தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பில்லி சூன்யம் உண்மையா ?

View previous topic View next topic Go down

பில்லி சூன்யம் உண்மையா ?

Post by செந்தில் on Mon Aug 31, 2015 4:29 pm

பில்லி சூன்யம் உண்மையா ?
என் உறவினர் பையன் பி.ஈ. படிக்கிறான். அவன் வீட்டுக்குப் போய் சில நாள் தங்க நேர்ந்தது. அப்போது ஒரு பிரச்சினை எழுப்பினான். அன்றைய இரண்டு நாள் முன்பு தெருவில் நண்பனுடன் நடந்துச் செல்லும் போது சாலையில் இருந்த திருஷ்டியைத் தாண்டி விட்டான். அதை அவன் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. கூட வந்த நண்பன் 'இதில் ஏதாவது வில்லங்கம் இருக்கப் போகிறது ..உடனே ஜோசியரைப் பார்த்து விசாரிக்கவும்' என்று கூறிவிட்டான். கல் வீழ்ந்து கலங்கி விட்டது குளம்.
கூடவே தனக்குத் தெரிந்த ஜோசியரையும் சிபாரிசு செய்துவிட்டான் நண்பன். (உயிர் கெடுப்பான் தோழன் போலும்). அவ்வளவுதான்.. இந்தப் பையனுக்கு தூக்கம் கெட்டது. ஜோசியரைப் பார்த்து விவரம் கேட்க துடித்துக் கொண்டிருந்தான். தன் அம்மாவைத் தினமும் தொல்லை செய்தான்.
விவரம் எனக்கு வந்தது. 'திருஷ்டி தாண்டுவது எல்லாம் சாதாரண விடயம். இதற்காக ஜோசியரைப் பார்க்க வேண்டாம். வியாபாரத்துக்காக ஏடாகூடமாக சொல்லி இன்னும் பீதி அடையச் செய்துவிடுவார். நடந்ததை என்னிடம் விவரித்தால் நானே மனப் பிரச்சினையை சரி செய்கிறேன்' என்றேன். அதற்காக ஓமியோபதி மருந்தையும் தருகிறேன் எல்லாம் சரியாகி விடும் என்று கூட சொல்லிப் பார்த்தேன். கேட்க வில்லை.
அம்மாவும் பிள்ளையும் ஜோசியரைப் பார்க்கச் சென்றனர். அந்த ஆசாமி இந்தப் பையனைப் பார்த்து,'உனக்கு பில்லி சூன்யம் வைத்துவிட்டார்கள்' என்று கூறி விட்டார். அதுமட்டும் அல்லாமல்,'உனக்குப் பேய் பிடித்து இருக்கிறது' என்று பதற வைத்து விட்டார். கேட்கவா வேண்டும்..பரிகாரம் சொல்லி விட்டார்.
என் பேச்சைக் கேட்கவில்லை. ஜோசியர் பேச்சை நம்பி விட்டனர். இத்தனைக்குக் பையன் எப்போதும் போல இயல்பாகத்தான் நடந்துக் கொள்கிறான். ஜோசியர் சொன்னது பொய் என்று அவர்கள் அறிவுக்குத் தெரிகிறது. ஆனால், அவர்களின் மனம் நம்பவில்லை. இதுதான் அவர்களின் தற்போதைய நிலை.
உண்மையில் ஜோசியர் சொன்னதில் லாகிக் இருக்கிறதா? யாருக்கோ திருஷ்டி / சூன்யம் வைக்க, இந்தப் பையனுக்கு எப்படி பேய் பிடிக்கும்? அப்பக்கம் ஒரு நாளைக்கு ஆயிரம் ஆட்கள் நடமாடுவார். (நடந்தது சென்னையில்..). அவர்களில் 100 பேராவது அதைத் தாண்டி இருப்பர். அவர்கள் அனைவருக்கும் பேய் பிடித்து விடுமா? ஒரு பேய் இத்தனைப் பேரை எப்படிப் பிடிக்கும்? அந்த இடம் நெருப்பா? கடப்பவர்கள் அனைவரையும் சுட்டெரிக்க?
இவ்வளவு அபத்தங்கள் இருந்தாலும் மெத்த படித்தோரும் இதை நம்புவது ஏன்?. காரணம், அறிவு பலத்தை விட மனம் பலவீனமாக இருப்பதுதான். பலவீனமான மனத்தை பில்லி சூன்யம் தாமாகவே தீய விளைவுகளை ஏற்படுத்தும். பில்லி சூன்யம் எல்லாம் வெறும் நம்பிக்கை சார்ந்தது. அது கெட்டது செய்யும் என்று நம்பினால் நிச்சியம் கெட்டது செய்யும்.இந்த விளைவை செய்வது வெளியே இருக்கின்ற நபரோ, திருஷ்டி பொருளோ அல்ல. உள்ளிருக்கும் எண்ணம். . பலவீனமான எண்ணம்.
உளவியலில் parapsychology என்று ஒரு பிரிவு உள்ளது. இது மாந்தரீகம், ஏவல், பில்லி சூன்யம், ஆகியவற்றை ஆராய்வது.
அந்த உளவியல்படி, மேற்கூறியவை black magic வகைக்கு உட்பட்டது. சூன்யம் எல்லாம் நடக்குமா என்றால் ஒரு விதத்தில் நடக்கும். எப்படி?
சூன்யம் என்பது ஒருவர் எண்ணத்தைத் தமது கட்டுப்பாடுக்குள் வரவைப்பது. ஹிப்னாடிசம்(hypnotism) கேள்வி பட்டிருப்பீர்கள். தமது எண்ண வோட்டத்துக்கு ஏற்ப ஆட்டிப் படைக்கும் மனக்கலை ஆகும். இங்கே, ஆட்டிவைப்பவன் மனம் வலிமையாக இருக்க வேண்டும். ஆட்டிவைக்கப் படுபவன் மன பலவீனம் கொண்டவனாக இருக்க வேண்டும். அதாவது, தம்மை முழுவதும் அர்பணித்து விட வேண்டும். சரணாகதி ஆக வேண்டும். அப்படி நடந்தால் தான் ஹிப்னாடிசமே ஈடேறும். மனோசக்தி கொண்டவனை ஒருபோதும் ஹிப்னாடிசம் செய்ய முடியாது.
சிலரிடம் இயல்பிலேயே மெஸ்மெரிச ஆற்றல் கொண்டவர்களாக இருப்பர். இதைக் கொண்டு படியாதவரையும் படிய வைத்து விடுவர். இந்த ஆற்றலைக் கொண்டு பறவை, விலங்குகளையும் வசியம் செய்ய முடியும். ஒரு பாம்பை வசிய வைத்து முத்தம் கொடுத்த இளைஞர் ஒருவரை வலைதளத்தில் பார்த்திருக்கிறேன். எனவே, மனோசக்தி தான் இதில் ஊடாடுகிறது.
சூன்யத்தில் பாதிக்கப் படுவோர் மனோ சக்தி அற்றவர்களாகவே இருக்கின்றனர். அதனால்தான் இவர்கள் எளிதில் வசியத்துக்கு ஆளாகின்றனர். என் உறவினர் பையன் இவ்வகை சேர்ந்தவன். நம்மில் பலர் அவனைப் போல்தான் வாழ்ந்து வருகின்றனர். காரணம், பழைய நம்பிக்கை. காலங்காலமாக வம்சாவளியில் இத்தகு நம்பிக்கை மரபணு வழியாகக் கடத்தப் பட்டு வருவதால், அந்நம்பிக்கை வழியில் சூன்யக் காரர்கள் வசியம் செய்கின்றனர்.
சரி, இதிலிருந்து விடுபட என்ன வழி? ஒரே ஒரு எளிமையான வழி : சூன்யத்தை ஒரு போதும் நம்பக் கூடாது. அப்படி நம்பாமல் இருந்தால் உங்களுள் இருக்கின்ற 'பழைய நம்பிக்கை' வலுவிழக்கும். வசியத்திலிருந்து விடுபடலாம். யாரும் உங்களை ஆட்கொள்ள முடியாது.
இறுதியாக ஒரு செய்தி.
பாம்பு கடித்துச் செத்தவர்களை விட 'பாம்பு கடித்தால் சாவு உறுதி' என்று நம்புவோரே மிகுதியாகச் சாகின்றனர்.
!
எல்லாம் நம்பிக்கை !
நன்றி -முகநூல்

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: பில்லி சூன்யம் உண்மையா ?

Post by முரளிராஜா on Mon Aug 31, 2015 4:29 pm

இந்த விஷயத்தை நம்பவும் முடியலை நம்பாம இருக்கவும் முடியலை
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: பில்லி சூன்யம் உண்மையா ?

Post by kanmani singh on Tue Sep 01, 2015 11:22 am

இதெல்லாம் வெறும் மூட நம்பிக்கை!

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

Re: பில்லி சூன்யம் உண்மையா ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum