தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தொண்டனாக இருந்து பணியாற்றியவர் மகாத்மா காந்தி:நடிகர் கமல்ஹாசன்

View previous topic View next topic Go down

தொண்டனாக இருந்து பணியாற்றியவர் மகாத்மா காந்தி:நடிகர் கமல்ஹாசன்

Post by rammalar on Mon Apr 25, 2016 11:36 am

மகாத்மா காந்தி தலைவனாக இல்லாமல் தொண்டனாக
இருந்து பணியாற்றியதால்தான் உச்சத்தை அடைய
முடிந்தது என, நடிகர் கமல்ஹாசன் பேசினார்.

கோவை சப்னா புத்தக நிலையம் சார்பில் மகாத்மா
காந்தியின் “சத்திய சோதனை’ என்ற நூலை பொதிகை
தொலைக்காட்சியின் கோவை மண்டல இயக்குநர்
ஆண்டாள் பிரியதர்ஷினி தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
அந்தப் புத்தக வெளியீட்டு விழா கோவையில் ஞாயிற்றுக்
கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டு
நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது:

முன்பு ஒரு காலத்தில் காந்தியை விமர்சனம் செய்த
கூட்டத்தின் மத்தியில் இருந்த நான், பின்னாளில் காந்தியைப்
பின்பற்றத் தொடங்கினேன். காந்தியை அறிந்து கொள்ள
எனக்கு 30 ஆண்டுகளுக்கு மேல் தேவைப்பட்டது.

அகிம்சையை பின்பற்றுவது என்பது வீரம் ஆகும்.
அதை யாராலும் எளிதாகப் பின்பற்ற முடியாது.

ஆனால், முயற்சி செய்தால் அகிம்சை கொள்கையைப்
பின்பற்ற முடியும். காந்தி ஒரு தலைவனாக இல்லாமல்
தொண்டனாக இருந்து பணியாற்றியதால்தான் உச்சத்தை
அடைய முடிந்தது.

மகாத்மா காந்தி ஒரு நாட்டின் தலைவராக இல்லாமல்
உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளின் குடிமகனாகவும்
திகழ்கிறார். அவரது புத்தகத்தை மொழிபெயர்த்து வெளியிடுவதும்,
அதைப் படிப்பதும் தேசத்துக்குச் செய்யும் சேவை ஆகும்.

ஹேராம் திரைப்படத்தை தயாரிக்கும்போதுதான் காந்தி குறித்து
பல அரிய தகவல்களைத் தெரிந்து கொண்டேன்.

காந்தி, தன் எளிமையான வாழ்க்கை முறையால் பலரிடம்
மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்தியாவின் சின்னமாக அவர்
திகழ்கிறார். அரசியல் ரீதியாக காந்தியை அதிக அளவில்
விமர்சனம் செய்த பெரியார்கூட, காந்தி இறந்தபோது விடுதலை
நாளிதழிலில் அவரைப் பற்றி பெருமையாக தலையங்கம்
எழுதியுள்ளது அகிம்சைக்கு கிடைத்த வெற்றி ஆகும்.

எந்த அரசியல் கட்சியும் காந்தியை உரிமை கொண்டாட முடியாது.
அவரை எந்தக் கட்சியுடனும் இணைத்துப் பார்க்கக் கூடாது.
இந்தச் சமுதாயத்தின் நோயாக அரசியலும், மதமும் திகழ்கிறது
என்றார் அவர்.

—————————-

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

Re: தொண்டனாக இருந்து பணியாற்றியவர் மகாத்மா காந்தி:நடிகர் கமல்ஹாசன்

Post by rammalar on Mon Apr 25, 2016 11:38 am


-
கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட மகாத்மா காந்தியின் “சத்திய சோதனை’ நூலை வெளியிடும் நடிகர் கமல்ஹாசன். உடன் (இடமிருந்து) சப்னா புத்தக நிலைய தலைமை செயல் அலுவலர் வி.கார்த்திகேயன், புத்தக நிலைய நிர்வாக இயக்குநர் நிதின் ஷா, பாரதிய வித்யா பவன் தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர், பண்ணாரி அம்மன் குழுமத் தலைவர் எஸ்.வி.பாலசுப்பிரமணியம், எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி, கவிஞர் புவியரசு.

==============

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum