தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
by ஜேக்

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by ஜேக்

» வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
by ஜேக்

» பயம் - கவிதை
by ஜேக்

» ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
by rammalar

» தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
by rammalar

» நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
by rammalar

» போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
by rammalar

» போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
by rammalar

» நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
by rammalar

» புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
by rammalar

» மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
by rammalar

» சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
by rammalar

» மேய்ச்சல் - கவிதை
by rammalar

» மென்பொருள் தேவைக்கு....
by sanji

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar

» தகவல் துணுக்குகள்
by rammalar

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar

» நடிகை இந்துஜா
by rammalar

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar

» நம்மைப்போல் - கவிதை
by rammalar

» இப்படி எல்லாம் சட்டம் போட்டா நல்லாத்தான் இருக்கும்...!!
by rammalar

» தினசரி மனைவிக்கு நன்றி சொல்லுங்கள்...!!
by rammalar

» மனைவிக்கு உள்ள சிறப்புகள்
by rammalar

» தலைவர் எப்படி அல்பாயுச போனாரு,..?
by rammalar

» சிந்தனை கார்னர் - ஒன்று முதல் பத்து வரை
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


காளாச்சேரி அரசுப் பள்ளி மாணவர்கள் சாதனை

View previous topic View next topic Go down

காளாச்சேரி அரசுப் பள்ளி மாணவர்கள் சாதனை

Post by rammalar on Mon Apr 17, 2017 2:50 pm


-

பிரமெரிக்கா என்ற அமெரிக்க நிறுவனம் நடத்திய செயல்திட்ட
அறிக்கை சமர்ப்பிக்கும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற
நீடாமங்கலம் ஒன்றியம் காளாச்சேரி (மேற்கு) ஊராட்சி ஒன்றிய
நடுநிலைப் பள்ளி மாணவர்களுடன், அவர்களுக்கு பரிசு வழங்கிய
பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால். |
உள்படம்: ஆசிரியர் ஆனந்த்

————————————————-

அரசுப் பள்ளியில் பயின்றால் ஆங்கிலம் படிக்க வராது
என்ற தவறான கருத்து நிலவி வரும் சூழலில்,
பிரமெரிக்கா என்ற அமெரிக்க நிறுவனம் டெல்லியில்
அண்மையில் நடத்திய செயல்திட்ட அறிக்கை சமர்ப்பிக்கும்
போட்டியில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம்
காளாச்சேரி (மேற்கு) ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி
மாணவர்கள் ஆங்கிலத்தில் அறிக்கை சமர்ப்பித்து,
விளக்கம் அளித்து தேசிய அளவில் 2-வது முறையாக
தங்கப் பதக்கம் பெற்றுள்ளனர்.

ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசு


இப்போட்டியில் மாணவிகள் சி.மாதவி, ஆர்.கோகிலா, ஜி.சாந்தி,
கே.கனகா, மாணவர் பி.சுதர்சன் ஆகியோர், இந்தியாவில்
ரயில்வே கேட்களை கடக்க முற்படும்போது ஏற்படும் விபத்துகள்
குறித்து சமர்ப்பித்த அறிக்கை, அதுதொடர்பான அவர்களின்
ஆங்கில விளக்கத்தின் அடிப்படையில் ரூ.50 ஆயிரம் ரொக்கப்
பரிசு மற்றும் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளனர்.
இப்பள்ளி மாணவர்கள் கடந்த ஆண்டும் இதுபோன்ற போட்டியில்
தங்கப் பதக்கம் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு போட்டியில், நாடு முழுவதும் இருந்து கலந்து
கொண்ட 4,660 பள்ளிகளில் 3 பள்ளிகளுக்கு மட்டுமே பரிசு
கிடைத்துள்ளது. அதிலும் 2 பள்ளிகள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை
பயிற்றுவிக்கும் ராஜஸ்தான் மற்றும் மும்பையைச் சேர்ந்த
தனியார் பள்ளிகள்.

தொடர்ச்சியாக வெற்றி பெற்று பரிசு பெறும் பின்னணியில்
உள்ள கற்றல் முறை குறித்து காளாச்சேரி மேற்கு ஊராட்சி
ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆங்கில பட்டதாரி ஆசிரியர்
ஆனந்த் கூறியதாவது:

———————————-

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6667

Back to top Go down

Re: காளாச்சேரி அரசுப் பள்ளி மாணவர்கள் சாதனை

Post by rammalar on Mon Apr 17, 2017 2:55 pm

சரளமான ஆங்கிலப் பேச்சு

மாணவர்களின் சமூகப் பங்களிப்பு உணர்வை வெளிப்படுத்தும்
செயல் திட்ட ஆய்வறிக்கை சமர்ப்பிப்பதே இப்போட்டி.
இதில் பங்கேற்ற அனைத்துப் பள்ளிகளும் தரமான
ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தன. ஆனால், பரிசுக்குத்
தேர்வாவதற்கு மாணவர்களின் ஆங்கிலப் பேச்சுத் திறனே
முக்கியமானது.

டெல்லியில் நடைபெறும் போட்டியில் பங்கேற்கும் நடுவர்களுக்கு
புரியும் விதமாக சரளமாக ஆங்கிலம் பேசும் அளவுக்கு, விவசாய
குடும்பப் பின்னணியைக் கொண்ட மாணவர்களை பயிற்றுவித்ததில்
தான் எங்களின் வெற்றி அடங்கி யிருக்கிறது.

விளையாட்டு முறை பயிற்சி


ஆங்கிலம் பேச அடிப்படையாக உள்ளது verb எனப்படும்
வினைச் சொற்கள்தான். அதை படிக்க வைத்துவிட்டால்
காலப்போக்கில் பெயர்ச்சொற்களை வைத்து மாணவர்களை
ஆங்கிலம் பேச வைத்துவிடலாம். அந்த வகையில், எங்கள்
பள்ளி மாணவர்களை சுமார் 400 வினைச்சொற்கள் வரை
படிக்க வைத்து ஆங்கிலத்தில் பேச பயிற்சி அளித்துள்ளோம்.

உதாரணமாக நான் வகுப்பில் சைகை மொழியில் எழுதுவது
போன்று காண்பித்தால் அதையே அவர்களும் செய்து காண்பித்து,
we are writing என்பார்கள். தண்ணீரை தலையில்
ஊற்றுவது போல காண்பித்தால், we are bathing என்பார்கள்.

இதுபோல பல்வேறு செயல்பாடுகளில் அவர்களை ஈடுபடுத்தி,
அதை ஆங்கிலத்தில் சொல்ல வைத்து ஆங்கிலத் திறனை
படிப்படியாக வளர்த்துள்ளோம்

——————————————

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6667

Back to top Go down

Re: காளாச்சேரி அரசுப் பள்ளி மாணவர்கள் சாதனை

Post by rammalar on Mon Apr 17, 2017 2:55 pm

சாய்னா நேவால் பாராட்டு

இப்படி விளையாட்டாக மாணவர்களை ஆங்கிலத்திலேயே
பேசவைத்து அவர்களிடம் உள்ள கூச்சத்தைப் போக்குவோம்.
தவறாகப் பேசும் மாணவரைக் கிண்டல் செய்வதாக இருந்தால்
அதையும் ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் என்று மற்ற
மாணவர்களும் ஆங்கிலத்தில் பேச பயிற்சி அளிப்போம்.

இரண்டாவது முறையாக எங்கள் பள்ளிக்குக் கிடைத்துள்ள
வெற்றி, மாணவர்களின் அர்ப்பணிப்பு உணர்வு, தலைமையாசிரியர்,
சக ஆசிரியர்கள், பெற்றோர்களின் ஒத்துழைப்புக்குக் கிடைத்த
வெற்றி யாகக் கருதுகிறோம் என்றார்.

இப்போட்டியை நடத்தும் பிரமெரிக்கா என்ற நிறுவனம்
டெல்லியை தலைமையிடமாகக்கொண்டு இயங்கிவரும்
அமெரிக்க நிறுவனம்.

இது கடந்த 7 ஆண்டுகளாக இத்தகைய போட்டியை நடத்துக றது.
இந்த ஆண்டு நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வில் பேட்மிண்டன்
வீராங்கனை சாய்னா நேவால் மாணவர்களுக்கு பரிசு வழங்கிப்
பாராட்டினார்.

———————————-
தி இந்து

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6667

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum