தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அதிசயமான அருமையான கட்டுரைகள்

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Oct 27, 2015 9:37 am

First topic message reminder :

சொந்த, பந்தங்களை மறந்து துறவிகளாக வாழும் சந்நியாசிகளுக்கு சொந்த வீடு என்று எதுவும் இல்லாததைப் போல மன்னார் வளைகுடா கடலில் மிக அதிகமாக வாழும் இந்த அரியவகை உயிரினமும் சொந்தவீடு இல்லாமல் சங்குகளின் கூடுகளுக்குள் தங்கி உயிர் வாழ்கின்றன இவ்வகை நண்டுகளை சந்நியாசி நண்டுகள் என்று அழைக்கிறார்கள்.இவை எதிரிகளிடமிருந்து தப்பிக்கும் விதம் மற்றும் இதன் சிறப்புகள் குறித்து ராமநாதபுரத்தை சேர்ந்த கடல் உயிரியலாளர் ர.செந்தில்குமார் கூறியதாவது..

“”பாகுராய்டே என்ற விலங்கியல் பெயருடைய இச்சிற்றினங்களில் மொத்தம் 1100 வகைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. நிரந்தரமாக ஒரே இடத்தில் வசிக்காமல் பிறப்பிலிருந்து இறப்பு வரை தன் வளர்ச்சிக்கேற்றவாறு, இறந்து வெறும் கூடுகளாக மட்டுமே இருக்கக் கூடிய சங்குகளின் ஓடுகளுக்குள் தன் உடலை நுழைத்துக்கொண்டு தலையை மட்டும் வெளியில் நீட்டியவாறு இருக்கும். எதிரிகள் வருவது தெரிந்தால் தலையை உள்ளிழுத்துக் கொள்ளும். தன் உருவத்துக்கேற்றவாறு சங்குகளின் ஓடுகள் அமையாதபோது எதிரிகளிடம் மாட்டிக் கொள்கின்றன.

புத்திசாலியாக இருக்கும் சில சந்நியாசி நண்டுகளோ சின்னஞ்சிறு கடல் தாமரைகளை சங்கு ஓடுகளின் மேற்புறத்தில் ஒட்டி வைத்துக் கொள்ளும். எதிரிகள் இந்த நண்டுகளைப் பிடிக்க வரும்போது கடல் தாமரைகள் ஆடுவதைப் பார்த்து பயந்தோடிவிடும். சந்நியாசி நண்டுகள் சாப்பிட்டுவிட்ட போட்ட புழுக்கள், பூச்சிகளின் மிச்சத்தை கடல் தாமரைகள் சாப்பிட்டுக் கொள்கின்றன. நண்டின் மேற்புற ஓடுகளில் ஓட்டிக் கொண்டு அதற்கு பாதுகாப்பாகவும் கடல் தாமரைகள் இருக்கின்றன. இப்படியாக இரண்டும் ஒன்றுக்கொன்று உதவி செய்து கொண்டு கடலுக்குள் உயிர் வாழ்கின்றன.

இந்நண்டுகளின் உடலானது நீண்டு வளைந்த வயிற்றுப்பாகத்தையும் அதன் அடியில் கொக்கி போன்ற உடலமைப்பையும் உடையது. இந்தக் கொக்கியே சங்கின் கூடுகளை நன்றாக பற்றிக் கொள்ள பெரிதும் உதவுகிறது. நீண்டதும், வளைந்ததுமான வயிறானது சங்கின் ஓடான கூடுகளுக்குள் இருக்கும் வளைவுகளுக்குள் உருண்டு, திரண்டு இருக்கும்.பொதுவாக சந்நியாசிகள் தங்கள் இருப்பிடங்களை அடிக்கடி மாற்றிக் கொண்டிருப்பதைப் போலவே இந்த நண்டும் அவை வாழும் வீட்டை(சங்கின் கூடுகளை) மாற்றிக் கொண்டே இருப்பதால் இதற்கு துறவி நண்டு என்றும் சந்நியாசி நண்டுகள் என்றும் அழைக்கிறார்கள்.

புண்ணிய ஸ்தலங்களில் கடலில் நீராடிக் கொண்டிருக்கும்போது கடற்கரையோரங்களில் இவ்வகை நண்டுகளைச் சாதாரணமாகப் பார்க்க முடியும். கடலுக்கு அடியில் கூட்டம், கூட்டமாக ஒன்று சேர்ந்தும் வாழும் இவை தங்களுக்குள் ஒரு குழுவையும் ஏற்படுத்திக் கொள்கின்றன.

இக்குழுவில் பல்வேறு வயதிலும் உருவத்திலுமான நண்டுகளும் இடம் பெற்றிருப்பதால் இவை தங்களுக்குள் ஒரு வரிசையை ஏற்படுத்திக் கொண்டு ஒவ்வொன்றும் அதனது உடல் உருவத்திற்கேற்றவாறு சங்கின் கூடுகளை மாற்றிக் கொள்கின்றன. அதாவது சிறிய நண்டு ஓரளவு வளர்ந்த பிறகு தன் வளர்ச்சிக்கு தக்கவாறு பெரிய சங்கின் கூட்டிற்குள் போய் நுழைந்து கொள்ளும்.

ஒற்றுமை இல்லாத கூட்டமாக இருந்தால் சில நேரங்களின் வெற்று சங்குகளின் கூடுகளுக்காக சண்டை நடந்து அதில் வெற்றி பெறும் நண்டு அந்த சங்கின் கூட்டை தன் சொந்த வீடாக ஆக்கிக் கொள்ளும். கரிபியின் துறவி நண்டு, இக்குடேரியன் துறவி நண்டு, ஆஸ்திரேலியன் துறவி நண்டு போன்றவற்றை மேலைநாடுகளில் வீடுகளில் வைத்து பராமரித்தும் பாதுகாத்தும் வருகின்றனர்.

இவ்வகை நண்டுகள் 32 ஆண்டுகள் வரையும் உயிர்வாழ்வதாகவும் தெரிய வந்துள்ளது. நீண்ட கொம்புகளும் நீண்டு வளர்ந்த வயிறும் உடைய இந்த உயிரினத்தின் கண்களில் ஆயிரக்கணக்கான லென்சுகள் இருந்தாலும் நிரந்தர வீடில்லாமல் சங்கின் கூடுகளை சார்ந்து வாழும் வித்தியாசமான உயிரினமாக இது இருக்கிறது” என்றார்.
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21275

http://www.kavithaithalam.com

Back to top Go down


Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by செந்தில் on Mon Nov 02, 2015 11:24 am

கைதட்டல் அனைத்தும் அருமையான கட்டுரைகள். நன்றி அண்ணா கைதட்டல்

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by ஸ்ரீராம் on Mon Nov 02, 2015 11:41 am

சூப்பர் கட்டுரைகள். சிறப்பு பதிவுக்கு தேர்வு.


#spoct15-2

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233202  உறுப்பினர்கள்: 3599 | புதிய உறுப்பினர்: Thas VN Thasan
avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by kanmani singh on Mon Nov 02, 2015 12:48 pm

மிகவும் அருமையான் கட்டுரைகள்! நன்றி!

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Nov 02, 2015 2:59 pm

மிகவும் அருமையான் கட்டுரைகள்! நன்றி!

நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21275

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Nov 02, 2015 3:00 pm

மாத்தி யோசிங்க…
------------------
எனக்கு எப்போதும் தோல்விதான், கொஞ்சம்கூட ராசி இல்லாதவன், வாழ்க்கையே வெறுத்துப் போய்விட்டது. என்ன செய்வதென்றே தெரியவில்லை” என்று பலரும் புலம்பக் கேட்டிருப்போம்.

ஒரு வியாபாரத்தைத் தொடங்கி, அதில் சின்னஞ்சிறு சறுக்கல் வந்தால்கூட சோர்ந்து போய்விடும் பலரையும் பார்த்திருப்போம். இதில் உண்மை என்னவெனில், எந்த ஒரு செயலையும் வெற்றிகரமாகச் செய்ய நினைத்து அதில் தோல்வி அடைந்தவர்கள் அதே செயலில் சின்னச் சின்ன மாற்றங்களை மட்டும் செய்துவிட்டால் வெற்றிக்கனியைச் சுலபமாகச் சுவைக்க முடியும்.

வாடிக்கையாளர்கள் தேடிவந்து வாங்குவதைவிட, நாமே தேடிப்போய் கொடுக்கலாமே என்ற முயற்சியில் இறங்கி, முதல்முதலாக தவணை முறைத் திட்டத்தை அறிமுகப்படுத்தி அதில் மாபெரும் சாதனையும் படைத்தது ஒரு நிறுவனம். வீட்டில் இருக்கிற கட்டில் இடத்தை அடைக்கிறதே என்று ஒருவர் சிந்தித்ததன் விளைவு, அது மடக்கு நாற்காலியாக மாறியது. இதனால் மடக்கு நாற்காலிகளின் விற்பனையும் பல மடங்குகளாகப் பெருகியது.

ஒரு காலத்தில் அஞ்சல் அலுவலகத்தில் உரிமம் பெற்று வீட்டில் ரேடியோ வைத்துக் கொண்டிருந்த காலங்களில் பாடல்களையோ அல்லது செய்திகளையோ வீட்டில் மட்டும்தான் கேட்க முடிந்தது. மற்ற இடங்களில் கேட்க முடியவில்லையே, அதற்கு என்ன செய்வது என்று மாற்றிச் சிந்தித்ததன் விளைவு, அது பாக்கெட் ரேடியோவாக மாறியது. இந்த பாக்கெட் சைஸ் ரேடியோவில் வருகிற சத்தமும் பலருக்கு இடையூறாக இருக்கிறதே என்று சிந்தித்ததன் விளைவு, அது வாக்மேனாகிப் போனது. ரேடியோ-பாக்கெட் ரேடியோ-வாக்மேன். இவை மூன்றுமே சிறிது மாற்றிச் சிந்தித்ததன் விளைவால் இவற்றின் விற்பனை அந்தந்தக் காலங்களில் ஒரு பெரும் புரட்சியையே ஏற்படுத்தின.

விற்பனையின் அளவை அதிகப்படுத்தவும், பல் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும்

இருக்க பற்பசை நிறுவனம் ஒன்று ஒரு சிறு மாற்றத்தை மட்டும் செய்து பார்த்தது. அது என்னவெனில், பற்பசை வெளிவரும் சிறு துளையை மட்டும் தற்போது இருப்பதைவிட கொஞ்சம் பெரிதாக்கினால் என்னாகும் என்ற வித்தியாசமான சிந்தனையை அமல்படுத்திப் பார்த்தது. பற்கள் சுத்தமாகின, வாடிக்கையாளர்களும் மகிழ்ந்தார்கள், விற்பனையும் அதிகரித்தது. இதனால் அந்த நிறுவனத்தின் லாபமும் மறைமுகமாக அதிகரித்தது.

சோப்பு, ஷாம்பு, ஊதுபத்தி உள்ளிட்டவற்றின் உற்பத்தி நிறுவனங்கள்கூட விநோதமான விளம்பரங்களையும், சின்னச் சின்ன மாற்றங்களையும் செய்து விற்பனையைப் பல மடங்கு உயர்த்தியிருக்கின்றன. விலை உயர்ந்த பட்டு ரகங்களைக்கூட, பேரம் பேசாமல் சொன்ன விலைக்குத்தான் வாங்கிச் செல்ல வேண்டும் என்ற டெக்னிக்கை முதல் முதலில் துணிச்சலாகக் கையாண்டது ஒரு பட்டு நிறுவனம். “”தரமே நிரந்தரம் அதுதான் எங்கள் தாரக மந்திரம்” என்ற வாசகத்தை வாடிக்கையாளர்களின் மீது தெளித்து, அவர்களை உள்வாங்கிக் கொண்டது அந்த பட்டு விற்பனை நிறுவனம்.

வேட்டியே கட்டாத, கட்டத் தெரியாத இளைஞர்களைக் கவர அதே வெள்ளை நிறத்தில் பனியன், கைக்குட்டை, பெல்ட், செல்போன் கவர் என்று அவர்களின் தேவையை அறிந்து, பூர்த்திசெய்து வேட்டி கட்டாதவர்களையும் வேட்டி கட்ட வைத்துவிட்டது ஒரு வெண்ணிற ஆடை தயாரிப்பு நிறுவனம். வேட்டி கட்டுபவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே போகிறதே என்று கவலைப்படாமல் சிறிது மாற்றிச் சிந்தித்ததன் விளைவால் விற்பனையிலும் புரட்சி செய்திருக்கிறது அந்த நிறுவனம்.

பிரபலமான கடற்கரை ஒன்றில் ஐஸ்கிரீம் சாப்பிடுபவர்கள் சாப்பிட்ட பின்னர் அதன் கப்புகளைக் கண்ட இடங்களில் வீசினார்கள். இவற்றைச் சேகரித்து எடுத்து இடத்தைச் சுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு அதிகமான சம்பளம் கொடுக்க வேண்டியிருந்தது. துப்புரவுத் தொழிலைச் செய்ய போதிய தொழிலாளர்களும் கிடைக்கவில்லை. இதற்கு ஒரு முடிவு கட்ட வித்தியாசமாக சிந்தித்ததன் விளைவுதான் கோன் ஐஸ்.

ஐஸ்கிரீம் விலையையும் உயர்த்த முடிந்தது. கண்ட இடங்களில் தேவையற்ற குப்பைகள் சேருவதும் இல்லாமல் போனது. நிறுவனத்தின் லாபமும் பல மடங்கு அதிகரித்தது. காலண்டர், டெலிபோன் டைரி, நோட்பேடு, கடிகாரம், கேமரா, டார்ச்லைட், அலாரம், மியூசிக் பிளேயர், கால்குலேட்டர், நினைவுபடுத்தும் அலாரம், குறுந்தகவல்களைக் குறித்த நேரத்தில் அனுப்பும் வசதி, பொழுதைப் போக்கிட விளையாடும் வசதி, இணைய தளங்களைப் பார்க்கும் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் சின்னஞ்சிறு கையடக்கக் கருவியான செல்போனில் இருப்பதால்தான் இன்று அதன் விற்பனை ஒவ்வோராண்டும் பல கோடிகளைத் தொடுகிறது. சாதாரண பாமரன் முதல் பணம் படைத்தவர்கள் வரை அனைவருக்குமே செல்போன் ஓர் அங்கமாகவே மாறிப்போய் விட்டது.

கடுமையான வறுமையிலும் தான் அணியும் கறுப்புக்கோட்டின் கிழிசல்களை வெள்ளை நூலால் தைப்பாராம் மகாகவி பாரதி. கறுப்பில் வெள்ளை நூல் பளிச்சென்று அசிங்கமாகத் தெரிகிறதே என்று அந்த நூல் மீது கறுப்பு மையை தடவிக்கொண்டு வெளியில் வருவாராம்.

அதனால்தானோ என்னவோ அவர் அணிந்திருந்த உடையாலும், எழுதிய பாடல்களாலும் மனிதர்களின் மனங்களை உழுதாரா எனத் தெரியவில்லை. வெள்ளைத் தலைப்பாகையும், முறுக்கிய அரும்பு மீசையும், கருநிறக் கோட்டும் பாட்டுப் பாரதியை அடையாளம் காட்டின.

சட்டை இல்லாத உடலும், அணிந்திருந்த கண்ணாடியும், கையில் இருந்த கைத்தடியும் மகாத்மாவின் மந்திர சக்திகளாகவே இருந்தன. காவி உடையும், அதே நிறத் தலைப்பாகையும் சுவாமி விவேகானந்தரின் விவேகத்தையும், வீரத்தையும் வெளிப்படுத்தின.

இப்படியாக தோற்றத்தில்கூட கொஞ்சம் மாற்றிச் சிந்தித்து அதன்படி செயல்பட்டவர்கள் வாழ்வில் ஓர் உயர்ந்த இடத்தைத் தொட்டிருக்கிறார்கள். எனவே சின்னச் சின்ன விஷயங்கள்கூட மிகப்பெரிய மாற்றங்களைத் தந்திருக்கின்றன.

எனவே தோற்றம், பேச்சு, செயல் இவை மூன்றிலும் ஏதேனும் ஒன்றிலோ அல்லது மூன்றிலுமோ கொஞ்சமாவது மாற்றிச் சிந்தித்து, தேவைக்குத் தக்கவாறு, வித்தியாசங்களையும் குழைத்து, செய்யப் பழகி விட்டால் வெற்றி உங்களைத் தேடி வந்து உங்கள் வீட்டுக் கதவைத் தட்டும்.

- சி.வ.சு. ஜெகஜோதி

தினமணி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21275

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Nov 02, 2015 3:05 pm

கேட்கக் கூடலையே கெத்து வாத்தியம்!
----------------

நாம் நமது நெருங்கிய உறவினர்களையே பல நாட்களாகப் பார்க்க வாய்ப்பில்லாதபோது, சந்திக்கும் நம் சிறுவர்களுக்கு, “”இது நம்ம சித்தப்பாடா… அது நம்ம பெரியப்பாடா.. நீ பார்த்ததில்லை. அதனால்தான் உனக்குத் தெரியவில்லை” என்று அறிமுகப்படுத்துவதுண்டு. அதுபோலத்தான் நாம் இப்போதைய சங்கீத ரசிகர்களுக்கு “கெத்து’ வாத்தியம் பற்றி அறிமுகப்படுத்த வேண்டியுள்ளது. இதனை அகத்திய முனிவர் தனது வழிபாட்டின்போது வாசித்ததாகக் கூறுவர். இந்த கெத்து வாத்தியம் பண்டைக் காலத்தில் “ஜல்லிரி’, “ஜல்லி’ என்றெல்லாம் கூட அழைக்கப் பட்டுள்ளது. ஸ்ரீ சுப்ரமண்ய சகஸ்ர நாமத்தில் “ஜல்லரி வாத்ய சுப்ரியாய நம’ என்றும், முத்துசாமி தீட்சிதரின் கிருதியில் “ஜல்லி மத்தள ஜர்ஜர வாத்ய’ (துவஜாவந்தி ராகம்) என்றும், பழைய குமாரதந்திரம் குறிப்புகளிலும் இப்பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

கோயில்களில் வாசிக்கப்படும் இசைக் கருவிகள்:

இடைக்காலத்தில் அதாவது சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்த கெத்து இசைக்கருவி திருக்கோயில்களில் வாசிக்கப்பட்டு வந்துள்ளது. பொதுவாகத் திருக்கோயில்களின் வழிபாட்டில் ஒத்து, நாகசுரம், முகவீணை, திருச்சின்னம், எக்காளம், கெüரிகாளம், கொம்பு, நவுரி, துத்தரி, சங்கு, புல்லாங்குழல் போன்ற காற்றுக் கருவிகளும், பலி மத்தளம், கவணமத்தளம், சுத்த மத்தளம், தவில், பேரிகை, சந்திரப் பிறை, சூரியப் பிறை, செண்டை, இடக்கை, டமாரம், டங்கி, டமாரவாத்தியம், தவண்டை, ஜக்கி, ஜயபேரிகை, தப்பு, கனகதப்பட்டை, மிருதங்கம், மத்தளம் (முட்டு), நகார் (நகரா), பெரிய உடல், சின்ன உடல், சன்ன உடல், திமிலை, வீரகண்டி, வான்கா, தக்கை, கிடிகிட்டி போன்ற தோற்கருவிகளும், தாளம் பிரம்மதாளம், குழித்தாளம், மணி, கைமணி, கொத்துமணி, கோயில்மணி (ஓங்கார மணி), சேகண்டி (சேமக்கலம்) போன்ற உலோகக் கருவிகளும், வீணை, கெத்து போன்ற நரம்புக் கருவிகளும் வாசிக்கப்படுகின்றன. இதில் கெத்து இசைக் கருவியின் பங்கு சிறப்பாகக் குறிப்பிடத் தகுந்ததாகும்.

அஷ்டாதச வாத்தியங்கள்

திருக்கோயில்களின் பூஜா காலங்களில் வாசிக்கப்படும் 18 வகையான இசைக் கருவிகளுக்கு அஷ்டாதச வாத்தியங்கள் என்று பெயர். இவற்றில் மங்கள இசைக்கருவிகளில் 18 வகை உண்டு. அவை ஜோடி நாகசுரம், ஒத்து, சுற்றுத்தவில், மந்தத் தவில், டங்கா, கிடிகிட்டி, சக்கர வாத்தியம், பம்பை, மகா தமருகம், நகரா (முரசு), மகா, பேரி(உடல்), தவண்டை, மகா சங்கம் (சங்கு), சிகண்டி, சங்கீரணதாளம், நகரா தாளம், பேரி தாளம், பாணி (கைத்தாளம்) முதலியனவாகும். மேலும், செய்யூர் என்னும் ஊரிலுள்ள திருக்கோயிலில் “சர்வ வாத்தியம்’ என்னும் பெயரில் 18 வகையான காற்றுக் கருவிகளும், தோல் கருவிகளும் இணைத்தும் தனித்தும் வாசிக்கப்படுகின்றன. அவை திருச்சின்னம், பூரி, தவளைச் சங்கு, நபூரி, முகவீணை, நாகசுரம், ஒத்து, பெரிய மேளம் (நாகசுரக் குழு), தகோர வாத்தியம் (நாகசுரமும், டமாரமும்), பங்கா (வங்கா), பஞ்சமுக வாத்தியம், டமாரம், ஜல்லரி, ஜெயபேரிகை (முரசு), நகரா (முரசு), டங்கா, தமுர் வாத்தியம், ராஜவாத்தியம், சர்வ வாத்தியம் (மேலே குறிப்பிட்ட அனைத்தும்) வாசிக்கப்படுகின்றன. இதில் செய்யூர் திருக்கோயிலில் வாசிக்கப்படும் சர்வ வாத்தியத்தில் “ஜல்லரி’ என்று இந்த கெத்து வாத்தியம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இவைகள் எல்லாம் இப்பொழுது வழிபாடுகளின் போது அவ்வளவாக வாசிக்கப்படுவதல்லை. மேலும் மறைந்து கொண்டும் இருக்கின்றன எனலாம்.

கோயிலில் கெத்து வாத்தியம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் திருப்பெருந்துறை என்னும் ஆவுடையார் கோயிலில் இந்த “கெத்து’ வாத்தியம் தினசரி வாசிக்கப்படுகின்றது. அங்குள்ள ஸ்ரீ யோகாம்பிகை சந்நிதியில் தினசரி மாலை நேர பூஜையின் போது இதனை முறைப்படி வாசித்து வருகின்றனர். கி.பி.1600 ஆம் ஆண்டிற்குட்பட்ட ராமநாதபுரம் சமஸ்தான ஆவணங்களில் இந்த ஜல்லரி வாசிக்கும் கைங்கர்யம் பற்றியக் குறிப்புகள் காணப்படுகின்றன. இங்குள்ள தெய்வம் ஸ்ரீ யோகாம்பிகை யோக நிலையில் இருப்பதாக ஐதீகம். எனவே, சாயங்கால பூஜையில் மென்மையான இசையைத் தரும் வீணையும் அதற்குப் பக்க வாத்தியமாக இந்த கெத்து வாத்தியமும் அங்கு வாசிக்கப்படுகின்றது. தஞ்சை சோழ மன்னர்களும், ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களும் இதற்காக நிலங்களைத் தானமாக வழங்கி (சர்வ மான்ய தானம்) சன்னதி கைங்கர்யமாக இந்த ஜல்லரி கைங்கர்யம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.

கெத்து இசைக்கருவியின் அமைப்பு

இது வீணையைப் போன்றோ அல்லது தம்புராவைப் போன்றோ பார்வைக்கு இருக்கும். ஆனால் அமைப்பில் கோட்டு வாத்தியம் போன்று, அதாவது மெட்டுக்கள் (மேளம்) எதுவும் இல்லாமல் இருக்கும். வீணையை வாசிப்பவர் மடியின் மீது படுக்க வைத்த நிலையில் வைத்துக் கொண்டு வாசிப்பார். ஆனால் இந்த கெத்து வாத்தியத்தை தனக்கு முன்னால் சமதரையில் வைத்துக் கொண்டு வாசிக்கின்றனர். வீணையில் குடத்தைப் போன்றே அதன் மறுமுனையில் சுரைக்குடுக்கை தாங்கிக்காகப் பொருத்தப்பட்டிருக்கும். அதன் பின்பு யாளி முகம் கீழ்நோக்கி அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் கெத்து இசைக்கருவியில் சுரைக்காய்க்குப் பதிலாக யாளி முகத்தின் பகுதி தண்டியிலிருந்து கீழ்நோக்கிச் சென்று தாங்கியாகவும் பின்பு மேல்நோக்கி யாளி முகமாகவும் அமைக்கப்பட்டிருக்கும். தண்டியில் மேளங்கள் இருக்காது. மேலே 4 வெள்ளி தந்திகள் (வேறு வேறு கன அளவுள்ளதாக) இழுத்து 4 பிரடைகளில் கட்டப்பட்டிருக்கும். வீணையைப் போன்றே இதிலும் மணிக்காய்களின் மூலம் துல்லியமாக சுருதி சேர்க்கப்படும். இதில் மத்திய ஸ்தாயி சட்ஜம், அனுமந்திர ஸ்தாயி சட்ஜம், மத்திய ஸ்தாயி பஞ்சமம், தாரஸ்தாயி சட்ஜம் (அல்லது அனுமந்திர பஞ்சமம்) ஆகிய சுரங்கள் ஒலிக்கும்.

இதற்கென பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட சிறிய குச்சிகளை கையில் பிடித்துக் கொண்டு கம்பிகளின் மீது தட்டி இதனை வாசிப்பர். 2 குச்சிகளின் அடியிலும் 2 வெங்கல வெண்டயங்கள் பொருத்தப்பட்டு சலங்கை ஒலியையும் வெங்கல நாதத்தையும் குச்சிகள் உண்டாக்கும். இடது கைக்குச்சி (25 செ.மீ. நீளம்) மத்தியில் தட்டி வாசிப்பதற்கும் , வலது கைக்குச்சி (32செ.மீ. நீளம்) குடத்தின் மேலுள்ள குதிரையின் அருகில் தட்டி வாசிப்பதற்கும் ஏற்றார்போல் வாசிப்பவர் அமர்ந்திருப்பார். கச்சேரியில் மிருதங்கத்தில் வாசிக்கப்படும் அனைத்துச் சொற்கட்டுகளும் ஜதிகளும் இந்த கெத்து வாத்தியத்தில் லாகவமாகத் தட்டி வாசிக்கப்படும். இக்கருவி லயச் சொற்களின் கன-நய-ஒலி வேறுபாடுகளுடன், தந்தியின் ஒலியும் சேர்ந்து ஒலிக்கும்பொழுது எவரையும் எளிதில் கவரும் தன்மையுடையதாக இருக்கும். இது பார்ப்பதற்குத் தந்திக் கருவியாக இருந்தாலும் வாசிக்கும் முறையில் ஒரு தாளவாத்தியக் கருவியாக உப பக்க வாத்தியமாகப் பயன்பட்டு வந்துள்ளது.

கெத்து வாசித்த இசைக் கலைஞர்கள்

இந்த கெத்து இசைக் கருவியை தஞ்சை சமஸ்தானக் கலைஞர்களான சேசையா சுப்பையா சகோதரர்களும் சுப்பையா குப்பையா சகோதரர்களும் பழங்காலத்தில் வாசித்துள்ளனர். மேலும் கிருஷ்ணபாகவதர்(கி.பி.1803), சுப்பராம ஐயர் (கி.பி.1906) போன்றோர்களும் இதனைச் சிறப்பாக இசைத்துள்ளனர். சமீப காலங்களில் சீத்தாராம பாகவதரும் அவர் மகன்களான வீராசாமி ஐயர் மற்றும் அரிகர பாகவதரும் (1895-1976) இதனை வாசித்துள்ளனர். தற்காலத்தில் அரிகர பாகவதரின் மகன்களான சீதாராம பாகவதர் மற்றும் சுப்ரமண்ய பாகவதர் இந்த “கெத்து’ வாத்தியத்தை மிகவும் சிறப்பாக வாசித்து வருகின்றனர் என்றாலும், எதிர்காலத்தில் இந்த கெத்து இசைக் கருவியை வாசிக்க ஆள் இல்லை என்பதுடன், இசைக் கச்சேரிகளில் இந்த கெத்து இசைக்கருவி முற்றிலுமாக மறைந்தும் போய்விட்டது என்பதே உண்மை நிலையாகும்.


வாணிஸ்ரீ சிவகுமார் -
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21275

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Nov 02, 2015 3:07 pm

தண்ணியே குடிக்காதீங்க….
---------------
என்னங்க ஆணியே புடுங்க வேணாம்னு சொல்ற மாதிரி தண்ணியே குடிக்காதீங்கன்னு சொல்றோம்னு கேக்குறீங்களா.. நாங்க சொல்றது.. டாஸ்மாக் தண்ணி இல்லைங்க.. சாப்பிடும் போது தண்ணி குடிக்கிறத பத்தி.

அதாவது, பசி வந்து, சாப்பிடப் போவதற்கு முன்பும், சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதும் தண்ணி குடிக்க வேணாம்னு சொல்வாங்கல்ல.. அதுதான் ஏன்னு சொல்லப் போறோம். எத்தனை பேர் இத சொல்லிட்டாங்கன்னு நினைக்காதீங்க.. நல்லத சொன்ன கேட்டுக்கோங்க..

அதாவது, தண்ணிங்கறது உடலுக்கு ரொம்ப முக்கியம். எப்படி உலகமே தண்ணீரால சூழப்பட்டிருக்கோ, அதுபோலத்தான் நமது உடலும் தண்ணீரால சூழப்பட்டிருக்கு. எனவே, அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம்தான் இல்லைன்னு சொல்லலை. நாங்க சொல்றது சாதாரண குடிதண்ணிய..

அதே சமயம், சாப்பிடும் முன் தண்ணி குடிக்காதீங்க.. ஏன்னா. பசி என்ற ஒரு உணர்வு வரும் போது, நமது இரைப்பையில், உணவை செரிமானம் செய்வதற்கான அமிலங்கள் சுரந்து தயார் நிலையில் இருக்கும்.

அப்போ நீங்க உங்க சாப்பாட்டை வாய் வழியாக மென்று வயிற்றுக்குள் அனுப்பினால், அங்கே தயாராக இருக்கும் அமிலங்கள் உணவை செரிமானம் செய்து, அதில் இருக்கும் சத்துக்களை உறிஞ்சிக் கொள்ள ஏதுவாக சிறுகுடலுக்கு அனுப்பி வைக்கும்.

இவ்வாறு செய்யும் போது உணவு உரிய நேரத்தில் செரிமானம் செய்யப்படுகிறது. உணவில் இருக்கும் சத்துக்களும் உடலுக்குக் கிடைக்கிறது.

ஆனால், பசி உணர்வு வந்த பிறகு, ஒரு டம்ளர் தண்ணீரை குடித்து விட்டால் போதும். அந்த அமிலம் எல்லாம் பொசுக்குன்னு போய் விடும். ஆமாங்க… அமிலங்கள் எல்லாம் அதனோட தன்மையை இழந்துவிடும். அப்புறம் நீங்க உங்க உணவை இரைப்பையில் போட்டால், அதை செரிமானம் செய்வது மிகவும் கடினம். உணவு செரிமான நேரத்தையும் தாண்டி இரைப்பையிலேயே இருந்து விடவும் வாய்ப்பிருக்கு.

மேலும், உணவில் இருக்கும் முழுச் சத்தும் உடலுக்குக் கிடைக்காது. எனவே, இனிமே சாப்பிடுவதற்கு முன்பும், சாப்பிடும் போதும் தண்ணியே குடிக்காதீங்க. சாப்பிட்ட பிறகு தேவையான அளவுக்கு தண்ணி குடிங்க.. இதுவும் செரிமானத்துக்கு நல்ல பலனை அளிக்கும்.

முக்கியமா ஒண்ணு சொல்ல மறந்துட்டோமே… இப்போ உங்களுக்கு பசிக்குது… ஆனா, சாப்பாடு ரெடியாகலை, சாப்பிட முடியாது, சாப்பிட நேரம் இல்லை என்றால் என்ன செய்யணும் தெரியுமா.. உடனே ஒரு டம்ளர் தண்ணிய எடுத்துக் குடிச்சிடுங்க… ஏன்னா.. உணவை செரிமானம் செய்ய காத்திருக்கும் அமிலங்கள், கொஞ்ச நேரம் பொறுத்திருக்கும். அப்புறமும் சாப்பாடு வரலைன்னா, உங்கள் இரைப்பையையே சாப்பிட்டுடும்ங்க.. அதனால தான் பலருக்கும் அல்சர் வருது…

சோ… தண்ணி குடிங்க.. ஆனா குடிக்காதீங்க…
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21275

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Nov 02, 2015 3:08 pm

வழுக்கைத் தலையை தடுக்கும் இயற்கை வைத்தியம்
--------------------
ஆண்கள் சந்திக்கும் ஒரு பெரிய பிரச்சனை வழுக்கை தலை. அதிலும் இளம் வயதினருக்கு வழுக்கை ஏற்படும் போது அது மிகப்பெரிய பிரச்னையாகி விடுகிறது.

இதுக்கு நம்ம கிட்ட ஒரு பஞ்ச் டயலாக் கூட இருக்குங்க..

கடவுளுக்காக நாம செய்ற ஹேர் ஸ்டைல் மொட்டை.
கடவுளே நமக்கு செய்ற ஹேர் ஸ்டைல் வழுக்கை…

சாதாரணமாக ஒருவருக்கு ஒரு நாளைக்கு 50-100 முடியானது உதிரும். ஆனால் சிலருக்கு அளவுக்கு அதிகமாக உதிர்வது போன்று தோன்றும். அப்படி உங்களுக்கு முடி உதிர்வது அளவுக்கு அதிகமாக இருந்தால், உடனே மருத்துவரை அணுகி இதற்கான காரணத்தை அறிந்து கொள்ள வேண்டும்.

அதில் பரம்பரை, ஊட்டச்சத்து குறைபாடு என்று எது வேண்டுமானாலும் இருக்கலாம். இவற்றில் பரம்பரை காரணமாக ஏற்படுவதை எந்த வகையிலும் தடுக்க முடியாதாம்.. ஆனால் தள்ளிப் போட முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
சரி அதுக்கு என்ன செய்யணும்னு கேட்டால் அவர்கள் சொல்வது இதுதான்…

மயிர்கால்களை வலுவுடன் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு முதலில் செய்ய வேண்டியது வாழ்க்கை முறையில் சிறு மாற்றங்களுடன், போதிய முடிக்கான பராமரிப்பும் மேற்கொள்ள வேண்டும்.

இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தேங்காய், பாதாம், ஆலிவ் போன்ற எண்ணெய்களைக் கொண்டு நன்கு மசாஜ் செய்து, நன்கு ஊற வைத்து குளிக்க வேண்டும். எங்க மசாஜ் செய்ய வேண்டும் என்பதை தெளிவாகக் கேட்டுக் கொள்ளுங்கள். தலையில்.

இன்னும் அதிக நாட்களுக்கு உங்க சொந்த முடியே வேண்டுமானால் இரண்டு மூன்று எண்ணெய்களை ஒன்றாக சேர்த்தும் முடிக்குப் பயன்படுத்தி மசாஜ் செய்தால், முடிக்கு தேவையான சத்துக்கள் உடனே கிடைத்து, முடி கொட்டுவது நின்று ஓரளவுக்கு வளர்ச்சி அதிகரிக்க ஆரம்பிக்கும்.

இது மட்டும் அல்ல.. நம்ம வீட்டில தேங்காய் சட்னி அரைக்கும் போது மற்ற பொருட்களை எல்லாம் போடுவதற்கு முன்பு தேங்காயை மட்டும் அரைப்பார்கள். அப்படி அரைக்கும் போது அரைப்பவர்களுக்குத் தெரியாமல் கொஞ்சம் தேங்காயை எடுத்து, அதில் இருந்து எடுக்கும் தேங்காய் பால் கொண்டு தலைக்கு மசாஜ் செய்தால், அது மயிர்கால்களுக்கு வேண்டிய சத்துக்களைக் கொடுத்து, அதனை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். இதனால் முடி உதிர்வது தடுக்கப்படும். இந்த முறையை ஆண்கள் தவறாமல் வாரம் 2-3 முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

வீட்டில் தெரிந்தால் உங்களுக்கு கெட்டிச் சட்னி கிடைக்காது. பரவாயில்லை. நமக்கு முக்கியம்….

முடி வளர்ச்சியைத் தூண்டும் பொருட்களில் ஒன்று தான் நெல்லிக்காய். நாலஞ்சு வாங்கி சாப்பிட்டா.. உடனே சிலருக்கு ஜலதோஷம் புடிச்சிக்கும்.. நாங்க சொல்ல வந்தது அதில்ல..

நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், அது முடி உதிர்வதை உடனே தடுத்து நிறுத்திவிடும். அதற்கு நெல்லிக்காயை அரைத்து அதனை இரவில் படுக்கும் போது, தலையில் தடவி மசாஜ் செய்து, மறுநாள் காலையில் எழுந்து ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இதனால் முடி உதிர்வது நின்று, முடியின் வளர்ச்சி அதிகரித்து, வழுக்கை ஏற்படாமல் இருக்கும்.

ஆனால் இப்படி செஞ்சா சளியும் புடிக்கலாம்.. பாத்துக்கோங்க…

வெந்தயத்தில் முடி வளர்ச்சிக்கு அவசியமான புரோட்டீன் மற்றும் நிக்கோடினிக் ஆசிட் உள்ளது. எனவே வாரம் ஒரு முறை வெந்தயத்தை நீரில் நன்கு ஊற வைத்து, பின் அதனை அரைத்து பேஸ்ட் செய்து, தலைக்கு தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் குளிக்கலாம்.

வெந்தயத்தை தலையில் தேய்ச்சிக்கிட்டு இருக்கும் போது, காரக் குழம்பு தாளிக்க வெந்தயம் இல்லாம தேடும் அம்மா கிட்ட மட்டும் நீங்க சிக்கிடாதீங்க.. அப்புறம் கஷாயம் தான்.

சரிங்க.. எப்பாடு பட்டாவது தலை முடிய மட்டும் காப்பாத்திகோங்க.. அம்புட்டுதான்..
ரைட்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21275

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Nov 02, 2015 3:10 pm

வாட்ஸ் அப்பால் ஆபத்தா… கிண்டல் பண்ணாதீங்க பாஸ்..
--------------------

பெண்கள் என்றில்லை, சில ஆண்களுக்கும் கூட ஏற்கனவே சமூக வலைதளங்கள் மூலமாக ஆபத்து வருவதும், வந்திருப்பதும் பரவலாக அறியப்பட்ட செய்திதான்.

தற்போது உடனடி தகவல் ஆப்ஸான வாட்ஸ்அப் மூலமாகவும் சில பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

‘வாட்ஸ்அப் என்பது தனிநபர் தன் செல்போனில் உபயோகிக்கும் ஆப்ஸ் தானே அதில் என்ன ஆகும் என்று யோசித்தால், தற்போதைய வளர்ந்த தொழில்நுட்பம் பல்வேறு ஆபத்துகளையும் கூடவே சுமந்து வருகிறது என்பதை அறியாதவராக நீங்கள் இருக்கலாம்.

பீடிகைகள் அதிகமாக இருக்கிறதே அப்படி என்ன ஆபத்து ஏற்படும் என்று கேட்டால் அதற்கான பட்டியல் நீள்கிறது.

முதலில், உங்கள் செல்போன் நம்பர் தெரியும் யாராக இருந்தாலும், நீங்கள் வாட்ஸ்அப்பில் இருந்தால் அவர்களால் உங்கள் வாட்ஸ்அப் கணக்கை பார்க்கவும், உங்கள் புகைப்படத்தை டவுன்லோடு செய்யவும் முடியும்.

உங்களுக்கு தெரியாத நபர்கள் கூட உங்கள் ஸ்டேட்டஸ் மூலம் உங்களுக்குத் தெரியாமலேயே உங்களை வாட்ஸ்அப்பில் தொடர முடியும்.

உங்களுக்கு எதிர்முனை நபர் யார் என்று உண்மையிலேயே தெரிந்து கொள்ள இயலாத நிலையில், அவர் தவறான பெயரில் உங்களை தொடர்பு கொண்டு உங்களது தகவல்களை பெற வாய்ப்பும் உள்ளது.

யாரென்று தெரியாத நபரால் இதுபோன்ற தொல்லைகள் ஏற்படுவதை விட, நமக்குத் தெரிந்த, நமக்குப் பிடிக்காத, நமக்கு தீமை செய்ய நினைக்கும் நபர்களால் வாட்ஸ்அப்பில் நமக்கு தீங்கினை ஏற்படுத்த முடியும் என்பதுதான் உண்மை.

மற்றொரு சிக்கல் என்னவென்றால், உங்களது நண்பர்களில் சிலர் வாட்ஸ்அப் குருப்களில் உங்கள் பெயரையும் இணைக்கும் போது உங்கள் எண் குரூப்பில் உள்ள அனைவருக்கும் பகிரப்பட வாய்ப்புள்ளது.

இதனை உங்களால் தவிர்க்க முடியும். அதாவது,

உங்கள் வாட்ஸ்அப் அமைப்பில் (செட்டிங்) உங்களது ப்ரைவஸி செட்டிங்கை மாற்றியமைப்பதன் மூலம் இந்த பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

உங்களது பிரைவஸி செட்டிங்கிற்கு சென்று உங்கள் புகைப்படம், ஸ்டேட்டஸ், லாஸ்ட் சீன் ஆகியவற்றை My Contacts அல்லது Only me ஆப்ஷன்களை பயன்படுத்தி பாதுகாக்க முடியும்.

குரூப்களில் இணைவதையும், அதில் அதிதீவிரமாக செய்திகளை அனுப்புவதிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
எத்தனை இடையூறுகளை ஏற்படுத்தினாலும் அதில் இருந்து தப்புவிக்கும் வசதிகளையும் வாட்ஸ்அப் தன்னகத்தே கொண்டுள்ளது.smartphone

அதாவது, ப்ளாக் ஆப்ஷனை பயன்படுத்தி உங்களுக்கு தொல்லை தருபவரை உங்கள் கணக்கை தொடராமல் தடுக்கும் வசதியும் வாட்ஸ்அப்பில் உள்ளது.

முடிந்தவரை தெரிந்தவர்களோடு மட்டும் வாட்ஸ் அப்பில் பேசுவதும், புதிய எண்ணில் இருந்து தெரிந்தவர் போல உங்களிடம் பேசும் நபரிடம் உடனே பேசாமல், ஒரு முறை அந்த எண்ணை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிவிட்டு பிறகு அவர் உங்களுக்குத் தெரிந்தவர் தான் என்பதை உறுதி செய்து கொண்ட பிறகு வாட்ஸ்அப் பேச்சைத் தொடர்வதும் பாதுகாப்பானது.

வாணிஸ்ரீ சிவகுமார் -
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21275

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Nov 02, 2015 3:12 pm

எளிய திருமணங்கள் நிறைவை தரவில்லையா?
----------------------

எளிய முறையில் நடக்கும் திருமணங்களை பார்த்து வெகு நாட்கள் ஆகிவிட்டன. ஆடம்பரமும், படோபகாரமும், எங்கும் பணத்தை வாரி இழைத்த திருமணங்கள் தான் பலரையும் கவர்கிறது.

திருமண அழைப்பிதழ் முதல், உணவு, உடை, மண்டபம், சீர்வரிசைகள் என அனைத்துமே ஒவ்வொருவரும் தங்களது சக்திக்கு மீறி செலவிட்டு ஆடம்பரமாக திருமணத்தை நடத்துகிறார்கள்.

ஏழை எளிய மக்களின் சாதாரண திருமணங்களுக்கு ஆகும் மொத்த செலவில், பிரம்மாண்டமான திருமணங்களில் பத்திரிகைகள் மட்டுமே அச்சிடப்படுகின்றன. ஒரு சிலர் அதற்கும் சில லகரங்களை செலவிட்டு, ஏழை குடும்பங்களின் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொள்கிறார்கள்.

பத்திரிகையைப் பிரித்தால் நறுமணம் வீசுமாம், இன்னிசையும் கேட்குமாம்! உண்மையில் செலவு செய்யும் குடும்பத் தலைவனின் மனதில் என்ன இசை கேட்கும்…! என்று தெரியவில்லை.

வயிறு எந்த வகையிலும் நிறையாமல், வாழை இலை நிறைந்தால் போதும் என்று ஏராளமான உணவு வகைகளை அடுக்குகின்றனர். அதிலும் சில திருமணங்களில் வாழை இலையை ஜெராக்ஸ் எடுத்து பரிமாறுகிறார்கள்.

இப்படி செலவுகளை அதிகரித்து தங்களது பகட்டை வெளிப்படுத்த பலரும் செய்யும் செலவுகள் பல. பட்டியலில் விடுபட்டவை ஏராளமாக இருக்கலாம். எங்காவது சிக்கனம் பிடிக்கலாம் என்றால் எங்கே விடுகிறார்கள் உடனிருப்பவர்கள். இது கெளரவமாக இருக்காது, நிறைவை தராது, பார்ப்பவர்கள் வாய் பிளக்க வேண்டாமா?’ என பல அஸ்திரங்களை ஏவுவார்கள்.

இப்படியாக நடைபெறும் திருமணங்கள் இப்போது அதிகரித்திருக்கின்றன. கொஞ்சமும் குறைந்தால் நிறைவாக இருக்காது என்கிறார்கள். நிறைவு யாருக்கு? என்பது தான் புரியவில்லை.

ஒரு நாள் திருமணத்துக்காக பல லட்சங்களை செலவிட்டு அதிலும் பல செலவுகள் பயனற்றுப் போகும் போக்கு நல்லதாகப்படவில்லை. இரு மனங்கள் இணைகின்றன. அதை உறவுகள் கொண்டாட வேண்டும். ஆனால், பெரும்பாலான திருமணங்கள் வட்டிக்கடைக்காரனின் தயவில்தான் நடக்கிறது. திருமணங்களை முறையாக கொண்டாடாமல் அதிகம் செலவிட்டால் பிறகு வாழ்க்கை திண்டாட்டமாகப் போய்விடும்.

திருமணக் கடனைக் கட்டுவதிலேயே பலருக்கும் வாழ்க்கை தொலைந்து விடுகிறது. பிறகு எங்கே, வாழ்க்கை எனும் படகைக் கரை சேர்ப்பது?

உண்மையில், ஒரு பெண்ணும் ஆணும் தங்களை வாழ்க்கையில் இணைத்துக் கொள்வதாக ஊருக்கும் உறவுக்கும் அறிவிப்பதே திருமணம்.

அந்த திருமணத்தை எளிமையாகவும் அதே சமயம் மகிழ்ச்சியாகவும் நடத்தி வாழ்க்கையில் வெற்றி பெறுவோம்.


வாணிஸ்ரீ சிவகுமார் -
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21275

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Nov 02, 2015 10:34 pm

இதற்கெல்லாம் லேப்-டாப் காரணமா?
-------------
தகவல் தொழில்நுட்பம் கொடுத்த பல வரங்களில் ஒன்று லேப்-டாப். அதிலும், அந்த வரத்தினைப் பெற்ற மனிதர்களின் எண்ணிக்கை தற்போது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

வேலை செய்ய வேண்டும் என்றால் அலுவலகத்துக்குத்தான் வர வேண்டும் என்று ஒரு முக்கிய அஸ்திவாரத்தை ஆட்டியதே இந்த லேப்டாப்தான்.

ஏன் வீடுகளில் கணினி வந்தபோதே அந்த அஸ்திவாரம் ஆட்டம் காணவில்லையா என்று கேட்கலாம். ஆனால், அலுவலக ஊழியர்களுக்கு டெஸ்க்டாப் வாங்கிக் கொடுத்த அலுவலகமோ, தன் சொந்த காசில் வாங்கிய டெஸ்க்டாப்பை அலுவலக வேலை செய்து கரியாக்கிய ஊழியர்களோ அப்போது குறைவுதான்.

சரி விஷயத்துக்கு வரலாம்.

டேபிளில் வைத்து வேலை செய்ய வேண்டிய கணினியை, செல்லக் குழந்தைகளை வைத்து கொஞ்ச வேண்டிய மடியில் வைத்து பணியாற்றும் சூழ்நிலைக்கு கொண்டு வந்தது இந்த லேப் – டாப். அது மட்டுமா, நாங்க படுத்துக் கொண்டே பணியாற்றுவோம், ரயிலிலயும் போவோம், வேலையும் செய்வோம் என்ற ரேஞ்சுக்கு பலரையும் கொண்டு வந்தது இந்த லேப்டாப்.

ஆனால், அலுவலக வேலைகளை எளிதாக்கிய இந்த லேப்-டாப், உடல் நலத்துக்கு நல்லது செய்யவில்லையே.. இதுவரை வெளியான சில ஆய்வுகள் மட்டுமே இத்தனை நோய்களை லேப்டாப் கொடுக்கிறது என்று சொல்கின்றன என்றால், இன்னும் எத்தனையோ ஆய்வுகள் நடந்து கொண்டு இருக்கிறதே அதுவும் வெளியானால் அவ்ளோ தான் போல இருக்கு.
உண்மை என்ன சொல்லுதுன்னா.. லேப் டாப்பை தொடர்ந்து பயன்படுத்தும் நபர்களுக்கு குறிப்பாக 8 வியாதிகள் ஸ்பீட் போஸ்டில் டேரக்ட் டோர் டெலிவரியாம்.

வீட்டில் ஆள் இல்லைன்னாலும் சுவர் ஏறி குதித்து வருகிறதாம் இந்த வியாதிகள்..

அது இன்னான்னா..முதுகுவலி..

என்னாது.. முதுகுவலியா.. இது எல்லாருக்குமே வருதுப்பா.. ஏதோ லேப்டாப்பை பயன்படுத்தினா மட்டும் வர்ற மாதிரி சொல்றீங்களேன்னு கேட்காதீங்க.. விஷயத்தைக் கேளுங்கள். மற்றவர்களுக்கு வரும் முதுகுவலிக்கும், லேப்டாப் உபயோகிப்பாளர்களுக்கு வரும் முதுகுவலிக்கும் ஒரே ஒரு ஒற்றுமை வலி மட்டும்தான். ஆனா வேற்றுமை… தீராத, கடுமையான முதுகுவலி என்பதுதான்.

முதுகை வளைத்து வில் போல வைத்துக் கொண்டு, கழுத்தால் லேப்டாப்பை குறி பார்க்கும் போது, முதுகுதடத்துக்குள் இருக்கும் ஏராளமான நரம்புகள் மிக இறுக்கமான நிலைக்கு தள்ளப்படுகின்றன. இதே நிலை தொடர்ந்து நீடிக்கும் போது நரம்புகளின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு மிகக் கடுமையான வலி ஏற்படும்.

இதோடு விடவில்லை நாம் வாங்கிய லேப்டாப் வரம், கண் பார்வை மங்குதல், கழுத்து வலி, விரல்களில் வீக்கம், தோள்பட்டை வலி, தோல்களின் நிறம் மங்குதல், விந்தணு குறைதல், சரும நோய்கள் உள்ளிட்டவற்றையும் சேர்த்தே ஏற்படுத்துகின்றன.

ஒரு சிலருக்குத்தான் இந்த பிரச்னைகள் ஏற்படும் என்று நினைத்தால் அது தவறு. ஒரு சிலரை மட்டுமே இந்த பிரச்னைகள் தொடுவதில்லை என்கிறது மற்றொரு ஆய்வு.

லேப்டாப் டாப் தீய பத்தவச்சா, கணினியின் திரையில் இருந்து வரும் ரேடியேஷன் அதில் எண்ணைய் ஊற்றுகிறது என்றே செல்லலாம். அதாவது திரையில் இருந்து வெளியாகும் ரேடியேஷன், அதன் பங்குக்கு பல்வேறு சரும பாதிப்புகளையும், கண்களையும் பாதித்து மனிதனை நீண்ட நாள் நோயாளியாகவே ஆக்கி விடுகின்றன.

இப்படி லேப் டாப் பத்தி நீங்க எதச் சொன்னாலும் மனம் தளராமல் உழைப்போர் சங்கத்தினர் கூறுவது என்னன்னா..
இப்ப அதுக்கு என்ன?… நாங்க எங்க வேலைய வீட்டில் இருந்தே செய்றது உங்களுக்குப் புடிக்கலை. அதானே லேப் டாப் மேல புழுதி வாரி இறைக்கிறீங்கன்னு கேட்காதீங்க…

முடிந்த அளவுக்கு லேப் டாப் பயன்பாட்டைக் குறைத்து டெஸ்க்டாப் பயன்பாட்டை அதிகரித்துக் கொள்வது உங்களுக்கு நல்லது.. உங்கள் லேப்புக்கும்(தொடைக்கும்) நல்லது.

+
வாணிஸ்ரீ சிவகுமார்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21275

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Nov 02, 2015 10:36 pm

காதோடு தான் நாம் பேசுவோம்…
-------------

காது.. பலருக்கும் சில சமயங்களில் இது கேக்காததாகிவிடுகிறது. காரணம் நாமாகவோ, வெளிச் சூழலாகவோ இருக்கலாம்.

காதுகளை பராமரிப்பது குறித்து சில ஐடியாக்கள் நம் கைவசம் உள்ளது. அதில் சிலவற்றை அவிழ்த்து விடுகிறோம்…

பிறந்து ஒரு சில மாதங்கள் ஆன குழந்தை சப்தம் எழுந்தால் அந்த பக்கத்தை திரும்பிப் பார்க்காமலோ, பேச அதிக காலம் எடுத்துக் கொண்டாலோ உடனடியாக காது, மூக்கு, தொண்டை நிபுணரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.

சில குழந்தைகளுக்கு காதில் பிரச்னை இருக்கலாம். அவற்றை கவனிக்காமல் விட்டுவிட்டால் அவர்களுக்கு பேசுவதிலும் பிரச்னை ஏற்படலாம். எனவே, உடனடியாக கவனித்தால் பேச்சுக் குறை ஏற்படுவதை தவிர்க்கலாம்.

காதுகளை சுத்தம் செய்கிறேன் என்று பட்ஸ் உள்ளிட்டவற்றை காதுக்குள் திணித்து நீங்கள் எந்த ஆணியையும் புடுங்க வேண்டாம். காது தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ளும் அனைத்துக் கலையையும் கற்று வைத்திருக்கிறது.
எனவே, எப்போதாவது காது குடைச்சல் எடுத்தால் பட்ஸை எடுத்து உங்களது காதின் சுவர் பகுதியை மட்டும் லேசாக துடைத்துவிட்டு விட்டுவிடுங்கள். போதும்.

அப்போதுதான் உங்கள் காது அப்பாடா உட்டான்டா என்னன்னு நிம்மதி பெரு மூச்சு விடும்.

ஆனால், இதில் ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் உள்ளது. என்னவென்றால், காதின் மடலில் ஏராளமான முக்கிய நரம்புகள் இணைக்கப்பட்டுள்ளது. மனித உடலின் உள்ளுறுப்புகளுடன் இணைக்கப்பட்ட ஏராளமான நரம்புகள் காதின் மடலில் இருப்பதால் நாம் காதை குடையும் போது ஒரு வித நல்ல உணர்வை அடைகிறோம். இது மூளைக்கும் நல்ல ரிலாக்சை தருவதாக காதை குடையோ குடை எந்து குடைந்தவர்கள் கூறுகின்றனர்.

அதற்காக காது குடையறதை நல்லதுன்னு சொல்ல முடியாது.

இப்போது காது குத்துவதைப் பற்றி பார்க்கலாம். காதின் மென்மையான பகுதியில் மட்டுமே காது குத்துவது சிறந்தது. அதை விடுத்து சாலையில் டிராபிக்கில் மாட்டிக் கொண்ட வாகனங்களைப் போல காது முழுவதும் வரிசையாக காது குத்தி விதவிதமாக கம்மல் போட்டுக் கொள்வது நகைக் கடைக்காரர்களுக்கு வேண்டுமானால் நல்லதாக இருக்கலாம்.. உங்களுக்கு நல்லதல்ல.

சிலருக்கு இதுபோன்று காதின் குருத்தெலும்பு பகுதியில் காது குத்தி அதன் மூலமாக தொற்று நோய் பரவி ஆபத்தை ஏற்படுத்தியிருப்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அப்புறம் காது கண்ணாடி மாட்டக் கூட பயன்படாமல் போய்விடும்.

காதுக்குள் பூச்சி ஏதேனும் போய்விட்டால், உடனே காதை தரையில் படும்படி வைத்துப் படுத்துக் கொண்டால் பூச்சி தானாகவே கீழே இறங்கி அவங்க வூட்டுக்குப் போய்விடும் என்று நினைத்து கொண்டிருக்காமல், உடனடியாக உப்பு கலந்த தண்ணீரை காதுக்குள் ஊற்றி காதுக்குள் இருக்கும் பூச்சியை வெளியேற்ற வேண்டும்.

எப்போதும் காதில் வாக் மேன் அல்லது மொபைலின் ஹேன்ட் ப்ரீ போட்டு பாட்டுக் கேட்பது பார்க்க வேண்டும் என்றால் பந்தாவாக இருக்கும். இப்படியே போனால் பந்தலில் அலறும் பாடல் கூட உங்கள் காது மடலுக்கு எட்டாமல் போய்விடும்.
பிறகு உங்கள் பாடு திண்டாட்டம் தான். உங்கள் எதிரிகளுக்கோ கொண்டாட்டம் தான்.

எனவே காதுகளை பாதுகாத்து, கேக்காத காதாக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் வசதி.

+
வாணிஸ்ரீ சிவகுமார் -
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21275

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Nov 02, 2015 10:38 pm

புற்றுநோய்க்கு பொதுவான சிகிச்சை முறைகள்
---------------

புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து முழுவதும் அகற்றுவதே சிறப்பான சிகிச்சை. இந்த வகையில் முன்பெல்லாம் அறுவைச் சிகிச்சை முறையே புற்றுநோய் சிகிச்சைக்குச் சிறந்ததாக இருந்தது.

தற்போது கீமோதெரபி என்ற முறையில் மருந்தை உள்செலுத்தி புற்றுநோய் செல்களை அழிக்கவும், புதிதாக புற்றுநோய் செல்கள் உருவாகாமல் தடுக்கவும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

உணவுக் குழாய் புற்று, வாய்ப் புற்று போன்ற சில வகை புற்றுநோய்களுக்கு கதிரியக்க சிகிச்சை அளிக்கலாம். சில வகை புற்று நோய்களுக்கு ரேடியோதெரபி, ஹீமோதெரபி என கதிரியக்க முறையோடு மருந்துகள் கொடுத்து சிகிச்சை அளிக்க வேண்டியதிருக்கும்.

சில புற்றுநோய்க் கட்டிகளை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றிவிட்டு தொடர்ந்து கதிரியக்க சிகிச்சை கொடுக்க வேண்டியதிருக்கும். பாலிஃபெக்டமி என்ற முறையால் எண்டாஸ்கோப்பி மூலம் பெருங்குடலில் ஏற்படும் சதை வளர்ச்சியை ஆரம்ப நிலையிலேயே கிள்ளி எறிய முடியும்.

கூட்டு சிகிச்சை:
பொதுவாக புற்றுநோய் உள்ளவர்களுக்கு எல்லா முறையும கலந்து செய்யக் கூடிய கூட்டு சிகிச்சைதான் சிறந்தது. எண்டாஸ்கோப்பி சிகிச்சை, அறுவைச் சிகிச்சை என எல்லா வழிகளையும் கடைப்பிடித்து புற்றுநோய் திசுக்களே இல்லை என்ற நிலையை ஏற்படுத்தவேண்டும்.

புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டுபிடித்துவிட்டால் சிகிச்சை அளித்து முற்றிலும் குணப்படுத்திவிடலாம். ஆனால் பலர் நோய் முற்றிய நிலையிலேயே சிகிச்சைக்கு வருகின்றனர். எனவே ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.

வலி இல்லாமல் வாழ:
சரி புற்று நோய் முற்றிவிட்டது. இனி குணப்படுத்த முடியாது எனத் தீர்மானமாகத் தெரிந்துவிட்டது. சரி, அவர்களை அப்படியே விட்டுவிடலாமா. நிச்சயம் கூடாது. இருக்கும் நாள் வரை வலி இல்லாமல் மிகச் சிரமப்படாமல் கூடிய வகையில் வாழ்நாளைக் கூட்டிக் கொடுத்து நல்ல வாழ்க்கைச் சூழலை (Quality of life) ஏற்படுத்திக் கொடுப்பது டாக்டரின் கடமை. இதை ஆங்கிலத்தில் Palliative Treatment என்று கூறுகிறோம்.

எண்டோஸ்கோப்பி: ஆரம்ப நிலையில் உள்ள புற்று நோய் மற்றும் முற்றிய நிலையில் உள்ள புற்றுநோய்க்கும் சிகிச்சை அளிப்பதில் எண்டோஸ்கோப்பி பிரசித்து பெற்றது. வயிற்றைத் திறந்து சிகிச்சை அளிக்கத் தேவையில்லை. தீவிர மயக்க மருந்து தேவையில்லை. ஓரிரு மாதக் குழந்தை முதல் 100 வயது வரை எல்லா வயதினருக்கும் சிகிச்சை அளிக்கலாம்.
இதயம், நுரையீரல் நோய் உள்ளவர்களுக்கும் இத்தகைய சிகிச்சை முறைகளை எளிதாகக் கையாளலாம்.

உணவு, உமிழ் நீர் கூட விழுங்க முடியாத முற்றிய உணவுக் குழாய் புற்றுநோய்க்கு எண்டோஸ்கோப்பி சிகிச்சையே சிறந்தது. எண்டோஸ்கோப்பி கருவி கொண்டு பலூன் மூலம் உணவுக் குழாயை விரிவடையச் செய்து செயற்கைக் குழாய் பொருத்தி அடுத்த நாளே உணவு உட்கொள்ளும் நிலை ஏற்படுத்த முடிகிறது.

இரைப்பை, குடல் அடைப்பை நீக்கவும் எண்டோஸ்கோப்பி மூலமாக சிகிச்சை தர முடியும். பித்தக் குழாய் புற்றுநோயால் தீவிர மஞ்சள் காமாலை ஏற்பட்டவர்களுக்கு எண்டோஸ்கோப்பி மூலமாக புதிய செயற்கைக் குழாய் பொருத்தி மஞ்சள் காமாலையைக் குறைத்து சிகிச்சை அளிக்கலாம்.

பித்தக்குழாயில் புற்றுநோய் உள்ளவர்களுக்கு அரிப்பு, ரத்தக் கசிவு, சோர்வு, மஞ்சள் காமாலை ஏற்படுகிறது. செயற்கைக் குழாய் பொருத்தியவுடன் அரிப்பு நின்றுவிடுவதுடன் ரத்தக் கசிவு நின்றுவிடும், பசி ஏற்படும். மஞ்சள் காமாலை போய்விடும்.

கணையத்தில் புற்றுநோய் இருந்தாலும் தீராத வயிற்று வலி, மஞ்சள் காமாலை, பசியின்மை, சோர்வு ஏற்படும். கணையம் வழியாக பித்தக் குழாய் வருவதால் கணையத்தில் உள்ள புற்றுநோயால் பித்த நீர் செல்வது தடை படுகிறது.

எண்டோஸ்கோப்பி மூலம் செயற்கை குழாய் பொருத்தி பித்தநீர் செல்ல வழி செய்யப்படுகிறது.

* சோர்வு, பசியின்மை, எடை குறைதல், ரத்த சோகை ஆகியவை புற்று நோய்க்கான பொதுவான அறிகுறிகள்.

* உணவுக்குழாய் முதல் கணையம் வரை உடலில் இடத்துக்குத் தகுந்தவாறு புற்றுநோய் அறிகுறிகள் மாறுபடும்.

* உணவு விழுங்குவதில் சிரமம், மலத்தில் ரத்தம் ஆகிய அறிகுறிகள் இருந்தால் உடனடியாக டாக்டரிடம் செல்லுங்கள்.

+
வாணிஸ்ரீ சிவகுமார் -
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21275

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by முழுமுதலோன் on Tue Nov 03, 2015 12:05 pm

நல்ல தகவல் 
#spoct15-2

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Nov 03, 2015 4:37 pm

@முழுமுதலோன் wrote:நல்ல தகவல் 
#spoct15-2

மிக்க நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21275

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by ஸ்ரீராம் on Wed Nov 04, 2015 11:03 am

கட்டுரைகளில் சில மருத்துவ பதிவுகள் இருக்கு @கவிப்புயல் இனியவன் அண்ணா. அதை தனி பதிவில் போட்டு இருக்கலாம்.

அனைத்தும் அருமை.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233202  உறுப்பினர்கள்: 3599 | புதிய உறுப்பினர்: Thas VN Thasan
avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by செந்தில் on Wed Nov 04, 2015 12:29 pm


_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Nov 04, 2015 10:04 pm

@முழுமுதலோன் wrote:நல்ல தகவல் 
#spoct15-2

அனைவருக்கும் நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21275

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Nov 09, 2015 3:02 pm

இதற்கெல்லாம் லேப்-டாப் காரணமா?

--------------
தகவல் தொழில்நுட்பம் கொடுத்த பல வரங்களில் ஒன்று லேப்-டாப். அதிலும், அந்த வரத்தினைப் பெற்ற மனிதர்களின் எண்ணிக்கை தற்போது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

வேலை செய்ய வேண்டும் என்றால் அலுவலகத்துக்குத்தான் வர வேண்டும் என்று ஒரு முக்கிய அஸ்திவாரத்தை ஆட்டியதே இந்த லேப்டாப்தான்.

ஏன் வீடுகளில் கணினி வந்தபோதே அந்த அஸ்திவாரம் ஆட்டம் காணவில்லையா என்று கேட்கலாம். ஆனால், அலுவலக ஊழியர்களுக்கு டெஸ்க்டாப் வாங்கிக் கொடுத்த அலுவலகமோ, தன் சொந்த காசில் வாங்கிய டெஸ்க்டாப்பை அலுவலக வேலை செய்து கரியாக்கிய ஊழியர்களோ அப்போது குறைவுதான்.

சரி விஷயத்துக்கு வரலாம்.

டேபிளில் வைத்து வேலை செய்ய வேண்டிய கணினியை, செல்லக் குழந்தைகளை வைத்து கொஞ்ச வேண்டிய மடியில் வைத்து பணியாற்றும் சூழ்நிலைக்கு கொண்டு வந்தது இந்த லேப் – டாப். அது மட்டுமா, நாங்க படுத்துக் கொண்டே பணியாற்றுவோம், ரயிலிலயும் போவோம், வேலையும் செய்வோம் என்ற ரேஞ்சுக்கு பலரையும் கொண்டு வந்தது இந்த லேப்டாப்.

ஆனால், அலுவலக வேலைகளை எளிதாக்கிய இந்த லேப்-டாப், உடல் நலத்துக்கு நல்லது செய்யவில்லையே.. இதுவரை வெளியான சில ஆய்வுகள் மட்டுமே இத்தனை நோய்களை லேப்டாப் கொடுக்கிறது என்று சொல்கின்றன என்றால், இன்னும் எத்தனையோ ஆய்வுகள் நடந்து கொண்டு இருக்கிறதே அதுவும் வெளியானால் அவ்ளோ தான் போல இருக்கு.
உண்மை என்ன சொல்லுதுன்னா.. லேப் டாப்பை தொடர்ந்து பயன்படுத்தும் நபர்களுக்கு குறிப்பாக 8 வியாதிகள் ஸ்பீட் போஸ்டில் டேரக்ட் டோர் டெலிவரியாம்.

வீட்டில் ஆள் இல்லைன்னாலும் சுவர் ஏறி குதித்து வருகிறதாம் இந்த வியாதிகள்..

அது இன்னான்னா..முதுகுவலி..

என்னாது.. முதுகுவலியா.. இது எல்லாருக்குமே வருதுப்பா.. ஏதோ லேப்டாப்பை பயன்படுத்தினா மட்டும் வர்ற மாதிரி சொல்றீங்களேன்னு கேட்காதீங்க.. விஷயத்தைக் கேளுங்கள். மற்றவர்களுக்கு வரும் முதுகுவலிக்கும், லேப்டாப் உபயோகிப்பாளர்களுக்கு வரும் முதுகுவலிக்கும் ஒரே ஒரு ஒற்றுமை வலி மட்டும்தான். ஆனா வேற்றுமை… தீராத, கடுமையான முதுகுவலி என்பதுதான்.

முதுகை வளைத்து வில் போல வைத்துக் கொண்டு, கழுத்தால் லேப்டாப்பை குறி பார்க்கும் போது, முதுகுதடத்துக்குள் இருக்கும் ஏராளமான நரம்புகள் மிக இறுக்கமான நிலைக்கு தள்ளப்படுகின்றன. இதே நிலை தொடர்ந்து நீடிக்கும் போது நரம்புகளின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு மிகக் கடுமையான வலி ஏற்படும்.

இதோடு விடவில்லை நாம் வாங்கிய லேப்டாப் வரம், கண் பார்வை மங்குதல், கழுத்து வலி, விரல்களில் வீக்கம், தோள்பட்டை வலி, தோல்களின் நிறம் மங்குதல், விந்தணு குறைதல், சரும நோய்கள் உள்ளிட்டவற்றையும் சேர்த்தே ஏற்படுத்துகின்றன.

ஒரு சிலருக்குத்தான் இந்த பிரச்னைகள் ஏற்படும் என்று நினைத்தால் அது தவறு. ஒரு சிலரை மட்டுமே இந்த பிரச்னைகள் தொடுவதில்லை என்கிறது மற்றொரு ஆய்வு.

லேப்டாப் டாப் தீய பத்தவச்சா, கணினியின் திரையில் இருந்து வரும் ரேடியேஷன் அதில் எண்ணைய் ஊற்றுகிறது என்றே செல்லலாம். அதாவது திரையில் இருந்து வெளியாகும் ரேடியேஷன், அதன் பங்குக்கு பல்வேறு சரும பாதிப்புகளையும், கண்களையும் பாதித்து மனிதனை நீண்ட நாள் நோயாளியாகவே ஆக்கி விடுகின்றன.

இப்படி லேப் டாப் பத்தி நீங்க எதச் சொன்னாலும் மனம் தளராமல் உழைப்போர் சங்கத்தினர் கூறுவது என்னன்னா..
இப்ப அதுக்கு என்ன?… நாங்க எங்க வேலைய வீட்டில் இருந்தே செய்றது உங்களுக்குப் புடிக்கலை. அதானே லேப் டாப் மேல புழுதி வாரி இறைக்கிறீங்கன்னு கேட்காதீங்க…

முடிந்த அளவுக்கு லேப் டாப் பயன்பாட்டைக் குறைத்து டெஸ்க்டாப் பயன்பாட்டை அதிகரித்துக் கொள்வது உங்களுக்கு நல்லது.. உங்கள் லேப்புக்கும்(தொடைக்கும்) நல்லது.


+
வாணிஸ்ரீ சிவகுமார்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21275

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Nov 09, 2015 3:03 pm

பல மணி நேரம் உட்கார்ந்து பணியாற்றுபவரா நீங்கள்? இத படிக்காதீங்க…
-----------------------------

அலுவலகம்உட்கார்ந்து பணியாற்றுதல்வேலை அழுத்தம்
ஆபிஸ்ல வந்து உட்கார்ந்து வேலை செய்யாம… ஊர் சுத்திக்கிட்டேவா இருப்பாங்கன்னு கேட்பது சரியான கேள்விதான்..

ஆனால், அதற்காக வரும் போதே பக்கெட் பெவிகாலை எடுத்துக் கொண்டு சீட்டில் ஊற்றிவிட்டு சற்று காய்ந்ததும் ஹாயாக உட்கார்ந்து கொள்வதை போல பல மணி நேரம் சீட்டில் இருந்து எழுந்திருக்காமல் பணியாற்றுவதுதான் தவறு என்கிறோம்.

உண்மை தான் நீங்க சொல்றது.. ஆனா, எங்க டைம் இருக்கு. வந்து உட்கார்ந்தா அடுத்தடுத்த பைல், அடுத்தடுத்த போன் கால் என்று வந்து கொண்டே இருப்பதால் நகரக் கூட முடியவில்லை என்று புலம்பினால், இன்னும் சில வருடங்களில் உங்கள் வேலையை செய்ய மற்றொருவர் பணியமர்த்தப்படுவார் என்பது நிதர்சனமான உண்மை.

என்னா? ஒழுங்க வேலை செய்ற என்னைத் தூக்கிட்டு வேற ஒருத்தர வேலைல வச்சிடுவாங்களா.. இல்ல நான் தான் சும்மா விட்டுடுவேனா என்றால் உங்களால் நிச்சயம் எதுவும் செய்ய முடியாது.

ஏன் தெரியுமா.. பல மணி நேரம் உட்கார்ந்து கொண்டே பணியாற்றுபவர்களுக்கு வரக்கூடாத நோயெல்லாம் வருமாம். என்னடான்னு பயந்துடாதீங்க.. எந்த நோயுமே வரக்கூடாத நோய்தாங்க…

புற்றுநோய், நீரிழிவு, உடல் பருமன், வாதம், இதய நோய், மாரடைப்பு போன்றவை வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாம்.

இப்படி ஏதேனும் ஒரு நோய் தாக்கி நாம் போய்விட்டால், நம் வேலைகளை பார்க்க வேறொரு ஆளைத்தானே நிர்வாகம் நியமித்துக் கொள்ளும். இல்லை நாம் ஆவியாக வந்து வேலை செய்கிறோம் என்று சொன்னால், சித்ரகுப்தன் கணக்கிலா சம்பளத்தைப் போடப் போகிறார்கள்.

அதிக நேரம் சீட்டிலேயே உட்கார்ந்திருந்தால், சீக்கிரம் மேல் உலகத்துக்கு டிக்கெட் கிடைத்துவிடும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இன்னும் ஒரு குண்டையும் அவர்கள் தூக்கி நம் தலையில் போடுகிறார்கள். என்னன்னா.. அரை மணி நேரத்துக்கு மேல சேர்ந்தாப்போல உட்கார்ந்து வேலை செய்தாலே இளமை காலத்திலேயே நரை உழுந்து மரணம் அடைய நிறைய வாய்ப்புகள் இருப்பதாகவும், இளமை கால மரணங்களுக்கு பெரும்பாலும் இதுவே காரணமாக அமைவதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளதாம்.

8 மணி நேரம் உட்கார்ந்தே வேலை செய்தா என்னென்ன வரும்னு கொஞ்சம் லிஸ்ட் போடுங்க.. பாஸ்
இதில் கீழ்நிலை பணியாளர்களின் நிலை பரவாயில்லைங்க.. டீ குடிக்க, தம் அடிக்க, சாப்பிட, தண்ணீர் பிடிக்க அல்லது தண்ணீர் குடிக்கன்னு எழுந்து போயிடுவாங்க. ஆனா.. சில டீம் தலைங்க.. அவங்களுக்குன்னு ஒரு ரூம் போட்டு கொடுத்து இருப்பாங்கள்ள.. அங்கயே டீ வரும், தண்ணி வரும், சாப்பாடு வரும்… எல்லாவற்றையும் சேரில் இருந்தபடியே சாப்பிட்டு, குடித்து ஹாயாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

இவர்கள் இனி ஒவ்வொன்றும் அவரது டேபிளுக்கு வரும் போது, கூடவே எமனும் எருமையில் வருவதை உணர்ந்து, சில விஷயங்களுக்காவது அடிக்கடி எழுந்து போய் நடந்து விட்டு வந்து அமர்ந்தால், எமன் அடுத்த கேபினுக்கு ஆள் தேட போய் விடுவார்.

சரிங்க.. காரணமே இல்லாம எப்படிங்க எழுந்து போறதுன்னு டியூப்லைட் போல கேள்வி கேட்பவர்களுக்காகவே இங்கே சில டிப்ஸ்….

பக்கத்து கேபினில் இருப்பவரிடம் தொலைபேசியில் சந்தேகங்களை கேட்காமல், நீங்களே எழுந்து போய் விலாவரியாகக் கேட்டுக் கொண்டு வரலாம்.

ஏதேனும் ஸ்னேக்ஸ் கொண்டு வந்து அதனை அனைவருக்கும் நீங்களே கொடுத்து பகிர்ந்துண்டு வாழலாம்.

உங்கள் சீட் பக்கத்திலேயே குப்பைத் தொட்டியை வைத்துக் கொள்ளாமல், ரூமுக்கு வெளியே வைத்துவிட்டு அங்கு சென்று போடலாம்.

சிறிய தண்ணீர் கேனை வாங்கி வந்து அதில் அடிக்கடி தண்ணீர் பிடித்துக் குடிக்கலாம்.

கொண்டு வந்த சாப்பாட்டை உங்கள் சீட்டிலேயே சாப்பிடாமல், அதற்கான இடத்துக்குச் சென்று சாப்பிடலாம்.

இப்படி உங்கள் வாழ்க்கையை நீண்ட ஆயுள் கொண்டதாக மாற்றிக் கொள்ள ஏராளமான ஐடியாக்கள் கைவசம் உள்ளன.

மேற்கூறியதை செய்துவிட்டு எங்களிடம் கேளுங்கள். மிச்சத்தை சொச்சம் இல்லாமல் சொல்கிறோம்.

ரொம்ப நேரம் உட்கார்ந்து இந்த கட்டுரையை அடிச்சிட்டேங்க.. எழுந்து போக வேண்டாமா.. இல்லைன்னா இதுபோன்ற விஷயங்களை உங்களுக்கு சொல்றதுக்கு ஆள் இல்லாம போயிடும் பாருங்க…வாணிஸ்ரீ சிவகுமார் -
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21275

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Nov 09, 2015 3:05 pm

ஆபிஸ்ல இருந்து ஆன் டைமுக்கு கிளம்புங்கப்பா…

---------------

பலரும், அலுவலகத்தில் பல மணி நேரம் தேமேன்னு உட்கார்ந்து வேலை செய்வார்கள் இல்லைன்னா வேலை செய்ற மாதிரியே பாவ்லா பண்ணிக்கிட்டு இருப்பாங்க.

இன்னும் சிலர் இருக்கிறார்கள்.. அவங்க ஸ்டைலே தனி.. அலுவலக நேரத்தில் எல்லாம் காத்தாடி உட்டுட்டு, ஓவர் டைம்ல மட்டும்தான் ஒர்க்கே பண்ணுவாங்க…

என்னப்பா கிளம்பலையான்னு கேட்டா, இல்ல.. வேலை இருக்கு, முடிக்கணும் பொறுப்பா பதில் சொல்லி மத்தவங்க காண்ட அண்டாவுல கொட்டிக்குவாங்க.

இதில், சிலர் காலை முதல் இரவு வரை அலுவலகத்திலேயே தவம் இருந்து பாஸிடம் வரம் வாங்க காத்திருப்பது போல இருப்பார்கள்.

ஒரு சிலர், அலுவலகத்தில் ரொம்ப நேரம் இருந்தா… இவன் ரொம்ப நல்லவன்டான்னு எல்லாரும் சொல்லுவாங்கன்னு தப்புத் தப்பா கணக்கு போட்டு வச்சிருப்பாங்க.

எது எப்படின்னாலும், அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்பவர்கள் செய்வது தப்புதான் தப்புதான்.

எப்படி அது தப்புன்னு சொல்ல முடியும்னு நீங்க ஆதங்கத்தோட கேக்குறது புரியுது… அதுக்கு எங்க கிட்ட விலாவரியா தகவல் இருக்குங்க…

வாங்க பாக்கலாம்,

வேலை என்பது முடிந்து விடும் விஷயமல்ல, எல்லா வேலையும் ஒரே நாளில் உங்களால் முடிக்க முடியாது. அதில்லாம.. எல்லா வேலையையும் இன்னிக்கே முடிச்சிட்டா நாளைக்கு வந்து என்னப் பண்ணுவீங்க பாவம்…

அப்புறம், உங்களது வேலையை விட உங்களது குடும்பத்தாரும், குடும்ப உறுப்பினர்களும்தான் முக்கியம். அவர்களுடன் நேரத்தை செலவிடுவது அவசியமும் கூட.

உங்களுக்கு வேலையில எதான பிரச்னைன்னா ஆறுதல் கூறவும், ஆதரவு தரவும் குடும்பம் இருக்கும். ஆனா, உங்க மனைவி கோச்சிக்கிட்டு போயிட்டா பாஸ் வந்து சமைச்சிப் போட மாட்டார்.

குடும்பமே இல்லை சார்.. நான் தனியா இருக்கேன்னு ஒருவர் அங்கிருந்து குரல் கொடுத்தா அவங்களுக்கும் தனியா நோட்ஸ் போட்டு வச்சிருக்கோம்.. வாங்க சொல்றோம்..

வாழ்கை என்பது வெறும் பணி மட்டும் அல்ல. வேலைக்கு போறதும், இரவில் கிளம்பி சாப்பிட்டுட்டுப் போயி ரூமில் படுத்துக் கொண்டு அறையில் இருக்கும் கொசுக்களுக்கு ரத்த தானம் செய்துவிட்டு, குறட்டை சத்தத்தால் இம்சையும் கொடுப்பதல்ல.

வாழ்க்கை வாழ்வதற்கு, குடும்பமே இல்லையே எப்படி வாழுறதுன்னு கேக்காதீங்க.. எத்தனையோ பேர் சமூக அக்கறையோடு வாழ்கிறார்கள். அதுபோல சமூகத்தில் உங்களின் தேவை தேவைப்படும் பலரும் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தேடிச் சென்று உதவுங்கள். இது அவர்களுக்கு நீங்கள் செய்யும் உதவியல்ல.. உங்களுக்கு நீங்களே செய்து கொள்ளும் பேருதவி.

எல்லாமே சரி..

நான் ஆபிஸ்ல ரொம்ப நேரம் உட்கார்ந்து டபுள் பிரமோஷன் வாங்கினேன் தெரியுமான்னு சொல்றவங்களுக்கு… சிம்பிள் லாஜிக் மேட்டர் ஒண்ணு.

என்னன்னா.. ஆபிஸ்ல ஒருத்தர் ரொம்ப நேரம் வேலை செய்றார்னா.. அவருக்கு கொடுத்த வேலையை, கொடுத்த நேரத்தில் முடிக்க தெரியலைன்னு ஊரே பேசுமே அத பத்தி யோசிச்சீங்களா…

இல்ல, உங்க ஒருத்தருக்காக.. ஆபிஸ்ல இருக்குற ஏசி, லைட், டீ மெஷின்னு எல்லாமே இயங்கி தேவையில்லாம செலவு அதிகமாகிட்டு இருக்கே அதப்பத்திதான் யோசிச்சீங்களா…

எல்லாவற்றையும் விட மன்னிக்கவே முடியாத குற்றம் என்னன்னா.. பொறுப்பா ஒருவன் வேலை எல்லாம் செஞ்சிட்டு, குடும்ப பொறுப்பை சுமக்க சரியான டைமுக்குக் கிளம்புவான். அவனை டீம் லீடர் மொறைக்கிறதுக்கும் காரணமா இருந்துடுவாங்க.. இதனால, உங்க டீம்ல இருக்க எந்த செட்டுக்கும் உங்கள புடிக்காம போறதுக்கும் நிறைய வாய்ப்பு இருக்கு…

இப்படி எதையும் யோசிக்காம… கிணத்துல போட்ட கல்ல்ல்லு மாதிரி வேலை செய்றத விட்டுவிட்டு, வீட்டுக்குப் போனால், அம்மாவுக்கு காய்கறி வாங்கித் தரலாம், பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கலாம். மனைவிக்கு காய்கறி நறுக்கித் தரலாம். இதெல்லாம் என்னால செய்யவே முடியாதுன்னு கையை தூக்குறவங்க.. வெட்டியா வீட்டிலே உட்கார்ந்து டிவியயாவது பார்த்து.. இவன் வீட்ல ஏன்டா இருக்கான்னு மத்தவங்க நிம்மதியையாவது பறிக்கலாம்.

என்ன நாங்க சொல்றது தப்பில்லையே…
வாணிஸ்ரீ சிவகுமார் -
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21275

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Nov 09, 2015 3:07 pm

புற்றுநோயை கண்டறியும் பரிசோதனைகள்

----------
புற்றுநோய்மருத்துவ பரிசோதனை

புற்றுநோய் இருப்பதை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் அதனை உரிய சிகிச்சையின் மூலம் குணப்படுத்தி நீண்ட நாள் வாழலாம்.

முதலில் புற்றுநோய் இருப்பதையே ஒரு சில அறுவை சிகிச்சைகளின் மூலம் தான் கண்டுபிடிக்க முடியும். ஆனால் தற்போது ஒருவருக்கு சந்தேகம் ஏற்பட்டால், அவருக்கு சில மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்படும்.

அவற்றில், ரத்தப் பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எண்டாஸ்கோப்பி முறைகள், சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மற்றும் “நிக்யூளியர் போன் ஸ்கேன்’ (Nuclear Bone Scan) ஆகிய பரிசோதனைகள் மூலம் புற்றுநோயைக் கண்டறியலாம்.

எல்லா நோயாளிகளுக்கும் எல்லாப் பரிசோதனைகளும் செய்ய வேண்டியதில்லை. அவர்களது பிரச்சினைக்கு ஏற்ப தகுந்த பரிசோதனைகள் மூலம் புற்றுநோயைக் கண்டறிய முடியும்.

நவீன மாற்றங்கள்: இருபது ஆண்டுக்கு முன்பு புற்றுநோய் உள்ளது எனக் கண்டுபிடிப்பது மிகக் கடினம். சாதாரண எக்ஸ் ரே பரிசோதனை மற்றும் பேரியம் எக்ஸ்ரே பரிசோதனைகள் மூலம்தான் ஓரளவு கண்டுபிடிக்க முடிந்தது.

இதனால் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து சிகிச்சை அளிப்பது மிகவும் சிரமமாக இருந்தது. பலர் இறக்கும் தருவாயில்தான் நோய் இருப்பதையே கண்டுபிடிக்க முடியும். வியாதி என்ன என்று கண்டுபிடிப்பதற்கே அறுவைச் சிகிச்சை செய்யும் நிலை இருந்தது.

இதனால் புற்றுநோய்க்கு சிகிச்சையே இல்லை என்று பரவலாக நம்பப்பட்டது. ஆனால் மருத்துவ விஞ்ஞான வளர்ச்சி காரணமாக பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை முறைகளில் பெரும் புரட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் புற்று நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்க முடிகிறது. எந்த புற்றுநோய்க்கு என்ன சிகிச்சை என துல்லியமாகத் தேர்வு செய்யமுடிகிறது.
எண்டோ அல்ட்ரா சோனோகிராபி: உணவுக் குழாய், மலக்குடல், பித்தப் பை, கணையம் ஆகிய உறுப்புகளில் உள்ள புற்று நோயைத் துல்லியமாக ஆரம்ப நிலையிலேயே கண்டறிய எண்டோ அல்ட்ரா சோனோகிராபி என்ற கருவி உள்ளது. இதில் ஸ்கேனும் எண்டாஸ்கோப்பியும் இணைந்து செயல்படும்.

புற்று நோய் எந்த அளவில் உள்ளது. பாதிக்கப்பட்ட நபர் அறுவைச் சிகிச்சைக்குத் தகுந்தவர்தானா எனத் தெரிந்துகொள்ளலாம்.

வீடியோ எண்ட்ராஸ்கோப்பி: சிறுகுடல் முழுவதும் நேரடியாகப் பார்த்து புற்று இருந்தால் அதை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து சிகிச்சை அளிக்க வீடியோ எண்ட்ராஸ்கோபி உதவுகிறது.

+

வாணிஸ்ரீ சிவகுமார் -
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21275

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Nov 09, 2015 3:09 pm

இருபதுகளில் அறிய வேண்டியவை
---------------

டீன் ஏஜ்ஜில் உள்ளவர்கள் அவர்களது இருபதாவது வயதில் சில விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

அதாவது, பள்ளி, கல்லூரியை முடித்து வெளி உலகத்தில் அடியெடுத்து வைக்கும் போது இதுவரை நாம் படித்த பாடங்களையும், நிகழ்பவற்றையும் ஒப்பீடு செய்து பார்க்கும் போது அப்போது தான் நிதர்சனம் புரிய வரும்.
இருபதுகளை சரியாக கடந்தவர்கள் பல சாதனைகளை படைப்பர்.
அவர்களுக்கு உதவும் வகையில் இங்கே சில குறிப்புகள்

நீங்கள் எதுவாக வேண்டும் என்று கனவு கண்டீர்களோ அதனை நிறைவேற்ற உங்கள் முன் உள்ள பாதைகளில் சரியாக பயணிக்க உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள். பாதையே இல்லை என்றால் பாதை அமைத்து பயணிக்க பொறுமையுடன் போராட வேண்டும்.

எனவே, உங்கள் கனவுக்கும், நிகழ்வுக்கும் உள்ள இடைவெளி என்ன என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய தருணம் இது.

பொய்யிலிருந்து விலகி இருங்கள்

பொய் கூறுவதையும், பொய் பேசுபவர்களையும் விட்டு விலகி இருப்பது மிகவும் முக்கியம். இளமை காலத்தை இனிமையாகக் கழிப்பதற்காக பெற்றோரிடமும், பாதுகாவலர்களிடமும் பொய் கூறுவதை தவிர்க்க வேண்டியது அவசியம் என்பதை உணருங்கள்.

மன்னிப்புக் கேளுங்கள்
ஒரு தவறை செய்து விட்டால், அதற்காக தலையை வாங்கி விட மாட்டார்கள். இது வாழ்க்கை, விளையாட்டு அல்ல. ஒரு தவறு செய்துவிட்டால் விளையாட்டை விட்டு வெளியேற்றிவிடுவது போல வாழ்க்கையில் வெளியேறிவிட மாட்டீர்கள். எனவே, தவறு செய்து விட்டேன். தெரியாமல் செய்து விட்டேன், மன்னித்துக் கொள்ளுங்கள் என்பது போன்ற வார்த்தைகளை தெரிந்து கொள்ளுங்கள்.

எதுவும் நிரந்தரமில்லை
இருபதுகளில் நாம் உற்சாகமாகத் தான் இருப்போம், நமது உடலும் ஆரோக்கியமாக இருக்கும். அதற்காக எப்போதும் விருந்து, கேளிக்கை என்று உணவையும், உறக்கத்தையும் கெடுத்துக் கொண்டால் உடல் நலம் அப்போது ஒன்றும் செய்யாது. வயதாகும் போது பல பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டி வரும். எனவே, காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்ற பழமொழியை, விருந்து கிடைக்கும் போதே கும்மாளம் போட்டுக் கொள்ள வேண்டும் என்று புரிந்து கொள்ளாமல், உடலை ஆரோக்கியமாக பேணும் வாய்ப்பு கிடைக்கும் போதே அதை சரியாக செய்து விட வேண்டும் என்று நினைவில் கொள்வோம்.

முக்கிய முடிவுகளை எடுக்கும் முன்
முக்கிய முடிவுகளை அதாவது காதலில் விழுவது அல்லது திருமணம் செய்து கொள்வது என்ற முடிவெடுக்கும் போது ஏதோ எளிதான விஷயம் என்று நினைத்து முடிவெடுக்காதீர்கள். காதலில் விழுந்தால் நிறைய விஷயங்களை தியாகம் செய்ய வேண்டி வரலாம். அதிகம் உழைக்க வேண்டி வரலாம். எனவே, எந்த சூழ்நிலைக்கும் உங்களை தயார் படுத்திக் கொண்டு காதலில் விழுவதே சாலச் சிறந்தது.

திருப்பிக் காட்ட வேண்டிய நேரம்
உங்கள் குடும்பம் உங்களுக்கு மிகவும் முக்கியமானது. இதுவரை உங்கள் குடும்பத்தார் உங்களுக்கு அனைத்து ஆதரவையும் அளித்தனர். இது நீங்கள் அவர்களுக்கு திருப்பி செலுத்த வேண்டிய காலம்.

இதுவும் வாழ்க்கையில் சகஜம்தான்
பணியாற்றும் இடங்களில் உங்கள் கடுமையான வேலைக்கு எப்போதும் அங்கீகாரம் கிடைக்கும் என்று நினைக்காதீர்கள். ஒரு நாள் நீங்கள் செய்யும் வேலைக்கு மற்றொருவருக்கு பாராட்டு கிடைக்கலாம். அன்றும் எப்போதும் போலவே உங்கள் வேலையை நீங்கள் செய்வது நல்லது.

இதுபோல பல விஷயங்களை சரியாக செய்து உங்கள் பக்கத்தை நீங்கள் நேர்மையாக வைத்துக் கொண்டால் வாழ்க்கை வசப்படும் உங்கள் வசம்.

நண்பர்கள் வட்டம் சுருங்கலாம்
ஒரு கட்டத்தில் உங்கள் பிறந்த நாள் பார்ட்டியில் உங்கள் அறை நிரம்பி வழிந்திருக்கலாம். உள்ளே வர முடியாமல் கதவின் இடுக்கில் பலர் பல்லியாக ஒட்டிக் கொண்டிருக்கலாம். காரில் செல்ல முடியாமல் தவித்திருக்கலாம். ஆனால், இப்போது

உங்கள் நட்பு வட்டம் சுருங்க நேரிடலாம்
அதற்குக் காரணம், நீங்கள் வாழ்க்கை எனும் உள் வட்டத்துக்குள் நுழைந்து விட்டீர்கள் என்று அர்த்தமாகலாம்.
ஆம், இருபதுகளை இழக்கும் வேலையில், உங்கள் உடன் படித்த பல நண்பர்கள் வேறு வேறு திசைகளில் பயணித்து வேறு வேறு பணிகளை ஆக்ரமித்து பிஸியாக இருப்பார்கள். நீங்கள் கூப்பிட்ட உடன் வந்து சேர முடியாமலும் போகலாம்.
பலரும் மணமுடித்து குடும்பம் குட்டி என்று பிஸியாக இருப்பார்கள். சிலருக்கு விருந்துகளில் கலந்து கொள்ள கோடு போடப்பட்டிருக்கலாம்.

எல்லாவற்றையு கடந்து உங்களுடன் சந்திக்காமல் இருந்தாலும் தொடர்பில் இருக்கும் சில நண்பர்கள் எப்போதும் இருந்து கொண்டு தான் இருப்பார்கள்.

எனவே நட்பு வட்டம் சுருங்கலாம்.. அதையும் இளமையின் இறுதியில் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டியது அவசியம்.


வாணிஸ்ரீ சிவகுமார் -
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21275

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Nov 09, 2015 3:10 pm

குடும்பம் செய்வது என்ன?
------------------------

குடும்பம்சாதனைமனிதன்
Iஒரு சொறசொறப்பான பாறையை வழவழப்பானதாக மாற்றுகிறது குடும்பம். குத்தும் முள்ளைக் கூட மணக்கும் மலராக மாற்றிவிடுகிறது குடும்பம்.

ஒரு மகாத்மா உருவானதன் பின்னனியில் அவரது மனைவி கஸ்தூரிபாவின் பல தியாகங்களும், ஒத்துழைப்பும், அர்ப்பணிப்பும் ஒளிந்துள்ளன.

காரல் மார்க்ஸ் உருவாக அவரது மனைவி ஜென்னியும் ஒரு முக்கியக் காரணம்…

எம்.எஸ். சுப்புலட்சுமியின் குரலுக்கு அவரது கணவர் சதாசிவம் ஆதார ஸ்ருதியாக இருந்துள்ளார்.
மேரி க்யூரிக்கு அவரது கணவர்தான் உந்து சக்தி.

இப்படி ஒவ்வொரு துறையிலும் புகழ் பெற்றவர்களின் பின்னணியில் அவர்களது வாழ்க்கை துணைகள் நிச்சயம் இடம் பெறுவார்கள்.

ஒருவன் குடும்பத்தில் வெற்றி பெறாமல், வெளியே பல சாதனைகள் புரிந்து என்ன பயன். ஏன் என்றால், ஒருவன் தான் பெறும் விருதுகளால் அடையும் சந்தோஷத்தை விட, தனது உறவுகளும், சொந்தங்களும் அதனை கொண்டாடும் போதுதான் அதிக மகிழ்ச்சி அடைகிறான்.

இமயத்தை வென்று மகத்தான சாதனை படைக்கும் முன், ஒவ்வொருவரும் குடும்பத்தினரின் இதயங்களை வென்று மகுடம் சூட்டிக் கொள்வது அவசியமாகும்.


வாணிஸ்ரீ சிவகுமார் -
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21275

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Nov 09, 2015 3:13 pm

நம்பிக்கை, அவநம்பிக்கை, மூடநம்பிக்கை, நம்பிக்கை துரோகம்!
-------------------------

‘உடும்புப் பிடி’ … ‘சிக்’ எனப் பற்றுதல் என்று ஒரு சொலவடை நம் வழக்கில் உண்டு. அதாவது ஒன்றைப் பற்றினோம் என்றால், அதனை உறுதியாகப் பற்றுதல், கை நழுவி விடாத அளவுக்கு கண்மூடித்தனமாகப் பற்றுதல் என்று கொள்ளலாம்.
இன்னும் குரங்குப்பிடி, பூனைப்பிடி என்றெல்லாம் சில பிடிகள் உண்டு. வைணவ மார்க்கத்தில் இரு வழிகளை அவ்வாறு சொல்வார்கள். ஆனால் இங்கே எனக்குத் தோன்றிய ஒரு பிடி, கைப்பிடி!
கைப்பிடி என்றால், நம் கை பிடிக்கும் பிடி அல்ல, மாறாக நம் கையைப் பிடிக்கும் பிடி!
ஒரு சிறுவன். தன் தாயுடன் ஆற்றின் கரையில் நின்றிருந்தான். ஆற்றைக் கடக்க வேண்டும். தண்ணீர் சலசலத்து ஓடிக் கொண்டிருந்தது.

அப்போது அவனது தாய் சொன்னார்.. “என்னுடைய கையை அழுத்தமாகப் பிடித்துக் கொள் மகனே…”
அந்தப் பையன் பதிலளித்தான்… “வேண்டாம் அம்மா. நீங்கள் என் கையைப் பிடித்துக் கொள்ளுங்கள்”
அதற்கு அவனது தாய் கேட்டார்…. “ஏன்? இரண்டுக்கும் என்ன பெரிய வித்தியாசம்?” என்று!
அதற்கு மகன் பதில் சொன்னான்… “நான் உங்கள் கையைப் பிடித்துக் கொண்டு ஆற்றைக் கடந்து செல்லும்போது… எனக்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம். அப்போது

உங்கள் கையை விட்டு விட வேண்டிய சூழல் ஏற்பட்டு விடலாம். ஆனால்… நீங்கள் என் கையைப் பிடித்திருந்தால்… அம்மா எனக்கு நன்றாகத் தெரியும்… நீங்கள் எந்தச் சூழலிலும் என் கையை நழுவ விடமாட்டீர்கள்!” என்றான்!
இதுதான் தாய்ப்பாசத்தைக் காட்டும் கைப்பிடி. இந்தக் கைப்பிடியில், மனசின் பிடியும் வெளிப்படுகிறது. அதாவது, தன் தாயின் மீதான நம்பிக்கை. பிடிப்பு. பற்று எல்லாம்தான்!
இப்படித்தான் உறவு முறைகளின் மீதான பிடிப்பும்!

கணவன் மனைவியிடையேயான பிடி இப்படி இருந்தால், எப்போதும் அங்கே பிரிவுக்கு வழியிருக்காது. காரணம் அது மனசின் மீதான பிடிப்பு.
பொதுவாக தன் பெண் குறித்தான வார்த்தைப் பரிமாறலில் பெற்றோர் சொல்லும் சொல்வழக்கு… “இவளை ஒருத்தன் கையில் பிடித்துக் கொடுத்துட்டா கொஞ்சம் நிம்மதியா இருப்பேன்” என்பது. இந்தக் கைப்பிடித்தல்தான், வாழ்க்கையின் கடைப்பிடித்தல். இது ஒருவருக்கு ஒருவர் மீதான நம்பிக்கையின் பிடிப்பைக் காட்டுவது.
இந்த நம்பிக்கைப் பிடி எப்படி இருக்க வேண்டும் என்றால், ஒருவர் மீது நாம் நம்பிக்கை வைத்துவிட்டால் அந்த நம்பிக்கைக்கு சிதைவு வராமல், சிக்கெனப் பிடித்தல்.
வள்ளுவரின் வாக்கு நினைவுக்கு வரும்.. தேரான் தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறவும் தீரா இடும்பைத் தரும் என்பது…

நட்பும் சரி, காதலும் சரி… இது நம்பிக்கைக்கு உரியது என்று தெளிந்து நட்பை மேற்கொள்ள வேண்டும். பின்னர் அதில் எழும் ஐயமானது, தீர்க்கவியலா துன்பத்தையே தரும்.
தலைவன் மீது தொண்டன் வைக்கும் நம்பிக்கை, ஒரு நிறுவனத்தில் தலைமை மீது அடுத்த நிலையில் உள்ளோர் வைக்கும் நம்பிக்கை எல்லாம் இத்தகையதாக இருந்தால்,
அது நிச்சயம் நலம் பயக்கும்.

நெப்போலியன் இட்ட கட்டளைகளை கண்மூடித்தனமாக அப்படியே ஏற்று, அவன் மீது நம்பிக்கை வைத்து படைகள் சென்றன. வெற்றி கனிந்தது. ரஷ்யா மீதான படை எடுப்புக் காலத்தில் ஒவ்வொருவர் கருத்தாக மாறி மாறிப் புகுந்து, தாமதம் ஏற்பட்டு, சரியான நேரம் தவறி, மழைக்காலத்தில் போய் மாட்டிக் கொண்டதால்… தோல்வியைத் தழுவினான் நெப்போலியன்.

அலெக்ஸாண்டரின் வரலாறும் இதையே சொல்லும். பாரத நாட்டின் மீதான படையெடுப்பு அலெக்ஸாண்டருக்கு கனியாமல் போனதும் இதனால்தான்.
“சுடு’ என்று சொன்னவுடனேயே யாரைச் சுடுகிறோம் என்று பார்க்காமலே சுடுகின்ற படைகள்தாம் நாட்டுக்கு வெற்றியைத் தேடித் தந்திருக்கின்றன. அந்த நேரத்தில் படைகள் பகுத்தறிவை உபயோகிக்கத் தொடங்கினால்… பகுத்தறிவு மிஞ்சும்… நாடு மிஞ்சாது!

இதுவும் ஒரு கண்மூடித்தனமான நம்பிக்கைதான். ஆனால், வெற்றியைத் தரும் நம்பிக்கை.
போர்க்களத்தில் தன் எதிரில் நிற்பவர்கள் எல்லோருமே ஒரு வகையில் உறவினர்கள். பாசமும் நேசமும் மிக்க உறவினர்கள், நண்பர்களை போர்க் களத்தில் எதிர்த்து நின்றபோது, போரில் பெரிதும் தயக்கம் காட்டினான் அர்ஜுனன். அவனைப் பார்த்துக் கண்ணன் சொன்னான்… “போர்’ என்று வந்த பின் உறவினர்கள் என்ற ஆராய்ச்சி வெற்றிக்கு உதவாது’ என்று.
இறுதியில், கண்ணன் மீது கண்மூடித்தனமான நம்பிக்கை வைத்து அர்ஜுனன் காண்டீபத்தைத் தூக்கினான். போரின் முடிவு வெற்றியாகக் கனிந்தது.
இதில் கடவுள் நம்பிக்கை என்ற கருத்துக்குள் புக விரும்பவில்லை. ஆனால், முதலில் சொன்ன தாய் – மகன் உரையாடலின் நம்பிக்கை அடிப்படையில், குரங்குப் பிடியும், பூனைப் பிடியும் உள்ளது என்று கூறியிருந்தேன் அல்லவா..? அதன் உள்ளர்த்தம் என்ன? தெரிந்து கொள்ள வேண்டாமா?

மர்க்கட நியாய, மார்ஜர நியாய என இரு நியாயங்கள் உண்டு. தர்க்க சாஸ்திரம் இதனைக் காட்டும்.
வைணவத்தில் இரு வேறு வழிகளை பெரியவர்கள் காட்டியிருக்கிறார்கள். இவை இரண்டும் இரு வேறு நம்பிக்கைகளின் அடிப்படையில் பிறந்தவை. மேலே சொன்ன தாய் – மகன் உரையாடலைப் போல!
பிடி- யார் பிடிக்கிறார்கள் என்பதுதான் இந்த வித்தியாசத்தை உணர்த்துகின்றது.

குரங்கு மரத்தை விட்டு மரம் தாவிக் கொண்டே இருக்கும். குரங்கு செல்லும் வழியெல்லாம் அதன் குட்டியும் செல்ல வேண்டும். குரங்கு அளவுக்கு அதன் குட்டிக்கு வலு இருக்காது. பாதுகாப்பாய் வளர வேண்டும். என்ன வழி?
அதனால்தான், குரங்குக் குட்டி தனது தாயை இறுகக் கட்டிப்பிடித்துக் கொள்ளும். எவ்வளவு உயரத்தில் இருந்தும் குரங்கு கீழே குதித்தாலோ அல்லது மரம் அல்லது மதில் மேல் தாவி ஏறினாலோ… குரங்குக் குட்டி தாயின் பிடியில் இருந்து கீழே விழுவது மிக மிக அரிதான ஒரு செயலாகவே இருக்கும்.
தமிழில் இறைவன் மீது பக்தி செலுத்தும் பக்தர்களை இவர்களில் ஒரு வகையினராகப் பிரிப்பர். குரங்கைப் போன்ற பக்தர்கள் தாமாகவே சென்று இறைவனை சிக்கெனப் பிடித்துக் கொள்வர். இதை வைத்தே தமிழில் ‘குரங்குப் பிடி’ என்ற சொல்லாட்சி உருவானது.
அடுத்தது பூனை. குட்டி போட்ட பின்னர், தாய்ப் பூனை இடம் விட்டு இடம் போனால், பூனையின் குட்டியை தானே வாயில் கவ்விக் கொண்டு போகும். குட்டிகளோ வெறுமனே இயக்கம் இன்றி சடப் பொருளாய் இருக்கும். அதாவது எல்லாப் பொறுப்புகளையும் தாய்ப் பூனையிடமே விட்டுவிட்டு தாயே பார்த்துக் கொள்ளட்டும் என்று இருந்துவிடும். இது அடுத்த வகை பக்தர்களுக்கு எடுத்துக்காட்டு. அதாவது, தாமே சென்று கடவுளை சிக்கெனப் பிடித்தல், குரங்கைப் போன்ற பக்தர்களின் வகை. தேமே என்று, கடவுள் விட்ட வழியாக கடவுளைச் சரண் அடைந்து இருப்பது பூனையின் வகை!

இது வைணவத்தில் கூறப்படும் பக்தர்களின் வகை விளக்கம் என்றால், சைவத்தில், அப்பர் பெருமான் பக்தர்களை ஏணி என்றும் தோணி என்றும் இரு வகையாகப் பிரிக்கிறார்.
ஏணி- தாமாக மேலே ஏற முயற்சி செய்பவர்களை மேலே ஏற்றி விடும். ஏணியில் ஏறும் நாம்தான் எச்சரிக்கை உணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்.
தோணி என்பதில் – படகில் ஏறிவிட்டால், படகோட்டியே நம்மை இக்கரையில் இருந்து அக்கரைக்குக் கொண்டு செல்லுவான். நாம் வெறுமனே தோணியில் அமர்ந்திருந்தால் போதும். அதாவது இறைவனைச் சரணடைந்து, நீயே என்னை அக்கரைக்குக் கொண்டு செல் என்று பொறுப்பை ஒப்படைத்து விட்டு இருப்பது.
இவை இரண்டுமே நம்பிக்கையின் அடிப்படையிலான இரு வகைகள். இரண்டிலுமே, காத்தலும் காக்கப்படுதலும் உறுதி செய்யப் படுகிறது.

ஆனால்… நம்பிக்கையின்மை என்பது, இதற்கு முற்றிலும் நேர் மாறானது.
நம்பிக்கையின்மையின் முதல் படி, ஒருவர் மீது நாம் கொள்ளும் சந்தேகம், ஐயம் எல்லாம்தான்! இதற்கு மனமே காரணம். மனமே நம் நடத்தையைத் தீர்மானிக்கிறது.
அவநம்பிக்கை என்ற சொல்லும் இதில் உருவானதுதான்!
நம்பிக்கை, அவநம்பிக்கை, மூடநம்பிக்கை என்றெல்லாம் சொல்லும்போது… நம்பிக்கையைத் தகர்த்தல் எனும் சொல்லுக்கு நாம் பொதுவில் கையாள்வது – நம்பிக்கைத் துரோகம் என்பது.
இந்த ஒரு செயலால், எத்தனையோ வெற்றிகள் பறிக்கப் பட்டிருக்கின்றன. நம் வரலாற்றில் திருப்பிப் பார்த்தால்… உடன் இருந்து பாதகம் செய்யும் நம்பிக்கைத் துரோகிகளால்தான் பல மன்னர்கள் எதிராளியிடம் தோற்று, தங்கள் மணி முடிகளை இழந்திருக்கிறார்கள்.

இதை வைத்தே தமிழ் இலக்கியங்கள், நம்பிக்கைத் துரோகத்தை ஒரு பொருளாகக் கொண்டு பல பாடல்களில் பேசுகின்றன.
திருக்குறளில் வள்ளுவர் ஓர் அதிகாரத்தையே வைத்தார். அகமும் புறமும் நம்பிக்கை இன்மையையும் நம்பிக்கைத் துரோகத்தையும் பல இடங்களில் பேசுகின்றன.

தலைவன் – தலைவி மீதான காதல் அவ நம்பிக்கை, அரசன், நட்பு மீதான நம்பிக்கை துரோகம் என!
ஆற்றில் செல்லும்போது தோணியில் ஒரே ஒரு ஓட்டை விழுந்தால்… தோணியில் உள்ள அனைவருமே நட்டாற்றில் மூழ்கி நல்லுயிரை இழக்க நேரும்.
ஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைப்பவர் என்று ஒரு சொலவடை உண்டு. அதனை ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்தாற்போல் எனக் கொள்ளலாம்.
இந்தப் பழமொழியை அமைத்து ஒரு அருமையான பாடலை பழமொழி நானூறு(136) காட்டுகிறது.
எயப்புழி வைப்போம் எனப்போற்றப் பட்டவர்
உற்றுழி ஒன்றுக் குதவலர் பைத்தொடீஇ
அச்சிடை யிட்டுத் திரியின் அதுவன்றோ

மச்சேற்றி ஏணி களைவு.
வளையல் அணிந்த பெண்ணே! நமக்கு தளர்வு உண்டாகும் காலத்தில், பெரிய செல்வத்தைப் போன்று கைகொடுத்து உதவுவர் என நினைத்து நம்மால் விரும்பி நட்பு கொள்ளப் பட்டவர், நமக்கு ஒரு துன்பம் வந்த போது, சிறிதும் உதவாதவர் ஆகி, அச்சம் காரணமாக நமக்கு உதவாமல் போனால், அது ஒருவனை மச்சின் மீது ஏற்றி விட்டு ஏணியை எடுத்துவிடுகிற செயல் ஆகும் – என்பது இதன் பொருள். இதன் பழமொழி – மச்சு ஏற்றி ஏணி களைவு.
இதைப் போல் இன்னொரு பாடலில் பேதையாருடன் கொள்ளும் நட்பு குறித்து பழமொழி நானூறு (138) பேசுகிறது.
இடையீ டுடையார் இவரவரோ டென்று
தலையாயார் ஆராய்ந்தும் காணார் – கடையாயர்
முன்னின்று கூறும் குறளை தெரிதலால்
பின்இன்னா பேதையார் நட்பு.
தம் நண்பர் மீது பிறர் கோள் சொன்னால், கோள் கூறும் அந்த நபர், நண்பருடன் பகைமை கொண்டவர் என்பதை அறிந்து கொண்டு, அவர் கூறியவற்றை ஆராய்ந்து, நண்பர் மீது குற்றம் காணமாட்டார். அவரே தலைசிறந்தவர். மாறாக, தம் நண்பர் மீது மற்றவர் வந்து கூறும் கோள் சொற்களை உண்மையாகவே எண்ணி, நண்பர் மீது பகைமை கொள்பவர் கீழானவரே. எனவே, பேதையாரின் நட்பு, பின்னர் நமக்குத் துன்பம் தருவதாகவே அமையும்.
இந்தப் பாடலில், பின் இன்னா பேதையார் நட்பு என்பது பழமொழியாக வந்து அறிவுரை காட்டும்.
இப்போது, நம்பிக்கை, நம்பிக்கையின்மை, நம்பிக்கைத் துரோகம் இவற்றுக்கிடையேயான வேற்றுமையை உணர்ந்து நட்புக் கொள்தல், நலம் சார்ந்த வாழ்க்கைக்கான நல்வழி!செங்கோட்டை ஸ்ரீராம்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21275

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum