தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!!
by ந.கணேசன்

» மைசூரு தசரா விழா: அர்ஜூனா உள்பட 8 யானைகளுக்கும் நடைபயிற்சி
by rammalar

» இந்தியாவின் முதல் பத்திரிகை – ஒரு வரி செய்திகள்
by rammalar

» பெட்ரோலை எஸ்ஸென்ஸ் என்றழைக்கும் நாடு….(பொது அறிவு தகவல்)
by rammalar

» முன்னழகிற்கு இத்தனை லட்சமா..?
by rammalar

» மூட்டு வலிக்காரர்களுக்கு எள்ளுருண்டை
by rammalar

» மகளின் முதல் கிறுக்கல்…
by rammalar

» கொசு… உயிரை பறிக்கும் ‘பிசாசு’ இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
by rammalar

» காலை 8 மணிக்கு தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்தும் கிராம மக்கள்
by rammalar

» கவிதை : நிதான விதைகள்
by rammalar

» கிரெடிட் கார்டுகளை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவது எப்படி?
by rammalar

» கூழாங்கற்கள்...!!
by ந.கணேசன்

» ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
by rammalar

» கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
by rammalar

» மழை வந்தது ஏன்?
by rammalar

» முருகனுக்கு அப்பாவான சிவாஜி
by rammalar

» ஓஷோவின் குட்டிக் கதைகள..
by ந.கணேசன்

» அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
by rammalar

» தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
by rammalar

» இடது கையால் தானம்…
by rammalar

» போதை குறையாமல் இருக்க….!! –
by rammalar

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by rammalar

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by rammalar

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by rammalar

» அவசரப்படாதே மச்சி!!
by rammalar

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by rammalar

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by rammalar

» நமக்கு வாய்த்த தலைவர்
by rammalar

» கடல் போல் இருக்கும் மனைவி!
by rammalar

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by rammalar

» ரதிதேவியா நடிக்கிறது யாரு மேடம்...?
by rammalar

» பாப்பி - நகைச்சுவை
by rammalar

» நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை
by rammalar

» மனம், பாசம் – கவிதை
by rammalar

» முல்லாவின் கதை.
by ந.கணேசன்

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» ராஜஸ்தானில் காந்தி ஜெயந்திக்கு லீவு இல்லை
by rammalar

» சுவையான மீன் இனங்களை பெருக்க மேற்கு வங்க அரசு தீவிரம்
by rammalar

» இந்திய ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்
by rammalar

» கொடிய வால் நட்சத்திரங்கள் ஒருநாள் பூமியை தாக்கி பயங்கர அழிவுகளை ஏற்படுத்தும் - நாசா
by rammalar

Top posting users this week
rammalar
 
ந.கணேசன்
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பொறுமை… நம்பிக்கை!

View previous topic View next topic Go down

பொறுமை… நம்பிக்கை!

Post by rammalar on Thu Jul 20, 2017 8:37 pm


-
ஜூலை 19 – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூரம் ஆரம்பம்
ஒவ்வொரு மனிதரும் தன் வாழ்வின் தாரக மந்திரமாக
கொள்ள வேண்டியது, பொறுமை மற்றும் நம்பிக்கை!
-
இந்த இரண்டையும் கடைப்பிடித்தால், வாழ்வில் வெற்றி
உறுதி என, நமக்கு அறிவுறுத்தியவள், ஆண்டாள்.
கலியுகம் பிறந்த சமயம், லட்சுமி தாயாரிடம்,
‘தேவி… கலியுகம் பிறந்து விட்டது; நாம் பூலோகம்
சென்றால் தான், நிலைமையை சரிப்படுத்த முடியும்.
நீயும் என்னோடு வா…’ என்றார், திருமால்.
-
‘சுவாமி… தங்களுடன் சீதையாகவும், ருக்மணியாகவும்
வந்து பட்ட பாடு போதும்; மீண்டும் என்னை
சோதிக்காதீர்கள்…’ என, பணிவோடு மறுத்து விட்டாள்,
லட்சுமி தாயார்.
-
அதனால், தன் இன்னொரு மனைவியான பூமாதேவியைப்
பார்த்தார், திருமால். ‘நான் வருகிறேன் சுவாமி…’ என்றாள்,
பூமாதேவி.
-
‘தேவி… பூலோகத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் எனும் ஊரில்,
எனக்கு சேவை செய்து வரும் பெரியாழ்வார் எனும்
அடியவரின் மகளாக வளர்ந்து வா… தக்க நேரத்தில்
உன்னை ஆட்கொள்வேன்…’ என்றார் திருமால்.
-
அதனால், ஐந்து வயது குழந்தையாக துளசி வனத்தில்
அனாதையாக நின்றாள், பூமித்தாயார்.
அவளைப் பார்த்த பெரியாழ்வார், ‘இக்குழந்தையை
யாரோ அனாதையாக விட்டுச் சென்று விட்டனர்
போலும்…’ என நினைத்து, அவளை, தன் மகளாக ஏற்றார்.
-
அன்று, ஆடிப்பூரம் நட்சத்திரம்; தன் மகளுக்கு, ‘கோதை’
என பெயரிட்டார். இதற்கு, ‘நல்வாக்கு அருள்பவள்’ எனப்
பொருள்.
-
பெருமாள் மீது கோதைக்கு இருந்த அதீத பக்தியே,
நாளடைவில் காதலாக மாறிற்று. அதனால், ‘மனிதர்களை
திருமணம் செய்ய மாட்டேன்; பெருமாளே தன் கணவர்…’
என, உறுதி எடுத்து, நம்பிக்கையுடன், அவர் மீது அன்பு
செலுத்தினாள்.
-
தினமும், வனத்திலிருந்து துளசியை பறித்து, மாலையாக
தொடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூரில் கோவில் கொண்டுள்ள,
வடபத்ரசாயி பெருமானுக்கு சூட்டும் கைங்கரியத்தை
செய்து வந்தார், பெரியாழ்வார்.
-
அவ்வாறு அவர் மாலையாக தொடுத்து வைத்திருப்பதை,
தன் கழுத்தில் அணிந்து அழகு பார்த்த பின், அதை,
பூக்கூடையில் வைத்து விடுவாள், ஆண்டாள்.

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5779

Back to top Go down

Re: பொறுமை… நம்பிக்கை!

Post by rammalar on Thu Jul 20, 2017 8:37 pm

ஒருநாள், அவளது தலைமுடி மாலையில் ஒட்டிக் கொள்ள,
அதை கவனிக்காமல், எடுத்துச் சென்றார், பெரியாழ்வார்.
சுவாமிக்கு அணிவிக்கும் போது, முடி இருப்பதை அறிந்து,
பதறி, புதுமாலை கட்டி அணிவித்தார்.
-
இப்படியே சில நாட்கள் தொடரவே, இது எப்படி நடக்கிறது
என சோதிக்க, மறைந்திருந்து பார்த்தார். கோதை,
பெருமாளுக்கு வைத்திருந்த மாலையை எடுத்து, தன்
கழுத்தில் அணிந்து கழற்றுவதைப் பார்த்து, அவளைக்
கடிந்து கொண்டார்.
-
பின், புதுமாலை கட்டி, பெருமாளுக்கு அணிவிக்க
சென்றார்.
-
அதை ஏற்காத பெருமாள், ‘என் பக்தை அணிந்த மாலையே
எனக்கு வேண்டும்…’ என, அசரீரியாக கூறியதுடன்,
‘அவளையே தன் மனைவியாக ஏற்பேன்…’ என்றார். பின்,
பொறுமையின் சின்னமான பூமாதேவியை மணந்தார்.
-
பொறுமையும், நம்பிக்கையும் வாழ்க்கை லட்சியங்களை
மட்டுமல்ல; கடவுளையே அடைய உதவும் என்பது,
ஆண்டாளின் வாழ்க்கை, நமக்கு கற்றுத்தரும் பாடம்!

—————————-
தி.செல்லப்பா
வாரமலர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5779

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum