தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
by rammalar

» தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
by rammalar

» இடது கையால் தானம்…
by rammalar

» போதை குறையாமல் இருக்க….!! –
by rammalar

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by rammalar

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by rammalar

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by rammalar

» அவசரப்படாதே மச்சி!!
by rammalar

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by rammalar

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by rammalar

» நமக்கு வாய்த்த தலைவர்
by rammalar

» கடல் போல் இருக்கும் மனைவி!
by rammalar

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by rammalar

» ரதிதேவியா நடிக்கிறது யாரு மேடம்...?
by rammalar

» பாப்பி - நகைச்சுவை
by rammalar

» நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை
by rammalar

» மனம், பாசம் – கவிதை
by rammalar

» முல்லாவின் கதை.
by ந.கணேசன்

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» ராஜஸ்தானில் காந்தி ஜெயந்திக்கு லீவு இல்லை
by rammalar

» சுவையான மீன் இனங்களை பெருக்க மேற்கு வங்க அரசு தீவிரம்
by rammalar

» இந்திய ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்
by rammalar

» கொடிய வால் நட்சத்திரங்கள் ஒருநாள் பூமியை தாக்கி பயங்கர அழிவுகளை ஏற்படுத்தும் - நாசா
by rammalar

» இஸ்லாமிய பெண்ணின் பர்தாவை நீக்கிய குற்றத்திற்காக ரூ.54 லட்சம் இழப்பீடு
by rammalar

» திரைப்பட தணிக்கை வாரியத்தின் உறுப்பினர்களாக நடிகைகள் கவுதமி- வித்யாபாலன் நியமனம்
by rammalar

» ‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்
by rammalar

» தனி மனிதன் தருகின்ற தண்டனை பற்றிய கதை
by rammalar

» வைரலாகும் சமந்தா நாக சைத்தன்யாவின் திருமண அழைப்பிதழ்!!
by rammalar

» கூட்டத்தில் ஒருத்தன் – திரைப்பட விமரிசனம்
by rammalar

» துணை கலெக்டராக பொறுப்பேற்றார் சிந்து
by rammalar

» ஜெயலலிதா பாணியில் எடப்பாடி பழனிசாமி சொன்ன குட்டிக்கதை!
by rammalar

» சைகை மொழியில் உருவான தேசிய கீதம்; நடிகர் அமிதாப் பச்சன் நாளை வெளியிடுகிறார்
by rammalar

» பாபர் மசூதி விவகாரம்; சர்ச்சைக்குரிய பகுதியில் ராமர் கோவிலை கட்டலாம் ஷியா வாரியம் அபிடவிட்
by rammalar

» சிறந்த மருத்துவ முன்னேற்றம்: நானோ சிப் மூலம் சேதமடைந்த உறுப்புகளை வளர வைக்க முடியும்
by rammalar

» அம்மா ! நீயும் நானும்
by nakasundaram

» இனி இணைய தளங்களை தமிழிலேயே திறக்கலாம்.
by nakasundaram

» கூழாங்கற்கள்...!!
by ந.கணேசன்

» ஆங்கில கட்டுரை பிழையின்றி எழுத…
by rammalar

» வெளிச்சம் – கவிதை
by rammalar

» எதுவும் நிரந்தரமில்லை – கவிதை
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


புரட்சி பெண் செம்பியன் மாதேவிக்குச் சிலை!

View previous topic View next topic Go down

புரட்சி பெண் செம்பியன் மாதேவிக்குச் சிலை!

Post by rammalar on Wed Jun 07, 2017 4:41 am


-


அரியலூர் மாவட்டம் செம்பியக்குடியில் பிறந்தவர்
வரலாற்று நாயகி செம்பியன் மாதேவி.

இவரை அமரர் கல்கி பொன்னியின் செல்வன் காவியத்தில்
முக்கிய கதாபாத்திரத்தில் வடித்துக் காட்டியதால் மக்களின்
மனத்தில் நீங்கா இடம் பிடித்தவர். அவரை நினைவு கூறும்
விதமாக அவ்வூர் மக்கள் ஒன்றுகூடி நிதி திரட்டி செம்பியன்
மாதேவிக்கு ஆறேமுக்கால் அடி உயர ஐம்பொன் சிலை
செய்து சமீபத்தில் திறப்பு விழாவும் நடத்தியிருக்கிறார்கள்.

செம்பியன் மாதேவி பிறந்த நாள் விழா, செம்பியன் மாதேவி
அறக்கட்டளை தொடக்க விழா, சோழர் வரலாற்றில்
கண்டாதித்த சோழரும் செம்பியன் மாதேவியும் என்ற நூல்
வெளியீட்டு விழா என முப்பெரும் விழாவாக நடத்தப்பட்டது.

முதலாவதாக, சிலை அமைப்பு செயல்தலைவர் புலவர்
திருநாவுக்கரசு வரவேற்புரையாற்ற, எஸ்.ஆர். எம். பல்கலைக்
கழக நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் தலைமை வகித்து
சிலையைத் திறந்து வைத்துப் பேசினார்.

இவ்வூரில் பிறந்த செம்பியன் மாதேவிக்கு ஊர் மக்களே கூடி
சிலை வடித்திருப்பது மெய்சிலிர்க்க வைக்கிறது. இந்த
மண்ணை மிதித்ததற்காகவும், இவ்விழாவில் கலந்து
கொண்டதற்காகவும் பெருமை கொள்கிறேன் என்கிறார்.

தமிழக முன்னாள் அறநிலையத் துறை அமைச்சர்
வி.வி. சுவாமிநாதன் பேசும்போது, தமிழக அரசு
வேலுநாச்சியாருக்கு விழா எடுப்பதைப் போல செம்பியன்
மாதேவிக்கு ஆண்டுதோறும் அரசே பொறுப்பேற்று விழா நடத்த
வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5765

Back to top Go down

Re: புரட்சி பெண் செம்பியன் மாதேவிக்குச் சிலை!

Post by rammalar on Wed Jun 07, 2017 4:42 amசிலை வடிப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர்
சந்திரசேகரிடம் பேசினோம்.

நாகப்பட்டினம் கீழவேளூர் அருகே செம்பியன்குடி என்ற
கிராமத்தை உருவாக்கி அதில் ஸ்ரீகைலாசநாதர் கோயிலும்
அதற்கு முன்பு கண்டராதித்த சதுர்வேதி மங்கல ஏரி என்ற
அழகிய இயற்கை சூழ் கிராமத்தை அமைத்தும் வரலாற்றில்
முக்கிய இடத்தைப் பெற்றவர் செம்பியன் மாதேவி.

அவருக்காக ஊர் மக்கள் பொருள் உதவியுடன் சுமார் ரூபாய்
பத்து லட்சம் மதிப்பீட்டில் ஆயிரம் கிலோ எடை கொண்ட
ஆறே முக்கால் அடி உயர ஐம்பொன் சிலையை வடித்திருக்கிறோம்.
இவ்விழாவை ஆண்டுதோறும் அரசு ஏற்று நடத்துமானால்
அவணங்களைத் தர தயாராக இருக்கிறோம் என்கிறார்.

சோழர் வரலாற்றில் கண்டராதித்த சோழரும் செம்பியன்
மாதேவியும் என்ற நூல் ஆசிரியரும் கல்வெட்டு ஆய்வாளருமான
இல. தியாகராஜன் பேசும்போது

கி.பி. 920ம் ஆண்டு, கண்டாதித்த சோழன் அரசராகவும் செம்பியன்
மாதேவி பட்டத்து அரசியாகவும் இருந்தார்கள். இவர்களுக்குத்
திருமணமாகி நெடுநாள் கழித்து மதுராந்தகன் என்ற உத்தமசோழன்
பிறந்தார். இவர்தான் சோழப் பேரரசை பரந்து விரியச் செய்து
வரும் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலை கட்டியவருமான
மாமன்னர் ராஜராஜ சோழனின் தந்தை.

987ல் கண்டராதித்தர் மரணம் அடைந்தார். அக்காலத்தில் கணவன்
இறந்ததும் மனைவி உட்ன கட்டை ஏறும் வழக்கம் இருந்தது.
ஆனால் தமது பாலகன் உத்தமசோழனின் எதிர்கால நலன் கருதி
தொன்றுதொட்டு வந்த உடன்கட்டை ஏறும் வழக்கத்தை மறுதலித்தார்
செம்பியன் மாதேவி.

அந்த வகையில் சமுதாயச் சீர்திருத்தத்திற்கு முதன் முதலில்
வித்திட்டவர் வீரத் தமிழ் மங்கை செம்பியன் மாதேவி.

பேரரசர் கண்டாதித்த சோழர் மறைவிற்குப் பின் அவரது சகோதரர்
அரிஞ்சய சோழன் ஆட்சிப் பொறுப்பேற்றார். பி்னனர் அரிஞ்சய
சோழனின் மகன் சுந்தர சோழன் ஆட்சிக்கு வந்தார்.

அவருக்குப் பின் செம்பியன் மாதேவியின் மகனான உத்தமசோழன்
ஆட்சிக்கு வந்தார். பின்னர் அவரது மகன் மாமன்னர் தஞ்சை
ராஜராஜசோழன் (கங்கை கொண்ட சோழன்) என ஆறு மாமன்னர்கள்
காலத்தில் ராஜமாதாவாக வாழ்ந்து சோழப் பேரரசிற்கு வழிகாட்டியவர்
செம்பியன் மாதேவி என்றார்.

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5765

Back to top Go down

Re: புரட்சி பெண் செம்பியன் மாதேவிக்குச் சிலை!

Post by rammalar on Wed Jun 07, 2017 4:42 amசெம்பியன் கலைக்கோயில்கள் என்ற நூலின் ஆசிரியர்
கோ. எழில்ஆதிரை, 89ம் ஆண்டுகள் வாழ்ந்த செம்பியன் மாதேவி
சைவ சமய மேம்பாட்டிற்கு பாடுபட்டவர்.
சுமார் 850 திருக்கோவில்களைத் தமிழகத்தில் கற்கோயில்களாகவும்
பழைய கோயில்களுக்கு முன் மண்டபம் அமைத்தும் தமிழகக்
கட்டடக் கலையின் சிறப்பை உயர்த்தியவர் என்றார்.

சிறப்புரையாற்றிய பேராசிரியர் கு. ஞானசம்பந்தன்,
இந்த ஊர் மக்கள் கோயில் கட்டியவருக்க கோவில் கட்டியிருக்கிறார்கள்.
இது பெருமைக்குரிய விஷயம். அந்தத் திருமங்கைக்கு பாரிவேந்தர்
கோயில் கட்டித் தரவேண்டும் என்றுகேட்டுக் கொள்கிறேன்.

1001ம் ஆண்டு ராஜேந்திர சோழன் வடித்த சிலையின் மாதிரியை
ஆதாரமாகக் கொண்டு இந்தச் சிலையை வடித்திருப்பதாகச்
சொன்னார்கள். பார்க்க மிக அழகாக, செம்பியன் மாதேவியே நேரில்
நிற்பதைப் போல கம்பீரமாகக் காட்சியளிக்கிறார் என்றார்.

நான் எவ்வளவோ சிலைகள் வடித்திருக்கிறேன். செம்பியன் மாதேவி
சிலையை உருவாக்கச் சொன்ன போதுதான் அவர் வரலாற்றைப்
படிக்க நேர்ந்தது. அது முதல் பயபக்தியோடு விரதமிருந்து இந்தச்
சிலை வடித்தேன். இப்போது சந்தோஷமாக இருக்கிறது என்றார்
சிற்பி ஏ.டி. ராகவானந்தம்.

ஊர் மக்கள், தங்களால் முடிந்த தங்கம், வௌ்ளி, பித்தளை மற்றும்
செம்பு சாமான்களைச் சீர்வரிசை எடுப்பது மாதிரி ஊரை வலம் வந்து
அளித்த பொருளுதவியுடன் இந்தச் சிலை உருவாக்கப்பட்டு செம்பியன்
மாதேவியின் 1107வது பிறந்த தினத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது
குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சி முடிந்ததும் ஊரே திருவிழா கூட்டம்போல காட்சி
அளித்தது.

அமரர் கல்கி, எழுத்தில் உருவம் கொடுத்தார். செம்பியக்குடி
மக்கள் அந்த உருவத்துக்கு உற்சவம் நடத்தி விட்டார்கள்.
-
------------------------------------------
பொன்ஜி
கல்கி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5765

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum