தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» 100க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்கள் இலவசமாக - புதிய லிங்கில்
by முனைவர் ப. குணசுந்தரி

» குவியல்
by முனைவர் ப. குணசுந்தரி

» இலவச இணைய மின் நூலகங்கள்
by முனைவர் ப. குணசுந்தரி

» தகவல்.நெட் விதிமுறைகள்
by முனைவர் ப. குணசுந்தரி

» எது மென்மை ?
by முனைவர் ப. குணசுந்தரி

» என்னைப்பற்றி
by முனைவர் ப. குணசுந்தரி

» சிறிய அளவிலான தொகை வைத்து ‘ரம்மி’ விளையாடுவது சூதாட்டம் ஆகாது
by rammalar

» ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசரமாக கூடுகிறது
by rammalar

» ஜெ., மரண விசாரணைக்கு அவகாசம்: நீதிபதி கோரிக்கை
by rammalar

» ரயில்வே பொருட்களை திருடியதாக 11 லட்சம் பேர் கைது
by rammalar

» கும்பமேளா திருவிழாவுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம்
by rammalar

» திருப்பதி: வி.ஐ.பி தரிசனம் டிச.23 முதல் ரத்து
by rammalar

» 2014 ஏப்ரலில் இருந்து மோடி அரசு விளம்பரத்திற்கு ரூ. 3,755 கோடி செலவு செய்து உள்ளது ஆர்டிஐ தகவல்
by rammalar

» டில்லியில் பனிப்பொழிவு: 19 ரயில்கள் ரத்து;17 ரயில்கள் தாமதம்
by rammalar

» எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி மறைவு
by rammalar

» அசாம்: வறுமையில் வாடும் திருமணமாகாத இளைஞர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன்
by rammalar

» சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு)
by rammalar

» ‛பத்மாவதி' க்கு நீடிக்கும் சிக்கல் : பார்லி. குழு முன் பன்சாலி ஆஜர்
by rammalar

» கான்பூரில் நிருபர் சுட்டுக்கொலை: நீளும் பத்திரிகையாளர்கள் கொலை பட்டியல்
by rammalar

» அமெரிக்க மேயராக சீக்கிய பெண் தேர்வு
by rammalar

» குழந்தையை காலை 6 மணிக்கு எழுப்பிவிடும் குரங்குகள்
by rammalar

» புயலுக்கு ‘ஒகி’ பெயர் எப்படி வந்தது? அடுத்து வருவது ‘சாகர்’ புயல்
by rammalar

» கார்த்திகை தீபம் - திருவண்ணாமலை சிறப்பு பேருந்துகள்
by rammalar

» தங்கம் விலை நிலவரம் - தொடர் பதிவு
by rammalar

» எனக்கும் முன்ஜாமீன் இல்லேன்னுட்டாங்க தலைவரே...!!
by rammalar

» நடிகை கல்யாணத்திற்கு வந்தவங்க ஏன் கண்கலங்கறாங்க..?
by rammalar

» சீட் கிடைச்சும் தலைவர் வருத்தமா இருக்காரே?
by rammalar

» என் செல்லுக்குட்டினுதான் கொஞ்சுறா...!
by rammalar

» கதாநாயகி துணி வாங்ககூட காசு இல்லாம கஷ்டப்படறாங்க!!
by rammalar

» படத்துல டைரக்டரோட டச் நிறைய இருக்காம்...!!
by rammalar

» துவைக்க ஈஸியா இருக்குற புடவை வேணும்....!!
by rammalar

» பத்தாவது கிரகம்...!!
by rammalar

» டீ யே மதுரம்...!!
by rammalar

» ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரன் போட்டி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
by rammalar

» நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதத்தில் புதிய கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என சகோதரர் தகவல்
by rammalar

» தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் சர்ச்சை காட்சிகள் நீக்கம்
by rammalar

» காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணிக்கு மூளையில் ரத்தக்கசிவு டெல்லி ஆஸ்பத்திரியில் அனுமதி
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நான் யார்........

View previous topic View next topic Go down

நான் யார்........

Post by muthuaiyer on Thu Jul 15, 2010 7:44 pm

நான் நாத்திகனல்ல. ஆனால் மூடநம்பிக்கைகளை வெறுப்பவன். சோம்பேறிகளுக்குத் துணைபோக மாட்டேன். கடவுளை நம்புங்கள். ஆனால் கடவுளையே நம்பி அமர்ந்து விடக்கூடாது. எனக்கென்று பல கடமைகள் இவ்வுலகில் இருக்கிறது என்று எண்ணி வாழுங்கள், மேலும் அதற்கேற்றாற்போல் செயல்பட வேண்டும். மனிதர்களைக்காட்டிலும் கடவுளை மிகவும் நம்பும் நாடு இந்தியாதான். இது தமிழர்களை மட்டும் குறித்து எழுதப்பட்டதல்ல. இமயம் முதல் குமரிவரை உதிர்ந்து கிடக்கும் கோடானுகோடி மக்களைக் குறித்த வண்ணம் எழுதியது. இந்தியர்கள் மற்ற பிற நாடுகளுக்குச் சென்றாலும் உடனே அங்கு ஒரு கோயிலையோ, குருத்வாராவையோ கட்ட முழுமூச்சுடன் இறங்கி இன்று பல அயல் நாடுகளில் சாதித்தும் இருக்கிறார்கள். இது நம் கலாச்சாரத்தைப் பரப்ப ஏதுவாக இருந்தாலும், கடவுளை நாம் எவ்வளவு அதிகம் நம்புகிறோம் என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. இப்படி தீவிர பக்தர்களாகிய நாம் இரான், இராக், குவைத், போன்ற நாடுகளில் முழு மூச்சுடன் செயல்படுகிறோமா என்றால், விடையை நாம் எல்லோருமே நன்கு அறிவோம். ஆகவே, கடவுளை நம்புங்கள், வெறியாகி நம்பாதீர்கள். கடவுள் நம்முடன் துணைபோகவும், வழிகாட்டவும்தான் இருக்கிறாரேயன்றி, நம் தேவைகள் எல்லாவற்றையும் மட்டும் பூர்த்தி செய்வதற்காக அல்ல என்பதை நான் நன்கு உணர்ந்தவன்.
நட்டகல்லைச் சுற்றிவந்து, நாலு குட்டுகுட்டியே, ப்ரார்த்தனை செய்யும் மனிதரைப் பார்த்து ஒரு சித்தர் கேட்கிறார், நட்ட கல்லும் பேசுமோ, நாதன் உள்ளிருக்கையில் என்று. நம்முள்ளேயே கடவுள் இருக்கிறான். அஹம் ப்ரஹ்ம்மாசி. அன்புடனும், பண்புடனும் நடந்துகொண்டால் நாமே கடவுள். நம்புங்கள் - நண்பனை நம்புங்கள். எதிரியையும் நண்பனாகக் கொள்ளலாம், ஆனால் நண்பன் எதிரியாக ஒருபோதும் ஆகக் கூடாது. இது தான் என் அறிமுகம்.
நன்றி,
வணக்கம்,
முத்து ஐயர்
avatar
muthuaiyer
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 63

Back to top Go down

Re: நான் யார்........

Post by Rikaz (Amarkkalam) on Thu Jul 15, 2010 8:49 pm

வணக்கம் முத்து ஐயரே அமர்க்களத்துக்கு வந்தமைக்கு மிக்க நன்றி உங்களின் மேலான பதிவுகள் இங்கு வரவேற்கப்படுகின்றன.
avatar
Rikaz (Amarkkalam)
தள நிர்வாகி
தள நிர்வாகி

பதிவுகள் : 108

Back to top Go down

Re: நான் யார்........

Post by muthuaiyer on Fri Jul 16, 2010 12:11 pm

நன்றி ஐயா, தங்கள் எல்லோருடைய வரவேற்புக்கும் மிக்க நன்றி.
நான் ஆன்மீகத்திலும், வேதாந்தத்திலும் மிக்க நாட்டமுடையவன். அவ்வப்போது என் மனதில் படுவதை என் வாழ்க்கை அனுபவத்தோடு இணைத்து எழுதுகிறேன்.

எனக்கு சரி என்றுபடுவது, பலபேருக்குத் தவறாகத்தோணலாம். இருந்தாலும் பதிவுகளை வெளிக்கொணர்வது என் கடமை. பிரசுரிப்பதும், மறுப்பதும் உங்கள் சித்தம்.

நந்தவனத்தில் ஒரு ரோசாப்பூ பூத்துக் குலுங்கி, தென்றலில் அசைந்து அசைந்து, அந்தத் தோட்டத்தின் மதிலுக்கு வெளியே தன்னை நீட்டிக்கொண்டு அவ்வழியே வருவோர் போவோரையெல்லாம் பார்த்துக் களித்துக் கொண்டிருந்தது.

அப்போது அவ்வழியே ஓர் இளைஞன் சென்றபோது அந்த ரோஜா மலர் அவன் கண்ணில் பட்டது. அதைப் பார்த்தவுடன் அவன் உடனே தன் மனதில் எண்ணியது, ஆஹா இந்தப் பூ என் காதலியின் தலையில் சூடப்பட்டால் எவ்வளவு அழகாயிருக்கும்.

சற்று நேரத்தில் கோயில் அர்ச்சகர் ஒருவர் அவ்வழியே கடந்து சென்றபோது அப்பூவைப் பார்த்து அவர் எண்ணியது, அடடா, இந்த மலர் என் ஈசனின் பாதத்தில் சமர்ப்பிக்கப் பட்டால் என்ன ஆனந்தமாக இருக்கும்.

பிறகு சுடுகாட்டில் பிணங்களை எரிக்கும்போது வெப்பத்தில் எலும்புக்கூடுகள் சில நேரங்களில் மீண்டும் உயிர்த்தெழுவதுபோல் எழும், அதை உடனே தன் கையில் இருக்கும் நீண்ட கம்பு ஒன்றைக் கொண்டு அதை அடித்து வீழ்த்துவான். அவனை மசானத்தின் வெட்டியான் என்றழைக்கப்படுவது வழக்கம். அவன் அப்போது அவ்வழியே சென்றபோது, ஆஹா, இந்த அழகான மலர் நேற்று என் கண்ணில் பட்டிருந்தால் அனாதையாய் எரிக்கப்பட்ட அந்த பரதேசியின் பிணத்தின் மீது போட்டு அதற்கு அஞ்சலி செலுத்தியிருக்கலாமே என்று அவன் மனதில் தோன்றியது

ஆக, இங்கு பூ ஒன்றுதான். ஆனால் அவரவர் வாழும் சூழ்நிலைக்கேற்ப அப்பூ நோக்கப் படுகிறது. அதுபோல, நான் எழுதும் கருத்து ஒன்றுதான், ஆனால் உலகில் பல்வேறு சூழ்நிலையில் வாழும் மனிதர்கள் தான் புரிந்துகொள்ளும் விதம் மட்டும் வெவ்வேறாகவும் இருக்கலாம். அதில் தப்பொன்றுமில்லை. அவர்கள் எழுதும் விமர்சனக் கோணத்தில் நானும் என் கருத்தைச் சிந்தித்து இன்னும் பல கருத்துக்கள் வெளிவரவும் வாய்ப்புள்ளது. ஆதி சங்கரர் அதைத்தான் சொல்கிறார். கரு நிறத்தைக் கருப்பென்று ஏற்றுக்கொள்ளாமல், கருப்பில்லை என்று வாதாடினால் கருப்பு நிறத்தில் பல்வேறு உண்மைகள் உலகுக்கு பலபேர்கள் மூலம் வெளிவர வாய்ப்பிருக்கிறதல்லவா.
என் சிந்தனைகள் தொடர்ந்து உங்களை நாடிவரும்.
நன்றி,
முத்து ஐயர்
avatar
muthuaiyer
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 63

Back to top Go down

Re: நான் யார்........

Post by Rikaz (Amarkkalam) on Fri Jul 16, 2010 2:30 pm

உண்மையிலே உங்களின் இந்த பதிவு அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று. எதிலும் ஒரு ஆராய்ந்து பார்க்கும் முனைப்புத்தன்மை இருந்தால் அதிலிருக்கும் நல்ல விசயங்களையும் அறியலாம் அதனால் ஏற்படும் தீமைகளையும் அறியலாம் ஆனால் நாம் எதனை அறியப்போகிறோம் பின்பற்றப்போகிறோம் என்பது தான் நம் முடிவு.

உங்களின் பதிவிற்காய் காத்திருக்கும் தோழன் நான்.

நன்றி
avatar
Rikaz (Amarkkalam)
தள நிர்வாகி
தள நிர்வாகி

பதிவுகள் : 108

Back to top Go down

Re: நான் யார்........

Post by இனியவளே on Fri Jul 16, 2010 3:25 pm

முத்து அவர்களே உங்களின் பதிவு மிக்க நல்ல கருத்து

நீங்கள் சொல்வது முற்றிலும் நல்லனவே

தங்களின் பதிவிற்கு மிக நன்றி
avatar
இனியவளே
தள நிர்வாகி
தள நிர்வாகி

பதிவுகள் : 476

Back to top Go down

Re: நான் யார்........

Post by Guest on Sat Jul 17, 2010 8:55 am

அன்புடன் வரவேற்கிறேன் முத்து ஐயர் அவர்களே
தங்களின் கருத்துக்கள் சுதந்திரமாக பதிவுசெய்யுங்கள்
avatar
Guest
Guest


Back to top Go down

Re: நான் யார்........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum