தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


விழிப்புணர்வுக்காக ஒரு உண்மை சம்பவம்.

View previous topic View next topic Go down

விழிப்புணர்வுக்காக ஒரு உண்மை சம்பவம்.

Post by ஸ்ரீராம் on Tue Oct 27, 2015 4:17 pm


தயவுகூர்ந்து முழுவதும் படிங்க. ......
ஒரு சாயங்கால வேலை பணி நிமித்தமாக கிருஷ்ணகிரி சென்று விட்டு சொந்த ஊரான அருப்புகோட்டைக்கு காரில் திரும்பிக் கொண்டு இருந்தேன்.
சொந்த ஊருக்கு திரும்புவது என்றாலே ஒரு அலாதி உற்சாகம்தானே ..
என் மனநிலையை ஒத்தே என் காரும் அதற்கு ஈடு கொடுத்து ஓடி கொண்டு இருந்தது .. வேகம் காட்டும் முள் 80க்கும் 100கும் இடையே போக்கும் வரத்துமாக அலைந்து கொண்டு இருந்தது.
இரவு மணி 8.30 மணி இருக்கும் . திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கொடைக்கானல் விளக்கு மேம்பாலத்தில் நடுவே பயணித்துக் கொண்டு இருக்கும் வேலையில் , "டம்" என்ற சத்தம் மட்டுமே கேட்ட ஞாபகம்(அது காரின் இடது முன் பக்க சக்கரத்தின் அச்சு முறிந்ததால் ஏற்பட்ட சத்தம் எனபது விபத்தின் பின்னே தெரியப்பட்டது ..
பிறகு கார் என் கட்டுப்பாட்டில் இல்லை. கண்களை மூடிக் கொண்டாலும் கார் தலைகீழாக உருண்டு கொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது. எப்படியும் ஒரு ஐந்தாறு முறை அது சுழன்று இறுதியில் அதற்கு மேல் உருள சக்தியற்று ஓரிடத்தில் தலைகீழாக கவிழ்ந்து நின்றது.
கண் விழித்துப் பார்த்தேன்... என்னைச் சுற்றிலும் உடைந்த கண்ணாடி துண்டுகள். நானும் காரைப் போலவே உள்ளே தலைகீழாக தொங்கி கொண்டிருந்தேன் ...
நான் உயிரோடு இருக்கிறேன் என்பதை நம்புவதற்கு எனக்கு சில வினாடிகள் தேவைப்பட்டன.
ஓரளவு சுதாரித்த தருணத்தில் காரின் கண்ணாடிகள் வழியே வெளியே பார்த்த போது என்னை நோக்கி சில பேர் ஓடி வந்து கொண்டிருந்தது தெரிந்தது ...
"காரில் உள்ளவர்களுக்கு என்ன ஆயிற்றோ, அவரிகளை எந்த கோலத்தில் பார்க்க போகிறோமோ" என்ற பதைபதைப்பு அவர்கள் ஓடி வரும் வேகத்தில் தெரிந்தது.
காரின் வெளியே மிக அருகில் என் காரினுடைய பின் இருக்கைகள் கிடந்தன. கார் உருண்ட வேகத்தில் அது வெளியே தூக்கி விசிறப் பட்டு இருக்கிறது என்று உணர முடிந்தது..
அப்போதுதான் எனக்கு ஒரு சந்தேகம் எழுந்தது .
என்னைச் சுற்றி அனைத்து காரின் பாகங்களும் உடைந்து தொங்கி கொண்டிருந்தன.
கண்ணாடிகள் முற்றிலும் சிதறி நாலா பக்கமும் கிடக்கின்றன, பின் இருக்கையே வெளியே தூக்கி எறியப்பட்டிருக்கிறது. நாம் மட்டும் எப்படி அதே இருக்கையில் அதே பொசிசனில் இருந்து கொண்டு இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
அப்பொழுதுதான் கவனித்தேன். என்னை ஏதோ ஒன்று மார்போடு சேர்த்து தாங்கி பிடித்துக் கொண்டிருந்தது.
ஆம் நான் அணிந்திருந்த சீட் பெல்ட்தான் அது அதனை நம்பியதற்காக அதன் விசுவாசத்தை எனக்கு காட்டிக் கொண்டு இருந்தது.
அதற்குள் அங்கு வந்த பொதுமக்கள் கதவுகளை உடைத்து நான் வெளியே வர உதவினார்கள்.
நான் வெளியே வந்த உடன் அனைவரும் எனக்கு கை இருக்கிறதா , கால் இருக்கிறதா , தலையில் ரத்தம் வருகிறதா என்று கேட்டும் , சில பேர் பார்த்தும் கொண்டிருந்தார்கள் .
எங்குமே ஒரு சிறு கீறல் இல்லை. அத்தனை கோரமாக சிதைந்து கிடந்த காரில் இருந்து வெளி வந்த எந்த அறிகுறியும் இல்லாமல் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் கூறிக்கொண்டு இருந்தேன்.
அனைவரும் எனக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று உறுதி செய்த பிறகு அவர்களுக்கு தெரிந்த அனைத்து கடவுள்களுக்கும் நன்றி தெரிவிக்க தொடங்கினார்கள்.
சிலர் நான் செய்த புண்ணியத்தின் பலனே என்றும், வேறு சிலர் என் பெற்றோர் செய்த புண்ணியம் என்றும் கூறினார்கள்.
நான் என்னுடைய செல் போன் , மற்றும் பர்சை எடுக்க மீண்டும் காரின் உள்ளே நுழைந்தது கொண்டிருந்தேன்.
என்னைக் காப்பாற்றிய சீட் பெல்ட் தனக்கு கொடுத்த பணியை முழுமையாக செய்து விட்ட திருப்தியில், அதற்கே உரிய இடத்தில் தன்னை சொருகிக் கொண்டிருந்தது.
இன்றைய சூழலில் பெரும்பாலானோர் கார்களை பயன்படுத்தவும்.
அதை தாங்களே ஒட்டவும் செய்கின்றோம். ஒவ்வொரு முறையும் தயவு செய்து சீட் பெல்ட்டை அணியவும் ..
நீங்கள் முன் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்துபயணித்தால் கூட அதனை தவிர்க்காதீர்கள்.
நீங்கள் ஓட்டுனரை பணியமர்த்தி இருந்தால் அவர்களுக்கும் அதை கட்டாயப் படுத்துங்கள்.
இது உண்மை பதிவு விழிப்புணர்வுக்காக ....

இவண்
- மக்களில் ஒருவன்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233202  உறுப்பினர்கள்: 3600 | புதிய உறுப்பினர்: vinodh








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: விழிப்புணர்வுக்காக ஒரு உண்மை சம்பவம்.

Post by kanmani singh on Wed Oct 28, 2015 2:17 pm

உங்களை காப்பாற்றிய இறைவனுக்கு மிக்க நன்றி! சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக எல்லோரும் கடைபிடிக்க வேண்டும்!

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum