது பெருந்தலைவரின் கண்டிப்பான நிலைப்பாடு!)

“இந்த வீடு எப்போது கட்டினது?”
“அவன் பிறக்கிறதுக்கு முந்தியே கட்டினது. எனக்கு 17 வயசிலயே அவன் பிறந்தான். எனக்கு இருவத்தியஞ்சில அவன் தகப்பனார் இறந்து போனாரு. நிலம் நீச்செல்லாம் இருந்தது. இவன் செயில்ல இருக்கிறப்போ அதையெல்லாம் வித்து வித்து செலவழிச்சிட்டேன். இந்த வீடு ஒண்ணுதான் மிச்சம். சின்ன வயசுல, இவனைப் படிக்க வைக்கணும்னு நான் கொஞ்சமான பாடா பட்டேன். ஒரு வாத்தியார இட்டு வந்து படிக்கச் சொன்னேன்…”

“ஏன் படிப்பை விட்டுட்டாரு…”
“எட்டு வரைக்கும் படிச்சான். அப்புறம் மூளைக்கு எட்டலேன்னு விட்டுட்டான். வீட்டுல தங்க மாட்டான். தலை முழுக வரமாட்டான். பாடா படுத்துவான். கொட்ற மழையில எங்க போவானோ… எங்க திரிவானோ… வலைப் போட்டு தேடுனாலும் அம்பட மாட்டான். சரி, வெயிலடிச்சா வருவானா… அப்பவும் வரமாட்டான்.
ஆனா ஒண்ணு.. அப்பவும் தலைவலின்னு படுத்ததில்ல.. இப்பவும் படுத்ததில்லை. சின்னப் பிள்ளையில ரொம்ப அடம்பிடிப்பான். இப்ப எங்க போச்சோ தெரியல அந்தக் கோவமெல்லாம். அப்படி இருந்தவனா இப்படி அறிவாளியாகிட்டான்னு எனக்கே ஆச்சரியமா இருக்கய்யா… அதோ இருக்காரே முருகன்… அவன்தான் இவனுக்கு இவ்வளவு அறிவைக் கொடுத்திருக்கணும்..!”
இதைக் கூறும்போது, அந்த அன்னையின் முகத்தில் பெருமையும் மகிழ்ச்சியும் தாண்டவமாடின. ‘ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய்’, என்ற வள்ளுவரின் வாக்கு எவ்வளவு மெய்யான வாக்கு!

“உங்கள் மகன் படிக்கவில்லைதான். ஆனாலும், அவர் அறிவாளுக்கிடையே ஒரு சிறந்த அறிவாளியாக விளங்குகிறார். இந்த நாட்டில் உள்ள ஏழைக் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி அளிக்கிறார்…”

“ஆமாம் அய்யா… அவன் என் வயிற்றில் பிறந்த மாணிக்கம். இந்தக் கைகளால் அவனைத் தாலாட்டினேன், சீராட்டினேன்…”, தன் மணிக் கரங்களை பெருமையுடன் பார்த்து மகிழ்ந்தவண்ணம் கூறினார் அந்த அன்னை.
“நீங்கள் உங்கள் கைகளால் அவரைத் தாலாட்டினீர்கள். இன்று அவர் கைகள் இந்த நாட்டு மக்களையே தாலாட்டுகின்றன…”
“உண்மைதானய்யா…”

“நேரு இங்கு வந்திருந்தபோது, தங்களைப் பார்த்துவிட்டுப் போனாராமே… அவர் என்ன சொன்னார்?”
“சிரித்தபடியே மகிழ்ச்சியோடு என் கையைப் பிடித்து குலுக்கிவிட்டு ஏதோ சொன்னார். என் மகனும் அப்போது பக்கத்திலேதான் இருந்தான்.”

“நேருஜி என்ன சொன்னார்?”
“அவங்க பாஷை எனக்குப் புரிதாய்யா… என்னமோ சொன்னாரு… வேறென்ன சொல்லியிருப்பாரு… எல்லாரையும்போல் ‘இந்த மகனைப் பெற்றெடுத்த நீங்கள் பாக்கியசாலின்னு’ சொல்லியிருப்பாரு…!”

“இத்தகைய மகனைப் பெற்றெடுத்த தாங்கள் நிஜமாகவே பாக்கியசாலிதான். தமிழ்நாட்டுக்கு இப்படியொரு உத்தமனைப் பெற்றுக் கொடுத்த தங்களை வணங்குகிறோம் அம்மா… நாங்கள் விடைப் பெற்றுக் கொள்ளலாமா?”

“மகனைப் பெற்று வளர்த்து இந்த நாட்டுக்குக் கொடுத்துவிட்டேன். அவன் நீண்ட காலம் இருந்து இந்த நாட்டுக்கு மேலும் மேலும் சேவை செய்துகிட்டிருக்கணும் என்பதுதான் என் ஆசை…”
அந்த அன்னையின் கண்கள் கலங்கிவிட்டன.

“ஏன் கண்கலங்குகிறீர்கள்… இந்த மகனைப் பெற்றதற்கு மகிழ்ச்சியடையுங்கள்.”

“துறவியாகிவிட்ட பட்டினத்தடிகளை அவர் தாய் துறந்துவிட்டதைப் போல, நானும் என் மகனை இந்த நாட்டுக்காக துறந்துவிட்டு நிற்கிறேன்”, என்று கூறினார்.
தம்முடைய ஒரே தவப்புதல்வனை நாட்டுக்காக தியாகம் செய்துவிட்டு தனிமையில் வாழ்வதைக் காட்டிலும் பெரிய சோகம் ஒரு தாய்க்கு வேறென்ன இருக்க முடியும்!

நன்றி பார்த்திபன், மன்னார்குடி

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 37779 | பதிவுகள்: 231012  உறுப்பினர்கள்: 3539 | புதிய உறுப்பினர்: sargurusiva

[You must be registered and logged in to see this link.]


avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: அது ஒரு சாதாரண பிள்ளை இல்லை. இணையற்ற ரத்னம்

Post by முழுமுதலோன் on Mon Apr 15, 2013 3:33 pm

அருமையான பதிவு

“துறவியாகிவிட்ட பட்டினத்தடிகளை அவர் தாய் துறந்துவிட்டதைப் போல, நானும் என் மகனை இந்த நாட்டுக்காக துறந்துவிட்டு நிற்கிறேன்”,
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: அது ஒரு சாதாரண பிள்ளை இல்லை. இணையற்ற ரத்னம்

Post by முழுமுதலோன் on Mon Apr 15, 2013 3:33 pm

அருமையான பதிவு

“துறவியாகிவிட்ட பட்டினத்தடிகளை அவர் தாய் துறந்துவிட்டதைப் போல, நானும் என் மகனை இந்த நாட்டுக்காக துறந்துவிட்டு நிற்கிறேன்”,

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 
[You must be registered and logged in to see this image.]
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum