தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா?
by VISWANATHAN P

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அமெரிக்காவுடன் போருக்கு தயார் வடகொரியா பகிரங்க மிரட்டல்

View previous topic View next topic Go down

அமெரிக்காவுடன் போருக்கு தயார் வடகொரியா பகிரங்க மிரட்டல்

Post by rammalar on Wed Apr 12, 2017 6:32 am


-
பியாங்யாங்:
‘‘அமெரிக்க கடற்படையின் பொறுப்பற்ற நடவடிக்கைக்கு பதிலடி
கொடுப்போம்’’ என வடகொரியா கூறியுள்ளது.

விஷவாயு குண்டுகளை பயன்படுத்தி அப்பாவி மக்கள் 86 பேரை
சிரியா அரசுப்படை கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்ததால்,
சிரியா மீது அமெரிக்க கப்பல்கள் கடந்த 7ம் தேதி அன்று அதிகாலை
59 டொமஹாக் ஏவுகணைகளை வீசியது.

இந்த தாக்குதலில் சிரியாவின் மிக் மற்றும் சுகோய் ரக போர்
விமானங்கள் மற்றும் விமானதளம் முற்றிலும் சேதமடைந்தது.
இந்த தாக்குதலுக்கு சிரியா, ரஷ்யா, வடகொரியா உள்ளிட்ட
நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

தாக்குதலையடுத்து, யுஎஸ்எஸ் கார்ல் வின்சென் என்ற விமானம்
தாங்கி போர்க்கப்பல் தலைமையிலான போர்க் குழு கொரியா
தீபகற்பம் நோக்கி செல்ல அமெரிக்க கடற்படை உத்தரவிட்டது.

இந்த கப்பல் இந்த வார இறுதியில் ஆஸ்திரேலியா செல்ல
திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தனது திட்டத்தை ரத்து செய்து
இந்த கப்பல் சிங்கப்பூரில் இருந்து கொரியா தீபகற்ப பகுதிக்கு
திரும்பியது.

அணு ஆயுத திட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ள வடகொரியா,
இதுவரை 5 முறை அணு ஆயுத சோதனைகளையும் நடத்திவிட்டது.

வடகொரியா நிறுவனர் கிம் இல் சாங்கின் 105வது பிறந்த தினம்
வரும் சனிக்கிழமை கொண்டாடப்படுவதை முன்னிட்டு அணு
ஆயுத சோதனையை மீண்டும் நடத்த திட்டமிட்டிருந்ததாக
கூறப்படுகிறது. வழக்கமாக

இவரது பிறந்தநாளில் மிக பிரம்மாண்டமான போர் பயிற்சியில்
வடகொரியா ஈடுபடும். இந்தமுறை அணு ஆயுத சோதனை நடத்த
வடகொரிய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

மேலும், ஜப்பான் மற்றும் அமெரிக்காவை தாக்கும் வகையில்
அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் நெடுந்தூர ஏவுகணைகளை
வடகொரியா தொடர்ந்து சோதனை செய்து வருகிறது.

வட கொரியா கடந்த பிப்ரவரி மாதம் சோதனை செய்த
4 ஏவுகணைகள் ஜப்பான் அருகே கடலில் விழுந்தன.
வடகொரியாவின் அணு ஆயுத திட்டங்களை அதன் நட்பு நாடான
சீனா தடுத்து நிறுத்தவில்லை என்றால், அமெரிக்கா தன்னிச்சையாக
நடவடிக்கை எடுக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்கனவே
எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதை சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை சமீபத்தில் சந்தித்தபோதும்
டிரம்ப் வலியுறுத்தினார். சிரியா மீது நடத்தப்பட்ட தாக்குதலும்,
வடகொரியாவுக்கு விடுக்கும் எச்சரிக்கையாகவே கருதப்பட்டது.

இந்நிலையில் கொரியா தீபகற்ப பகுதிக்கு அமெரிக்க விமானம்
தாங்கி போர்க்கப்பலை அனுப்பிய நடவடிக்கை, வட கொரியாவை
கோபம் அடையச் செய்துள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர்
கூறுகையில், ‘‘வடகொரியா விஷயத்தில் தலையிடும்
அமெரிக்காவின் பொறுப்பற்ற நடவடிக்கை ஆபத்தான நிலையை
எட்டியுள்ளது.

அமெரிக்கா விரும்பும் எத்தகைய போருக்கும் பதிலடி கொடுக்க
வடகொரியா தயார் நிலையில் உள்ளது. எங்கள் நாட்டை பாதுகாக்க,
எங்களை தாக்குபவர்கள் மீது மிக கடுமையான தாக்குதல்
நடவடிக்கையை எடுப்போம்.

இந்த மூர்க்கத்தனமான நடவடிக்கைகளால் ஏற்படும் மோசமான
பின்விளைவுகளுக்கு அமெரிக்காவை பொறுப்பேற்க வைப்போம்’’
என்றார்.

இதற்கிடையே, வடகொரியாவுக்கு ஆதரவாக படைகளை அனுப்ப,
சீனா தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
-
----------------------------------
தினகரன்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum