தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தத்துவ கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நீ என்ன தேவதை - கவிதை
by rammalar

» நாட்டு நடப்பு - கவிதை
by rammalar

» நதிக்கரை - கவிதை
by rammalar

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by rammalar

» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
by rammalar

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by rammalar

» 'டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
by rammalar

» 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
by rammalar

» இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
by rammalar

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by rammalar

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by rammalar

» கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
by rammalar

» திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
by rammalar

» செக்ஸ் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்
by rammalar

» இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
by rammalar

» டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
by rammalar

» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
by rammalar

» அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
by rammalar

» தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
by rammalar

» தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
by rammalar

» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்
by rammalar

» பொது இடங்களில் கட்டிப்பிடிக்கும் தம்பதியை சிறையில் அடைக்க வேண்டும்
by rammalar

» விஷ சேவல் கோழி மீன்
by rammalar

» காலம் கற்றுத் தந்த பாடம்…!
by rammalar

» வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
by rammalar

» கைவிடுதல் – கவிதை
by rammalar

» வேண்டும் – கவிதை
by rammalar

» மிருக உவமை…! – கவிதை
by rammalar

» அது ஒரு காதல் அலை…! – கவிதை
by rammalar

» காதலைக் கற்றுத் தந்தாள் – கவிதை
by rammalar

» நகை – கவிதை
by rammalar

» தலையெழுத்து – கவிதை
by rammalar

» சபதம் எடுப்போம்! -கவிதை
by rammalar

» செத்த மீன்களின் கண்களில் நீலக்கடல்!
by rammalar

» காலத்தில் - கவிதை
by rammalar

» முரண்கள்- கவிதை
by rammalar

» வீழ்வதற்கல்ல! - கவிதை
by rammalar

» மீன்கள்- கவிதை
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பென்னிக்குக்

View previous topic View next topic Go down

பென்னிக்குக்

Post by மகா பிரபு on Sat Jan 19, 2013 7:46 am

தேனி மாவட்டத்தில் உள்ள பல விவசாய குடும்பங்களின் வீடுகளில், தவறாமல் ஒருவர் படம் இடம் பெற்றிருக்கும்.
இன்றைக்கும் அங்கு பிறக்கும் பல குழந்தைகளுக்கு, அவரது பெயர்தான் வைக்கப்படுகிறது.

ஆங்காங்கே உள்ள இவரது சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செய்வதும், வழிபாடு செய்வதும் தொடர்கிறது.

விவசாயிகள்
இன்றைக்கும், தங்களது கண்களில் ஆனந்த கண்ணீர் பெருக்கி நன்றியோடு
நினைக்கும் அந்த பெரியவர், யார் தெரியுமா? அவர்தான் பென்னிகுக்.

தென்
தமிழக மக்களின் வாழ்வாதாரமானதும், இன்றைய தேதிக்கு கேரள அரசால் பிரச்னை
செய்யப்படும் இடமுமான முல்லை பெரியாறு அணையை கட்டியவர்தான் இவர்.

இங்கிலாந்தில்,
ஜனவரி 15, 1841ல் பிறந்த ஜான் பென்னிகுக், பொறியியல் மேற்படிப்பு முடித்த
கையோடு, பொதுப் பணித்துறை பொறியாளராக பொறுப்பேற்று, ஆங்கில அரசால், சென்னை
மாகாணத்திற்கு நியமனம் செய்யப்பட்டவர். அப்போது கடும் வறட்சியில்
வாடிக்கொண்டு இருந்த தமிழக தென் மாவட்டங்களுக்கு, ஒரு நிரந்தரத் தீர்வு
காண்பதற்கான முயற்சியில் இறங்கினார். மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும்
மழை நீர், பெரியாறாக உருவாகி, அந்த தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை
கண்டுபிடித்தார். அந்த தண்ணீரை அணைகட்டி தடுத்து, திருப்பி விடுவதற்காக
கட்டப்பட்டதுதான், முல்லை பெரியாறு அணை.

கிட்டத்தட்ட 75 லட்ச ரூபாய் செலவில், 1887ல், அணை கட்டும் முயற்சி துவங்கியது. அணையின்
பெரும்பகுதி கட்டி முடிக்கப்பட்ட நிலையில், பெய்த பேய்மழையாலும்,
பெருகிவந்த வெள்ளத்தாலும் அணை அடித்து செல்லப்பட்டது. இதற்குமேல் பணம்
ஒதுக்க முடியாது. ஆகவே, அணை கட்டும் முயற்சியை கை விட்டு, திரும்ப வருமாறு
பென்னிகுக்கிற்கு உத்தரவிட்டது ஆங்கிலேயே அரசு. "தமிழர்களின் கனவு திட்டமான
அணை, கனவா கவே போக வேண்டியது தானா? இதற்காக உயிரை கொடுத்தவர்களின் ஆன்மா
என்ன சொல்லும்...' என்று கவலைப்பட்ட பென்னிகுக், எப்பாடு பட்டாவது அணையை
கட்டியாக வேண்டும் என்ற முடிவுடன் களம் இறங்கியவர், சொந்த ஊருக்கு சென்று,
தன் சொத்துகளை எல்லாம் விற்று கொண்டுவந்த பணத்தை போட்டு, மீண்டும் அணை
கட்டும் முயற்சியில் இறங்கினார்.

எடுத்த காரியத்தை முடிக்க வேண்டும் என்பதற்காக, பல ஆண்டுகள் போராடி, அணை கட்டி முடிக்கப்பட்டது.
கடல்
மட்டத்தில் இருந்து, 2,890 அடி உயரத்தில் 176 அடி உயரம், 365 மீட்டர்
நீளத்தில் கம்பீரமாக கட்டி முடிக்கப்பட்ட அணையில், கடல் போல நீர் தேக்கி
வைக்கப்பட்டது. தென் தமிழக மக்களின் முகத்தில் ஆனந்த கண்ணீர் பெருகியது.
அன்றைய பிரிக்கப்படாத இந்தியாவில், சென்னை மாகாணத்தை ஆண்ட ஆங்கிலேயர்,
திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன், 999 வருடத்திற்கு ஒரு ஒப்பந்தம்
போடப்பட்டது. வீணாகப் போகும் மழைநீருக்கு ஒரு கப்பத்தொகையும் நிர்ணயம்
செய்யப்பட்டு அதுவும் வழங்கப்பட்டது.

999 வருடத்திற்கு இந்த அணையும்,
தண்ணீரும், தென் தமிழக மக்களுக்கு தான் சொந்தம் என்ற அந்த ஒப்பந்தம்
காரணமாக, அன்று தொடங்கி இன்று வரை கம்பம் பள்ளத்தாக்கு பசுமை சமவெளியாக
திகழ்கிறது. எப்போதும் முப்போகம்தான். உயிர்களுக்கும், பயிர்களுக்கும்
தேவைப்படும் தண்ணீர் கவலையின்றி கிடைக்க, பல லட்சம் மக்கள்
ஆனந்தப்பட்டனர்.

மொழிவாரியாக மாநிலம் பிரிக்கப்பட்டதில், இந்த முல்லை
பெரியாறு அணை, கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம் தேக்கடி பகுதிக்குள்
வந்தது. தனக்கு ஒரு துளி லாபம் இல்லை என்ற போதிலும், மனிதநேயத்துடன், தன்
சொந்த பணம் கொண்டு கட்டிய பென்னிகுக்கின் பெருங் கருணையினாலும், ஆயிரம்
ஆண்டுகள் ஆனாலும், அழியாத பெருஞ்செல்வமாக, கம்பீரமாக எழுந்து நிற்கும்
முல்லை பெரியாறு அணையை இப்போது, போற்றி பாதுகாக்கும் உணர்வு அனைவருக்கும்
ஏற் பட்டுள்ளது.

இவ்வளவு பெருமை மிகுந்த பென்னிகுக்கின் புகழை போற்றி
புகழும் வகையில், கூடலூர் லோயர் கேம்ப்பில் அரசால் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இந்த மணிமண்டபம், மக்களின் மனதில் என்றும்
தங்கும் மண்டபமாகும் என்பதில் சந்தேகமில்லை. ***

எல். சந்திரகாந்த் @ தினமலர்
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: பென்னிக்குக்

Post by முரளிராஜா on Tue Jan 22, 2013 2:59 pm

பென்னிக்குக் அவர்கள் முல்லை பெரியாறு அணையை கட்ட எவ்வளவு உதவியாக இருந்தார் என்பதை அறிய தந்தமைக்கு நன்றி

அவர் புகழ் என்றும் மறையாது.

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: பென்னிக்குக்

Post by மகா பிரபு on Wed Jan 30, 2013 3:41 pm

நன்றி அண்ணா.
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum