தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கடவுள் கடவுளாகிப்போனார்!

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

கடவுள் கடவுளாகிப்போனார்!

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Jan 29, 2013 12:03 pm

கடவுள் – 1

எனக்கு ஏன் இந்த வேலை?
கடவுளைப் பார்தால் கேட்க வேண்டும்
என்பான் சலூன்காரன்.
உண்மையை மறைக்காத கண்ணாடி
சலூன்காரன் முன்
கடவுளின் முகத்தைக்
கண்ணாடியில் பிரதிபலித்தது.
சலூன்காரன்
கடவுளுக்கு
முடிதிருத்தம் செய்துகொண்டே
பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான்
தொலைக்காட்சியில்
சேனலை மாற்றி மாற்றி
குத்துப் பாடல்களை!
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கடவுள் கடவுளாகிப்போனார்!

Post by முரளிராஜா on Tue Jan 29, 2013 12:26 pm

அட அருமை நக்கல்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: கடவுள் கடவுளாகிப்போனார்!

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Jan 29, 2013 12:39 pm

கடவுள் – 2

மழையே இல்லையே!
‘பொங்க வைப்போம் வாங்க!
அப்பவாவது கடவுள்
கண்ணு தொறக்கறாரான்னு பாப்போம்.’
பொங்க வைத்தார்கள்.
மழை கொட்டியதில்
இடி விழுந்து
ஒருத்தி இறந்துபோனாள்!
இப்போது ஒருத்தி
இன்னொருத்திக்குச் சொல்லிப்
புலம்பிக்கொண்டாள்
‘கடவுளுக்குக் கண்ணே கெடையாது!’
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கடவுள் கடவுளாகிப்போனார்!

Post by ரானுஜா on Tue Jan 29, 2013 12:46 pm

அருமை...
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: கடவுள் கடவுளாகிப்போனார்!

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Jan 29, 2013 8:38 pm

@ரானுஜா wrote:அருமை...
மகிழ்ச்சி நண்பரே
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கடவுள் கடவுளாகிப்போனார்!

Post by ஸ்ரீராம் on Tue Jan 29, 2013 9:39 pm

கைதட்டல்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233201  உறுப்பினர்கள்: 3599 | புதிய உறுப்பினர்: Thas VN Thasan
avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: கடவுள் கடவுளாகிப்போனார்!

Post by மகா பிரபு on Wed Jan 30, 2013 6:34 am

அருமை நண்பரே
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: கடவுள் கடவுளாகிப்போனார்!

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Jan 30, 2013 7:24 am

கடவுள் – 3

கடவுளின் முகவரி
இன்னும் மாறாமல்
அதே வார்டில்
வாக்காளர் அடையாள அட்டையாக இருந்தது.
தனக்கு இறப்பு இல்லை என்பதை
நினைப்பதற்கு முன்
கடவுளின் விரலில் மை வைக்கப்பட்டது.
மின்னனு எந்திரத்தில்
பட்டன் அழுத்தியதும்
நினைத்துக்கொண்டார்
ஓட்டு யாருக்குப் பதிந்ததோ
கடவுளுக்கே வெளிச்சம்!
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கடவுள் கடவுளாகிப்போனார்!

Post by செந்தில் on Wed Jan 30, 2013 12:52 pm

கைதட்டல் சூப்பர் கைதட்டல்

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: கடவுள் கடவுளாகிப்போனார்!

Post by மகா பிரபு on Wed Jan 30, 2013 4:54 pm

avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: கடவுள் கடவுளாகிப்போனார்!

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Jan 31, 2013 7:02 am

கடவுள் – 4

பேரூந்தில்
முன் இருக்கையில் அமர்ந்து
பயணிகளோடு பயணித்துக்கொண்டிருந்தார்
கடவுள்.
சில்லரை இல்லையென்றால்
இறங்கிக்கொள் என்று
கடவுளையே எச்சரித்த நடத்துநர்
மீதிச் சில்லரையைத் தராமல்
கடவுளையே ஏமாற்றினார்!
செல்போன் சிணுங்க
கால் மேல் கால் வர
முக்கால் மணி நேரமாகப்
பேசிக்கொண்டே வந்துகொண்டிருந்தார்
பேரூந்து ஓட்டுநர்!
முந்தும்போதும்… ஒதுங்கும்போதும்…
கடவுளே நடுநடுங்கிட
பயணிகளுக்குப் பழக்கப்பட்டதால் பயமின்றி
பயணித்துக் கொண்டிருந்தார்கள்.
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கடவுள் கடவுளாகிப்போனார்!

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Feb 01, 2013 2:25 pm

கடவுள் – 5

பிணம் எரிக்கக்கூட
கான்கிரெட் கூரையாக்கிவிட்ட சூழலில்
கிராமத்தின் ஓட்டைக் குடிசையில்
கடவுள் நிம்மதியாக உறங்கி எழுந்தார்!
சாலை சரியில்லை
கேபிள் டீவி இல்லை
இன்டர்நெட் இணைப்பு இல்லையென்று
நகரத்துக்குப் போக முடிவைடுத்து
நகரத்தில்
வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கினார்!
பவர் கட்டால்
கடவுளின் உடல்
வியர்வையால் விழிப்புற்றே இருந்து எழுந்தார்!
சமையல் செய்யலாமென
ஆரம்பிக்கும்போது இருந்த மின்சாரம்
சட்னி அரைக்கும்போது கட்டாகியிருந்தது.
வெறும் இட்லி சாப்பிட்ட
கடவுளுக்கு ஞாநோதயம் வந்தது!
வரும்போது
உலக்கை, அம்மி, ஆட்டுக்கல்லை மறந்தது.
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கடவுள் கடவுளாகிப்போனார்!

Post by மகா பிரபு on Fri Feb 01, 2013 5:02 pm

avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: கடவுள் கடவுளாகிப்போனார்!

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat Feb 02, 2013 10:32 am

மகிழ்ச்சி நண்பரே...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கடவுள் கடவுளாகிப்போனார்!

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat Feb 02, 2013 11:07 am

கடவுள் – 6

கர்ப்பக்கிரகத்தில்
நடந்து கொண்டிந்த
காமச் செயலை
இமைக்காமல்
காவல் பார்த்துக் கொண்டிருந்தார் கடவுள்!
பல ஆயிரம் பேருக்கு
அருள்பாளித்திருந்த
அந்தக் கற்சிலை கொஞ்சம் கூச்சப்பட்டது!
என்றாலும்கூட பழக்கப்பட்டதால்
அதற்குச் சகஜமாகிவிட்டது.
பின்னர் ஒரு நாள் பிடிபட்டபோது,
நாத்திகன் ஒருவன் நினைத்துக்கொண்டான்
‘பூசாரியின் வேண்டுதலும்
லட்சத்தில் ஒன்றாகியிருக்கும்
அதனால், கடவுள்
கண்டும் காணாமலும்
விட்டுவிட்டு இருப்பார் போலும்.’!
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கடவுள் கடவுளாகிப்போனார்!

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Feb 05, 2013 12:03 pm

கடவுள் – 7

கடவுளிடம் பணம் இல்லாததால்
திருட்டு ரயில் ஏறி
சென்னை வந்து இரங்கினார்.
சமாதிகளைச் சுற்றிப் பார்த்துவிட்டு
கடற்கரையில்
காதலர்களை ரசித்துவிட்டு
கோடம்பாக்கம் வந்து சேர்ந்தார்.
நடிகன் நடிகையைக்
கொஞ்சி முத்தமிட்டுக் கொண்டிருந்ததும்
கடற்கரையில் கண்டதும்
வேறுவேறாக இருந்தது.
நடிகனுக்கு அரசரமாகச்
சண்டைக் காட்சிக்கு
டூப் தேவைப்பட்டதால்
வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த
கடவுளை பிடித்து இழுத்து!
நடிகனாக மேக்கப் செய்தார்கள்.
பைட்டர்களைத் தும்சம் செய்து
நின்றபோது ஆங்காங்கே
கடவுளுக்கு ரத்த காயங்கள்!
ஆச்சரியமாகப் பார்த்தார் கடவுள்
உண்மையான நடிகனும்
மேக்கப் ரத்தக் காயங்களோடு
மருத்துவமனை செட்டுக்குள்
நடிகை கைதாங்களாக
அழைத்துச் செல்வதுபோன்று
அடுத்தக் காட்சி படமாக்கப்பட்டது.
பேசாம இவனையே அவருக்கு
பைட்டுக்கு டூப்பாக்கி விடலாம்.
கொடுத்த 1000 ரூபாயை வாங்கிக் கொண்டு
கடவுள் வெளியேறி
கையேந்தி பவனை நோட்டமிட்டார்.
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கடவுள் கடவுளாகிப்போனார்!

Post by முரளிராஜா on Tue Feb 05, 2013 3:51 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: கடவுள் கடவுளாகிப்போனார்!

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Feb 06, 2013 5:18 am

கடவுள் – 8

புத்தகத்தைக் கையில் எடுக்காமல்
குழந்தைத் தொழிலாளியானார் கடவுள்.
கல்வி உரிமைச் சட்டம் இருக்கிறதே!
ஆசிரியர்கள் பாடம் நடத்தாமல்
வீடுவீடாகச் சென்றார்கள்!
கடவுளின் வீட்டுக்கும் சென்று
“நீ படிக்கத்தான் வர வேண்டும்.”
“எனக்குப் படிப்பு ஏறவில்லை!”
“பத்தாம் வகுப்பு வரை
படிக்காவிட்டாலும் பாஸாக்கிவிடுகிறோம்!”
“அதற்குமேல்?”
“நீதான் படிக்க வேண்டும்!”
“பத்தாவது வரை படிக்காதவனால்
பதினொன்னாவதிலிருந்து எப்படி படிக்கமுடியும்?”
“அதற்கு மேல் சட்டத்தில் இடமில்லை.”
“ஏன் அதற்கும் சேர்த்து
தேர்தல் வாக்குறுதி கொடுக்கச் சொல்லுங்களேன்!”
“முடிவா என்னதான்டா சொல்ற?”
“அதான் சொல்லிட்டேனே
என்னால் படிக்க முடியாதுன்னு!”
நீ எங்கிட்ட தைரியமா சொல்லிட்ட
நான் எப்படிப் போய்
மேலதிகாரியிடம் சொல்வேன்.
“கடவுளே
என்ன ஏன்தான் வாத்தியாராக்கினியோ தெரியலையே!”
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கடவுள் கடவுளாகிப்போனார்!

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Feb 07, 2013 10:41 am

கடவுள் – 9

ஏர்பிடித்து உழ ஆரம்பித்தார் கடவுள்.
வறண்டு இருந்தது பூமி.
கடவுளே மழை பெய்ய வெக்கக்கூடாதா?
மழை பெய்தது.
ஏர்பிடித்த பாதி வயல்
மழையால் சேறாகிப் போனது.
3 நாள் கழித்து
ஏர் பூட்டி
முன்பு உழுத இடத்திலிருந்தே
ஏர் பிடிக்கத் தொடங்கியதும்
பூமி ரொம்ப ஈரமா இருக்கு என்று
சலித்துக்கொண்டார்.
டிராக்டர் பிடித்து உழவு செய்தார்
விதைத்தார்.
நாற்றுநடவும் களை எடுக்கவும்
100 நாள் வேலையால் பாதிக்கப்பட்டதாக
வருந்திக்கொண்டார்.
அறுவடைக்கும் யாரும் வரவில்லை
அறுவை எந்திரம்கொண்டு காரியத்தை முடித்தார்.
கணக்குச் சரி பார்த்தலில்
செலவே அதிகம் இருந்தது.
என்ன நினைத்தாரோ தெரியவில்லை
நிலத்தை வீட்டுமனைபோடுவோரிடம்
5 கோடிகளுக்கு விற்றுவிட்டு
நகரத்தில் வீடு கட்டி குடியேறிவிட்டார்!
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கடவுள் கடவுளாகிப்போனார்!

Post by மகா பிரபு on Thu Feb 07, 2013 2:47 pm

//கடவுள் – 9///

விவசாயிகளின் உண்மை நிலை.. சோகம்
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: கடவுள் கடவுளாகிப்போனார்!

Post by ராகவா on Thu Feb 07, 2013 4:26 pm

தகவலுக்கு நன்றி
avatar
ராகவா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 442

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

Re: கடவுள் கடவுளாகிப்போனார்!

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Feb 08, 2013 5:56 pm

கடவுள் – 10

கடவுள்
விமானப் பயணத்தில் நம்பிக்கையற்று
புஷ்பக விமானத்தில்
நேரடியாகக் கூடங்குளம் வந்திறங்கினார்.
ஓராண்டு அமைதியாகப் போராடியும்
நீதி கிடைக்கவில்லையா?
உயர்நீதி மன்றம்கூட
கைவிரித்துவிட்டது என்ற உதயகுமார்
உச்சநீதி மன்றத்தை நம்பி இருக்கிறோம் என்றார்.
ஆய்வாளர்கள்
உச்சநீதி மன்றத்துக்குக்கூட பொய் அறிக்கை
சமர்பிக்க ஆயத்தமாகிவிட்டார்கள்.
அப்படியென்றால் என்னால்கூட
இனி தடுத்துநிறுத்த முடியாது என்று
கை விரித்தார் கடவுள்.
சரி… அரசியல்வாதிகள் என்ன சொல்கிறார்கள்?
ஓட்டுக்காக முன்னுக்குப் பின்
பேச்சை மாற்றிக் கொள்கிறார்கள்.
பணம் போனால் என்ன
சம்பாதித்துக் கொள்ளலாம்
உயிர் போனால்…
வாட்டமுற்ற கடவுள்
அறிவியலில் முன்னேறிவிட்டார்கள்
என்பதைக் காட்ட உயிரோடு விளையாடுவதா!
அணு எல்லாம் வேண்டாம் என்றுதானே
இயற்கை சக்திகளைப் படைத்தேன்.
சோம்பேறிகள் தான்
இயற்கைக்கு மாற மாட்டார்கள் என்று
கோபமுற்றுப் பேசியபோது
உதயகுமார் சிரித்துக்கொண்டார்.
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கடவுள் கடவுளாகிப்போனார்!

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Feb 11, 2013 8:05 am

கடவுள் – 11

பூங்காவில் அமர்ந்து
வண்ணத்துப்பூச்சியை
ரசித்துக்கொண்டிருந்தார் கடவுள்.
பூக்கள் அழகா?
வண்ணத்துப்பூச்சி அழகா?
கடவுளே நடுவராகவும்
வலது இடது பேச்சாளராகவும் இருந்து
ஒரு மணி நேரம்
வெற்றுப் பேச்சு பேசி முடிவெடுக்கப்பட்டது
இரண்டுமே அழகென்று!
சிறுவர்கள் ஓடிவிளையாடினார்கள்.
பூக்கள் அழகு என்றான் காதலன்!
பறிக்க முடியாத வண்ணத்துப்பூச்சிதான்
மிகவும் அழகு என்றாள் காதலி!
அந்தக் காதலர்கள் சிறிது இடைவெளியில்
முத்தத்தோடு கொஞ்சிக் கொண்டார்கள்.
முதியவர்கள் கைதாங்களாக நடந்தார்கள்.
விவாகரத்தானவளின் பார்வை –
விவாகரத்தானவனின் புது மனைவி
ஊனமுற்றவனின் தன்னம்பிக்கை –
போதையில் தடுமாறிய நடை -
ச்சி… என்ன அது
வண்ணத்துப் பூச்சியைத்தானே
ரசித்துக்கொண்டிருந்தேன்.
கடவுளே!
“மனசு ஏன் கட்டுப்பாட்டுக்குள்
வரமாட்டேன்கிறது” என்று
நொந்துகொண்டார் கடவுள்!!!
--
வணக்கம் அன்பு உறவுகளே... நண்பர்களே...

தமிழ் டாக்டர் (முனைவர்) பட்ட ஆய்வுக்காகத் தங்களின் கவிதை புத்தகங்கள் வரவேற்கப்படுகின்றன.

21ஆம் நூற்றாண்டுத் தமிழ் கவிதைகளின் போக்குகள் என்பது ஆய்வுத் தலைப்பாகும். எனவே தங்களின் படைப்புகள் 2000 - 2012 அல்லது 2013 இறுதிவரை வெளியாகும் - வெளியிடப்பட்ட கவிதைப் புத்தகங்கள் எந்த வகையினதாக இருந்தாலும் (புதுக்கவிதை, ஹைக்கூ, சென்ரியூ, ஹைபுன், கஸல் என்று புதிய வடிவங்களைத் தாங்கிய படைப்புகளை) தெரியப்படுத்தவும். எத்தனைப் புத்தகங்களாக இருந்தாலும் ஆய்வுக்கு ஏற்றுக் கொள்ளப்பெறும். தங்களின் புத்தகங்களோ அல்லது தங்களின் நண்பர்களின் புத்தகங்களோ அனுப்ப வேண்டுகிறேன். அல்லது தாங்கள் படித்த நல்ல கவிதைப் புத்தகங்களையும் பரிந்துரை செய்யலாம்.

வேலூர் மாவட்டத்தில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் - புத்தக நிலையத்தில் கிடைக்குமானால் தெரியப்படுத்தவும். நான் இங்கேயே வாங்கிக் கொள்கிறேன்.

புத்தகம் வீட்டிற்கு வந்து சேர்ந்த மறுநாள் புத்தகத்திற்கான பணம் அனுப்பி வைக்கப்படும்.

தாங்கள் புத்தகம் அனுப்புவதாக இருப்பின் தனி மடலில் தகவலைத் தெரிவிக்கவும். வீட்டு முகவரி கொடுக்கப்படும்.

என் தொடர்பு எண்கள்.
9865224292 - ஏர்செல்
8144818481 - ரிலையன்ஸ்
8438921372 - டாடா டொகமா
8680963972 - ஐடியா

நன்றி.
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கடவுள் கடவுளாகிப்போனார்!

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Feb 12, 2013 7:19 am

கடவுள் – 12

ஒற்றைக் காற்சிலம்போடு
கண்ணகியாக மாறி
பாண்டியன் அவை சென்றார் கடவுள்.
என்ன அது மீண்டும் கண்ணகி!
மதுரை தீக்கு இரையாகப்போகிறதா?
அன்றேதான் அழித்துவிட்டாளே!
கோயில்கூட கட்டியாகிவிட்டதே!
தவறு செய்யாதபோதும்
நடுநடுங்கிக்கொண்டிருந்தார் பாண்டியன்.
பக்கத்தில் மனைவி நம்பிக்கையற்று
என்ன தவறு செய்தாரோ!
“மன்பதை காக்கும் தென் புலம் காவல்
என் முதல் பிழைத்தது; கெடுக என் ஆயுள்! என
மன்னவன் மயங்கி” வீழ்வதற்குமுன்
“தென்னவன் கோப்பெருந்தேவி குலைந்தனள் நடுங்கி,
கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல் என்று
இணை அடி தொழுது”
இந்த முறை நான் அவருக்கு முன்பாகச்
செத்துவிட எண்ணி மரணித்துப் போனாள்…
இன்னும் என்னென்ன நடக்குமோ என்று
அவையோர் அஞ்சும்முன்
கண்ணகி பாண்டியனிடம்,
“கோவலனைத் திருத்த முடியாமல்
மதுரையை எரித்ததற்கு
மன்னித்திடுங்கள்” என்றாள்!
மகிழ்ச்சியோடு கையில் இருந்த
மற்றொரு சிலம்பைக் கொடுத்து
என்னால் எரிந்த மதுரையை
புணரமைத்துக்கொள்ளுங்கள் என்றாள்!
மயானத்தில் சந்தனக் கட்டையின்மேல்
எப்போதும்
தவறே செய்யாத
கோப்பெருந்தேவி எரிந்துகொண்டிருந்தாள்!
----
தமிழ் டாக்டர் (முனைவர்) பட்ட ஆய்வுக்காகத் தங்களின் கவிதை புத்தகங்கள் வரவேற்கப்படுகின்றன.

21ஆம் நூற்றாண்டுத் தமிழ் கவிதைகளின் போக்குகள் என்பது ஆய்வுத் தலைப்பாகும். எனவே தங்களின் படைப்புகள் 2000 - 2012 அல்லது 2013 இறுதிவரை வெளியாகும் - வெளியிடப்பட்ட கவிதைப் புத்தகங்கள் எந்த வகையினதாக இருந்தாலும் (புதுக்கவிதை, ஹைக்கூ, சென்ரியூ, ஹைபுன், கஸல் என்று புதிய வடிவங்களைத் தாங்கிய படைப்புகளை) தெரியப்படுத்தவும். எத்தனைப் புத்தகங்களாக இருந்தாலும் ஆய்வுக்கு ஏற்றுக் கொள்ளப்பெறும். தங்களின் புத்தகங்களோ அல்லது தங்களின் நண்பர்களின் புத்தகங்களோ அனுப்ப வேண்டுகிறேன். அல்லது தாங்கள் படித்த நல்ல கவிதைப் புத்தகங்களையும் பரிந்துரை செய்யலாம்.

வேலூர் மாவட்டத்தில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் - புத்தக நிலையத்தில் கிடைக்குமானால் தெரியப்படுத்தவும். நான் இங்கேயே வாங்கிக் கொள்கிறேன்.

புத்தகம் வீட்டிற்கு வந்து சேர்ந்த மறுநாள் புத்தகத்திற்கான பணம் ஏடிஎம் டிரான்ஸ்பர் மூலம் மட்டுமே (இந்தியன் வங்கி, எஸ்பிஐ) அனுப்பி வைக்கப்படும்.

தாங்கள் புத்தகம் அனுப்புவதாக இருப்பின் தனி மடலில் தகவலைத் தெரிவிக்கவும். வீட்டு முகவரி கொடுக்கப்படும்.

என் தொடர்பு எண்கள்.
9865224292 - ஏர்செல்
8144818481 - ரிலையன்ஸ்
8438921372 - டாடா டொகமா
8680963972 - ஐடியா

நன்றி.
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கடவுள் கடவுளாகிப்போனார்!

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Feb 18, 2013 9:34 am

கடவுள் – 13

கடவுள்
கிரிக்கெட் பேட்டுடன்
கேப்டனால் களத்தில் இறக்கப்பட்டார்.
முதல் போட்டியிலேயே
பந்துவீச்சாளர்களைப் பதம் பார்த்தார்.
இந்திய அணிக்கும் கேப்டனாகிவிட்டார்.
முதல் சீர்திருத்தமாக வாய்ப்புக்கொடுத்த
முன்னாள் கேப்டனை வெளியேற்றினார்.
பல வெற்றிகள்… பல தோல்விகள்
வெற்றிகள் கொண்டாடப்பட்டன
தோல்விகள் பரிசோதனை முயற்சி என்று
பொருந்தா விளக்கங்கள் கூறப்பட்டன
இந்தியர்கள் நம்பிக் கொண்டார்கள்.
கிரிக்கெட்டில் விளையாடி சம்பாதிப்பதைவிட
உண்டியலில் பணம் விழுவதைவிட
விளம்பரத்தில் சம்பாதிப்பது
எளிமையாகவும் அதிகமாகவும் இருந்தது.
புகழின் உச்சியில் கடவுள்.
பாகிஸ்தானுடனான போட்டியில்
வெற்றி பெற
இந்தியாவோடு சேர்ந்து
கடவுளும் கடவுளிடம் வேண்டிக்கொண்டார்!
லீக் மேச்சில் வெற்றியும் கிடைத்தது.
தோற்ற பாக்கிஸ்தான்
மற்ற அணிகளிடம் விளையாடும்போதும்
தோற்க வேண்டும் என்று வேண்டுதல்கள்!
கடவுளின் வேண்டுதலே நிராகரிக்கப்பட்டு
பாகிஸ்தான் வெற்றிபெற்றுவிட்டது!


(யாருடைய மனத்தையும் புண்படுத்துவதற்காகப் படைக்கப்பட்டதல்ல இது... - சினிமாவுல கூட இப்படித்தான் போடுங்க.)
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கடவுள் கடவுளாகிப்போனார்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum