தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கனவு - கவிதை
by rammalar

» செயல் - கவிதை
by rammalar

» படி! படி! - சிறுவர் கவிதை
by rammalar

» விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
by rammalar

» தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
by rammalar

» மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
by rammalar

» பண்பே வெல்லும் - கதைப்பாடல்
by rammalar

» சிலம்பம் பயிலும் விஜய் ஆண்டனி!
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» சமந்தா வரவேற்பு!
by rammalar

» ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
by rammalar

» பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
by rammalar

» தனுஷ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சசிகுமார்
by rammalar

» திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பவர்களுக்கு நீட் தேர்வு எழுத அனுமதி கிடையாது
by rammalar

» ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை: படத்திறப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் வாதம்
by rammalar

» புதுச்சேரி - பெங்களூர் இடையே புதிய விமான சேவை மீண்டும் தொடக்கம்
by rammalar

» சனீஸ்வரா காப்பாத்து!
by rammalar

» நாம் அழுதால் தாங்கமாட்டார் ஆஞ்சநேயர்!
by rammalar

» பெண்ணிடம் திருடப்பட்ட செயின் அவரிடமே அடகுக்கு வந்த அதிர்ச்சி சம்பவம்
by rammalar

» 47 படங்கள் நடித்தும் டப்பிங் பேசாதது ஏன்? அனுஷ்கா பதில்..
by rammalar

» இந்தியில் வெளியான பேட்மேன் தமிழ் ரீமேக்கில் தனுஷ்?
by rammalar

» கௌதம் மேனன் உருவாக்கிய பாடலைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட சூர்யா
by rammalar

» ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறாத 43 பொறியியல் கல்லூரிகள்: அதிர்ச்சி தகவல்
by rammalar

» ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி அயோத்தியில் இருந்து ராம ராஜ்ஜிய ரத யாத்திரை தொடங்கியது
by rammalar

» பீகாரில் பிச்சை எடுத்து கழிப்பறை கட்டிய கிராமத்துப் பெண்ணுக்கு கலெக்டர் பாராட்டு
by rammalar

» பஞ்சாப் வங்கியில் ரூ.11,000 கோடி பணம் ‛போச்'
by rammalar

» இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி: அமெரிக்கா எச்சரிக்கை
by rammalar

» 182 மீட்டர் உயரம் கொண்ட சர்தார் வல்லபாய் படேல் சிலை அக்டோபர் 31-ல் திறக்கப்படும்: குஜராத் அரசு
by rammalar

» இந்தியாவிற்குள் நுழைய பாகிஸ்தானில் 300 பயங்கரவாதிகள் தயார் நிலை ராணுவ தளபதி எச்சரிக்கை
by rammalar

» ஜெயலலிதாவின் கைரேகை பெற உத்தரவிட்டது யார்? டாக்டர் பாலாஜி வாக்குமூலத்தால் திடீர் பரபரப்பு
by rammalar

» மார்ச் 1 முதல் ரயில்களில் முன்பதிவுப் பட்டியல் ஒட்டப்படாது: பயணிகள் எதிர்ப்பு
by rammalar

» 17 உயிர்களைப் பலிகொண்ட ஃபுளோரிடா துப்பாக்கிச்சூடு! - அமெரிக்காவை அச்சுறுத்தும் `மனநோய்'
by rammalar

» சாயம் – கவிதை
by rammalar

» மகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற நடிகை சீதா
by rammalar

» காதலர் தினத்துக்கு பஜ்ரங் தள் எச்சரிக்கை
by rammalar

» காதலர் தின கொண்டாட்டம்: லக்னோ பல்கலை எச்சரிக்கை
by rammalar

» கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பலியான சம்பவம்: விசாரணைக்கு மத்திய அரசு உத்த
by rammalar

» 7 மொழிகளில் வெளியாகும் தென் இந்திய திரைப்படம்!
by rammalar

» கலகலப்பு 2 - திரை விமர்சனம்
by rammalar

» திரைப் பார்வை: மிதக்கும் நகைச்சுவைப் படலம் - ஹே ஜூட் (மலையாளம்)
by rammalar

Top posting users this week
rammalar
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Page 5 of 17 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 11 ... 17  Next

View previous topic View next topic Go down

ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Jan 09, 2013 8:02 pm

First topic message reminder :

இறந்து புதைத்த பின்பும்
துடித்துக்கொண்டிருக்கும்
உன் நினைவுகளால்
விரிசல்விட்டு
எனது கல்லறையும்
உடைய தயாராகிறது

பூவிதழ்கள்போல்
உதிர்கிறது
கண்ணில் இருந்து
கண்ணீர்த் துளிகள்

இதயத்துக்கு
வேறு வேலையே இல்லை
உன்னையே நினைத்துத்
துடிதுடித்துக் கொண்டிருப்பதைத் தவிர!


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Wed May 07, 2014 6:50 pm; edited 1 time in total
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down


Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Apr 04, 2013 5:45 pm

மகிழ்ச்சி நண்பரே
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Apr 05, 2013 7:22 am

நான் கல்லாதவன்
எனக்கு
வாழ்க்கைப் பாடம்
கற்றுக் கொடுத்தாய்


நாம் விளையாடுவது
கண்ணாம்பொத்தி
நான்
எங்கே போய் ஒளிய
நீ பிரகாசித்துக் கொண்டுள்ளாய்


எனக்குக்
காதல் சலித்து விட்டது
நான் எங்கு வர
கோயில்...
தேவாலயம்...
மசூதி...
கல்லறை...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat Apr 06, 2013 10:12 am

ஒளியானவனே
கொஞ்சம்
உன் ஒளியைக் குறைத்துக்கொள்
வெப்பமயமாகிறது உலகம்


உனக்கு
நான் அர்ச்சகன்
காதலிக்கு
நான் கடவுள்


பட்டம்
தானாகவே பறக்கட்டும்
நூலை விட்டுவிட்டேன்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat Apr 06, 2013 3:28 pm

என் காதலை மெச்சி
இறைவன்
தனங்களில்
பால் தந்தான்
நீயோ
எட்டி மரக் கட்டிலைப்
பரிசளித்தாய்


என் காதலுக்கு
தெய்வமே
நீதான்
தடைக் கல்


ஒவ்வொரு வினைக்கும்
சமமான எதிர்வினை உண்டாம்
என் காதலுக்கு
அது இல்லாமல் போனது

avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat Apr 06, 2013 9:00 pm

என் இதயத்தை
வாங்கிக் கொண்டு
ஏமாற்றி விட்டாய்
கடன்காரன் போல


எனக்கான கைத்தட்டலில்
புகழ் உனக்கு


நீ
ஞாபகங்களைத் தொலைத்த
ஊமையாய்
உன் கொலுசும் மெளனமாக
என்னைக் கடக்கிறது
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Apr 08, 2013 7:45 am

என் கவிதைகள்
ஒவ்வொன்றும்
ஒவ்வொரு கருவறை
ஒரு கருவறை
இறைவனைச்
சுமந்துகொண்டிருக்கிறது

உன் காதலை
பாவமன்னிப்புச் சீட்டில்
எழுதிப் போக்கிக் கொண்டாய்
எனக்கு மது


அவள் எச்சில்
நஞ்சாகி விட்டது
கொஞ்சம்
தீர்த்தம் கொடு

avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Apr 08, 2013 7:02 pm

இறைவனின் தோட்டத்தில்
நமக்கு
விருப்பமான பூவை
நாமே
பறித்துக் கொள்ளலாம்


உன்னை
மறக்க தான்
நினைக்கிறேன்


காதலியைத் துறந்துவிட்டேன்
என் கவிதைகளை
எல்லோரும் ரசிக்கிறார்கள்

avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Apr 11, 2013 8:07 pm

நேரம்போத வில்லை
உன்னை
நினைப்பதற்கு


காதல் குற்றவாளி
பூக்களுக்கு ஏன்
மரணத் தண்டனை?

குளிர்காயச் சொன்னால்
நெருப்பில் ஏன்
கை விடுகிறாய்?

avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Apr 11, 2013 8:08 pm

நீ
முறைத்துப் பார்ப்பதால்
கவிதைகள் கூட
திக்கித் தடுமாறுகிறது


நான்
புல்லாங்குழல்
நீ
எப்போது வேண்டுமானாலும்
எடுத்து வாசிக்கலாம்


இதழ்களில் சுவையில்லை
கண்களில்
கண்ணீர்

avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Apr 12, 2013 7:22 am

பயண அவசரங்களில்
இடைமறிக்கும்
டிக்கெட் பரிசோதகரைப் போல்
நீ
என் வாழ்வில்
குறுக்கிட்டாய்


இனி, நாம்
எரியூட்டப்படாத
பிரேதங்களாய்
உலவ வேண்டும்


கண்ணீர் வெள்ளம்
என்னைக் கைப்பிடித்து
அழைத்துச் செல்கிறது
உன் நினைவிடத்திற்கு

avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Apr 15, 2013 3:13 pm

கடித்த கொசு
என்னிடம்
அடிபடுவதுபோல
என் காதலும்
என்னிடமே
அடிபடுகிறது


பூக்கள்
நம் காதலைப் பார்த்து
சிரிக்கிறது
வண்டுகள்
ஒப்பாரி வைக்கிறது


காதலர்கள் நாம்
ஏன் சாகவேண்டும்?
பூவும் வண்டும்
செத்தாப் போகிறது?
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Apr 15, 2013 3:14 pm

நீ
விலகியபோதுதான்
உன் போதையால்
உடல் உறுப்புகள்
செயலிழந்தது


நீ
முடி வளர்க்கின்றாய்
நான்
மொட்டைமாடியில்
பூச்செடி வளர்க்கின்றேன்


விழியோரம்
உப்புப் பூக்கிறது
வா, வந்து
பறித்துச் சூட்டிக்கொள்

avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Apr 16, 2013 7:26 pm

நான்
உன் நினைவோடு
தொலைந்துபோனத்
திருவிழாக் குழந்தை


கூட்டைத்
திறந்து விட்டேன்
நீ
கூடு திரும்பவில்லை


நீ அமராமலேயே
இதய ஊஞ்சலை
ஆட்டிவிட்டாய்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Apr 16, 2013 7:29 pm

உனக்குத் தான்
கண்ணீர் வராதே
ஏன்?
வீணாக முயற்சிக்கிறாய்
கடவுளே!


நம் காதல்
நமக்கானதுதான்
நாம்
ஏன் விட்டுக்கொடுக்க வேண்டும்?


காற்று
ஓரிடத்திலிருந்து சென்றதும்
மற்றொரு காற்று
அவ்விடம் வந்து சேர்கிறது

avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Apr 17, 2013 6:11 pm

காதல்
ஒரு பல்லாங்குழி விளையாட்டு
அதில் நீ என்னைக்
குழிப்பறித்தாய்


என் காதலை மீட்க
எந்த வங்கியும்
கவிதைக் கடன்
கொடுக்கவில்லை
நானே வங்கியாகிவிட்டேன்


உன் பத்திரிகையைக்
கிழித்தெரிந்துவிட்டேன்
உன் உண்டியல் நினைவுகளை
உடைக்க முடியவில்லை

avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Apr 18, 2013 3:33 pm

பூவின்மேல் இருந்த
வண்டினைக் கண்டு
பூவினைப் பறிக்காமல்
திரும்பியவளா
நீ?


குயில்கள்
தனித்தே பாடுமாம்
என் தனிமையின்
சோகப் பாடல்கள்தான்
இந்தக் கவிதைகள்


முதல் கண்ணீர்த்
துளியில்தான்
காதல் என்ற புத்தகத்தின்
முதற்பக்கத்தைப் படிக்கத்
துவங்குகிறோம்

avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Apr 19, 2013 4:38 pm

சத்தியம்
எல்லாம் சும்மா என்பது
காதல் தோல்விக்குப் பிறகுதான்
தெரியும்


நம் காதலை
உருத் தெரியாமல்
அழித்துவிட்டது
திருமணம்


என் நினைவுகள்
ஏன் என்கிறாய்?
என்னிடம் வரும்
உன் நினைவுகள்
உன்னிடம் சொல்லிவிட்டா
என்னிடம் வரும்

avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Apr 19, 2013 9:51 pm

காதலியே!
இறைவன் என்னிடமிருந்து
தெரியாமல் எடுத்துக்கொடுத்த
என் விலா எலும்பைத்
திரும்பத் தந்துவிடு
இன்றோடு உலகில்
காதல் ஒழிந்துபோகட்டும்


நமக்கான காதல்
என்று தீருமென்று
இறைவனைக் கேட்டால்
சீக்கிரமே என்கிறான்
நான் காதலில் காமத்தைக்
கேட்டதாக விழுந்திருக்கும்
அவர் காதில் என்று
நினைத்துக்கொண்டேன்


நீயும் நானும்
இன்னும்
இணையவே இல்லையே
பின்னர் எப்படிப் பிரிவு வரும்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat Apr 20, 2013 3:41 pm

உலகில்
அனைத்துமே
சரிசமம்
காதலில் மட்டும்
சற்று அதிகம்
ஒருவர்மீது
மற்றொருவர் கொண்ட
அன்பு!

எனக்கான உலகம்
நீ
அதில்
நான் ஆதாம்
நீ
ஏவாள்


நீ
என்னை
நண்பர்களிடமிருந்து மட்டுமல்ல
இறைவனிடத்திலிருந்தும்
தனிமைப்படுத்திவிட்டாய்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Sun Apr 21, 2013 7:07 am

நான்
கதறி அழத் தொடங்கும் முன்னே
கடவுள்
உறங்க ஆரம்பித்துவிடுகிறான்
எங்கே நான் விடும் சாபம்
காதில்
கேட்டுவிடுமோ என்று பயந்து

மழைக் காலப் பொழுதுகளில்
நனைகிறேன்
உன் நினைவுகளில்


களைப்பைப் போக்க வரும்
உன் நினைவுகள்
கண்ணீரைத்
தந்துவிட்டுப் போய்விடுகிறது

avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Sun Apr 21, 2013 8:52 pm

பிரிவு நேரும்
என்பதைச் சிந்திக்காமல்
சத்தியம் செய்துகொண்டோம்


மதம் மாறியது காதல்
சுடுகாடு மட்டும்
பழையது


காதலர்கள்
எல்லோருமே
பொய்
பேசுபவர்கள்தான்

avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Apr 23, 2013 8:43 am

பெயரை எழுதினேன்
அப்போதே
பாலூற்றி விட்டது
கள்ளிச் செடி


என் நினைவுகள்
உன்னை
நெருங்கி வரும்போது
களைப்படைந்து விடுகின்றன


ஆசைகள் எல்லாம்
தூரப் போய் விடுகிறது
பக்கத்தில்
நீ

avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Apr 24, 2013 2:46 pm

கவிதைகளை எரித்தேன்
சாம்பலிலிருந்து பிறந்தது
காதல்!

நரகத்திலிருந்து
சொர்க்கத்திற்குத் தாவினேன்
காதல் தோல்வி


தேடினேன்
ஒளிந்து கொண்டான்
இறைவன்

avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Apr 24, 2013 7:08 pm

பத்திரிகையில்
வேறுபெயர் பார்க்கும்
தூரத்து நண்பர்கள்
என்னை
எப்படி எடுத்துக் கொள்வார்கள்?

உன் முன்னே
என் ஆசை
பிச்சைப் பாத்திரங்கள்


மலர்கள்
மாலையாகவில்லை என்று
மரித்துப் போவதில்லை
செடிகளுக்கு
உரமாவதையும் பார்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Apr 25, 2013 7:38 am

மழைநாளில்
நீ
எனக்குக் குடை பிடித்தாய்
நான்
பூக்களுக்குக் குடை பிடித்தேன்


நீ
இரண்டு இடத்தில்
வலிக்கிறாய்
இதயத்திலும்
பச்சைக்குத்திக் கொண்ட
கையிலும்


காதலுக்குக் கண் இல்லை
அதனால் தானோ என்னவோ
இறைவா!
நீ இருப்பது அப்போது
தெரியவில்லை
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 17 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 11 ... 17  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum