தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
by rammalar

» குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
by rammalar

» தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
by rammalar

» மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
by rammalar

» அசுரவதத்திற்கு தயாரான சசிகுமார்
by rammalar

» ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் திரைப்படம்
by rammalar

» கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்: சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது
by rammalar

» கனவு - கவிதை
by rammalar

» செயல் - கவிதை
by rammalar

» படி! படி! - சிறுவர் கவிதை
by rammalar

» விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
by rammalar

» தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
by rammalar

» மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
by rammalar

» பண்பே வெல்லும் - கதைப்பாடல்
by rammalar

» சிலம்பம் பயிலும் விஜய் ஆண்டனி!
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» சமந்தா வரவேற்பு!
by rammalar

» ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
by rammalar

» பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
by rammalar

» தனுஷ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சசிகுமார்
by rammalar

» திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பவர்களுக்கு நீட் தேர்வு எழுத அனுமதி கிடையாது
by rammalar

» ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை: படத்திறப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் வாதம்
by rammalar

» புதுச்சேரி - பெங்களூர் இடையே புதிய விமான சேவை மீண்டும் தொடக்கம்
by rammalar

» சனீஸ்வரா காப்பாத்து!
by rammalar

» நாம் அழுதால் தாங்கமாட்டார் ஆஞ்சநேயர்!
by rammalar

» பெண்ணிடம் திருடப்பட்ட செயின் அவரிடமே அடகுக்கு வந்த அதிர்ச்சி சம்பவம்
by rammalar

» 47 படங்கள் நடித்தும் டப்பிங் பேசாதது ஏன்? அனுஷ்கா பதில்..
by rammalar

» இந்தியில் வெளியான பேட்மேன் தமிழ் ரீமேக்கில் தனுஷ்?
by rammalar

» கௌதம் மேனன் உருவாக்கிய பாடலைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட சூர்யா
by rammalar

» ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறாத 43 பொறியியல் கல்லூரிகள்: அதிர்ச்சி தகவல்
by rammalar

» ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி அயோத்தியில் இருந்து ராம ராஜ்ஜிய ரத யாத்திரை தொடங்கியது
by rammalar

» பீகாரில் பிச்சை எடுத்து கழிப்பறை கட்டிய கிராமத்துப் பெண்ணுக்கு கலெக்டர் பாராட்டு
by rammalar

» பஞ்சாப் வங்கியில் ரூ.11,000 கோடி பணம் ‛போச்'
by rammalar

» இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி: அமெரிக்கா எச்சரிக்கை
by rammalar

» 182 மீட்டர் உயரம் கொண்ட சர்தார் வல்லபாய் படேல் சிலை அக்டோபர் 31-ல் திறக்கப்படும்: குஜராத் அரசு
by rammalar

» இந்தியாவிற்குள் நுழைய பாகிஸ்தானில் 300 பயங்கரவாதிகள் தயார் நிலை ராணுவ தளபதி எச்சரிக்கை
by rammalar

» ஜெயலலிதாவின் கைரேகை பெற உத்தரவிட்டது யார்? டாக்டர் பாலாஜி வாக்குமூலத்தால் திடீர் பரபரப்பு
by rammalar

» மார்ச் 1 முதல் ரயில்களில் முன்பதிவுப் பட்டியல் ஒட்டப்படாது: பயணிகள் எதிர்ப்பு
by rammalar

» 17 உயிர்களைப் பலிகொண்ட ஃபுளோரிடா துப்பாக்கிச்சூடு! - அமெரிக்காவை அச்சுறுத்தும் `மனநோய்'
by rammalar

» சாயம் – கவிதை
by rammalar

Top posting users this week
rammalar
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


திரைப் பார்வை: மிதக்கும் நகைச்சுவைப் படலம் - ஹே ஜூட் (மலையாளம்)

View previous topic View next topic Go down

திரைப் பார்வை: மிதக்கும் நகைச்சுவைப் படலம் - ஹே ஜூட் (மலையாளம்)

Post by rammalar on Tue Feb 13, 2018 1:20 pm


-

-
ஷியமபிரசாத், மலையாள சினிமாவின் தனித்துவமான இயக்குநர்.
முன்னணி நாயகர்களான மம்மூட்டி, திலீப், நிவின் பாலி,
ஃபகத் பாசில், ஜெயசூர்யா உள்ளிட்டவர்களை இயக்கியவர். என்ற
போதும் மலையாள வணிகப் படங்களின் போக்கிலிருந்து விலகியே
படம் எடுத்தவர்.

அமெரிக்க இந்தியச் சிறுபான்மையினர் நிலை (இவிட), குடும்பப்
பாரம்பரியம் என்னும் கற்பனை (எலட்ரா), அருகிலிருந்து
அகன்றிருக்கும் காதல் (அரிகே) உள்ளிட்ட வித்தியாசமான கதைக்
கருக்களில் படம் எடுத்துள்ளார்.

தற்போது நிவின் பாலி - த்ரிஷா நடிப்பில் அவரது இயக்கத்தில்
சமீபத்தில் வெளியாகியிருக்கும் படம்தான் ‘ஹே ஜூட்’.

நிவின் பாலிக்கு ஷியமபிரசாத்துடன் இது மூன்றாவது படம்.
‘இங்கிலீஷ்’ ‘இவிட’ ஆகிய இரு படங்களிலும்
சந்தர்ப்பவாதியான ஐ.டி ஆளாகவே நிவின் நடித்திருப்பார்.

இந்தப் படத்தில் வெகுளியான ஜீனியஸ் வேடம் அவருக்கு.
த்ரிஷாவுக்கு இது அறிமுக மலையாளப் படம்.
கொண்டாட்டத்துக்கும் கோபத்துக்கும் இடையே அலைக்கழிக்கப்
படும் குணாதிசயம்கொண்ட இளம் பெண்ணாக நடித்திருக்கிறார்.

எடுத்துக்கொண்ட கருப்பொருளை நோக்கி முன்னேறிச் செல்லும்
திரைக்கதைகளைக் கையாண்ட ஷியமபிரசாத்தின் மற்ற
படங்களிலிருந்து முற்றிலும் வித்தியாசமானது இந்தப் படம்.

கொச்சியிலிருக்கும் ஆங்கிலோ இந்தியர்களின் குடும்பத்தையும்
அதன் உறுப்பினர்களின் குணங்களையும் முதல் பாதி
சித்திரிக்கிறது. இதன் வழியாக நிவின் பாலி கதாபாத்திரம் (ஜூட்)
ஒரு ஜீனியஸ், ஆனால் குழந்தைகளின் சுபாவம் உள்ளவராக
உருவம் கொள்கிறது.

இதன் முதல் பாதி முழுவதையும் நகைச்சுவையால் நிரப்ப
முயன்றிருக்கிறார் இயக்குநர். நிவின் பாலி கதாபாத்திரத்தின்
இயல்பையும் அவருடைய தந்தை கதாபாத்திரத்தின் (சித்திக்)
பணத்தாசையையும் திரைக்கதை பயன்படுத்திக்கொண்டுள்ளது.
-
-----------------------------------

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7161

Back to top Go down

Re: திரைப் பார்வை: மிதக்கும் நகைச்சுவைப் படலம் - ஹே ஜூட் (மலையாளம்)

Post by rammalar on Tue Feb 13, 2018 1:20 pm



இரண்டாம் பாதிக் கதை கோவாவில் நடக்கிறது. உறவினர் மூலம்
தனக்குக் கிடைத்த வீட்டின் பின்புறம் குடியிருப்பவரைக் காலி
செய்ய சித்திக் முயல்கிறார். அங்கு மனநல மருத்துவரான தன்
தந்தையுடன் த்ரிஷா குடியிருக்கிறார்.

அவர் பாடகர் குழு ஒன்றை வைத்திருக்கிறார். இவர்களுக்கு
இடையிலான சண்டையை நகைச்சுவையாக்கப் படம் முயன்றுள்ளது.
புற்றுநோய்ப் பாதிப்பை மெல்லிய நகைச்சுவை வழியாகச் சித்திரித்த
‘ஞண்டுகளுட நாட்டில் ஒரிடவேள’ படத்தைப் போன்று இந்தப்
படத்தையும் உருவாக்க முயன்றிருக்கிறார்கள்.

ஆனால், இந்தப் படத்தின் நகைச்சுவை, படத்துக்கு மேலே படலமாக
மிதக்கிறது.

த்ரிஷாவின் துள்ளலான நடிப்பும் கோவாக் காட்சிகளும் அவர் வரும்
பகுதியை வண்ணமயமாக்குகின்றன. எதிரில் இருப்பவரின்
கண்ணைப் பார்த்துப் பேசாத இயல்புடைய குண்டுப் பையனாக
நிவின் பாலி சிறப்பாக நடித்திருக்கிறார்.

மனநல மருத்துவரான விஜய் மேனனின் பங்களிப்பும் படத்துக்கு
அதே அளவுக்கு வலுச்சேர்த்துள்ளது.

ஆனால், இந்தப் படத்தின் கதைக் கரு, ஆஸ்பர்ஜெர் மன நலப்
பாதிப்பைக் (Asperger) குறித்தது. ஆட்டிசம் பாதிப்பின் சில
கூறுகளைக் கொண்ட இந்தப் பாதிப்பால் குழந்தைகள், இளைஞர்கள்
பாதிக்கப்படுகிறார்கள்.

அறிவாற்றலும் மொழியறிவும் இருக்கும். ஆனால், சமூக உறவு
என்பது பாதிக்கப்பட்டிருக்கும். இப்படியான பாதிப்பைக் குறித்து
நிவின் பாலிக்கும் தெரியாது. அவருடைய பெற்றோருக்கும்
தெரியாமல் இருக்கிறது.

அதே போல த்ரிஷா பைபோலார் டிஸ்ஆர்டரால் பாதிக்கப்பட்டவராக
இருக்கிறார். ஆனால், அளவுக்கு அதிகமான அன்பு, அதே அளவு
வெறுப்பையும் வெளிப்படுத்துபவராக இருக்கிறார்.

இவர்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை மன நல
மருத்துவர் கதாபாத்திரம் வழியாக விளக்குகிறது இந்தப் படம். இந்த
விதத்தில் இது முக்கியமான படம்.

ஆனால், அதைச் சொல்வதற்கு படம் கொச்சியிலிருந்து கோவா
போய்த் திரும்பியிருக்கிறது.
-
---------------------------------
தி இந்து

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7161

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum