தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» சின்னச் சின்ன அணுக்கவிதை
by கவிப்புயல் இனியவன்

» MPACT IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 4,5,6 UPDATED
by thiru907

» காஞ்சிபுரம் திருவள்ளுவர் TNPSC பயிற்சி மையம் மாதிரித்தேர்வு வினாத்தாள்கள் விடைகளுடன் TEST 1,2
by thiru907

» AIMS WELFARE TRUST CCSE-IV - TEST SERIOUS (1-27)
by thiru907

» TODAY'S ALLEPAPERS 18-01-2018
by thiru907

» ஆதித்யா TNPSC பயிற்சி மையம் வழங்கிய முழு தேர்வுகள்
by thiru907

» ஆயக்குடி பயிற்சி மையத்தின் (14-01-2018) வெளியிட்ட NOTES
by thiru907

» CCSE IV தேர்விற்கு ஜனவரி 15 வரை நடப்பு நிகழ்வுகள் நன்கு படியுங்கள்
by thiru907

» ஆயக்குடி பயிற்சி மையம் இதுவரை வெளிட்ட முக்கிய பொதுத்தமிழ் NOTES PART 1
by thiru907

» FUTURE VISION ACADAMY வெளியிட்டுள்ள CCSE IV பொருளாதார முழு தேர்வு
by thiru907

» தை பிறந்தால் வழி பிறக்க வருக
by கவிப்புயல் இனியவன்

» ஆகாஷ் IAS அகாடமி பொது தமிழ் முழு தேர்வு
by thiru907

» ஆயக்குடி மையத்தின் பொது தமிழ் மாதிரி தேர்வு (200 mark)
by thiru907

» TNPSC CCSE IV தேர்வுக்கான நோக்கில் தயாரிக்கப்பட்ட முக்கிய 635 வினாக்கள்
by thiru907

» குரூப் 4 தேர்விற்கு தேவையான முக்கிய குறிப்புக்கள்
by thiru907

» அன்னை IAS ACADEMY நடத்தி கொண்டு இருக்கும் CCSEIV WEEKLY TEST
by thiru907

» கணிதத்தில் 1 மணிநேரம் செய்து பாருங்கள்
by thiru907

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» திண்ணை மனிதவள மேம்பாட்டு பயிற்சி மையம்-தேனி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark நடப்பு நிகழ்கவுகள்
by thiru907

» அகரம் A2 ACADEMY இப்போது நடத்தி கொண்டு இருக்கும் CCSEIV தேர்வு
by thiru907

» Target TNPSC FB Group Tamil Model question paper collection (16 Sets) SINGLE PDF
by thiru907

» ENGLISH GRAMMAR FROM 6th to 10th Samacheer books
by thiru907

» RADIAN IAS ACADEMY வெளியிட்ட பொது தமிழ் பாட தொகுப்பு
by thiru907

» சிகரம் அகாடமி வெளியிட்ட முக்கிய மாதிரி தேர்வுகள் விடைகளுடன்
by thiru907

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» RADIAN ACADEMY வெளியிட்ட CCSEIV நடப்பு நிகழ்வு, கணிதம், சமூக அறிவியல்
by thiru907

» பொதுத் தமிழ் - செய்யுள்- வாழ்த்து important points to remember(full book)
by thiru907

» ஆயக்குடி பயிற்சி மையத்தின் (07-01-2018) வெளியிட்ட NOTES
by thiru907

» FOR GENERAL ENGLISH STUDENT NOTES ONLY FULL PAGES NOTES FROM GK TODAY. ECONOMY,HISTORY,SCIENCE,GEOG
by thiru907

» பொது அறிவு உலகம் [EXCLUSIVE MAGAZINE][HD QUALITY] march to jan 2018
by thiru907

» இந்திய வரலாறு முழு புத்தகம் from ஆகாஷ் IAS அகடாமி
by thiru907

» சீமானாக மாறிய பிரகாஷ்ராஜ்; கன்னடர்கள் மட்டுமே ஆட்சி செய்ய வேண்டும்!
by rammalar

» விஷாலின் ‘இரும்புத்திரை’ ஷூட்டிங் ஓவர்
by rammalar

» ஆங்கில புத்தாண்டை மரண மட்டையாக்கிய ஓவியா
by rammalar

» கலையரசன் நடித்துள்ள ‘டைட்டானிக் - காதலும் கவுந்து போகும்’
by rammalar

» திரைப் பெண்கள்: பிரபலம் என்றாலும் ‘பெண்’தான்
by rammalar

» அன்புக்கு நன்றி; 'அறம்' வளர்ப்பேன்!: நயன்தாரா நெகிழ்ச்சி
by rammalar

» கதாநாயகியாக அறிமுகம் 'பிக் பாஸ்' ஜூலி!
by rammalar

» விசுவாசம்' இசையமைப்பாளர் பொறுப்பிலிருந்து யுவன் விலகல்?
by rammalar

» 10 ஆண்டுகளுக்குப் பிறகு முருகதாஸுடன் இணைவது மகத்தானது: ஏ.ஆர்.ரஹ்மான் நெகிழ்ச்சி
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அன்னை தெரேசா - வரலாற்று நாயகி

View previous topic View next topic Go down

அன்னை தெரேசா - வரலாற்று நாயகி

Post by ஸ்ரீராம் on Tue Mar 19, 2013 10:46 pm

குட்டையான உருவம், முகத்தில் சுருக்கம், எப்போதும் நீலக் கோடுகளைக் கொண்ட தூய்மையான வெள்ளையாடை, முகத்தில் எப்போதும் புன்னகை இவற்றை தாங்கியபடி உலக மக்களின் இதயத்தில் வலம் வந்தவர் அன்னை திரேசா. மகத்துவம்மிக்க மாபெரும் பணிகளை ஆற்றி வந்த இந்த மனிதநேயம் மரணித்து கடந்த (2012) செப்டெம்பர் 5 ஆம் திகதி பதினைந்து வருடங்கள் நிறைவு பெறுகிறது.

இவ்வொளி விளக்கு இவ்வுலகில் வாழ்ந்த சமகாலத்தில் வாழ்ந்தது நாம் செய்த பாக்கியமே. யார் இந்த அன்னை திரேசா? கருணையே வடிவான இம்மலர் 1910 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் திகதி அல்பேனியா நாட்டின் ஸ்கோப்ஜே என்ற குக்கிராமத்தில் பொஜாஸியு டிரேன், நிக்கோலா தம்பதியருக்கு கடைக்குட்டியாக பிறந்தது. ஞானஸ்நானத்தின் வழியே கொன்சா அக்னஸ் என்ற இனிய நாமத்தை சூடிக் கொண்ட இம்மலர் 1916 ஆம் ஆண்டு தனது ஐந்தாம் வயதில் முதல் நன்மை திருவருட்சாதனத்தை பெற்றுக் கொண்டது.

எந்தவொரு பணி வாழ்வில் ஈடுபடுவோரும் தமது வாழ்வில் மேடுபள்ளங்களை சந்திப்பது இயற்கையே. அப்படித்தான் இம்மலரின் வாழ்விலும் ஏற்பட்டது. தனது எட்டாவது வயதில் தந்தையை இழந்தது. இதனால் இக்குடும்பம் பெரும் பாதிப்புக்குள்ளானது. இத்தகைய சூழலில் இம்மலர் இறைபக்தியிலும் சமூக சேவையிலும் நாட்டம் செலுத்தியது. தனது பங்கு ஆலயத்தில் பல புனிதர்களின் தியாகம்மிக்க வரலாறுகளை படித்தறிந்ததன் மூலம் அதன் வழியே மக்களுக்கு சேவைகள் புரிவது குறித்து உணர்ந்து கொண்டது. அத்துடன் தனது பன்னிரெண்டாவது வயதில் ஒரு அருட் சகோதரியாக மாற வேண்டும் என்ற எண்ணத்தையும் தன்னகத்தே கொண்டது.

அதன்படியே 1928 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் பதினெட்டாவது வயதில் தனது தாய் மற்றும் பங்குத் தந்தையின் ஆசியுடன் துறவறப் பணிக்காக தன்னை அர்ப்பணித்து அயர்லாந்தில் உள்ள லொரேடோ புனித கன்னிமரியாள் சபையில் சேர்ந்து பணியாற்ற விழைந்தார். இச்சபையின் துறவிகளை "பிரசங்க கன்னியர்' என அழைப்பர். அதே ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியா சென்று பணியாற்றும்படி இவருக்கு இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆகவே 1929 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் திகதி இந்திய பெருந்தேசத்தின் கல்கத்தா நோக்கி பயணமானார். அங்கு சென்ற இவர் தனது துறவற மடத்தின் வேண்டுகோளின்படி இறையியல் படிப்பையும், ஆசிரியர் பயிற்சியையும் மேற்கொண்டார்.

அதே ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி தனது "அர்ப்பண உறுதி' வார்த்தைப்பாட்டின் போது கொன்சா அக்னஸ், புனித குழந்தை திரேசாவின் கன்னிமை வாழ்வின் மீது கொண்ட பற்றினால் தனது பெயரை திரேசா எனத் திரித்துக் கொண்டார். அத்துடன் கல்கத்தாவில் புனித மரியாள் பெண்கள் பாடசாலையில் சில காலம் ஆசிரியராகவும், அதிபராகவும் கடமையாற்றினார்.

1931 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் திகதி அருட் சகோதரியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். 1937 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் திகதி இறுதி அர்ப்பண உறுதி வார்த்தைப்பாட்டினை வழங்கினார். அன்னையவர் 1946 ஆம் ஆண்டு செப்டெம்பர் 10 ஆம் திகதி தனது வருடாந்த ஞான ஒடுக்கத்திற்காக டார்ஜிங் சென்று திரும்புகையில் அவருக்கான இறையழைத்தல் வேறாக இருந்தது. தனது உள்ளத்து உணர்வுகள் இறை ஏவுதலால் நிரம்பப் பெற்றிருப்பதை உணர்ந்தார். ஏற்கனவே ஏழைகள், கைவிடப்பட்டோர், அநாதைகள் குறித்த சிந்தனைகளில் நெருடப்பட்டிருந்த அவர் மனம் ஏழைகளுக்காகவும், கைவிடப்பட்ட நிலையில் வாழும் அநாதைகளுக்காகவும் குஷ்டரோகிகளுக்காகவும் ஒரு துறவற சபையை உருவாக்கும் சிந்தனைக்குள் ஆட்பட்டது.

ஆகவே தனது ஆன்ம குருவாகிய வான்எக்சம் அடிகளிடம் தனது எண்ணத்தை தெரிவித்து அவரின் நல்லாசியுடன் ஆயரின் அனுமதியையும் பெற்றார். அதன் பிரதிபலன் 1948 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் திகதி லொரேடோ சபையிலிருந்து வெளியேறி இந்திய கலாசாரத்திற்குள் தன்னை ஆட்படுத்திக் கொள்ளும் விதத்தில் நீலநிறக் கோடுகளைக் கொண்ட வெள்ளை நிறச் சேலையை தூய்மையின் சின்னமாக தேர்ந்து கொண்டார். இது அன்னையவர் தனது பணிக்கு அடித்தளமிட்ட முதல் அத்திவாரமாகும். தொடர்ந்து மூன்று மாதம் மருத்துவ படிப்பினையை மேற்கொண்ட இவர் அதே வருடம் டிசெம்பர் 21 ஆம் திகதி தொடங்கி பெற்றோரால் கைவிடப்பட்ட பிள்ளைகள், பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர், யாருமற்ற அநாதைகள், காசநோய் மற்றும் குஷ்டரோகங்களால் அவதிப்பட்டோரை நாடிச் செல்லலானார். அவர்களுக்கு தஞ்சமளிக்கும் தாயானார்.

எந்தவொரு பணியிலும் ஏமாற்றங்கள் தாக்கங்கள் ஏற்படுவது இயல்பே. இதற்கு அன்னையும் விதிவிலக்கல்ல. ஆரம்பக் காலத்தில் பல தடைகள் ஏற்பட்டன. ஆனால் யாவற்றையும் கருணையே வடிவான தனது புன்னகையால் வெற்றி கொண்டார். ஒருமுறை அன்னையவர் தனது அன்பு உறவுகளுக்காக உதவி கேட்டு ஒரு வர்த்தகரிடம் கையேந்தினார். ஆனால் அந்த வர்த்தகரோ அன்னையின் நோக்கத்தை உணராது அக்கரத்தின் மீது எச்சிலை உமிழ்ந்தார். உடனே அன்னையவர் அக்கரத்தை மடித்தபடி மறுகரத்தை நீட்டி எனக்குரியதை தந்து விட்டீர்கள். இனி அவர்களுக்காக உங்களால் முடிந்ததை தாருங்கள் என்றார். ஆக, அன்னையின் செயலில் மனம் நெகிழ்ந்து போன அந்த வர்த்தகர் தேவையான உதவியை வாரி வழங்கினார்.

இதனிடையே அன்னையவர் தினமும் கரத்தில் செபமாலையை ஏந்தி செபித்து அனுதினமும் திவ்விய நற்கருணையை உட்கொண்டு இறைவனின் சந்நிதியில் சங்கமிக்கலானார்.

அன்னையின் வழியில் பல மாணவர்கள் இணைந்து கொள்ளலாயினர். அவரின் இப்பணிகளை அவதானித்து வந்த கல்கத்தா மறை மாவட்ட திருச்சபை அன்னை உருவாக்கிய அன்பின் துறவற சபையை அங்கீகரித்தது. 1954 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் திகதி அச்சபையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார். அத்துடன் 1960 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தனது சபை கன்னியர்களை நாட்டின் பல பகுதிகளுக்கும் பணியாற்ற அனுப்பி வைத்தார்.

1965 ஆம் ஆண்டு அப்போதைய திருத்தந்தை ஆறாம் சின்னப்பர் இச்சபைக்கு தனது அங்கீகாரத்தை வழங்கினார். அத்துடன் வெனிசுலா நாட்டிலும் இச்சபையை ஆரம்பிக்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டது. வெனிசுலாவில் மட்டுமன்றி உரோம், தன்சானியா உள்ளிட்ட பல நாடுகளிலும் இத்துறவற சபை வேர்விடத் தொடங்கியது. அந்நாடுகளில் வாழும் ஏராளமான கன்னியர் இச்சபையினூடாக துறவறப் பணிக்குள் இணைந்து சேவையாற்ற விளைந்தனர். இத்தகைய நிலையில் சபையின் உயர் நோக்கத்தை அறிந்துணர்ந்த பெரும் செல்வந்தர்கள், அமைப்புகள், அரச மட்டத்திலான தூதரகங்கள் உதவிகளை வாரி வழங்கத் தொடங்கினர்.

மேலும் அன்னை அருட் தந்தையர், அருட் சகோதரர்கள், தனது மாணவர்களினதும் வறிய மக்களினதும் ஆன்மிக நலன் மற்றும் சேவைகளை கருத்திற் கொண்டு Missionaries of charity brothers, Contemplative branch of the sisters, Contemplative brothers The Missonaries of charity fathers, Day Missionaries of charity போன்ற பெயர்களில் பல அமைப்புகளை உருவாக்கினார். அத்துடன் பல அருட் தந்தையர்களின் வேண்டுகோளுக்கிணங்க இயேசுவின் திருவுடல், திரு இரத்த இயக்கத்தையும் ஆரம்பித்தார். இச்சபைகள் 1980 1990 காலப் பகுதியில் சோவியத் யூனியன், அல்பேனியா, கியூபா உள்ளடங்கலாக கொம்யூனிச நாடுகளிலும் ஸ்தாபிக்கப்பட்டது. இவற்றினூடாக யாவரினதும் கண்கள் அவரின்பால் திரும்பின. 1962 ஆம் ஆண்டு இந்திய அரசு பத்ம ஸ்ரீ பட்டத்தை வழங்கி கௌரவித்தது. 1979 ஆம் ஆண்டு சர்வதேச விருதான நோபல் பரிசும் வழங்கப்பட்டது. 1996 ஆம் ஆண்டு அமெரிக்கா கௌரவ பிரஜை உரிமையை வழங்கியது. மேலும் அன்னையவர் ஏராளமான விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

அவர் இவ்வுலகை விட்டுப் பிரியும் போது அவரின் வழியில் சராசரியாக 5000 அருட் சகோதரிகள் பணியாற்றினர். அத்துடன் உலகின் 123 நாடுகளில் அன்பின் துறவற சபை 713 கிளைகளைக் கொண்டிருந்தது. 1967 ஆம் ஆண்டு அப்போதைய கொழும்பு உயர் மறைமாவட்ட பேராயர் கருதினால் தோமஸ் குரே ஆண்டகையின் அழைப்பின் பேரில் அன்னையவர் இரு அருட் சகோதரிகளுடன் இலங்கை வந்து இரு மாதங்கள் தங்கியிருந்தார்.

அவ்வேளையில் சேரிப் புறங்களுக்குச் சென்று பல உதவிகளை புரிந்தமை நினைவு கூரத்தக்கது. செக்கடித்தெரு புனித அன்னம்மாள் பங்கில் "பிரேம் நிவாஸ' எனும் பெயரில் சபை ஆரம்பிக்கப்பட்டது. காலப் போக்கில் இடவசதியின்மை காரணமாக அது முகத்துவாரம் சாந்தி நிவாஸவிற்கு மாற்றப்பட்டு சேவைதனை தற்போது தொடர்கிறது. அத்துடன் மொரட்டுவ, கண்டி, திருகோணமலை, வவுனியா, குருநாகல், யாழ்ப்பாணம் ஆகிய இடங்களிலும் அன்னையின் வழியில் சேவை இல்லங்கள் நன்கு செயல்பட்டு வருகின்றன. அர்ப்பணிப்பின் இலக்கணம், சேவைகளின் பிரதிவிம்பம் அன்னை திரேசா 1997 ஆம் ஆண்டு செப்டெம்பர் 5 ஆம் திகதி இறைவனால் தனக்கு வழங்கப்பட்ட பெறுமதி மிக்க காலப் பகுதியை ஏழைகள், பிணியாளர்கள், துன்பப்பட்டவர்கள், அநாதைகள் ஆகியோருடன் பின்னிப் பிணைந்து வாழ்ந்த ஆறுதலுடன் இறை சந்நிதியில் சங்கமித்தார்.

அன்னை திரேசா காலமாகிய பின் அவரில் விசுவாசங் கொண்டு கடும் புற்றுநோயினால் அவதிப்பட்ட மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மோனிகா பேஸ்ரா என்ற மாது அன்னையிடம் தனது புற்றுநோய் சுகமாக தினமும் மன்றாட வந்தார். அதன்படியே அவர் பரிபூரணமாக குணமடைந்தமை நிரூபிக்கப்பட்டது. அத்துடன் மேலும் பல புதுமைகள் நிகழ்ந்தமையை காலஞ் சென்ற திருத்தந்தை 23 ஆம் அருளப்பர் சின்னப்பர் ஏற்றுக் கொண்டதுடன், அவர் திருச்சபையை வழிநடத்தும் பொறுப்பினை ஏற்ற 25 வருட நிறைவு வெள்ளிவிழா திருப்பலியின் போது பல்லாயிரம் மக்கள் வத்திக்கானில் ஒன்று திரண்டிருக்க அன்னையை முத்திப் பேறுபெற்ற (அருளாளர்) திரேசா என பகிரங்கப்படுத்தினார். அன்னை திரேசாவின் வழியே அப்பொறுப்பினை தற்போது ஏற்று அன்பின் துறவற சபையை வழி நடத்தி வரும் அருட் சகோதரி நிர்மலா உள்ளிட்ட உலகெங்கும் பரந்து வாழும் அன்னை திரேசாவின் அன்பின் துறவற சபையின் அருட் சகோதரிகளின் பணிகள் மென்மேலும் விரிவடைந்து அனைத்து மக்களும் சுபிட்சமாக வாழ இறைவனை நோக்கி மன்றாடுவோம்

நீ கருவுற்று இருந்தால் ஒரு குழந்தைக்கு தான் தாயாகி இருப்பாய்
ஆனால், நீ கருணையுற்றதால் பல்லாயிரம் குழந்தைகளுக்கு தாயாகி இருக்கிறாய்.


நன்றி பனிப்புலம்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 38765 | பதிவுகள்: 232221  உறுப்பினர்கள்: 3582 | புதிய உறுப்பினர்: senthil83

[You must be registered and logged in to see this link.]


avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: அன்னை தெரேசா - வரலாற்று நாயகி

Post by ஜேக் on Wed Mar 20, 2013 5:47 am

அன்னை தெரசா அவர்களைப் போன்ற பெண்மணிகள் நமது தேசத்திற்கு இன்னும் தேவை... அப்படிப்பட்ட சேவை மனப்பான்மை உள்ளோர் தேசத்தில் எழும்ப பிரார்த்தனை செய்கிறேன்

நல்ல தகவலை அறியச் செய்தமைக்கு நன்றி... [You must be registered and logged in to see this image.]
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum