தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஐ.ஐ.டியில் ஒரு மாற்று யோசனை!

View previous topic View next topic Go down

ஐ.ஐ.டியில் ஒரு மாற்று யோசனை!

Post by Powenraj on Wed Jan 16, 2013 8:12 am

நாடு முழுவதும் உள்ள இந்தியன் இன்ஸ்ட்யூட் ஆப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி.) கல்வி நிறுவனங்களில், வரும் கல்வியாண்டு முதல், இளநிலைப் பொறியியல் படிப்புக்கு கல்விக் கட்டணம் 80 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இப்போது ஆண்டுக்கு சுமார் ரூ.50,000 கல்விக் கட்டணம் செலுத்தும் மாணவர்கள் இனி ரூ.90,000 செலுத்த வேண்டியிருக்கும்.
ஆனால் இந்த கல்விக் கட்டண உயர்வினால் ஐ.ஐ.டி. நிறுவனங்களின் பொருளாதாரத்தை உயர்த்த முடியுமா என்றால் நிச்சயமாக, "இல்லை' என்று சொல்லிவிட முடியும்.
நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களின் செலவு அது அமைந்துள்ள இடத்தைப் பொருத்து ஆண்டுக்கு ரூ.150 கோடி முதல் ரூ.250 கோடி வரை மாறுபடுகிறது. இந்த செலவினத்தில் 80 சதவீதத்தை மத்திய அரசின் மனிதவளஆற்றல் துறை ஏற்றுக்கொள்கிறது. மீதமுள்ள20% செலவை மட்டுமே கல்விக் கட்டணங்கள் ஈடு செய்துவந்தன. விலைவாசி உயர்வினால், ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்கள் தங்களின் செலவுகளைக் கட்டுப்படுத்தத் திணறின. ஆகவே இப்போது ரூ.40,000 உயர்த்தப்பட்டுள்ளது.
ஐ.ஐ.டி.களில் படிக்கும் 22 சதவீத எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கும், பெற்றோரின் ஆண்டு வருவாய் ரூ.4.5 லட்சத்துக்குக் குறைவாக உள்ள ஏழை மாணவர்களில் 25 சதவீதம் பேருக்கும் கல்விக்கட்டணம்கிடையாது. ஆகவே, இந்நிறுவனங்களில் படிக்கும் 53 சதவீத மாணவர்கள் மட்டுமே புதிய கல்விக் கட்டணத்தைச் செலுத்துவார்கள். ஆகவே இந்தகட்டண உயர்வாலும் இந்த நிறுவனங்களுக்கு எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை.
இதேவேளையில், தனியார் பொறியியல் கல்லூரிகளில் தரமான கல்வி இல்லை என்றாலும்கூட, வசூலிக்கப்படும் கல்விக்கட்டணம் குறைந்தபட்சம் ரூ.1 லட்சமாகஇருக்கிறது. தனியார் பொறியியல் பல்கலைக்கழகங்களில் இதே இளநிலை பொறியியல் படிப்புக்கு ரூ.2 லட்சம் வரை கட்டணமாக வசூலித்துவிடுகிறார்கள். இதை அரசு அனுமதிக்கிறது. அரசு நடத்தும் ஐ.ஐ.டி., என்.ஐ.டி. போன்றவை கட்டமைப்பு வசதிகளும், அனுபவமுள்ள ஆசிரியர்களும் இருந்தும்கூட தனியார் அளவுக்குக் கட்டணம் பெற முடிவதில்லை என்பது நியாயமாகத் தெரியவில்லை.
ஐ.ஐ.டி.- மூலம் பொறியியல் பட்டம் பெற்று வெளிவருவோர் எண்ணிக்கை, இந்தியாவில் பொறியியல் பட்டம் பெறுவோரில் 0.5% மட்டுமே. அந்த அளவுக்கு தனியார் பொறியியல் கல்வி நிறுவனங்கள், தனியார் பொறியியல் பல்கலைக்கழகங்கள் பெருகிவிட்டன.
இந்தியாவில் ஐ.ஐ.டி. மிகவும் சிறந்த மாணவர்களை மட்டுமே, தகுதித் தேர்வுகள் மூலம் தேர்வு செய்கிறது. உலகம் முழுவதும் ஐ.ஐ.டி. மாணவர்களில் பலர் தங்கள் அறிவுத்திறனால் இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள். அத்தகைய ஐ.ஐ.டி. நிறுவனங்களில் - கல்விக் கட்டணத்துக்குப் பிறகும் நிர்வாகத்தை நடத்தப் போதுமான நிதி கிடைக்காது என்றால் - இப்போதைய பொறியியல் கல்வி முறையில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டிய தேவை இருக்கிறது என்று பொருள்.
அண்மையில், மத்திய அமைச்சர்ஜெய்ராம் ரமேஷ் பேசுகையில்,""ஐ.ஐ.டி. மாணவர்கள் சிறப்பானவர்களாக இருக்கிறார்கள். ஆனால் ஐ.ஐ.டி. நிறுவனங்கள் சிறப்பானவையாக இல்லை'' என்றுகூறியதன் மூலம் சர்ச்சையைக் கிளப்பினார். ஐ.ஐ.டி. நிறுவனங்களில் ஆய்வுகள், முனைவர்பட்ட ஆராய்ச்சிகள் குறைந்துபோனததுதான் இதற்குக் காரணம்.
இப்போது உயர்த்தப்பட்டுள்ளகல்விக் கட்டணமும்கூட, மற்றதனியார் கல்வி நிறுவனங்களை ஒப்பிடுகையில் குறைவுதான். இது இப்போதைய நிதிப்பற்றாக்குறையை ஓரளவுசமாளிக்க உதவும். நிறுவனத்தை மேம்படுத்தப் போதாது. அப்படியானால், ஐ.ஐ.டி. நிறுவனம் புதிய ஆய்வுமற்றும் ஆராய்ச்சிகளில் ஈடுபடுவது எப்போது சாத்தியம்?
கல்விக் கட்டணங்களை நியாயமாக நிர்ணயிப்பதோடு, இந்த மாணவர்களின் உழைப்பை ஏன் ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்கள் தங்களுக்காகப்பயன்படுத்திக்கொள்ளக்கூடாது?
தொழிற்கல்வியில் ஒன்றான மருத்துவத்தில், மாணவர்கள் தங்கள் படிப்பை முடித்தபிறகு சுமார் ஓராண்டுகள் பயிற்சி மருத்துவராக அதே மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனையில் பணியாற்றுகிறார்கள். இதற்காக அவர்களுக்கு உதவித்தொகை தரப்படுகிறது என்றாலும், ஒரு முழுமையான டாக்டரின் பணியை இவர்களிடம் பெற்றுக்கொண்டு, பாதி உழைப்பூதியம் மட்டுமே உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.
பொறியியல் மாணவர்களையும் பயிற்சி மருத்துவர்கள் போல,பயிற்சிப் பொறியாளர்களாக ஓராண்டு களப்பணியில் ஈடுபடுத்தி, அவர்களுக்காக நிர்ணயிக்கப்படும் முழுஊதியத்தில் பாதித் தொகையை ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்திற்குக் கிடைக்கச் செய்தால் என்ன? கற்பித்தல் மற்றும் தொழிற்கூடப் பணி, தொழில்நுட்பஆலோசனை என்று எதுவாகவும் இந்த பயிற்சி அமையலாம்.
அப்படிச் செய்வதன் மூலம், ஐ.ஐ.டி. போன்ற நிறுவனங்களில் தரமான கல்வி பெற்ற மாணவர்களில் ஒரு சிலர் ஆசிரியர்களாக தொடரவும் முடிவெடுக்கக் கூடும். அதன்மூலம், உயர்கல்வி நிறுவனங்களில் காணப்படும் ஆசிரியர் தட்டுப்பாடு ஓரளவுக்குக் குறையலாம். குறைந்த கட்டணத்தில் தனியார் கல்லூரிகளைவிட தரமான கல்வியும் மரியாதைக்குரிய நிறுவன மாணவர் என்கிற பெருமையையும் பெறும் மாணவர்கள் தாங்கள் குறைந்த கட்டணத்தில் கல்விபெற்ற நிறுவனங்களுக்காக ஏன் இப்படியொரு நன்றிக் கடனை செலுத்தத் தயங்கவேண்டும். அவர்களது திறமை முழுமையாக தனியாருக்கு தாரை வார்க்கப்படாமல் அவர்கள் படித்த நிறுவனங்களுக்கும் குறிப்பிட்ட காலம் பயன்படட்டுமே!
:-
தினமணி
avatar
Powenraj
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 46

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum