தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


முதல்வர் அலுவலக சிறப்புப் பணி அலுவலராக சாந்தா ஷீலா நாயர் நியமனம்

View previous topic View next topic Go down

முதல்வர் அலுவலக சிறப்புப் பணி அலுவலராக சாந்தா ஷீலா நாயர் நியமனம்

Post by rammalar on Thu Jun 09, 2016 1:53 pm


-

சாந்தஷீலா நாயர் சிவதாஸ் மீனா விஜயகுமார் பிரதீப் யாதவ்

முதல்வர் அலுவலகத்தின் சிறப்புப் பணி அலுவலராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தா ஷீலா நாயர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் தமிழ்நாடு மாநில திட்ட ஆணையத்தின் துணைத் தலைவராகப் பணியாற்றி வந்தார். இப்போது, சிறப்புப் பணி அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

1973-ஆம் ஆண்டு தமிழக பிரிவைச் சேர்ந்த மூத்த ஐ.ஏ.எஸ்.,அதிகாரி சாந்தா ஷீலா நாயர். அவர் கடந்த 2010-ஆம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

மாநில உள்துறைச் செயலாளர், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் துறை நிர்வாக இயக்குநர் ஆகிய பொறுப்புகளை வகித்துள்ள சாந்தா ஷீலா நாயர், மத்திய அமைச்சகத்திலும் பல முக்கியப் பதவிகளில் பணியாற்றியுள்ளார்.

முதல்வரின் தனிச்செயலர்களாக சிவதாஸ் மீனா, விஜயகுமார்: முதல்வரின் இரண்டாவது செயலாளராக சிவதாஸ் மீனாவும், மூன்றாவது செயலாளராக எஸ்.விஜயகுமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். கூட்டுறவு-உணவு-நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளராக சிவதாஸ் மீனாவும், கால்நடை பராமரிப்புத் துறை செயலாளராக எஸ்.விஜயகுமாரும் பணியாற்றி வந்தனர்.

ஏற்கெனவே முதல்வரின் செயலகத்தில் உள்ள கே.என்.வெங்கடரமணன், முதல் செயலாளராகவும், ஏ.ராமலிங்கம் நான்காவது செயலாளராகவும் செயல்படுவர் என தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வரின் செயலாளர்களாக உள்ள ஒவ்வொருவருக்கும் நான்கு முதல் ஐந்து துறைகள் வழங்கப்படும். அவர்கள் சம்பந்தப்பட்ட துறைகளின் செயலாளர்களுடன் தொடர்பில் இருப்பர்.

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

Re: முதல்வர் அலுவலக சிறப்புப் பணி அலுவலராக சாந்தா ஷீலா நாயர் நியமனம்

Post by rammalar on Thu Jun 09, 2016 1:54 pm


-
உணவுத்துறைச் செயலர் பிரதீப் யாதவ்: தமிழக உணவு-கூட்டுறவுத் துறை செயலாளராக பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளராக இருந்தார்.

வேளாண்மைத் துறை செயலாளராக ககன்தீப் சிங் பேடி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இதற்குமுன் ஊரக வளர்ச்சி-ஊராட்சித் துறை செயலாளராக பணியாற்றி வந்தார். கால்நடை பராமரிப்பு-பால்வளம்-மீன்வளத் துறை செயலாளர் பொறுப்பையும் கூடுதலாக பேடி கவனிப்பார்.

இதேபோல ஊரக வளர்ச்சி-ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளராக ஹன்ஸ் ராஜ் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இதற்கு முன்னர் சுற்றுச்சூழல்-வனத் துறை முதன்மைச் செயலாளராக பணியாற்றி வந்தார்.

சுற்றுச்சூழல்-வனத் துறை முதன்மைச் செயலாளராக அதுல்ய மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். எனினும் இவர் ஏற்கெனவே உள்ள வருவாய் நிர்வாக ஆணையாளர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார்.
-
தினமணி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum