தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by rammalar

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar

» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
by rammalar

» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
by rammalar

» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
by rammalar

» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
by rammalar

» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
by rammalar

» 'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
by rammalar

» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
by rammalar

» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
by rammalar

» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
by rammalar

» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
by rammalar

» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
by rammalar

» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by rammalar

» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by rammalar

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by rammalar

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by rammalar

» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by rammalar

» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by rammalar

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...!!
by rammalar

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by rammalar

» பாதை எங்கு போகிறது...?
by rammalar

» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை
by rammalar

» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
by rammalar

» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி
by rammalar

» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by rammalar

Top posting users this week
rammalar
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பெண் வேசம்

View previous topic View next topic Go down

பெண் வேசம்

Post by rammalar on Sat May 28, 2016 1:28 pm

முப்பத்தி ஐந்து வயது முடிந்திருக்கும். உமாவிற்கு பக்கத்து
வீட்டு கமலம் மூலமாக ஒரு நல்ல வரன் வந்திருக்கிறது.
பெயர் விசுவம். கல்லூரியில் விரிவுரையாளராக இருக்கிறாராம்.
வயது நாப்பது ஆகிறதென்று அம்மா வந்து சொன்னதும் உமாவின்
நெஞ்சிற்குள் சின்னதாய் ஒரு சந்தோசம் தலைகாட்டியது.

எல்லாப் பெண்களையும் போல அவளுக்கும் இருபது வயதில்
கல்யாண ஆசைகள் விதவிதமாக வண்ணம் காட்டியபோது,
படித்துவிட்டு வேலையில்லாமலிருந்த தம்பி சேகர் தனக்குப் பின்னே
கல்யாணத்திற்காக காத்திருக்கும் தங்கைகளான கௌரி, நீலா.
“சர்க்கரை நோயையும், முட்டி வலியையும்’ தனக்குள் வைத்துக்
கொண்டு இரண்டாயிரம் ரூபாய் மாத்திரைகளில் தன் வாழ்நாளை
கழிக்கும் அம்மா என்று அவளுக்கான கடமைகள் நிறையவே இருந்தன.

அதனால் கல்யாண ஆசையை அவள் பிறருக்குத் தெரியாமல்
தனக்குள்ளேயே அடக்கிக் கொண்டாள். இப்போது அத்தை கமலம்
கொண்டு வந்த வரத்தால் இத்தனை நாளும் இதயத்தினடியில் கிடந்த
ஆசையின் விதைகள் இப்போது கிளர்ந்தெழுகிறதோ? என்று
நினைத்தவளுக்கு தன் தம்பியான சேகர் மீதுதான் இரக்கம் பொங்கியது.
அவன்தான் இவளுக்கு கல்யாணம் முடித்து வைக்க வேண்டுமென்று
துடிக்கிறான்.

“எங்கேயாவது ஒரு மாப்பிள்ளை இவள் வயதுக்கு ஏற்ற மாதிரி
இருக்கிறானாம்’ என்று கேள்விப்பட்டால் போதும், உடனே லீவு எடுத்துக்
கொண்டு அந்த இடத்தைப் பற்றி விசாரித்தவாறு ஓடுவான். ஆனால்
வரும்போது ஏதாவது ஒரு பொருத்தமில்லையென்று முகம் கொராவி
வருவான்.
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7691

Back to top Go down

Re: பெண் வேசம்

Post by rammalar on Sat May 28, 2016 1:28 pm

[You must be registered and logged in to see this image.]
-

உமாவின் செவியோரத்தில் இப்போது நரைகள் கூட விழுந்துவிட்டன.
ஆனாலும் அவன் ஓடிக் கொண்டுதான் இருந்தான். “”இந்த வயசுக்குப்
பிறகு இனிமேல் எதுக்குடா எனக்கு கல்யாணம்?” என்று சொன்னால்,
“பேசாம இருக்கா நீ எங்களுக்கு எவ்வளவோ செஞ்சிருக்கே, அதுக்கு
பதிலா நாங்க உனக்கு கல்யாணம் செஞ்சி பாக்குறதுதான் அழகு.
என் கடமையும்கூட” என்பான்.

நிஜமாகவே உமாவிற்கு இருபது வயது ஆன போது, ஒரு பெரிய
கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தாள். அவள் அதிர்ஷ்டமோ, என்னமோ
அப்போதே அவளுக்கு இருபதாயிரம் சம்பளம் கிடைத்தது. தம்பியை
நன்றாகப் படிக்கப் போட்டு வேலைக்குச் சேர்த்தாள்.

இரண்டு தங்கைகளுக்கும் சீர்வரிசை செய்து உத்தியோகத்தில்
இருப்பவர்களைப் பார்த்து கல்யாணம் முடித்து வைத்தாள்.
சிறுக, சிறுகச் சேமித்து ஓர் ஆறு செண்டு நிலம் வாங்கி லோன் போட்டு
மாடியும், கீழ்தளமுமாக வீடு கட்டி முடித்தபோது, எல்லோரும் அவளைத்
தூக்கி தலையில் வைத்துக் கொண்டாடினார்கள்.

அதிலும் மாடியில் தம்பி, தங்கைகளுக்காக எல்லா வசதிகளோடு மூன்று
அறைகளைக் கட்டி அவர்களை அவள் தன்னுடனே வைத்துக் கொண்ட
போது அவள் அம்மா சிவகாமியின் உடம்பில் இருந்த அத்தனை நோயும்
குறைந்துவிட்டாற் போலிருந்தது. குடுகுடுவென்று மாடிக்கும் கீழேயுமாக
ஏறி இறங்கினாள்.

இதோ இப்போது வரை எல்லோரும் ஒரே குடும்பமாகத்தான் இருக்கிறார்கள்.
அவர்கள் வீட்டிலேயே உமாதான் ஐம்பது ஆயிரம் வரை சம்பளம்
வாங்குகிறாள். தம்பியும், தங்கை புருசன்களும் தங்கள் பங்குக்கென்று வீட்டு
செலவுக்காகப் பணம் கொடுக்க முன் வந்தபோது உமா வாங்க மறுத்துவிட்டாள்.


rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7691

Back to top Go down

Re: பெண் வேசம்

Post by rammalar on Sat May 28, 2016 1:29 pm

நான் தனிக்கட்டை. ஐம்பது ஆயிரம் சம்பளம் வாங்குறேன். அதை சேத்து
வச்சி என்னதான் நான் செய்ய போறேன்? நீங்கள்லாம் ஆணும், பொண்ணுமாக
இரண்டு, இரண்டு பிள்ளைகள் வைத்திருக்கிறீர்கள். அவர்களுக்கு சேர்த்து
வையுங்கள். இப்போதைக்கு எல்லா செலவும் என் செலவாயிருக்கட்டும்’ என்று
சொன்னதோடு தனக்கென்று ஒரு வாழ்வு இருப்பதையே உமா மறந்துவிட்டாள்.

இந்த நேரத்தில்தான் இவளைப் போலவே தம்பி, தங்கை, அம்மா, அப்பா என்று
எல்லா கடமைகளையும் முடித்துவிட்டு இப்போது ஒண்டியாய் நிற்கும் விசுவம்,
தன் வாழ்க்கைத் துணைக்காக உமாவைத் தேர்ந்தெடுத்திருக்கிறான்!

விசுவம் தனக்கு தெரிந்த ஆள் மூலமாக உமாவைப் பெண் கேட்டு அனுப்பிய
போது ஊர், ஊராய் அக்காவிற்கு மாப்பிள்ளை தேடி அலைகிறேன் என்று
சொன்ன சேகர் விசுவத்தை மாப்பிள்ளையாக ஏற்க மறுத்தான்.

மகனின் விடாப்பிடியான மறுப்பை நினைக்கையில், சிவகாமிக்கு
ஆச்சரியமாயிருந்தது. “”ஏன்டா சேகர் அக்காவுக்கு மாப்பிள்ள பாக்குறேன்னு
ராவும், பகலும் தீவிரமா அலஞ்ச நீ இப்ப வீடு தேடி வந்திருக்க மாப்பிள்ளய
ஏன்டா வேண்டான்னு சொல்றே?” என்று அவன் அம்மா கேட்டபோது சேகர்
சிடுசிடுத்தான்.

–போம்மா இத்தன வயசு வரைக்கும் ஒருத்தன் கல்யாணம் முடிக்காம
இருக்கான்னா ஒன்னு அவனுக்கு ஏதாவது நோய் இருக்கணும்; இல்லாட்டி
அவன் மோசமானவனா இருக்கணும்” என்றான்.
“அப்போ உன் அக்கா உமாவுக்கு கூடதான் இத்தனை வயசு வரைக்கும்
கல்யாணம் ஆகலை அப்ப அவளும் மோசமானவளா, இல்ல அவளுக்கும்
ஏதாவது நோயிருக்கா?” என்று சிவகாமி கேட்டதும் சேகருக்கு வந்த
கோபத்தில் அவன் முகம் தீக்கனலாய் கனன்றது.

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7691

Back to top Go down

Re: பெண் வேசம்

Post by rammalar on Sat May 28, 2016 1:30 pm

நீ பேசாம இரு. நானே அதுக்கான முயற்சிய செய்றேன். அதுவுமில்லாம
செஞ்சிக்கிட்டுத்தான இருக்கேன்”.

“ஏன்டா இந்த விசுவத்துக்கு என்ன குறை? கல்லூரியில விரிவுரையாளரா
இருக்கார். மாமியா, அது, இதுன்னு எந்த பிக்கல், பிடுங்கலும் இல்ல உமாவும்
அவர ரொம்ப விரும்புறா”

“விரும்புறான்னு எப்படிச் சொல்றே? அவன உமாவுக்கு தெரியுமா?”

“இரண்டு நாளைக்கு முன்னால விசுவமே உமாவப் பாக்க அவளோட
ஆபிசுக்கு போயி தன்னப் பத்தின எல்லா விவரத்தயும் சொல்லியிருக்காருன்னா
பாத்துக்கோயேன்!”

“”ஓ…… அவ்வளவு தூரத்துக்கு வந்தாச்சா? இந்த ராஸ்கல் எனக்குத் தெரியாம
எப்படி என் அக்காவ சந்திக்கலாம்?”

“”இதிலென்னடா தப்பு இருக்கு? அதான் உமா எல்லா விஷயத்தையும் என்
கிட்ட சொல்லிட்டாளே” என்று சிவகாமி சொல்லவும், “”அப்ப நீயே இந்த
கல்யாணத்த முடிச்சி வச்சிரு என்கிட்ட எதுவும் கேக்க வேண்டாம்” என்று
சொல்லிவிட்டு சேகர் மடமடவென்று மாடிக்குப் போக, சிவகாமி மகனை
அதிசயமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

மறுநாள் விசுவம் உமாவைத் தேடி வந்தபோது அவளுக்கும் வெட்கம் பிடுங்கியது.
“ஏதேது கல்யாணத்திற்குள் நிறைய தடவ தேடி வந்திருவார் போலிருக்கே’ என்று
அவள் எண்ணிக் கொண்டிருக்கையில் விசுவம் இவள் எதிரில் வந்து நின்றான்.
அவன் முகம் கனன்று கிடந்தது.

“இதோ பாருங்க மிஸ் உமா… உங்கள நான் கல்யாணத்துக்காக கட்டாயப்படுத்தல.
ஆனா உங்க தம்பி சேகர் நாலு பேர கூட்டிக்கிட்டு நானு சாப்பிடும் மெஸ்சுக்கு
வந்து கன்னாப்பின்னான்னு பேசி ரொம்பவே அசிங்கப்படுத்திட்டுப் போறாரு.

இதெல்லாம் நல்லா இல்ல… சொல்லி வைங்க” என்றவன் விருட்டென்று
வெளியேறினான்.

உமாவுக்கு ஆச்சரியமாக இருந்தது “தன் தம்பியா இப்படிச் செய்தான்?’ என்று
நினைத்தவளுக்கு அதற்குமேல் ஆபிசில் உட்கார்ந்திருக்க முடியவில்லை.
அப்போதே லீவிற்கு சொல்லிவிட்டு புறப்பட்டு விட்டாள்.

அவள் வீட்டிற்குள் நுழைந்தபோது அம்மாவைக் காணோம். சேகரின் சத்தம்தான்
வீடு முழுக்க கேட்டுக் கொண்டிருந்தது.

“இந்த உமாவுக்கு கல்யாணம் முடிச்சி வைக்க நானென்ன இளிச்சவாயனா?
அப்படி முடிச்சி வச்சா நாளைக்கே இவ புருசன் வீட்டுக்குப் போயிருவா.
அவ கூடவே அம்பதாயிரம் சம்பளமும் போயிரும். பிறகு இந்த வீட்டு செலவையும்,
நோயோட கிடக்கிற அம்மாவையும் யார் பாக்கிறது? இவளுக்கு நாப்பது வயசு
ஆகிற வரைக்கும் மாப்பிள்ள பாக்குறேன், பாக்குறேன்னு சொல்லிட்டு பிறகு
விட்டுற வேண்டியதுதான். எப்படி இருக்கு என் ஐடியா?” என்று அவன் தன்
தங்கைகளிடம் கேட்டுக் கொண்டிருக்க,

-

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7691

Back to top Go down

Re: பெண் வேசம்

Post by rammalar on Sat May 28, 2016 1:30 pm

”ரொம்ப நல்லா இருக்கு” என்று சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்த உமாவைக்
கண்டதும் அதிர்ச்சியான சேகர் அப்படியே உறைந்து போனான்.

“”சேகர் உன்னோட இந்த நடிப்புத் தெரியாம உன் மேல நான் உயிரையே வச்சிருந்தேன்.
அதுமட்டுமா? இந்த வீட்டையே உன் பெயருக்கு எழுதி வச்சுட்டு நானும் உன்கூடவே
இருக்கணுமின்னு முடிவு பண்ணுனேன். ஆனா இனி அது முடியாது.

இன்னும் ஒரு மாசத்தில நீ வீட்ட காலி பண்ணுறே. அம்மா இறப்புக்குக்கூட
நீ இங்க வரக்கூடாது. அப்படியே வந்தாலும் ஒரு “பெண் வேசம்’ போட்டுக்கிட்டுத்தான்
நீ உட்கார்ந்திருக்கணும்.

குடும்பத்துக்கு ஓர் ஆம்பளையா எதுவுமே செய்யாத உனக்கு, இதுதான் தண்டனை”
என்ற உமா தன் வக்கீலுக்கான தொலைபேசி நம்பரை அழுத்தினாள்.

———————————–

–by பாரதி தேவி
தினமணி கதிர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7691

Back to top Go down

Re: பெண் வேசம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum