தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» குழந்தைகளும் பென்சில்களும் – கவிதை
by rammalar

» அமுதம்!
by rammalar

» பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது?
by rammalar

» கோபுரமான குளம்…!
by rammalar

» வாழ்க்கையை மேம்படுத்த உதவும் நற்சிந்தனைகள் !!!
by rammalar

» மற்றவர் வெற்றிகளையும் பாராட்டப் பழகுங்கள். –
by rammalar

» English alphabet  are so intelligently arranged
by rammalar

» ஞாபக மறதி
by rammalar

» பெருமை!
by rammalar

» பெர்னார்ட்ஷா ஏன் தாடி வளர்த்தார்,,,?
by rammalar

» அமுதம்!
by rammalar

» சின்னத்தை மாற்றும் தூர்தர்ஷன்: சிறந்த வடிவமைப்பாளருக்கு ரூ.1 லட்சம் பரிசு
by rammalar

» பிக்பாஸ் பார்ப்பதால் ஏற்படப் போகும் நன்மைகள்.
by rammalar

» ஜலக்…ஜலக்….! – ஒரு பக்க கதை
by rammalar

» கந்தசாமிக்கு மட்டுமா…(ஒரு பக்க கதை)
by rammalar

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by rammalar

» இக்கரை அக்கரை - ஒரு பக்க கதை
by rammalar

» நன்றி கெட்ட நாய்கள் ஜாக்கிரதை.!
by rammalar

» மனைவியிடம் மறு கன்னத்தையும்காட்டுவேன்…!!
by rammalar

» சரி, வந்ததும். கதவை தலையால தட்டு..!
by rammalar

» மிஸ்…மிஸ் இண்டியா…!
by rammalar

» பத்தே விநாடியில் பளிச் முகம்…!
by rammalar

» பளீர் சிரிப்பு
by rammalar

» செய்திகள் என்ன சொல்லுது?
by ந.கணேசன்

» பொறுமை… நம்பிக்கை!
by rammalar

» மாற வேண்டிய மனங்கள்!- சிறுகதை
by rammalar

» கூழாங்கற்கள்...!!
by ந.கணேசன்

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன்

» மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar

» ஆல்ஃப்ரெட் நோபல்
by rammalar

» உருப்படுவியா நீ?- ஒரு பக்க கதை
by rammalar

» நீயெல்லாம் அம்மாவா? - ஒரு பக்க கதை
by rammalar

» நூலைப் போல - ஒரு பக்க கதை
by rammalar

» தட்சிணை வை - ஒரு பக்க கதை
by rammalar

» என்ன சாப்பிடறீங்க - ஒரு பக்க கதை
by rammalar

» தனி பெட்ரூம் - ஒரு பக்க கதை
by rammalar

» உடலில் வளமை உடையில் வறுமை
by rammalar

» மூத்தோர் சொல் அமிர்தம்
by rammalar

» ஹைகூ -பொன்.சுதா
by rammalar

» அவர் அப்படித்தான் – ஒரு பக்க கதை
by rammalar

Top posting users this week
rammalar
 
ந.கணேசன்
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சித்தர்களை தெரிந்துகொள்வோம்

View previous topic View next topic Go down

சித்தர்களை தெரிந்துகொள்வோம்

Post by பூ.சசிகுமார் on Fri Nov 23, 2012 12:00 am

“என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யு மாறே..”

என்பது திருமூலரின் பெருமிதம் மிகுந்த பிரகடனம்.

சித்தர்கள் என்றால், ஏதோ மருத்துவத்தையும் ஆன்மீகத்தையும் மட்டுமே ஆய்ந்தும் தெளிந்தும் உலகுக்கு அளித்தவர்கள் என்ற கருத்துதான் பரவலாக இருந்து வருகிறது. முற்றிலும் தவறான பதிவு என்றுதான் அதைச் சொல்ல வேண்டும். மொழி இல்லாமல் எது நிலைக்கும்? தமிழின் முதல் இலக்கண நூலைத் தந்தவரே அகத்தியர்தான் என்பதை ஆன்றோரும் சான்றோரும் ஆணித் தரமாக சொல்லுகிறார்கள். ஞானமும் தமிழும் இணைந்த போதுதான் சித்தர்களின் தத்துவம் செழுமை பெற்றது.

மொழியை இழந்த சமூகம் வரலாற்றையும் இழந்துவிடும். மொழி என்ற வேர்கள் இல்லாமல் சமூகவிருட்சம் தழைக்கவோ, செழிக்கவோ முடியாது. முக்காலத்தையும் அறிந்த சித்தர்களுக்கு முத்தமிழின் பெருமை தெரியாமலா போய்விடும்!

தமிழைப் பாடுவதற்காகவே என்னை இறைவன் படைத்திருக்கிறான் என்று புளங்காகிதம் அடைந்திருக்கும் திருமூலர் தமிழின் பெருமையும் இறைவனின் அருமையும் இரண்டறக் கலந்திருப்பது குறித்து மனம் குழைந்து கூறி இருப்பதைக் கவனியுங்கள்...

“முத்தியை ஞானத்தை முத்தமிழ் ஓசையை
எத்தனை காலமும் ஏத்தவர் ஈசனை
நெய்தலைப் பால்போல் நிமலனும் அங்குளன்
அத்தகு சோதியது விரும்பாரன்றே”
(திருமந்திரம்)அதனால்தான்
“அருமலர் மொழியுஞான அமுதர்த
செந்தமிழைச் சொல்வாம்”

என்கின்றார் ஞானவெட்டியான்.

ஆம்... தமிழை அவர் வெறும் மொழியாக மட்டும் பார்க்கவில்லை. ஞானாமிர்தமாகப் பார்க்கிறார்.
அதுமட்டுமல்ல.. சித்தர்களின் சிறப்பை பற்றி சொல்ல வரும்போது,

“பண்டுடன் பழகி பைந் தமிழுணர்ந்து
தென்தரை மீதிற் றெளிந்தவர் சித்தரே”

என்றும் பாராட்டுகின்றார். தங்களின் தொன்மமான பெருமைகளில் தோய்ந்தது மட்டுமல்லாமல், தமிழையும் உணர்ந்ததாலேயே சித்தர்கள் சிறப்புப் பெற்றார்கள் என்கிறார்.

“பொதிகை மேவு மகத்தீர ராலெனது
போதத் தமிழ் வாக்கியம்”

என கேட்பவரை கிறுகிறுக்க வைக்கும் தன்தமிழ் ஆற்றல், பொதிகையில் வாழும் அகத்தியன் தந்த கொடை என்று போற்றுகிறார்.

அகத்தியர் தமிழைப் பற்றி என்ன சொல்லுகிறார்?
“சிந்தையுறு ஞானத் தெளியவுரை பாடுதற்கு
வந்தபஞ்ச பூதத்தின் வாழ்க்கையே - செந்தமிழ்
நூல் காவியந்தானாயிரத்தில் கல்லா யரு நூலும்
தேவியென்னும் பூரணியே சீர்”
(அகத்தியர் ஞானம் 100)

என்று தமிழை பஞ்ச பூதங்களின் சேர்க்கையாகவே சித்தரிக்கின்றார்.

பட்டினத்தாரே, மனித வாழ்வின் முழுமையான தத்துவத்தையும், தமிழின் முச்சங்கங்களின் பெயராலேயே விளக்குகிறார்.

“முதற்சங்கம் அமுதூட்டும் மொய்குழலார்
இசை நடுச்சங்கம் நல்விலங்கு பூட்டும் -கடைச்
சங்கம் இம்போதது ஊதும் அம்மட்டோ
நாம் பூமி வாழ்ந்த நலம்”

இப்படி மூலிகையைச் சொன்னாலும், முக்தி பற்றிச் சொன்னாலும், முத்தமிழில் குழைத்தே சித்தர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

சித்தர்கள் சித்தத் தெளிவு மட்டுமல்ல, செந்தமிழ்த் தெளிவும் கொண்டவர்கள் என்பதை இனியேனும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

நன்றி : தமிழ் தந்த சித்தர்கள்
avatar
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

Re: சித்தர்களை தெரிந்துகொள்வோம்

Post by ஸ்ரீராம் on Fri Nov 23, 2012 12:25 am

அருமை அருமை பகிர்வுக்கு நன்றி தம்பி

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 37565 | பதிவுகள்: 230739  உறுப்பினர்கள்: 3506 | புதிய உறுப்பினர்: veera211

[You must be registered and logged in to see this link.]


avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: சித்தர்களை தெரிந்துகொள்வோம்

Post by பூ.சசிகுமார் on Fri Nov 23, 2012 5:28 pm

நன்றி அண்ணா உங்கள் ஆதரவுக்கு நண்பேன்டா
avatar
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

Re: சித்தர்களை தெரிந்துகொள்வோம்

Post by பித்தன் on Fri Nov 23, 2012 9:39 pm

“முதற்சங்கம் அமுதூட்டும் மொய்குழலார்
இசை நடுச்சங்கம் நல்விலங்கு பூட்டும் -கடைச்
சங்கம் இம்போதது ஊதும் அம்மட்டோ
நாம் பூமி வாழ்ந்த நலம்”

பித்தனின் அன்பிற்குரியவர்களே !
இந்த பதிவில் தமிழின் பெருமை கண்டு வியக்கிறேன், சித்தர்களின் அருள் உணர்ந்து திளைக்கிறேன்.
இருந்த போதிலும் மேற்கூறிய பாடலில், பட்டினத்து அடிகள் வழங்கும் செய்தி,
முதற்சங்கம் அமுதூட்டும், நடுச்சங்கம் நல்விலங்கு பூட்டும்,கடைச்சங்கம் ஊதும் அம்மட்டோ நாம் பூமி வாழ்ந்த நலம்.
தமிழனின் வாழ்வில் 3 நிலையில் சங்கு இடம்பெறுகிறது.
1 . பிறந்த குழந்தைக்கு வலம்புரிச்சங்கில் பால் புகட்டுவார்கள்.
2 . திருமணத்தின் போது இசையுடன் கூடிய சங்கொலி இசைப்பர்.( இன்றும் சில செட்டியார் சமூக மரபில் பெண்ணுக்கு சங்கு சீர் வரிசையுடன் வழங்கி வருகின்றனர்).
3 . பின்னர் இறுதியாக மரணத்தின் போது ஊதப்படும் சங்கு.
அதில் பட்டினத்து அடிகள் மூன்றே சங்கொலியில் நம் வாழ்வு நிறைவு பெறுதலையும், அதிலும் இறுதி சங்கு இறந்தவர் கேட்பதில்லை.
மேலும், ஏன் சங்கினை பட்டினத்து அடிகள் மானுட வாழ்வினை ஒப்பீடு செய்ய
எடுத்துக்கொண்டார்?
உலகின் நிரந்தர சப்தங்கள் என, 3 இருப்பதாக ஆன்மிகம் (வேதம்) சொல்கிறது.
அவையாவன,


ம்
இவற்றின் தொகுப்புதான் ஓம் என்பதே,
(இந்த மூன்று சப்தங்களை நாவின் துணை இன்றி செய்ய இயலும். மேலும் இதை
பிரபஞ்ச சப்தங்கள் என நாசா மையம் அறிவித்து இருக்கிறது.)
ஆக இதுவே ஆதர சப்தங்கள். அனைத்து ஜனனமும் ஓம் எனும் பிரணவத்தில்
துவங்கி முடிகிறது என்பதை உணர்த்து வதற்காகவே பட்டினத்து அடிகள்
சங்கினை மானுட வாழ்வுடன் இணைத்து உள்ளார்.
எதில் இருந்து இந்த உயிர் வந்ததோ, மீண்டும் அதுவாகவே மாறுகிறது என்ற
தத்துவ பின்னணி கொண்ட பாடல் அது.

சித்தர்களின் பாடல்களை நீங்கள் பார்த்தல் ஒரு அர்த்தம் பெறலாம், பகுத்தால்
பல அர்த்தம் பெறலாம். தொகுத்து உணர்ந்தால் உண்மை நிலை
உணரலாம்.
எனினும் சித்தர்களின் தமிழ் பங்களிப்பினை பிரபஞ்சம் உள்ளவரை புகழலாம்.
இதன் நோக்கம் "என் உயிர் நீயே -அமர்க்களம் பதிவாளர்" தவறாக புரிந்து கொண்டார் என சொல்வதில்லை.மாறாக மறை பொருளை தெரிந்து விட்டதால் ,
அதை மறைக்காமல் மனதில் பட்டதை சொல்லிவிடவேண்டும் என்ற எண்ணம் தான். இருப்பினும் தேடல் துவக்கம் இப்படித்தான் இருக்கும். பித்தன் பலரின் தேடலுக்கு வழி சொல்லும் வழிப்போக்கன் தான். மேலும் இது போன்று ஒரு பதிவிட்டு பித்தன் மனதில் பட்டதை சொல்லும் வாய்ப்பை அந்த ஈசன் தந்ததாகவே உணர்கிறான்.

avatar
பித்தன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 584

Back to top Go down

Re: சித்தர்களை தெரிந்துகொள்வோம்

Post by ஸ்ரீராம் on Fri Nov 23, 2012 9:45 pm

ரொம்ப சரியா சொன்னிங்க பித்தன்.

18 சித்தர்களை பற்றி படிக்க ஆசைதான்.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 37565 | பதிவுகள்: 230739  உறுப்பினர்கள்: 3506 | புதிய உறுப்பினர்: veera211

[You must be registered and logged in to see this link.]


avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: சித்தர்களை தெரிந்துகொள்வோம்

Post by பித்தன் on Sat Nov 24, 2012 9:56 am

நக்கல்ஆசை துறந்தவர்களை தெரிந்து கொள்ள ஆசை ...... நக்கல் நக்கல் நக்கல்
avatar
பித்தன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 584

Back to top Go down

Re: சித்தர்களை தெரிந்துகொள்வோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum