தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!!
by ந.கணேசன்

» மைசூரு தசரா விழா: அர்ஜூனா உள்பட 8 யானைகளுக்கும் நடைபயிற்சி
by rammalar

» இந்தியாவின் முதல் பத்திரிகை – ஒரு வரி செய்திகள்
by rammalar

» பெட்ரோலை எஸ்ஸென்ஸ் என்றழைக்கும் நாடு….(பொது அறிவு தகவல்)
by rammalar

» முன்னழகிற்கு இத்தனை லட்சமா..?
by rammalar

» மூட்டு வலிக்காரர்களுக்கு எள்ளுருண்டை
by rammalar

» மகளின் முதல் கிறுக்கல்…
by rammalar

» கொசு… உயிரை பறிக்கும் ‘பிசாசு’ இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
by rammalar

» காலை 8 மணிக்கு தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்தும் கிராம மக்கள்
by rammalar

» கவிதை : நிதான விதைகள்
by rammalar

» கிரெடிட் கார்டுகளை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவது எப்படி?
by rammalar

» கூழாங்கற்கள்...!!
by ந.கணேசன்

» ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
by rammalar

» கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
by rammalar

» மழை வந்தது ஏன்?
by rammalar

» முருகனுக்கு அப்பாவான சிவாஜி
by rammalar

» ஓஷோவின் குட்டிக் கதைகள..
by ந.கணேசன்

» அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
by rammalar

» தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
by rammalar

» இடது கையால் தானம்…
by rammalar

» போதை குறையாமல் இருக்க….!! –
by rammalar

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by rammalar

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by rammalar

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by rammalar

» அவசரப்படாதே மச்சி!!
by rammalar

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by rammalar

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by rammalar

» நமக்கு வாய்த்த தலைவர்
by rammalar

» கடல் போல் இருக்கும் மனைவி!
by rammalar

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by rammalar

» ரதிதேவியா நடிக்கிறது யாரு மேடம்...?
by rammalar

» பாப்பி - நகைச்சுவை
by rammalar

» நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை
by rammalar

» மனம், பாசம் – கவிதை
by rammalar

» முல்லாவின் கதை.
by ந.கணேசன்

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» ராஜஸ்தானில் காந்தி ஜெயந்திக்கு லீவு இல்லை
by rammalar

» சுவையான மீன் இனங்களை பெருக்க மேற்கு வங்க அரசு தீவிரம்
by rammalar

» இந்திய ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்
by rammalar

» கொடிய வால் நட்சத்திரங்கள் ஒருநாள் பூமியை தாக்கி பயங்கர அழிவுகளை ஏற்படுத்தும் - நாசா
by rammalar

Top posting users this week
rammalar
 
ந.கணேசன்
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சொந்த நாட்டுக்கு திரும்பிப் போ’ என கூறியபடி அமெரிக்காவில் இந்தியர் மீது மர்மநபர் துப்பாக்கிச்சூடு: அ

View previous topic View next topic Go down

சொந்த நாட்டுக்கு திரும்பிப் போ’ என கூறியபடி அமெரிக்காவில் இந்தியர் மீது மர்மநபர் துப்பாக்கிச்சூடு: அ

Post by rammalar on Mon Mar 06, 2017 6:16 pm

நியூயார்க்:
‘சொந்த நாட்டுக்கு திரும்பிப் போ’ என கத்தியபடி சீக்கியர் ஒருவர் மீது மர்ம ஆசாமி துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் அமெரிக்காவில் மீண்டும் பீதியை கிளப்பி உள்ளது.

அமெரிக்காவில் புதிய அதிபராக டெனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு இந்தியர்கள் மீதான இனவெறி, நிறவெறி தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 23ம் தேதி கன்சாஸ் நகரில் இந்திய இன்ஜினியர் ஸ்ரீநிவாஸ் குச்சிபோட்லா (32) மதுபான பாரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவரை சுட்டுக் கொன்றவர் ‘நாட்டை விட்டு வெளியேறு’ என கத்தியபடி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்த சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள், கடந்த இரு தினங்களுக்கு முன்பு, தெற்கு கலிபோர்னியாவின் லான்கேஸ்டர் கவுன்டியில் இந்திய தொழிலதிபர் ஹர்னிஷ் பட்டேல் (43) தனது வீட்டின் முன்பாக மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்நிலையில், மீண்டும் ஒரு சீக்கியர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. வாஷிங்டனின் கென்ட் பகுதியில் வசிப்பவர் தீப் ராய் (39). சீக்கியர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான இவர், அமெரிக்க குடியுரிமை பெற்றவர்.

இவர் கடந்த வெள்ளிக்கிழமை, தனது வீட்டின் முன், வாகனத்தை சரிபார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக, முகத்தை பாதி முடியபடி, முகமூடி அணிந்த வந்த ஒரு 6 அடி உயர ஆசாமி, தீப் ராய்யுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளர்.

திடீரென அந்த ஆசாமி மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, ‘சொந்த நாட்டுக்கு திரும்பிப் போ’ என கத்தியபடி, தீப் ராயை நோக்கி சுட்டுள்ளார். இதில், தீப் ராயின் கையில் குண்டு துளைத்தது. ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்ததும், மர்ம ஆசாமி தப்பி ஓடிவிட்டான்.

தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து தீப் ராயை மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து கென்ட் நகர தலைமை போலீஸ் அதிகாரி கென் தாமஸ் கூறுகையில், ‘‘உயிருக்கு ஆபத்தான காயம் ஏதும் படவில்லை. இந்த விஷயத்தை மிக தீவிரமாக விசாரித்து வருகிறோம்’’ என்றார்.

இந்த துப்பாக்கிச்சூடும் இந்தியர்களுக்கு எதிரான இனவெறி தாக்குதலே என அமெரிக்க பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவில் இந்தியர்கள் மீதான இனவெறி தாக்குதல் தினசரி நிகழ்வாக மாறியிருப்பது, அங்கிருக்கும் இந்தியர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் மத்தியில் பீதியை கிளப்பி உள்ளது.

பாதுகாப்பு உறவை பலப்படுத்தும் இந்தியா-அமெரிக்கா: இதற்கிடையே, டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, இந்தியாவுடனான பாதுகாப்பு உறவை பலப்படுத்துவதில் தொடர்ந்து அக்கறை காட்டி வருகிறது. தீவிரவாத தடுப்பு உதவி திட்டத்தின்கீழ் பயிற்சி அளிப்பது தொடர்பாக கடந்த வாரம் இந்தியா வந்த அமெரிக்க பிரதிநிதிகள், வெளியுறவுத்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினர்.

அதன்படி, இந்திய போலீஸ் அதிகாரிகள் விரைவில் அமெரிக்காவில் நடக்க உள்ள இப்பயிற்சியில் பங்கேற்க உள்ளனர். அதில், பிணைக் கைதிகளை மீட்பது, தீவிரவாத சம்பவத்தில் புலனாய்வு மேற்கொள்வது ஆகியவற்றுடன் சைபர் கிரைம், கடல் பாதுகாப்பு குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.
-
தினகரன்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5779

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum