தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சுதந்திர தின விழாவின்போது தேசிய கீதம் பாட தடை: உ.பி. பள்ளியில் 8 ஆசிரியர்கள் ராஜினாமா

View previous topic View next topic Go down

சுதந்திர தின விழாவின்போது தேசிய கீதம் பாட தடை: உ.பி. பள்ளியில் 8 ஆசிரியர்கள் ராஜினாமா

Post by rammalar on Wed Aug 10, 2016 10:30 am

சுதந்திர தின விழாவின்போது தேசிய கீதம் பாட தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பள்ளி முதல்வர் உட்பட 8 ஆசிரியர்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனால் உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத்தில் பாக்ஹரா பகுதியில், எம்.ஏ. கான்வென்ட் ஸ்கூல் உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். நாட்டின் 70-வது சுதந்திர தினம் வரும் 15-ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்தப் பள்ளியிலும் சுதந்திர தின விழாவுக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்களும் மாணவர்களும் செய்து வந்தனர். இந்நிலையில், சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் பாடக் கூடாது. ஏனெனில், அது இஸ்லாமிய கொள்கைக்கு எதிராக உள்ளது என்று கூறி பள்ளி நிர்வாகத்தினர் தடை விதித்துள்ளனர்.

‘‘சன கண மன அதிநாயக செய கே, பாரத பாக்கிய விதாதா’’ என்பது தேசிய கீதத்தின் முதல் 2 வரிகளாகும். இதன் பொருள், ‘‘இந்தியத் தாயே மக்களின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற நீயே, எல்லாருடைய மனத்திலும் ஆட்சி செய்கிறாய்’’ என்பதாகும்.

இதுகுறித்து பள்ளி மேலாளர் ஜியா உல் ஹக் என்பவர் கூறும்போது, ‘‘தேசிய கீதத்தில் வரும், ‘பாரத பாக்கிய விதாதா’ என்ற வரிகளை பாட அனுமதிக்க முடியாது’’ என்று தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறும்போது, ‘‘அல்லா மட்டும்தான் பாக்கிய விதாதா. அப்படி இருக்கும் போது பாரதம்தான் நமது பாக்ய விதாதா என்று எப்படி அழைப்பது’’ என்று பதில் அளித்துள்ளார்.

இதற்கு பள்ளி முதல்வர் உட்பட 8 ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2 நாட்களுக்கு முன்னர் தங்கள் பணிகளை ராஜினாமா செய்துள்ளனர். அவர்கள் கூறும்போது, ‘‘நாங்கள் இந்த பள்ளியில் பணியில் சேர்ந்து சில ஆண்டுகள்தான் ஆகின்றன. கடந்த 12 ஆண்டுகளாக பள்ளியில் தேசிய கீதம் பாட அனுமதிப்பதில்லை என்று நிர்வாகத்தினர் கூறியதை கேட்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம்’’ என்றனர்.

பள்ளி பெண் முதல்வர் பணியை ராஜினாமா செய்த ரிது திரிபாதி கூறும்போது, ‘‘தேசிய கீதத்தில் வரும் சில வரிகளை விட்டுவிட வேண்டும். அதற்கு மறுப்பு தெரிவித்தால் வேலையை ராஜினாமா செய்யலாம் என்று கூறினர். எங்கள் மனசாட்சிப்படி வேலையை ராஜினாமா செய்துவிட்டோம்’’ என்றார்.

அங்கீகாரம் இல்லை

அலகாபாத்தில் உள்ள பேசிக் ஷிக்சா அதிகாரி ஜெய்கரண் யாதவ் கூறும்போது, ‘‘அந்த பள்ளிக்கு கல்வித் துறை அங்கீகாரம் வழங்கவில்லை. ஆனால் தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருப்பதை அறிந்து ஆச்சரியம் அடைந்தோம். ஒரு வாரத்துக்குள் பள்ளியை மூடும்படி நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். மேலும் தேசிய கீதத்தை பாடுவதற்கு அனுமதி மறுத்து இன்னொரு குற்றத்தை செய்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. குற்றம் நிரூபணமானால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
-
தி இந்து

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum