தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சமூக வலைத்தளங்களின் வலையில் சிக்கும் பதின் பருவத்தினர்!

View previous topic View next topic Go down

சமூக வலைத்தளங்களின் வலையில் சிக்கும் பதின் பருவத்தினர்!

Post by mohaideen on Mon Dec 10, 2012 3:40 pm

கம்யூட்டரில் மணிக்கணக்கில் செலவு செய்யும் மகனோ, மகளோ இருக்கின்றனரா? அப்படி எனில் உங்கள் குழந்தைகள் படிப்பிற்காக அதிகம் மெனக்கெடுகின்றனர் என்று பெருமை பட்டுக்கொள்ளவேண்டாம். அவர்கள் பேஸ்புக், ட்விட்டர், யுடியூப்,என சமூக வலைத்தளங்களின் பிடியில் சிக்கியிருக்கக் கூடும் என்று எச்சரிக்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

'லைக்­’ எதிர்பார்ப்பு
கல்லூரி செல்லும் மாணவர்களும், ஐடி துறையில் இருப்பவர்களும் சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்திய காலம் போய் இன்றைக்கு லட்சக்கணக்கானோர் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தியும், பார்வையிட்டும் வருகின்றனர். மழை பெய்தால் ஸ்டேட்டஸ், தும்மினால் ஸ்டேட்டஸ் என அப்டேட் செய்து அதற்கு லைக் கேட்டு காத்திருக்கும் காலம் வந்துவிட்டது. அதிகம் ‘லைக்' கிடைத்தால் மகிழ்ச்சியும், யாருமே ‘லைக்' போடாவிட்டால் மனஅழுத்தமும் ஏற்படுகிறது இவர்களுக்கு. ஆர்வத்தில் தொடங்கிய இந்த பழக்கம் படிப்படியாக இதிலிருந்து மீளவே முடியாத அளவிற்கு வலைத்தளங்களின் வலையில் சிக்கிக் கொள்கின்றனர். இதனால் பெற்றோர்களுடனான பேச்சு குறைவதோடு, படிப்பும் பாழாகி விடுகிறது என்கின்றனர் நிபுணர்கள்.

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
avatar
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

Re: சமூக வலைத்தளங்களின் வலையில் சிக்கும் பதின் பருவத்தினர்!

Post by mohaideen on Mon Dec 10, 2012 3:41 pm

ஃபேஸ் புக் அடிமை

மணிக்கணக்கில் கம்ப்யூட்டர் முன்பு அடிமையாகக் கிடப்பது, எந்த நேரமும் வலைத்தள யோசனையிலேயே இருப்பது, பிற வேலைகளை மறப்பது போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகும் மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிறது. இதன்காரணமாகவே 'சமூக வலைத்தளங்களால் பாதிக்கப்பட்டவர்கள்' என்று ஒரு புது ரகத்தினர் இன்றைக்கு மனநல மருத்துவர்களிடம் சிகிச்சைக்கு அணுகத் தொடங்கி இருக்கிறார்கள்.

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
avatar
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

Re: சமூக வலைத்தளங்களின் வலையில் சிக்கும் பதின் பருவத்தினர்!

Post by mohaideen on Mon Dec 10, 2012 3:42 pm

கவனிக்கப்படவேண்டியவர்கள்

வதோதராவில் எடுக்கப்பட்ட சர்வே ஒன்றில் 8வது மற்றும் 10 வது படிக்கும் 200 மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களில் ஃபேஸ் புக் தங்கள் வாழ்வின் ஒரு அங்கம் என்று 58 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். தினசரி அப்டேட் செய்யாவிட்டால் எதையோ இழந்தது போல நினைப்பதாக 27 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். இவர்கள்தான் உண்மையான அடிமைகள். இவர்கள்தான் அதிகம் கவனிக்கப்படவேண்டியவர்கள்.

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
avatar
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

Re: சமூக வலைத்தளங்களின் வலையில் சிக்கும் பதின் பருவத்தினர்!

Post by mohaideen on Mon Dec 10, 2012 3:42 pm

பிள்ளைகளை கவனிங்க

தமிழ்நாட்டிலும் 'சமூக வலைத்தளங்களில் மூழ்கி படிப்பில் கவனம் சிதறும் பல மாணவ, மாணவிகள் இருக்கின்றனர். சாதாரணமாக ஒவ்வொருவருக்கும் 500க்கும் மேற்பட்ட நண்பர்கள் வரை இருக்கின்றனர். 'படிக்கிறேன்' என்ற போர்வையில் தினமும் 3-4 மணி நேரம் வரை சமூக வலைத்தளத்தில் மூழ்குவது, நண்பர்களுடன் சாட்டிங் என படிப்பை பாழாக்கிக் கொள்கின்றனர்.

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
avatar
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

Re: சமூக வலைத்தளங்களின் வலையில் சிக்கும் பதின் பருவத்தினர்!

Post by mohaideen on Mon Dec 10, 2012 3:43 pm

இதுவும் போதைதான்

''மூளையில் 'டோபோமைன்' என்ற வேதிப்பொருள் சுரக்கும்போது ஒருவிதக் கிளர்ச்சி, சந்தோஷம் உண்டாவதும் இது போன்ற வலைதள அடிமையாக காரணம் என்கின்றனர் நிபுணர்கள். மது, புகை ஒருவித போதை என்றால் கணினி மற்றும் மொபைல் போன் போன்றவைகளிடம் இன்று பலரும் அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள்.

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
avatar
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

Re: சமூக வலைத்தளங்களின் வலையில் சிக்கும் பதின் பருவத்தினர்!

Post by mohaideen on Mon Dec 10, 2012 3:45 pm

சமூக விரோதிகளின் கையில்

சமூகத் தளங்கள் மூலமாகப் பள்ளி மாணவிகளைச் சமூக விரோதிகள் பயன்படுத்திக்கொள்ளும் அபாயமும் இருக்கிறது. முகம் தெரியாத ஆட்களுடன் 'தான் யார், தனக்கு என்ன சினிமா பிடிக்கும், எந்த மாதிரி உணவு பிடிக்காது' என்று துவங்கி தங்களைப் பற்றிய அத்தனை விஷயங்களையும் பேசுகிறார்கள், சிரிக்கிறார்கள். புகைப்படங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இந்தப் பழக்கம் கடைசியில் உணர்வு ரீதியான உறவாகவும் மாறி ஓடிப்போக வழிவகுக்கிறது.

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
avatar
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

Re: சமூக வலைத்தளங்களின் வலையில் சிக்கும் பதின் பருவத்தினர்!

Post by mohaideen on Mon Dec 10, 2012 3:46 pm

எரிச்சலும் மனஅழுத்தமும்

''சமூக வலைத்தளங்களில் பழியாய்க் கிடந்தால் படிப்பு, வேலை, குடும்பம் ஆகியவற்றின் மீது கவனம் குறையும். கவனச்சிதறல் ஏற்படும். வாழ்க்கையில் எது முக்கியம், எது முக்கியம் இல்லை என்பது மறந்து போவதுடன் வாழ்க்கை முறையே மாறிவிடும். நிறைய 'லைக்ஸ்', 'ஷேர்' கிடைக்கவில்லை என்றால் ஒருவித ஏமாற்றம் வந்து மனஅழுத்தம் ஏற்படும். நம்முடைய கருத்துக்கு எதிரான கருத்து வந்தால், அதைத் தாங்கும் பக்குவமற்று சிலருக்கு எரிச்சல் ஏற்படும். அதுவே மன அழுத்தமாகவும் மாறும் என்கின்றனர் நிபுணர்கள்.

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
avatar
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

Re: சமூக வலைத்தளங்களின் வலையில் சிக்கும் பதின் பருவத்தினர்!

Post by mohaideen on Mon Dec 10, 2012 3:47 pm

உடல், மனநல பாதிப்பு

மனம் மட்டும் அல்லாமல், நீண்ட நேரம் உட்கார்ந்தே இருப்பதால் இடுப்பு மற்றும் கண் தொடர்பான பிரச்னைகளும் ஏற்படும். படிப்பு அல்லது வேலையில் கவனம் குறையும். எதையும் சகஜமாக எதிர்கொள்ளும் மனப்பக்குவம் அவசியம். ஒரு வார்த்தைக்கே ஒடிந்துபோகிறவர்கள் வலைத்தள ஆர்வத்தால் எத்தகைய மனச்சிக்கலுக்கும் ஆளாக நேரிடும். சிலர் தற்கொலைக்கு முயலும் அபாயமும் உருவாகும்.

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
avatar
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

Re: சமூக வலைத்தளங்களின் வலையில் சிக்கும் பதின் பருவத்தினர்!

Post by mohaideen on Mon Dec 10, 2012 3:47 pm

கவனத்தை திருப்பலாம்

எனவே சமூக வலைத்தளங்களுக்கு அடிமையானவர்களை மீட்க ஒரே தீர்வு... அத்தகைய ஆர்வத்தை உடனடியாக நிறுத்துவதுதான். முதலில் கடினமாகத்தான் இருக்கும். ஆனால், மூன்றே வாரத்தில் அதில் இருந்து விடுபட்டு வழக்கமான பணிகளில் முன்போல ஈடுபட முடியும். இதில் பெற்றோர் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். பள்ளி செல்லும் மாணவ- மாணவிகளுக்குச் சமூக வலைத்தளங்களை அறிமுகம் செய்வதற்கு பதிலாக நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்தலாம். மேலும் பிற குழந்தைகளோடு சேர்ந்து விளையாடுவது, குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவது போன்றவற்றில் சந்தோஷத்தை உருவாக்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

http://tamil.oneindia.in

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
avatar
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

Re: சமூக வலைத்தளங்களின் வலையில் சிக்கும் பதின் பருவத்தினர்!

Post by ரானுஜா on Mon Dec 10, 2012 4:32 pm

தகவலுக்கு நன்றி
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: சமூக வலைத்தளங்களின் வலையில் சிக்கும் பதின் பருவத்தினர்!

Post by சிவா on Mon Dec 10, 2012 4:39 pm

அறியத்தந்தமைக்கு நன்றி அண்ணா
avatar
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

Re: சமூக வலைத்தளங்களின் வலையில் சிக்கும் பதின் பருவத்தினர்!

Post by மகா பிரபு on Mon Dec 10, 2012 4:45 pm

வேதனையான விசயம்.
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: சமூக வலைத்தளங்களின் வலையில் சிக்கும் பதின் பருவத்தினர்!

Post by மகா பிரபு on Mon Dec 10, 2012 4:46 pm

வேதனையான விசயம்.
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: சமூக வலைத்தளங்களின் வலையில் சிக்கும் பதின் பருவத்தினர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum