தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by rammalar

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar

» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
by rammalar

» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
by rammalar

» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
by rammalar

» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
by rammalar

» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
by rammalar

» 'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
by rammalar

» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
by rammalar

» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
by rammalar

» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
by rammalar

» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
by rammalar

» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
by rammalar

» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by rammalar

» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by rammalar

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by rammalar

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by rammalar

» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by rammalar

» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by rammalar

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...!!
by rammalar

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by rammalar

» பாதை எங்கு போகிறது...?
by rammalar

» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை
by rammalar

» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
by rammalar

» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி
by rammalar

» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by rammalar

Top posting users this week
rammalar
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இந்தியா என் தாய்த்திரு நாடு!

View previous topic View next topic Go down

இந்தியா என் தாய்த்திரு நாடு!

Post by ரௌத்திரன் on Wed Apr 29, 2015 10:33 am

இந்தியா என் தாய்த்திரு நாடு-இல்லை
இதைவிட எனக்கொரு வெட்கக் கேடு!

வாள்பிடித்த மரபுயென்று
வக்கணையாய்ப் பேசிவிட்டு
வால்பிடித்து வாழுகின்ற
வகையான தத்துவத்தை
நூல்வடித்து வைத்திருக்கும்
நாணமே சிறிதுமில்லா
சீழ்பிடித்த பிணங்களவர்
சூழ்ந்திருக்கும் நாடு!

இந்தியா என் தாய்த்திரு நாடு-இல்லை
இதைவிட எனக்கொரு வெட்கக் கேடு!

சூடு சொரணையெலாம்
சோற்றுக்கு விற்றுவிட்டு
கூடு தனைவளர்க்க
கூனிக் குறுகிநிற்பார்!
நாடு எரிகையிலும்
நெஞ்சில் பதற்றமின்றி
வீடு காத்திருக்கும்
வீரமுளோர் நாடு!

இந்தியா என் தாய்த்திரு நாடு-இல்லை
இதைவிட எனக்கொரு வெட்கக் கேடு!

தாகம் என்றொருவாய்த்
தண்ணீர்க் கேட்டழுவார்
தேகம் துடிப்பதனைத்
தள்ளிநின்று பார்த்துவிட்டுப்
போகுமுயிர் போனபின்னே
பிணத்தை வலம்வந்தே
நீர்க்குடம் உடைக்கும்;ஈர
நெஞ்சமுளோர் நாடு!

இந்தியா என் தாய்த்திரு நாடு-இல்லை
இதைவிட எனக்கொரு வெட்கக் கேடு!

ஈழம் இடுகாடாய்
இனத்தின் சுடுகாடாய்
ஓலம் மிகுத்தாலும்
ஒக்கக் குரலெழுப்பி
காலம் கடத்துகின்ற
கண்கட்டு வித்தைகளின்
ஜாலம் காட்டுகின்ற
அரசதனைக் கேளார்!

இந்தியா என் தாய்த்திரு நாடு-இல்லை
இதைவிட எனக்கொரு வெட்கக் கேடு!

தட்டிக் கேட்பதற்கும்
தலைபோகும் என்றிடுவார்!
எட்டி உதைப்பதற்கும்
எடுப்பர் காலென்பார்!
முட்டிக்கொண் டழுவதற்கும்
மனதில் திடமின்றிப்
பெட்டிப்பாம் பாய்க்கிடக்கும்
பேடிகளின் நாடு!

இந்தியா என் தாய்த்திரு நாடு-இல்லை
இதைவிட எனக்கொரு வெட்கக் கேடு!

தகப்பன் தலையிங்கே
தவிக்கும் உடலெங்கோ!
இடுப்பில் இதையறியா
இளம்பிள்ளை அழுகிறது!
ஒப்பாரி வைப்பாளோ
தாலாட்டுப் படிப்பாளோ
அப்"பாவி" மகள்கதை
ஐயா! நமக்கெதற்கு?
துப்புகெட்ட மக்காள்!நீர்
தூங்கிக் கொண்டிருங்கள்!

இந்தியா என் தாய்த்திரு நாடு-இல்லை
இதைவிட எனக்கொரு வெட்கக் கேடு!

------------ரௌத்திரன்
avatar
ரௌத்திரன்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 129

http://poetrowthiran.blogspot.in/

Back to top Go down

Re: இந்தியா என் தாய்த்திரு நாடு!

Post by kanmani singh on Wed Apr 29, 2015 11:47 am

ஆக்ரோஷமான கவிதை!

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

Re: இந்தியா என் தாய்த்திரு நாடு!

Post by ரௌத்திரன் on Wed Apr 29, 2015 1:45 pm

மிக்க நன்றி! ---------ரௌத்திரன்
avatar
ரௌத்திரன்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 129

http://poetrowthiran.blogspot.in/

Back to top Go down

Re: இந்தியா என் தாய்த்திரு நாடு!

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Apr 29, 2015 7:24 pm

தட்டிக் கேட்பதற்கும்
தலைபோகும் என்றிடுவார்!
எட்டி உதைப்பதற்கும்
எடுப்பர் காலென்பார்!
முட்டிக்கொண் டழுவதற்கும்
மனதில் திடமின்றிப்
பெட்டிப்பாம் பாய்க்கிடக்கும்
பேடிகளின் நாடு!

வேறு வழியில்லை இங்கே தான் நாம் வாழ்ந்தாக வேண்டும்...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: இந்தியா என் தாய்த்திரு நாடு!

Post by ரௌத்திரன் on Wed Apr 29, 2015 8:06 pm

உண்மைதான்...இங்குதான் வாழ்ந்தாக வேண்டும்...அதனால்தான் அத்தனை ஆத்திரம் வருகிறது. நன்றி! ----------ரௌத்திரன்
avatar
ரௌத்திரன்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 129

http://poetrowthiran.blogspot.in/

Back to top Go down

Re: இந்தியா என் தாய்த்திரு நாடு!

Post by thamiliniyan on Wed Apr 29, 2015 8:14 pm

இந்தியா என் தாய்த்திரு நாடு-இல்லை
இதைவிட எனக்கொரு வெட்கக் கேடு!

வலிக்கிறது இந்த வரிகள் ரௌத்திரன் !
தவறாய் எழுதி விட்டீர்களோ என்று தோன்றுகிறது.!
என்ன தான் கேடானாலும்
தாய் நாடல்லவா?
avatar
thamiliniyan
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 504

Back to top Go down

Re: இந்தியா என் தாய்த்திரு நாடு!

Post by ரௌத்திரன் on Wed Apr 29, 2015 8:28 pm

அந்த நேசிப்பு இருப்தனால்தான் இந்தக் கோபம்....என் தாய் நாடு என்பதனால்தான் இத்தனை வலி வருகிறது! இது உரிமையின் பேரில் வருகின்ற கோபமும் சலிப்பும்... நன்றி தோழர்! -----------ரௌத்திரன்
avatar
ரௌத்திரன்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 129

http://poetrowthiran.blogspot.in/

Back to top Go down

Re: இந்தியா என் தாய்த்திரு நாடு!

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Apr 30, 2015 8:19 am

சில கவிஞர்களின் கவிதைகள்

எங்கள் தேசத்தை சுற்றி
யாரோ சிலர்
வேலி அமைத்திருக்கிறார்கள்
கொஞ்ச தூரம் துப்பாக்கி
கொஞ்ச தூரம் பீரங்கி
கொஞ்ச தூரம் அணுகுண்டு என்று
வேலிகள் நீண்டு கிடக்கின்றன.
வேலிகளுக்கு நடுவில்
நாங்கள் படித்துக்கொண்டிருக்கிறோம்
“யாதும் ஊரே யாவரும் கேளீர்”
(முகிலன், இறகுதிர் காலம், ப.75)
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: இந்தியா என் தாய்த்திரு நாடு!

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Apr 30, 2015 8:19 am

குடும்பக் கட்டுப்பாடு
குறித்து விளம்பரப்படுத்தும்
நாட்டில் பிறந்ததால்
உன் பிறப்பு கூட பாரமாகிவிட்டது.
இந்த நாட்டிற்கு! (கனியன் செல்வராஜ், தமிழனும் இந்தியனே!, ப.11)
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: இந்தியா என் தாய்த்திரு நாடு!

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Apr 30, 2015 8:20 am

எனக்கொரு தேசம் இருந்தது
என் இனத்திற்கு மொழி இருந்தது
அதுவும் உன் மொழிதான்.
நேற்றுவரை
பாதங்கள் தேய உலா வரவும்
தரையில் படுத்து உருண்டு புரளவும்
ஓடிப்பிடித்து விளையாட
வெட்ட வெளிப்பரப்பும்
தாகம் தீரக் குடிக்க
நறுநீர்ச் சுனைகளும்
உழைத்து வீடு திரும்ப
மலைத் தோட்டத்தில் பிழைப்புமென…
எல்லாம் எல்லாமென சுதந்திரமாய்
எனக்கானதாய் இருந்தது. (விழி.பா. இதயவேந்தன், முரண்தடை, ப.84)
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: இந்தியா என் தாய்த்திரு நாடு!

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Apr 30, 2015 8:20 am

அகதிகளாக
அடைபட்டுக் கிடக்கிறோம்
அவதிகளால்
அல்லல்பட்டு இறக்கிறோம்
யுத்தத்தின் ஒலிகளில்
சிரிப்பொலி மறந்தோம்
வாழ்வினில் பொலிவிழந்தோம்
மகிழ்வானின் வழி இழந்தோம்
(மு.ஜ. மன்சூர் அஹ்மத், காற்றைப் பகிர்தல், ப.23)
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: இந்தியா என் தாய்த்திரு நாடு!

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Apr 30, 2015 8:20 am

தமிழக் கொலைகளுக்கு
முன்னும் பின்னும் திமிரும் உற்சாகத்
தினவேற்றிக் கொள்ள அவர்கள்
உடம்பின்
ஒவ்வொரு திசுவுக்கும் ஒவ்வொரு
தமிழ்ப் பெண் தேவை. (ஈரோடு தமிழன்பன், என் அருமை ஈழமே!, ப.101)
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: இந்தியா என் தாய்த்திரு நாடு!

Post by ரௌத்திரன் on Thu Apr 30, 2015 6:55 pm

அற்புதம் என்று பாராட்டி ரசித்தற்குரிய எழுத்துகள் அல்ல இவை. நெஞ்சிலே பாறையை ஏற்றி கனக்கச் செய்பவை...நன்றி தோழர்! -----------ரௌத்திரன்
avatar
ரௌத்திரன்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 129

http://poetrowthiran.blogspot.in/

Back to top Go down

Re: இந்தியா என் தாய்த்திரு நாடு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum