தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ஓஷோவின் குட்டிக் கதைகள..
by ந.கணேசன்

» அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
by rammalar

» தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
by rammalar

» இடது கையால் தானம்…
by rammalar

» போதை குறையாமல் இருக்க….!! –
by rammalar

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by rammalar

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by rammalar

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by rammalar

» அவசரப்படாதே மச்சி!!
by rammalar

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by rammalar

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by rammalar

» நமக்கு வாய்த்த தலைவர்
by rammalar

» கடல் போல் இருக்கும் மனைவி!
by rammalar

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by rammalar

» ரதிதேவியா நடிக்கிறது யாரு மேடம்...?
by rammalar

» பாப்பி - நகைச்சுவை
by rammalar

» நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை
by rammalar

» மனம், பாசம் – கவிதை
by rammalar

» முல்லாவின் கதை.
by ந.கணேசன்

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» ராஜஸ்தானில் காந்தி ஜெயந்திக்கு லீவு இல்லை
by rammalar

» சுவையான மீன் இனங்களை பெருக்க மேற்கு வங்க அரசு தீவிரம்
by rammalar

» இந்திய ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்
by rammalar

» கொடிய வால் நட்சத்திரங்கள் ஒருநாள் பூமியை தாக்கி பயங்கர அழிவுகளை ஏற்படுத்தும் - நாசா
by rammalar

» இஸ்லாமிய பெண்ணின் பர்தாவை நீக்கிய குற்றத்திற்காக ரூ.54 லட்சம் இழப்பீடு
by rammalar

» திரைப்பட தணிக்கை வாரியத்தின் உறுப்பினர்களாக நடிகைகள் கவுதமி- வித்யாபாலன் நியமனம்
by rammalar

» ‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்
by rammalar

» தனி மனிதன் தருகின்ற தண்டனை பற்றிய கதை
by rammalar

» வைரலாகும் சமந்தா நாக சைத்தன்யாவின் திருமண அழைப்பிதழ்!!
by rammalar

» கூட்டத்தில் ஒருத்தன் – திரைப்பட விமரிசனம்
by rammalar

» துணை கலெக்டராக பொறுப்பேற்றார் சிந்து
by rammalar

» ஜெயலலிதா பாணியில் எடப்பாடி பழனிசாமி சொன்ன குட்டிக்கதை!
by rammalar

» சைகை மொழியில் உருவான தேசிய கீதம்; நடிகர் அமிதாப் பச்சன் நாளை வெளியிடுகிறார்
by rammalar

» பாபர் மசூதி விவகாரம்; சர்ச்சைக்குரிய பகுதியில் ராமர் கோவிலை கட்டலாம் ஷியா வாரியம் அபிடவிட்
by rammalar

» சிறந்த மருத்துவ முன்னேற்றம்: நானோ சிப் மூலம் சேதமடைந்த உறுப்புகளை வளர வைக்க முடியும்
by rammalar

» அம்மா ! நீயும் நானும்
by nakasundaram

» இனி இணைய தளங்களை தமிழிலேயே திறக்கலாம்.
by nakasundaram

» கூழாங்கற்கள்...!!
by ந.கணேசன்

» ஆங்கில கட்டுரை பிழையின்றி எழுத…
by rammalar

» வெளிச்சம் – கவிதை
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மாணவர்களுக்கு 3வகை சீருடை: அடுத்த ஆண்டு அறிமுகம் அமைச்சர் அறிவிப்பு

View previous topic View next topic Go down

மாணவர்களுக்கு 3வகை சீருடை: அடுத்த ஆண்டு அறிமுகம் அமைச்சர் அறிவிப்பு

Post by rammalar on Sun May 21, 2017 8:11 am

திருச்செங்கோடு:
''அடுத்த கல்வியாண்டு முதல், மாணவர்களின் சீருடையில்,
அவர்கள் படிக்கும் வகுப்புகளின் அடிப்படையில் மாற்றம்
செய்யப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
செங்கோட்டையன் அறிவித்தார்.

நாமக்கல், ஈரோடு, திருப்பூர் உட்பட, எட்டு மாவட்டங்களைச்
சேர்ந்த, 635 மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு, தற்காலிக
அங்கீகாரம் வழங்கும் விழா, நாமக்கல் மாவட்டம்,
திருச்செங்கோட்டில் நடந்தது. விழாவில், பள்ளிக்கல்வி
அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:

தமிழக கல்வித் துறையில், அடுத்த கல்வியாண்டிலிருந்து,
1ம் வகுப்பு முதல், 5ம் வகுப்பு வரை; 6ம் வகுப்பு முதல்,
10ம் வகுப்பு வரை; பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு,
தனித்தனி நிறத்தில், மூன்று விதமாக பிரித்து சீருடை
வழங்கப்படும்.

கடந்த ஒன்றரை மாதமாக, இரவு பகல் பாராமல் உழைத்து,
தேர்வு முடிவுகளை திட்டமிட்ட தேதிகளில், எஸ்.எம்.எஸ்.,
உள்ளிட்ட நவீன முறைகளில் வெளியிடப்பட்டு உள்ளன.
'நீட்' தேர்வு தமிழகத்திற்கு சரியானதல்ல என, குரல் கொடுத்து
வருகிறோம்.

இருப்பினும், மத்திய அரசு நடத்தும் எந்த போட்டி தேர்வையும்,
தமிழக மாணவர்கள் எதிர்கொள்ள வசதியாக, அவர்களை
திறமையானவர்களாக உருவாக்கும் எண்ணம் உள்ளது.
இதை நிறைவேற்ற, பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு
அறிமுகப்படுத்தப்படும்.

பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், 'அரியர்' முறையில்,
பிளஸ் 2 படித்துக் கொண்டே தேர்வெழுதி தேர்ச்சி பெறலாம்.
வரும் ஐந்து ஆண்டுகளுக்கு பின், அரசு பள்ளிகளில் சேர, போட்டி
உருவாக்கும் நிலையை உருவாக்குவதே எங்களது இலட்சியம்.

தனியார் பள்ளிகளை பாதுகாப்போம்; ஏழை, எளிய மாணவர்களையும்
தனியாருக்கு இணையாக உருவாக்குவோம்.
தமிழகத்தின், 32 மாவட்டங்களில், 2.13 கோடி ரூபாய் மதிப்பில்,
போட்டி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். வரும்
கல்வியாண்டுகளில், பாடத்திட்டங்களை மாற்ற உள்ளோம்.

எந்த மாணவனும், எதிர் காலத்தில் தேசிய அளவிலான போட்டி
தேர்வுகளை, போட்டி போட்டு வெற்றி பெற முடியும் என்ற
நிலையை உருவாக்குவோம்.

பிளஸ் 1 வகுப்பிலேயே, கம்ப்யூட்டர் வழங்குவதோடு, இணையதள,
'வை - பை' வசதி செய்து தரப்படும். ஆசிரியர் பற்றாக்குறை என்ற
மாயத்தோற்றம் உருவாக்கப்பட்டு வருகிறது.

புள்ளி விபரங்கள் சேகரிக்கப்பட்டு, ஆசிரியர் பற்றாக்குறை இல்லாத
நிலையில், மீதமுள்ளவர்களை தென் மாவட்டங்களில் கூடுதலாக
பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
-
------------------------------
தினமலர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5765

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum