தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ஜலக்…ஜலக்….! – ஒரு பக்க கதை
by rammalar

» கந்தசாமிக்கு மட்டுமா…(ஒரு பக்க கதை)
by rammalar

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by rammalar

» இக்கரை அக்கரை - ஒரு பக்க கதை
by rammalar

» நன்றி கெட்ட நாய்கள் ஜாக்கிரதை.!
by rammalar

» மனைவியிடம் மறு கன்னத்தையும்காட்டுவேன்…!!
by rammalar

» சரி, வந்ததும். கதவை தலையால தட்டு..!
by rammalar

» மிஸ்…மிஸ் இண்டியா…!
by rammalar

» பத்தே விநாடியில் பளிச் முகம்…!
by rammalar

» பளீர் சிரிப்பு
by rammalar

» செய்திகள் என்ன சொல்லுது?
by ந.கணேசன்

» பொறுமை… நம்பிக்கை!
by rammalar

» மாற வேண்டிய மனங்கள்!- சிறுகதை
by rammalar

» கூழாங்கற்கள்...!!
by ந.கணேசன்

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன்

» மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar

» ஆல்ஃப்ரெட் நோபல்
by rammalar

» உருப்படுவியா நீ?- ஒரு பக்க கதை
by rammalar

» நீயெல்லாம் அம்மாவா? - ஒரு பக்க கதை
by rammalar

» நூலைப் போல - ஒரு பக்க கதை
by rammalar

» தட்சிணை வை - ஒரு பக்க கதை
by rammalar

» என்ன சாப்பிடறீங்க - ஒரு பக்க கதை
by rammalar

» தனி பெட்ரூம் - ஒரு பக்க கதை
by rammalar

» உடலில் வளமை உடையில் வறுமை
by rammalar

» மூத்தோர் சொல் அமிர்தம்
by rammalar

» ஹைகூ -பொன்.சுதா
by rammalar

» அவர் அப்படித்தான் – ஒரு பக்க கதை
by rammalar

» எழுத்துலகின் மன்னன் சிட்னி ஷெல்டன்
by rammalar

» மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும்
by rammalar

» எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன…
by rammalar

» அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது.,,!
by rammalar

» பொன்மொழிகள் –
by rammalar

» தத்துவ ஞானிகள் சொன்னவை…!
by rammalar

» கொஞ்சம் சிரிங்க...!!
by ந.கணேசன்

» புத்தகத்தால் வந்த புகழ்
by rammalar

» ஆட்டோமேட்டிக் டூத்பிரஷ்.
by ந.கணேசன்

» தனியாக வளர்ந்த மரம் – கவிதை
by rammalar

» அழகும், ஆபத்தும்! – கவிதை
by rammalar

» பெருமிதம் – கவிதை
by rammalar

» பொருளுடைமை
by rammalar

Top posting users this week
rammalar
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சித்தர் பெருமக்களை அறிவோம்...#7 இடைக்காட்டுச் சித்தர்

View previous topic View next topic Go down

சித்தர் பெருமக்களை அறிவோம்...#7 இடைக்காட்டுச் சித்தர்

Post by செந்தில் on Mon Oct 05, 2015 10:21 am

இடைக்காட்டுச் சித்தர்


இடைக்காட்டுச் சித்தர் தமிழ்நாட்டுச் சித்தர்களில் ஒருவர். இவர் இடைக்காடு என்றவூரில் வாழ்ந்தவர். இடையர் குடியிலே பிறந்தவர். இதனால் இடைக்காடுச் சித்தர் எனப் பெயர் பெற்றார். இடைக்காடு - முல்லை நிலம். இங்கு ஆடு மாடு மேய்ப்பவர் - இடையர் - கோனார் எனப்படுவர். இக்கோனாரையும் ஆடுமாடுகளையும், முன்னிறுத்தி பாடியதால் இப்பெயர் பெற்றார் என்பர். பதினெண் சித்தர் வகைக்குள் இவரும் அடங்குவார்.
இவரது வரலாறு துணியப்படவில்லை. இவர் கொங்கணர் என்பாரின் சீடர் என்றும் சித்தர்கள் காலம் எனப்படும் கிபி 10-15 ஆம் நூற்றாண்டினர் என்றும் கூறுகின்றனர். இவரது பாடல்கள் இடைக்காட்டுச் சித்தர் பாடல் என்ற நூலிலே இடம்பெறுகின்றன.
இவர் ஆடுமாடுகள் மேய்த்துக் கொண்டிருக்கும் போது இவரிடம் சித்தர் ஒருவர் வந்து பால் கேட்க, இவர் பால் கறந்து கொடுக்கப், பருகிய சித்தர் மனமகிழ்ந்து, இவர் அனைத்து சித்துக்களும் அடையும்படி செய்து சென்றதனால் இவர் சித்தர் ஆனார் என்பர்.
ஒருமுறை நாட்டில் கொடிய பஞ்சம் ஏற்பட்டபோது இவர் உணவின்றித் தவித்த ஆடுமாடுகளைக் காப்பாற்றியதோடு, மழை பெய்வித்துப் பஞ்சத்ததைப் போக்கினார் என்றும் கதை வழங்குகிறது.
இடைக்காட்டுச் சித்தர் பாடல்
இவரது பாடல் ஒன்று :
மனம் என்றும் மாடு அடங்கின்
தாண்டவக் கோனே! முத்தி
வாய்த்தனென்று எண்ணேடா
தாண்டவக் கோனே!
மனம் என்பது கட்டுக் கடங்காத ஒரு முரட்டு மாடு, அது நமது கட்டுக்குள் அடங்குமானால் விடுதலை கிடைத்து வெற்றியும் அடையலாம் என்று கூறுகிறார்.
நன்றி -http://nammatamilagam.blogspot.in

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: சித்தர் பெருமக்களை அறிவோம்...#7 இடைக்காட்டுச் சித்தர்

Post by முரளிராஜா on Tue Oct 06, 2015 9:27 am

இடைக்காட்டுச் சித்தர் பற்றிய விவரம் தந்தமைக்கு நன்றி செந்தில்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum