தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


1,500 பெண்களுக்கு ஆபாச எஸ்எம்எஸ்: இளைஞர் கைது

View previous topic View next topic Go down

1,500 பெண்களுக்கு ஆபாச எஸ்எம்எஸ்: இளைஞர் கைது

Post by rammalar on Fri Jul 08, 2016 9:48 am



தில்லியில் 1,500-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு ஆபாச விடியோ காட்சிகள், குறுந்தகவல்களை செல்லிடப்பேசியில் அனுப்பி தொந்தரவு கொடுத்து வந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

இது குறித்து தில்லி வடமேற்கு மாவட்ட காவல்துறை துணை ஆணையர் விஜய் சிங் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது: தில்லி வட மேற்கு மாவட்டம், அசோக் விஹார் காவல் சரகப் பகுதியைச் சேர்ந்த பெண் கடந்த மே 30ஆம் தேதி போலீஸில் புகார் அளித்தார். அதில், தனது செல்லிடப்பேசிக்கு ஒருவர் ஆபாச குறுந்தகவல்களையும், கட்செவி அஞ்சலில் ஆபாச விடியோ காட்சிகளையும் தொடர்ந்து அனுப்பி வருவதாகத் தெரிவித்திருந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். அப்போது, சம்பந்தப்பட்ட மர்ம நபர் பயன்படுத்தும் செல்லிடப்பேசி எண்ணுக்குரிய "சிம் கார்டு' போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்டிருந்தது தெரிய வந்தது.

மேலும், அந்த மர்ம நபர் மேலும் சில சிம் கார்டுகளை போலி ஆவணங்கள், அடையாள அட்டைகள் மூலம் பெற்றிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, தொழில்நுட்ப கண்காணிப்பு சாதனங்கள் உதவியுடன் சம்பந்தப்பட்ட நபர் குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, பல்லிமாரானைச் சேர்ந்தவரும், சதர் பஜாரில் பை வியாபாரத்தில் ஈடுபட்டு வருபவருமான முகம்மது காலித் (31) இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அதில், அவர்தான் இந்த ஆபாச குறுந்தகவல்களை அனுப்பியிருந்தது தெரிய வந்தது.

அவரைக் கைது செய்து இரு நாள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, தில்லி, தேசியத் தலைநகர் வலயப் பகுதிகளில் 1500-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இதுபோன்று ஆபாச குறுந்தகவல்கள், விடியோ காட்சிகளை செல்லிடப்பேசி வழியாக அனுப்பி அவர் தொந்தரவு கொடுத்து வந்திருப்பது தெரிய வந்தது. அவரிடமிருந்து ஆபாச எஸ்எம்எஸ் அடங்கிய செல்லிடப்பேசி பறிமுதல் செய்யப்பட்டது என்றார் விஜய் சிங்.

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum