தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு கிராம சபையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றினாலே போதுமானது

View previous topic View next topic Go down

ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு கிராம சபையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றினாலே போதுமானது

Post by rammalar on Thu Jan 19, 2017 3:57 pm

[img][/img]
-
சென்னை

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு
உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், ஜல்லிக்கட்டை
நடத்த அனுமதிக்கவேண்டும் என்று தமிழகத்தில் இளைஞர்களும்,
மாணவர்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில்,
தற்போது அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் களத்தில்
இறங்கியுள்ளனர்.

இந்நிலையில், நடிகர் பார்த்திபன் ஜல்லிக்கட்டை தமிழகத்தில்
நடத்துவதற்கு புதிய யோசனை ஒன்றை தெரிவித்துள்ளார்.
அவர் கூறும் யோசனையாவது, பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் கீழ்
ஊராட்சிகள் தோறும் பொது கிராம சபையில் சிறப்பு தீர்மானம்
(ஒரு சட்டம்) இயற்றினால் அது உச்சநீதிமன்றத்தினால் ஒன்றும்
செய்ய இயலாது.

மாடு பிடி விளையாட்டுக்காக கிராம சபை கூட்டி தீர்மானித்தால்
மத்திய-மாநில அரசு சட்டங்களால் ஒன்று செய்ய முடியாது என்று
தெரிவித்துள்ளார். இதை சட்டம் அறிந்தோர் சரிபார்த்து
சொல்லுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். பார்த்திபனின்
இந்த யோசனை சமூக வலைத்தளத்தில் வேகமாக பகிரப்பட்டு
வருகிறது.

இவருடைய இந்த யோசனையால் மீண்டும் தமிழகத்தில்
ஜல்லிக்கட்டை நடத்த முடியுமா? என்பதை பொறுத்திருந்துதான்
பார்க்கவேண்டும்.

மூத்த பத்திரிகையாளர் ஷியாம் தனியார் தொலைக்காட்சியில்
பேசுகையில், இதே கருத்தை வலியுறுத்தி உள்ளார்
.பிரதமர் நரேந்திர மோடி, உச்ச நீதிமன்ற அதிகாரத்துக்கு
உட்பட்டவர். அவரிடம் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரினால்
எப்படி கிடைக்கும். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை நடத்த
கிராம சபைக்கு முழு அதிகாரம் உள்ளது.

ஜல்லிக்கட்டை நடத்துவதால் கிராம சபைக்கு உச்ச நீதிமன்றத்தால் எ
ந்த சிறைத் தண்டனையும் கொடுக்க முடியாது. அபராதம் மட்டுமே
விதிக்க முடியும். எனவே, நம்மிடம் இருக்கும் கிராம சபை எனும்
அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜோதிமணி தனது
டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் படி கிராம சபைகள் மிகுந்த சக்தி
வாய்ந்தவை. ஊராட்சி மன்றத் தலைவரை விட அதிக அதிகாரம்
மிகுந்தவை.

அமராவதி ஆற்றில் மணல் கொள்ளை மற்றும் சுற்றுச்சூழலுக்கு
கெடுதல் விளைவிக்கும் கோழிப் பண்ணைக்கு எதிரான எங்கள்
போராட்டங்களில் கிராமசபையை பயன்படுத்தியே நீதிமன்றத்தில்
வழக்குகளை வென்றோம். நிரந்தரத் தடை வாங்கினோம்.

கேரளாவில் ப்ளாச்சிமாடா பஞ்சாயத்து கிராமசபையின்
அதிகாரத்தைப் பயன்படுத்தியே கேரள உயர்நீதிமன்ற உத்திரவு
மூலம் கோகோ கோலா ஆலையை மூடியது (பிறகு உச்சநீதிமன்றம்
ஆலைக்கு மீண்டும் அனுமதி கொடுத்துவிட்டது)

அலங்காநல்லூர் ஊராட்சி கிராமசபை தீர்மானம் மூலம் ஜல்லிக்கட்டு
நடத்த முயற்சி செய்யலாம். சட்டமன்றம், நாடாளுமன்றத்தை விட
உள்ளூர் விவகாரங்களில் கிராமசபைக்கு அதிகாரம் அதிகம்.

உள்ளூர் விவகாரங்களை தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைவிட
உள்ளூர் மக்களே திறம்படக் கையாளமுடியும், அதற்கான உரிமை
அவர்களுக்கு உண்டு என்ற அடிப்படையிலேயே கிராமசபைக்கு
பஞ்சாயத்துராஜ் சட்டத்தில் அதிக அதிகாரம் அளிக்கப்பட்டது.

சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களைப் போல 18வயது
நிரம்பிய அனைவரும் கிராமசபையின் உறுப்பினர்கள்.

ராஜீவ்காந்தியின் கனவு திட்டம் இது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக
மக்கள் தங்கள் அருகிலேயே இருக்கும் அதிகாரத்தைப் புரிந்து
கொள்ளவில்லை என்று பதிவு செய்துள்ளார்.
-
---------------------------------------------------
தினத்தந்தி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum