யோகாவில் அசத்தும் கோவை கூலி தொழிலாளியின் மகள்


கோவை விலாங்குறிச்சியைச் சேர்ந்த பத்து வயதான பிரதீபா, அங்குள்ள பள்ளி
ஒன்றில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். அப்பா பூவராகவன்
கூலித்தொழிலாளி. அன்றாடம் சம்பாதித்ததால்தான் குடும்பத்தை நடத்தமுடியும்.
சிரமமான
சூழ்நிலையில் வளர்ந்து வந்தாலும் பிரதீபாவிற்குள் ஒரு ஆற்றல் உள்ளது. அந்த
ஆற்றல் யோகா கலையின் மூலம் வெளிப்பட்டுள்ளது. மாநில அளவில் நடந்த
போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றதும் அனைவரும், "யாரது பிரதீபா' என்று
கேட்டு திரும்பிப் பார்த்தனர், மாநில சாதனை படைத்த கையோடு குஜராத்தில்
நடந்த தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொண்டு, மூன்றாவது இடத்தை பெற்றதும்
திரும்பிப் பார்த்தவர்கள் பிரதீபாவை விரும்பி பாராட்டினர்.
தற்போது
மேமாதம் மலேசியாவில் நடக்க உள்ள சர்வதேசச போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.
இதற்கான கடுமையான பயிற்சியிலும் ஈடுபட்டுள்ளார். வறுமை காரணமாக பிரதீபாவின்
திறமை தடைபட்டுவிடக்கூடாது என்பதற்காக "ஈரநெஞ்சம்' அமைப்பினர் முயற்சி
எடுத்துள்ளனர், அவர்களது முயற்சி பலன்தரட்டும்.சர்வதேச போட்டியில் கலந்து
கொண்டு சாதனை படைக்க பிரதீபாவிற்கு வாழ்த்துக்கள்.

- எல்.முருகராஜ்