தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சுட சுட செய்திகள்...அச்சலா

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Go down

சுட சுட செய்திகள்...அச்சலா

Post by ராகவா on Thu Feb 07, 2013 5:38 pm

First topic message reminder :


தினசரி செய்திகள் இந்த பகுதியில் இடமெறும்..


மது அருந்தும் வயது: மகாராஷ்டிரா அரசு உத்தரவிற்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு

மும்பை: மது அருந்தும் வயதினை அதிகரி்த்து உத்தரவிட்ட மகாராஷ்டிரா அரசுக்கு
எதிராக தொடரப்பட்ட பொது நல வழக்கில், அரசு உத்தரவிற்கு இடைக்கால
தடைவிதிக்க கோர்ட் மறுத்துவிட்டது.
மகாராஷ்டிரா மாநில அரசு, மது
அருந்துவோர் சட்டபூர்வ வயதினை 21-ல்இருந்து 25 ஆக அதிகரித்து கடந்த
2009-ம் ஆண்டு ஆணை பிறப்பித்து உத்தரவிட்டது. இந்நிலையில் பாலிவுட்
நடிகர் இம்ரான்கான், மும்பை ஐகோர்ட்டில் கடந்த 2011-ம் ஆண்டு பொதுநல வழக்கு
தொடர்ந்தார்.அதில் அரசின் இந்த உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும் என
கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மோஹித்ஷா, மேத்தா ஆகியோர் முன்பு
விசா‌ரணைக்கு வந்தது. விசாரணை‌க்கு ஏற்று கொண்ட நீதிபதிகள் அரசு ஆணைக்கு
தடைவிதிக்க முடியாது , இது தொடர்பாக ஏப்.15-ம் தேதிக்கு மகாராஷ்டிரா அரசு
பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

-தினமலர்
avatar
ராகவா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 442

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down


Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by ராகவா on Fri Feb 08, 2013 11:16 am

புதிய தலைமை செயலகம் ஏன் ? கருணாநிதி விளக்கம்திருச்சி: திருச்சியில் நடந்த தி.மு.க., பொதுக்கூட்டத்தில் கருணாநிதி
பேசியதாவது: சென்னையில் புதிய தலைமை செயலகம் எம்.எல்.ஏ.,க்களின் வசதிக்காக
கட்டப்பட்டது. இந்த கட்டடம் கட்டி முடிக்கப்பட 800 கோடி செலவானது. இதனை
பயன்படுத்த தமிழக அரசு மறுக்கிறது. இலங்கை தமிழர்களின் உணர்வுகளை உலகிற்கு
கொண்டு செல்லும் பணியை தி.மு.க.,செய்தது இவ்வாறு பேசினார்.


-தினமலர்
avatar
ராகவா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 442

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by ராகவா on Sat Feb 09, 2013 12:03 am

துப்பாக்கி முனையில் 3 குழந்தைகள் கடத்தல்

சிவகங்கை : மதுரை அவனியாபுரம் அருகே துப்பாக்கி முனையில் 3 குழந்தைகளை
கடத்தி சென்ற நபர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். பூவந்தி அருகே பிடிபட்ட
இவர்களிடம் திருப்பாச்சேத்தி போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விசாரித்து
வருகின்றனர்.
-தினமலர்
avatar
ராகவா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 442

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by ராகவா on Sat Feb 09, 2013 12:03 am

திருப்பதி வந்தார் ராஜபக்ஷே

நகரி: இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே இன்று திருப்பதி வந்தார். பல்வேறு
அமைப்புககளின் எதிர்ப்புகள் மத்தியில் திருப்பதியில் 60 பேர் கொண்ட
குழுவினருடன் வந்த இவர் ஸ்ரீகிருஷ்ணா விருந்தினர் மாளிகையில்
தங்கியுள்ளார். இங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இவரது வருகைக்கு
எதிர்ப்பு தெரிவிக்க நீலமகால் தியேட்டர் அருகே நின்ற பலரை போலீசார் கைது
செய்தனர்.
-தினமலர்
avatar
ராகவா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 442

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by ராகவா on Sat Feb 09, 2013 12:05 am

மார்ச்சில் பா.ஜ., தேசிய கவுன்சில் கூட்டம்

புதுடில்லி: வரும் மார்ச் மாதம் நடைபெறும் பா.ஜ., தேசிய கவுன்சில்
கூட்டத்தில், விலைவாசி உயர்வில் அரசின் தோல்வி, ஊழல், உள்நாட்டு
பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள மிரட்டல் குறித்து விவாதிக்க இருப்பதாக
அக்கட்சி கூறியுள்ளது. இது குறித்து அக்கட்சி துணைத்தலைவர் முக்தார்
அப்பாஸ் நக்வி கூறுகையில், மார்ச் 2 மற்றும் 3ம் தேதி அரசியல் சூழ்நிலை ,
பொருளாதார சூழ்நிலை, உள்நாட்டு பாதுகாப்பு, மோசமான நிர்வாகம், விலைவாசி
உயர்வு மற்றும் ஐ.மு.கூ., கூட்டணியின் ஊழல் குறித்து விவாதிக்கப்படும் என
கூறினார். இந்த கூட்டத்தில் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும்
என்ற வி.எச்.பி., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் கோரிக்கை குறித்தும்
விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

-தினமலர்
avatar
ராகவா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 442

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by ராகவா on Sat Feb 09, 2013 12:05 am

மத்திய பிரதேசத்தில் 9 பேர் கடத்தல்
போபால்: மத்திய பிரதேசத்தில் பள்ளி மாணவர்கள் 7 பேர் உள்பட 9 பேரை ஒரு
கும்பல் கடத்தி சென்றது. பள்ளி முடிந்து திரும்பும் போது வந்த ஒரு மர்ம
ஜீப் இந்த கடத்தல் நடந்தது. போலீசார் கடத்தல்காரர்களை தேடி வருகின்றனர்.
ஒரே நாளில் 9 பேர் கடத்தப்பட்டது எரோரா கிராமத்தில பரபரப்பை
ஏற்படுத்தியிருக்கிறது.

-தினமலர்
avatar
ராகவா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 442

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by ராகவா on Sat Feb 09, 2013 12:06 am

மோடி எதிர்ப்பாளர்கள் மீது வழக்கு பதிவு

புதுடில்லி : குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் டில்லி விஜயத்தின்
போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது டில்லி போலீசார் வழக்கு பதிவு
செய்துள்ளனர். குஜராத் முதல்வர் மோடி, சமீபத்தில் டில்லி வந்திருந்தார்.
பிரதமருடனான சந்திப்பிற்கு பிறகு, டிலலியின் முன்னணி கல்லூரியில் நடைபெற்ற
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இதற்கு எதிர்ப்பு
தெரிவிக்கும் வகையில், கல்லூரி வாசலில் பல்வேறு அமைப்பினர் கறுப்புக் கொடி
காட்டுதல், போராட்டம், ஆர்ப்பாட்டம் பல்வேறு வகைகளில் போராட்டங்கள்
செய்தனர். ‌மோடி எதிர்ப்பாளர்கள் மீது டில்லி போலீசார் இந்திய குற்றவியல்
சட்டம் 184 ( பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல்)ன் படி வழக்கு பதிவு
செய்துள்ளனர்.

-தினமலர்
avatar
ராகவா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 442

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by ராகவா on Sat Feb 09, 2013 12:09 am

சரக்கு வேன் கவிழ்ந்து 2 ‌மாணவர்கள் பலி

திருநெல்வேலி : நெல்லை மாவட்டம் நக்கனேரி அருகே சரக்கு வேன் கவிழ்ந்து
விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த‌ே பாலிடெக்னிக் மாணவர்கள் 2 பேர்
சம்பவ இடத்திலேயே பலியாயினர். நெல்லை மாவட்டம் பழவூர் அருகே
கங்கனாபுரத்தில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு
படிக்கும் மாணவனது தாயின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள சரக்கு வேனில்
மாணவர்கள் சென்றனர். வேன்,. நக்கனேரி அருகே சென்று கொண்டிருந்த போது,
கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனின் அடிப்புறத்தில் சிக்கி
ஈத்தாமொழி பகுதி‌யை சேர்ந்த விஜயன் (18), தேங்காய்பட்டினத்தை சேர்ந்த
அனீஷ் (18) சம்பவ இடத்திலேயே பலியாயினர். 15 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.
அவர்கள் சிகிச்சைக்காக ராதாபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

-தினமலர்
avatar
ராகவா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 442

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by ராகவா on Sat Feb 09, 2013 12:09 am

கோடீஸ்வர நாட்டில் ஏழைகளின் நிலை

ஹாங்காங் : ஆசியாவின் செல்வந்தர் நாடு என்ற பெருமை‌ பெற்ற ஹாங்காங்
நாட்டில் வாழும் ஏழைகள், இரும்பு கூண்டு போன்ற வடிவமைப்பில் வசித்து வருவது
குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக, விக்டோரியா பார்க்
பகுதியில் வசித்து வரும் ஏழைக்குடும்பத்தில் பிறந்த 67 வயதான லியூங் சோ
யின் கூறியதாவது, இந்த இரும்பு கூண்டை, முயல் இறைச்சி வியாபாரம் செய்யும்
வியாபாரியிடம் இருந்து 1300 ஹாங்காங் டாலருக்கு (அமெரிக்க மதிப்பில் 167
டாலர்கள்) வாங்கினேன். இதுதான் எனது வீடு மற்றும் சொத்து.ஆசியாவிலேயே‌
செல்வந்தர் நாடு என்று பெயரெடுத்த ஹாங்காங் நாட்டில் தான் நாம்
வசிக்கிறோமா? என்ற கேள்வி தனக்கு அவ்வப்போது எழுவதுண்டு என்றும் அவர்
கூறினார். முந்தைய பிரிட்டிஷ் காலனியில் வாழ்ந்த 1 லட்சத்திற்கும் மேற்பட்ட
மக்கள் இருக்க இடமின்றி அவதிப்பட்டு வருவதாக பொதுநல அமைப்பு
தெரிவித்துள்ளது.

-தினமலர்
avatar
ராகவா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 442

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by ராகவா on Sat Feb 09, 2013 12:10 am

திருப்பதியில் தமிழ் ஊடகங்களுக்கு கட்டுப்பாடு
திருப்பதி : இலங்கை அதிபர் ராஜபக்சே, திருப்பதி வந்துள்ளதையடுத்து, அங்கு
தமிழ் ஊடகங்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து
வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு
அமைப்புகளின் கடும எதிர்ப்புகளுக்கிடையில், இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா
வந்துள்ளார். பீகார் பயணத்தை முடித்து விட்டு, அவர் தற்போது திருப்பதி
வந்துள்ளார். இந்நிலையில், செய்தி சேகரிக்கச் சென்ற தமிழ் பத்திரிகை
மற்றும் ஊடக ஊழியர்கள் திருப்பதி விமானநிலையத்தில் தடுத்து
நிறுத்தப்பட்டனர். தமிழ் ஊடகங்களை அனுமதிக்கக் கூடாது போலீஸ்
உயர்அதிகாரிகள் கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதற்கு தெலுங்கு ஊடக
நண்பர்கள் கண்டனம் தெரிவித்ததையடுத்து, கடும் சோதனைகளுக்கு பிறகு தமிழ்
ஊடகங்கள், திருப்பதி செல்ல அனுமதிக்கப்பட்டது. இது கருத்து சுதந்திரத்தை
பறிக்கும் செயல் என்று சமூக நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
-தினமலர்
avatar
ராகவா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 442

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by ராகவா on Sat Feb 09, 2013 12:11 am

கவாஸ்கரி்ன் சாதனை : சச்சின் சமன்

மும்பை : இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கரின் முதல்தர
கிரிக்கெட்டின் சத சாதனையை, சத சாதனை நாயகன் சச்சின் டெண்டுல்கர் சமன்
செய்துள்ளார். மும்பையில் நடைபெற்று வரும் இரானி கோப்பை டெஸ்ட் தொடரில்,
ரெஸ்ட் ஆப் இந்தியாவிற்கெதிரான டெஸ்ட் போட்டியில், சச்சின டெண்டுல்கர்
81வது சதமடித்ததன் மூலம், கவாஸ்கரின் சாதனை சமன் செய்யப்பட்டுள்ளது. 81
சதங்கள் கடந்து கவாஸ்கர் மற்றும் சச்சின் முதலிடத்தில் உள்ளனர். அதற்கடுத்த
இடத்தில், இந்திய அணியின் பெருஞ்சுவர் என்றழைக்கப்பட்ட ராகுல் டிராவிட் 64
சதங்களுடன் இரண்டாமிடத்தில் உள்ளார்.
-தினமலர்
avatar
ராகவா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 442

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by ராகவா on Sat Feb 09, 2013 12:12 am

ஏர்டெல் நிறுவனத்திற்கு ரூ. 650 கோடி அபராதம்

மும்பை : இந்தியாவின் முன்னணி தனியார் ‌தொலைதொடர்பு நிறுவனமான
பார்தி ஏர்டெல் நிறுவனத்திற்கு, உரிமம் மீறல் தொடர்பாக, மத்திய
தொலைதொடர்புத்துறை, ரூ. 650 கோடி அபராதம் விதிக்க பரிந்துரைத்துள்ளது.
இ‌துதொடர்பாக, அத்துறை உயர் அதிகாரி கூறியுள்ளதாவது, 2000 முதல் 2005ம்
ஆண்டு வரையிலான காலகட்டத்தில், தேசிய அளவிலான அழைப்புகள் மற்றும் சர்வதேச
அழைப்புகளின் மூலம், பொதுத்துறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்
(பிஎஸ்என்எல்) நிறுவனத்திற்கு, ஏர்டெல் உரிமம் மீறியதன் விளைவாக
பெரும்நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக, ஒரு சர்க்கிளுக்கு ரூ. 50 கோடி
வீதம், ஏர்டெல் நிறுவனத்தின் 13 சர்க்கிள்களுக்கு என ரூ. 650 கோடி அபராதமாக
விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒப்புதல் பெறும்பொருட்டு,
மத்திய தொலைதொடர்பு அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர்
கூறினார்.
-தினமலர்
avatar
ராகவா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 442

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by ராகவா on Sat Feb 09, 2013 12:13 am

சிரியா ராணுவ தொழி்ற்சாலை மீது தாக்குதல் : 54 பேர் பலி
பெய்ரூட் : சிரியாவின் ராணுவ ‌தொழிற்சாலை மீது மர்மநபர்கள் வெடிகுண்டு
நிரப்பப்பட்ட வாகனத்தை கொண்டு தாக்குதல் நடத்திய சம்பவத்தில் 54 பேர்
சம்பவ இடத்திலேயே பலியாயினர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
சிரியா நாட்டின் அல் புராக் பகுதியில், ராணுவ தொழி்ற்சாலை இயங்கி
வருகிறது. இந்த தொழிற்சாலையில், வெடிகுண்டு நிரப்பப்பட்ட வாகனத்தை மோதச்
செய்ததில் 54 பேர் பலியாயினர். இவர்களில் 11 பேர் பெண்கள் ஆவர்.
இத்தாக்குதல் குறித்து மனித உரிமைகள் அமைப்பு கடும் கண்டனத்தை
தெரிவித்துள்ளது.

-தினமலர்
avatar
ராகவா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 442

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by ராகவா on Sat Feb 09, 2013 12:13 am

திருப்பூரில் அனுமதியின்றி செயல்பட்ட சாயப்பட்டறைகள் மூடல்

திருப்பூர் : அனுமதியின்றி செயல்பட்டது‌ மற்றும் கழிவுகளை சங்கிலிப்பள்ளம்
ஓடையில் கலந்த‌து உள்ளிட்ட காரணங்களுக்காக, திருப்பூர் ஷெரீப் நகரில்
இயங்கி வந்த 2 சாயப்பட்டறைகள் மற்றும் ஒரு பட்டன் ஜிப் சாய ஆலையின்
உரிமங்களை மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் பறிமுதல் செய்து மூடவும்
உத்தரவிட்டனர்.

-தினமலர்
avatar
ராகவா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 442

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by ராகவா on Sat Feb 09, 2013 12:14 am

ராஜபக்ச‌ே ஹிட்லரை போன்றவர் : ஸ்டாலின்

சென்னை : இலங்கை அதிபர் ராஜபக்ச‌ே, ஹிட்லரை போன்று செயல்பட்டு வருவதாக
திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார். இலங்கை அதிபர் ராஜபக்சேவின்
இந்திய வருகையை கண்டித்து, திமுக சார்பில் வள்ளுவர் கோட்டத்தில்
கறுப்புச்சட்டை போராட்டம் நடைபெற்றது. இதில் பேசிய கட்சி பொருளாளர்
ஸ்டாலின் கூறியதாவது, இலங்கை அதிபர் ராஜபக்சேவின் செயல்பாடு, சர்வாதிகாரி
ஹிட்லரை ஒத்துள்ளது. இலங்கையில் தமிழர்களுக்கு தன்னாட்சி வழங்கப்படும்
என்று இந்தியாவிடம் உறுதியளித்து விட்டு, வேண்டிய உதவிகளை நம்மிடம் இருந்து
பெற்று , தற்போது தமிழர்களுக்கு தன்னாட்சி வழங்க முடியாது என்று அவர்
கூறுவது கண்டனத்திற்குரியது. அவர் கபட நாடகம் ஆடுவதாக ஸ்டாலின் கூறினார்.
-தினமலர்
avatar
ராகவா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 442

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by ராகவா on Sat Feb 09, 2013 12:15 am

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு : விமானப் போக்குவரத்து ஸ்தம்பிப்பு

நியூயார்க் : அமெரிக்காவில், வரலாறு காணாத அளவிற்கு கடும்
பனிப்பொழிவு நிலவி வருவதையடுத்து, அங்கு ‌1000க்கும் மேற்பட்ட விமானஙகளின்
சேவை தாமதப்பட்டுள்ளதோடு மட்டுமல்லாது விமானப்போக்குவரத்து முற்றிலும்
பாதிக்கப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள்
தெரிவிக்கின்றன. இதற்குமுன், 1978ம் ஆண்டில் அதிக அளவிற்கு பனிப்பொழிவு
ஏற்பட்டதன் ‌விளைவாக, விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது
குறிப்பிடத்தக்கது.
-தினமலர்
avatar
ராகவா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 442

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by ராகவா on Sat Feb 09, 2013 12:16 am

குரியன் விவகாரம்: சோனியா அதிருப்தி

புதுடில்லி : சூரிய‌நெல்லி கற்பழிப்பு விவகாரம் தொடர்பாக, ராஜ்யசபா
துணை சபாநாயகர் குரியன் பதவி விலக வேண்டும் என்று கேரளாவில் கம்யூனிஸ்ட்
கட்சியினர் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், குரியனை சந்திக்க
சோனியா மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கேரள மாநிலம்
சூரியநெல்லியில், சமீபத்தில் பள்ளி மாணவி ஒருவர், அரசியல்வாதி, அதிகாரிகள்
என பல்வேறு தரப்பட்ட மக்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாள்.
இவ்விவகாரம், கேரளா மட்டுமல்லாது, ஒட்டுமொத்த நாட்டையும் பெரும்
பரபரப்பிற்குள்ளாக்கியது. அந்நேரத்தில், அமைச்சரவையில் குரியன் பதவி
வகித்தார். தற்போது குரியன் ராஜ்யசபா துணை சபாநாயகராக உள்ளார். நாட்டையே
உலுக்கிய இவ்விவகாரத்தில் தொடர்புடைய குரியன், துணை சபாநாயகர் பதவியை
ராஜினாமா செய்ய வேண்டும் என்ப‌தை வலியுறுத்தி, கேரள சட்டசபையில் தொடர
அமளிகள், போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர்
சோனியாவை சந்திக்க குரியன் திட்டமிட்டிருந்தார். குரியனை சந்திக்க, சோனியா
மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

-தினமலர்
avatar
ராகவா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 442

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by ராகவா on Sat Feb 09, 2013 12:17 am

மொபைல் போன் பில் ரூ. 13 கோடி : வாடிக்கையாளர் அதிர்ச்சி

மும்பை: மொபைல்போன் வாடிக்கையாளர்களுக்கு பில் குறித்த விபரங்கள்
குறுந்தகவல்களாக, அவர் சார்ந்த தொலைதொடர்பு நிறுவனங்கள் அனுப்புவது
வழக்கம். ஆனால், சமீபகாலமாக, வாடிக்கையாளர்களுககு பில் தொகை அதிகளவில்
வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், மும்பை தொழிலதிபர் ஒருவருக்கு,
ஜனவரி மா‌த பில், ரூ. 13 கோடி அளவிற்கு வந்துள்ளது அவரை
அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மும்பை காண்டிவ்லி பகுதியை சேர்நதவர்
விஸ்வநாத் ஷெட்டி. அவர் கூறியதாவது, நான் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக
எம்டிஎன்எல் நிறுவனத்தின் டால்பின் மொபைல்போன் சேவை‌யை பயன்படுத்தி
வருகிறேன். கடந்த ஜனவரி மாதத்திற்கு பில் தொகையாக. ரூ. 1318 வந்திருந்தது.
பில் கட்டி விட்டு வீடு திரும்பியிருந்த போது, எனது மொபைலுக்கு
குறுந்தகவல் வந்தது. அதில் தங்களது ஜனவரி மாத பில் தொகை ரூ. 13,18,47,813
என்றும், உடனடியாக பில் தொகையை கட்டவும், இல்லையேல் தொடர்
துண்டிக்கப்படும். பில் பணம் கட்டிவிட்டீர்களானால், இதை புறக்கணித்து
விடவும் என்று தகவல் வந்திருந்தது. இதனால் நான் மிகவும் அதிர்ந்துவிட்டேன்.
இதுகுறித்து, அந்நிறுவனத்தை தொடர்பு கொண்டபோது, இந்த குறுந்தகவல் தலைமை
அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்டிருப்பதாகவும், அங்கு சென்று
விசாரிக்குமாறு தெரிவித்தனர். அங்கு விசாரித்ததில், தொழில்நுட்ப குறைபாடு
காரணமாக, தவறுதலாக அந்த குறுந்தகவல் தங்களுக்கு வந்துள்ளதாக தெரிவித்ததாக
அவர் கூறினார்.
-தினமலர்
avatar
ராகவா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 442

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by ராகவா on Sat Feb 09, 2013 12:19 am

திமுக போராட்டம் : வைகோ‌ கருத்து

புதுடில்லி : இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இந்திய வருகையை கண்டித்து
திமுக போராட்டம் நடத்தி வருவது, அவர்களை எதிர்த்து அவர்களை போராட்டம்
நடத்திக்கொள்வதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். இலங்கை
அதிபர் ராஜபக்சே, 2 நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருக்கு
எதிர்ப்பு தெரிவித்து டில்லியில் பிரதமர் இல்லத்தை முற்றுகையிட முயன்ற வைகோ
உள்ளிட்ட அவரது கட்சியினர் கைது செய்யப்பட்டு பின் விடுதலையாயினர்.
இந்நிலையி்ல், டில்லியில் தனியார் செய்தி சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த
வைகோவிடம், ராஜபக்சேவை கண்டித்து, சென்னையில் திமுக நடத்தும் போராட்டம்
குறித்து கேட்டதற்கு, அவர்களை எதிர்த்து அவர்களே போராட்டம் நடத்தி
வருகிறார்கள், ஏனெனில் அவர்கள் தானே குற்றவாளிகள் என்று வைகோ கூறினார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து திமுக வெளியேறினால் அக்கட்சி பற்றி
விமர்சிக்க மாட்டேன் என்று வைகோ கூறியதற்கு, தாங்கள் வெளியேறினால், அவர்
உட்புகலாம் என்று நினைத்திருக்கிறாரோ என்று கருணாநிதி பதிலளித்திருந்தது
குறிப்பிடத்தக்கது.
-தினமலர்
avatar
ராகவா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 442

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by ராகவா on Sat Feb 09, 2013 12:20 am

டில்லி ஏர்‌போர்ட்டில் ரேடார் பழுது

புதுடில்லி : டில்லியில் இயங்கி வரும் இந்திராகாந்தி சர்வதேச விமான
நிலையத்தில் உள்ள ரேடாரில் பழுது ஏற்பட்டதன் விளைவாக, பல விமான சேவைகள்
தற்காலிகமாக பாதிக்கப்பட்டன. ரேடார் கருவியில் ஏற்பட்டுள்ள பழுது குறித்து
விசாரணை நடைபெற்று வருவதாகவும், இதில் ஏதாவது குளறுபடி நடந்திருக்கலாம்
என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. ரேடாரில் ஏற்பட்ட பழுது
நீக்கப்படும் வரை, மானுவல் முறையிலான சிக்னல்களை கையாண்டு, விமானச் சேவைகள்
நடைபெற்றதாக விமானநிலைய நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
-தினமலர்
avatar
ராகவா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 442

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by ராகவா on Sat Feb 09, 2013 12:21 am

சென்னையில் "ஹெலிபோர்ட்' அரசு முடிவு : நினைத்த இடத்தில் இனி கிளம்பலாம்புதுடில்லி : ஹெலிகாப்டர்கள் மட்டுமே இறங்கும், புறப்பட்டு செல்லும்,
பிரத்யேக, "ஹெலிபோர்ட்'கள், சென்னை, பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களில்
விரைவில் துவக்கப்பட உள்ளன. பெரு நகரங்களிலும், முக்கிய நகரங்களிலும்,
போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாகி வருகிறது. வாகனங்கள் எண்ணிக்கை
அதிகரிப்பு, சாலைகளில் ஆக்கிரமிப்பு போன்ற பல காரணங்களால், குறிப்பிட்ட
நேரத்தில், எங்குமே செல்ல முடியாத நிலை உள்ளது.
இதனால், தொழிலதிபர்கள், வர்த்தக நிறுவனங்களின் தலைவர்கள், ஹெலிகாப்டரை
பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் ஏராளமான சிக்கல்கள் உள்ளன. நினைத்த
இடத்தில், நினைத்த நேரத்தில் ஹெலிகாப்டரை கிளப்பி, நினைத்த இடத்தில் இறங்க
முடியாது. விமான போக்குவரத்து துறையிடம் முன்கூட்டியே அனுமதி பெற்ற
பிறகுதான், ஹெலிகாப்டர்களை கிளப்ப முடியும்.


மேலும், விமானங்கள் வந்திறங்கும், "ஏர்போர்ட்' போல், ஹெலிகாப்டர்களை இறக்க,
"ஹெலிபோர்ட்'கள் கிடையாது. ஆகவே, விமான நிலையங்களிலும், விமான தளங்களிலும்
தான், ஹெலிகாப்டர்கள் இயக்கப்படுகின்றன. ஹெலிகாப்டரில் பயணம் செய்தாலும்,
விமான நிலையங்களில் இருந்து வெளியே வந்து, மீண்டும் போக்குவரத்து நெரிசலில்
சிக்கி கொள்ளும் நிலை தான் காணப்படுகிறது.

இதனால், ஹெலிகாப்டர்கள் மட்டுமே இறங்கும், புறப்படும், பிரத்யேக,
"ஹெலிபோர்ட்'களை, முன்னணி நகரங்களில் துவக்க, மத்திய அரசு முடிவு
செய்துள்ளது. முதற்கட்டமாக, டில்லி, மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களிலும்,
அதன் பிறகு, சென்னை, கோல்கத்தா, லக்னோ போன்ற நகரங்களிலும்,
"ஹெலிபோர்ட்'கள் துவக்கப்பட உள்ளன.


இது குறித்து, ஹெலிகாப்டர்களை இயக்கும், "பவான் ஹான்ஸ் ஹெலிகாப்டர்ஸ்'
நிறுவனத்தின் செயல் இயக்குனர், சஞ்சீவ் பஹல் கூறும் போது,
""ஹெலிபோர்ட்களுக்கும், குறைந்தபட்சம், 25 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது.
நகர பகுதிகளில் இவ்வளவு இடம் கிடைப்பது சிரமமாக உள்ளதால், திட்டம் தாமதமாகி
வருகிறது. விரைவில் சில நகரங்களில் இத்திட்டம் துவக்கப்படும்,'' என்றார்.


-தினமலர்
avatar
ராகவா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 442

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by ராகவா on Sat Feb 09, 2013 12:22 am


சென்னை நீங்கலாக 31 மாவட்டங்களும் வறட்சி மாவட்டங்கள்: முதல்வர் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் சென்னை நீங்கலாக 31 மாவட்டங்களும் வறட்சி
மாவட்டங்களாக அறிவிக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் கவர்னர் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும்
தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்து முதல்வர் ஜெயலலிதா இன்று
பேசினார். அப்போது அவர் கூறுகையில், "காவிரி டெல்டா பகுதிகளில் வறட்சியால்
பாதிக்கப்பட்டு, 50 சதவீதத்திற்கு மேலாக மகசூல் பாதிக்கப்பட்ட
விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றிற்கு ரூ. 15 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும்.
இதன் மூலம் 1.75 லட்சம் விவசாயிகள் பலன் பெறுவர். தமிழகத்தில் சென்னை
நீங்கலாக மற்ற 31 மாவட்டங்களும் வறட்சி பாதித்த மாவட்டங்களாக
அறிவிக்கப்படும். காவிரி டெல்டா மாவட்டங்களில், தேசிய கிராமப்புற வேலை
உத்தரவாத சட்டத்தின் கீழ் 100 நாட்களாக உள்ள வேலை நாட்கள் 150 நாட்களாக
உயர்த்தப்படும். தமிழகத்தில் வறட்சி பாதித்து விவசாயிகள் யாரும் தற்கொலை
செய்து கொள்ளவில்லை என்றாலும், தற்கொலை செய்து கொண்டவர்களின் வறுமை நிலையை
கருத்தில் கொண்டு அவர்களின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிவாரணம்
வழங்கப்படும். மேலும், விவசாயிகளுக்கு நிலவரியும் ரத்து செய்யப்படும்.
மாநிலங்களுடனான நதிநீர் பிரச்னைகளில் தமிழகத்தின் உரிமை பாதுகாக்கப்படும்.
ரூ. 181 கோடி செலவில் 15 ஆயிரம் பண்ணைக்குட்டைகள் அமைக்கப்படும்.
பொதுப்பணித்துறை மூலம் ஏரிகள், குளங்கள் தூர்வாரப்படும். கால்நடைகளுக்கு
பசுந்தீவனம் மற்றும் அடர் தீவனங்களுக்காக ரூ. 50 கோடி ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது. டெல்டா பகுதிகளில் குடிநீர் தேவைக்காக ரூ. 37.28 கோடி
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது". இவ்வாறு முதல்வர் அறிவித்துள்ளார்.


-தினமலர்
avatar
ராகவா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 442

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by ராகவா on Sat Feb 09, 2013 12:23 am

சட்டசபையில் தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் கைகலப்பு: மைக்கேல் ராயப்பனுக்கு விழுந்தது அடி

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசிய திட்டக்குடி தே.மு.தி.க.,
எம்.எல்.ஏ., தமிழழகன் மற்றும் இதர எம்.எல்.ஏ.,க்களுக்கு இடையே தமிழக
சட்டசபையில் கைகலப்பு ஏற்பட்டது. இதில் ராதாபுரம் எம்.எல்.ஏ., மைக்கேல்
ராயப்பனுக்கு அடி விழுந்தது.

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது.
கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று, கவர்னர் உரை மீதான விவாதத்துக்கு நன்றி
தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்வர் ஜெயலலிதா பதிலுரை
வழங்கவிருந்தார். இந்நிலையில், இன்று சட்டசபையில் பேசிய திட்டக்குடி
தே.மு.தி.க., எம்.எல்.ஏ., தமிழழகன், தனது தொகுதி பிரச்னைகள் தொடர்பான
முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து முறையிட்டதாகவும், அவற்றை முறையாக
பரிசீலித்த முதல்வர், முடிந்தவரை அவற்றை நிறைவேற்ற உறுதியளித்ததாகவும்,
அதன்பின்னர் தனது தொகுதியில் வளர்ச்சிப்பணிகள் சிறப்பாக நடைபெறுவதாக
தெரிவித்தார். மேலும், தன்னைப் போலவே, மற்ற தே.மு.தி.க., எம்.எல்.ஏ., களும்
முதல்வரை சந்தித்து, தங்களது தொகுதி பிரச்னைகள் குறித்து முறையிட வேண்டும்
என்று தெரிவித்தார். தமிழழகனுக்கு ஆதரவாக ராதாபுரம் தே.மு.தி.க.,
எம்.எல்.ஏ., மைக்கேல் ராயப்பனும் பேசினார்.

இதனால் ஆத்திரமடைந்த மற்ற தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் தமிழழகனை தாக்க
முற்பட்டனர். இதைப் பார்த்த மைக்கேல் ராயப்பன், தமிழழகனை யாரும் தாக்காமல்
தடுக்க முயன்றார். இதனால் அவரை தே.மு.தி.க., எம்.எல்.ஏ., சரமாரியாக
தாக்கினர். இதில் காயமடைந்த ராயப்பன் உடனடியாக மருத்துவனைக்கு கொண்டு
செல்லப்பட்டார். மைக்கேல் ராயப்பன் திருப்பித் தாக்கியதில், அனகை முருகேசன்
என்ற தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,வுக்கு சட்டை கிழிந்தது. இந்த சம்பவம் நடந்த
போது, முதல்வர் ஜெயலலிதா அவையில் இருந்தார்.
-தினமலர்
avatar
ராகவா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 442

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by ராகவா on Sat Feb 09, 2013 12:24 am

தமிழ், தமிழர்களை அழிக்க கங்கணம் கட்டி வருகிறார் ராஜபக்சே: கருணாநிதி


சென்னை: தமிழ், தமிழர்களை அழிக்க இலங்கை அதிபர் ராஜபக்சே கங்கணம் கட்டி
செயல்படுவதாக, சென்னையில் நடந்த கறுப்புச்சட்டை போராட்டத்தில் தி.மு.க.,
தலைவர் கருணாநிதி தெரிவித்தார்.

இலங்கை அதிபர் ராஜபக்சே, 2 நாள் பயணமாக இந்தியா வருகிறார். பீகார்
மாநிலம் புத்தகயா மற்றும் திருப்பதி ஆகிய இடங்களில் அவர் சாமி தரிசனம்
செய்கிறார். தனிப்பட்ட முறையிலான பயணம் என்பதாலும், ராஜபக்சேவின் வருகைக்கு
எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க., ம.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளும், தமிழ்
அமைப்புகளும் போராட்டம் அறிவித்திருப்பதாலும் அவரது பயண விபரம் முறையாக
வெளியிடப்படவில்லை. முன்னதாக, ராஜபக்சே டில்லிக்கு வந்து அங்கிருந்து புத்த
கயா செல்வதாக இருந்தது. ஆனால் போராட்டங்கள் காரணமாக அந்த பிளான்
மாற்றப்பட்டு, ஒடிசா மாநிலம் கட்டாக் சென்று, அங்கிருந்து புத்த கயா
செல்கிறார் ராஜபக்சே. இந்நிலையில், இன்று மாலை 4.30 மணியளவில், ஆந்திர
மாநிலம் ரேணிகுண்டா விமான நிலையம் வரும் அவர், அங்கிருந்து திருப்பதி
வழியாக சாலை மார்க்கமாக திருமலை செல்கிறார். இன்றிரவு திருமலையில் தங்கும்
ராஜபக்சே, நாளை காலை சுப்ரபாத சேவையில் கலந்து கொள்கிறார். பின்னர், நாளை
காலை 9.30 மணியளவில் திருப்பதியிலிருந்து கிளம்புகிறார்.

தி.மு.க., போராட்டம்: ராஜபக்சேவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து,
சென்னையில் தி.மு.க., வினர் அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தலைமையில்
கறுப்புச் சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில்
கருணாநிதி பேசுகையில், இலங்கை தமிழர்களை பூண்டோடு அழிக்க விரதம் பூண்டுள்ள
இலங்கை அதிபர் ராஜபக்சே, இந்தியா வருவதைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம்
நடத்தப்பட்டு வருகிறது. இலங்கையில் தமிழர்களின் கலை, கலாச்சாரம்,
இலக்கியம், பண்பாடு, மொழி ஆகியவை கங்கணம் கட்டிக்கொண்டு அழிக்கப்பட்டு
வருகிறது. தமிழ் மொழி அடையாளம் தெரியாமல் சிதைக்கப்படுகிறது. ராஜபக்சே அரசு
வெறியாட்டம் போட்டு வருகிறது. இலங்கை தமிழர் பகுதி கிராமங்களில் உள்ள
தமிழ் பெயர்கள், சிங்களப் பெயர்களாக மாற்றப்பட்டு வருகின்றன என்று
பேசினார். இதே போல், டில்லியில் ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ தலைமையில்
அக்கட்சியினர் ஜந்தர்மந்தர் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்திய தலைவர்களை சந்திக்க மாட்டார்: இலங்கை அதிபர் ராஜபக்சேவின் பயணம்,
தனிப்பட்ட முறையிலானது என்பதால் அவர் இந்திய தலைவர்களை சந்திக்க மாட்டார்
என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. புத்தகயா மற்றும் திருப்பதி ஆகிய
இடங்களுக்கு மட்டுமே அவர் செல்வார் என்றும், தமிழ் அமைப்புகளின் போராட்டம்
காரணமாக அதிபர் ராஜபக்சேவிற்கு இந்தியா பாதுகாப்பளிக்க வேண்டும் என்றும்
இலங்கை தெரிவித்துள்ளது. முன்னதாக, ராஜபக்சே டில்லி வந்து, விரைவில்
அமெரிக்கா சார்பில் இலங்கைக்கு எதிராக ஐ.நா., சபையில் கொண்டுவரப்படவுள்ள
தீர்மானத்திற்கு ஆதரவளிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்வார் என கூறப்பட்டது.
ஆனால் தற்போது அந்த பிளான் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

-தினமலர்
avatar
ராகவா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 442

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by ராகவா on Sat Feb 09, 2013 12:25 am

ஐ.மு., கூட்டணியின் கொள்கைகள் வேலையின்மையை அதிகரிக்கும் வகையில் உள்ளது: அரசு துறை ஆய்வு


புதுடில்லி : ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையிலான மத்திய அரசின்
கொள்கைகளால் வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மனித ஆற்றல் ஆய்வு
நிறுவனம் (ஐஏஎம்ஆர்) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி லட்சகணக்கான மக்களை தினக்கூலிகளாக மாற்றிய பெருமையும்
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை சாரும்.

வளர்ச்சி பாதையில் இந்தியா
எதிர்கொள்ளும் சவால்களின் அடிப்படையில் வேலையின்மை மற்றும் தகவல்கள் என்ற
தலைப்பில் திட்டக்குழுவுடன் இணைந்து ஐஏஎம்ஆர் நடத்திய ஆய்வு அறிக்கையில்
இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார அடிப்படையில் நாட்டின்
வளர்ச்சிக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பங்கு குறித்து இந்த
அறிக்கை விபரம் தெரிவிக்கிறது. அதில் உலகின் 4 வது பெரிய பொருளாதார
அமைப்புடைய நாடு இந்தியாவாக இருந்த போதிலும், மொத்த வேலைவாய்ப்பு மற்றும்
விவசாயம் அல்லாத துறைகளில் வளர்ச்சி ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீப காலமாக வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதே இந்த அரசின் சாதனையாகும்.
2005-10ம் ஆண்டுகளில் 15 மில்லியன் தொழிலாளர்கள் விவசாயத்தை கைவிட்டு
உற்பத்தி மற்றும் சேவை துறைகளுக்கு சென்றுள்ளனர். வேலைவாய்ப்பில்
விவசாயத்துறையின் பங்கு 57 சதவீதத்தில் இருந்து 53 சதவீதமாக குறைந்துள்ளது.
அதே சமயம் இதே காலகட்டத்தில் கட்டுமானதுறையில் 18 மில்லியன் தொழிலாளர்கள்
அதிகரித்துள்ளனர். இத்துறையின் உள்கட்டமைப்பிற்காக அரசின் முதலீடும்
பெரும் அளவில் அதிகரித்துள்ளது.

2005-10 வரையிலான 5 ஆண்டுகளில்
விவசாயத்துறை உற்பத்தி பெரிய சரிவை சந்தித்துள்ளது. கட்டுமான துறையில்
தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் இவர்களில் 95 சதவீதம் பேர் (44
மில்லியன்) எவ்வித சமூக பாதுகாப்பும் இன்றி வாழ்ந்து வருகின்றனர்.
தொழிலாளர்கள் விவசாயத்துறையில் இருந்து பிற துறைகளிலுக்கு சென்றதால் ஒரு
சில துறையில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டாலும், மற்றொரு துறை கடுமையான
பொருளாதார சரிவை சந்தித்தது. 2005-10ல் உற்பத்தி துறையில் 5 மில்லியன்
தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாக ஆய்வு கட்டுரை தெரிவிக்கிறது. அதே சமயம்
சேவை துறைகளில் 2000-2005ல் 18 மில்லியன் வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

மோசமான
வளர்ச்சியை பெற்ற நாடுகளில் இந்தியா புதிய சாதனை படைத்துள்ளதாக ஆய்வு
தெரிவிக்கிறது. சிறிய மற்றும் குறு தொழில் துறையில் கூலித்தொழிலாளிகளின்
எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஐஏஎம்ஆர் தெரிவித்துள்ளது. கொள்கையில்லாத
ஒப்பந்தங்களால் உற்பத்தி துறையில் 2010ல் 60 சதவீதம் வேலைவாய்ப்பும் ,
உற்பத்தி அல்லாத துறைகளில் 80 சதவீதமும் வேலைவாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வு
தெரிவிக்கிறது.


-தினமலர்
avatar
ராகவா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 442

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by ராகவா on Sat Feb 09, 2013 12:26 amபுதுடில்லி :"தமிழகத்திற்கு, 2.44 டி.எம்.சி., தண்ணீர் திறந்து விட
வேண்டும்' என, கர்நாடக அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் நேற்று உத்தரவு
பிறப்பித்தது. "9 டி.எம்.சி., தண்ணீர் திறக்க, கர்நாடகாவுக்கு உத்தரவிட
வேண்டும்' என்ற, தமிழக அரசின் கோரிக்கையை, சுப்ரீம் கோர்ட் நிராகரித்ததுதமிழக
டெல்டா பகுதியில் பயிரிடப்பட்டுள்ள நெற் பயிர்களை காப்பாற்ற, 9
டி.எம்.சி., தண்ணீர் திறந்து விட, கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என,
தமிழக அரசு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.இந்த
வழக்கு, இம்மாதம், 4ம் தேதி, நீதிபதி, ஆர்.எம்.லோதா மற்றும் நீதிபதிகள்
செலமேஸ்வர் மற்றும் மதன் பி லோகுர் ஆகியோரை கொண்ட, "டிவிஷன் பெஞ்ச்' முன்,
விசாரணைக்கு வந்தது. "தமிழகத்திற்கு, 2 டி.எம்.சி., தண்ணீரை திறந்து விட
வேண்டும்' என, கர்நாடகாவுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. ஆனால், "9
டி.எம்.சி., தண்ணீர் கட்டாயம் வேண்டும்' என, தமிழக அரசு சார்பில்
வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, தமிழக டெல்டா பகுதிக்கு சென்று, நிலைமையை
நேரில் ஆய்வு செய்து, இரண்டு நாட்களில் அறிக்கை தருமாறு, மூன்று பேர் கொண்ட
குழுவை, சுப்ரீம் கோர்ட் அமைத்தது. மத்திய உணவு துறை ஆணையர் பிரதீப்குமார்
ஷா தலைமையில், அத்துறை அதிகாரிகள், கே.எஸ்.ஜேக்கப் மற்றும் ஏ.மகேந்திரன்
ஆகியோர், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் சுற்றுப்பயணம்
மேற்கொண்டனர். அந்த குழுவினர், 375 கி.மீ., பயணம் செய்து, 14 இடங்களில்
மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் அறிக்கை தயாரித்தனர். 55 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் பயிர் : அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டிருந்ததாவது: டெல்டா பகுதியில், விவசாயம் நடக்கும்
நிலப்பரப்பில், 50 சதவீத நிலத்தில் அறுவடை முடிந்து விட்டது; 40 சதவீத
நிலங்களில், இன்னும் சில நாட்களில் அறுவடை
நடக்க உள்ளது; 10 சதவீத பரப்பில் மட்டும் தான் பயிர்கள் உள்ளன. அந்த
பயிர்களில், 45 ஆயிரம் ஏக்கர் நிலத்திற்கு, ஒருமுறை நீர் பாய்ச்ச, 0.71
டி.எம்.சி., தண்ணீரும், 55 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் உள்ள பயிர்களுக்கு, இரு
முறை நீர் பாய்ச்ச, 1.73 டி.எம்.சி., என, மொத்தம், 2.44 டி.எம்.சி.,
தண்ணீர் மட்டும் தான் தேவைப்படுகிறது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.ஷெட்டரிடம் வலியுறுத்தல் : இந்தஅறிக்கை,
சுப்ரீம் கோர்ட் பதிவாளர் வசம், நேற்று முன்தினம் சமர்ப்பிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், நேற்று, சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை மீண்டும்
துவங்கியது."தமிழகத்திற்கு, 2.44 டி.எம்.சி., தண்ணீரை கர்நாடகா திறந்து விட
வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இதன் மூலம், தமிழக அரசின், 9
டி.எம்.சி., தண்ணீர் கோரிக்கையை, சுப்ரீம் கோர்ட் நிராகரித்துள்ளது.
எனினும், இந்த தீர்ப்பையும் மதிக்க, கர்நாடகா தயாராக இல்லை. சுப்ரீம்
கோர்ட்டில் தீர்ப்பு வெளியான நேரம், கர்நாடக சட்டசபை கூட்டம், பெங்களூரு
நகரில் நடந்து கொண்டிருந்தது. "சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டாலும்,
தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீரை கூட கொடுக்க கூடாது' என, அனைத்து கட்சி
எம்.எல்.ஏ.,க்களும், முதல்வர், ஜெகதீஷ் ஷெட்டரிடம் வலியுறுத்தினர்.
பதிலளித்து, ஷெட்டர் கூறியதாவது: சுப்ரீம் கோர்ட் உத்தரவால், கர்நாடக
விவசாயிகளும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்படுவர். விவசாயிகளின்
நலன்களை பாதுகாக்க, கடுமையான முடிவுகளை கூட எடுக்க, அரசு தயாராக உள்ளது.
அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முன், சட்ட வல்லுனர்களின் கருத்து
கேட்கப்படும். நானும், நீர் வள துறை அமைச்சர், பசவராஜ் பொம்மையும், இன்று
டில்லி செல்கிறோம். அங்கே சட்ட வல்லுனர்களிடம்


கலந்தாலோசித்து தக்க முடிவு எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார். முன்னதாக,காங்கிரஸ்
எம்.எல்.ஏ., சித்தராமையாவின் கோரிக்கையான, "கர்நாடகா சார்பில் ஆஜராகும்
வழக்கறிஞர்களை மாற்ற வேண்டும்' என்பதை, முதல்வர் ஷெட்டர் நிராகரித்தார். கர்நாடக விவசாயிகள் உரிமை : நீர்
பாசன துறை அமைச்சர், பசவராஜ் பொம்மை கூறும் போது, ""சுப்ரீம் கோர்ட்
உத்தரவை, உடனடியாக நிறைவேற்றும் எண்ணம் இல்லை. முதலில், சட்ட நிபுணர்களிடம்
ஆலோசனை செய்த பிறகு தான் எந்த முடிவும் எடுக்கப்படும்,''
என்றார்."தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கூடாது' என வலியுறுத்தி,
சட்டசபையில், மத சார்பற்ற ஜனதா தளம் கட்சியினர், "தர்ணா' போராட்டத்தில்
ஈடுபட்டனர். பாரதிய ஜனதாவிலிருந்து விலகி, "கர்நாடக ஜனதா கட்சி' என்ற,
புதிய கட்சியை துவக்கியுள்ள, முன்னாள் முதல்வர், எடியூரப்பா, "காவிரி
நீரில், கர்நாடக விவசாயிகள் உரிமை காக்கப்பட வேண்டும்' என வலியுறுத்தி,
பெங்களூரு முதல் மைசூரு வரை, நேற்று பாத யாத்திரை மேற்கொண்டார்.


-தினமலர்
avatar
ராகவா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 442

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum