தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சந்தோஷத்திற்கான 10 மந்திரங்கள் இதோ:

View previous topic View next topic Go down

சந்தோஷத்திற்கான 10 மந்திரங்கள் இதோ:

Post by முழுமுதலோன் on Sat Feb 07, 2015 3:25 pm


1.மற்றவர்கள் விஷயத்தில் அநாவசியமாக தலையிட வேண்டாம்

இதற்குக் காரணம் நம் வழிதான் சிறந்தது என்று நாம் எண்ணுவது; மற்றவர்களின் தனித்தன்மையை உணர மறுப்பது. இதனால் நம் அமைதி குலைகிறது; நமக்கு நாமே ஆபத்துக்களை, எதிரிகளை உருவாக்கி கொள்ளுகிறோம்; நம்மைப்போல் மற்றவருக்கும் சிந்திக்கக்கூடிய திறன் உண்டு; அவர்களது சூழ்நிலைக்கு ஏற்ப அவர்கள் முடிவு எடுப்பார்கள்; அவர்களாகவே வந்து கேட்டால் அன்றி மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம்.

2. மன்னிப்போம் மறப்போம்!

இந்த மனோபாவம் அமைதியான வாழ்க்கைக்கும் உறவுகள் நிலைக்கவும் மிகவும் தேவையான ஒன்று. யாரோ எப்போதோ நம்மை காயப்படுத்தி இருப்பார்கள்; ஒரு முறை நடந்ததை திரும்பத்திரும்ப நினைத்து நம் அமைதியை இழக்க வேண்டாமே! பழைய, ஆறிப்போன புண்களைக் கிளறிவிடுவானேன்? தூக்கம் கெட்டு, இரத்த அழுத்தம் அதிகமாகி, குடல் புண்கள் ஏற்பட்டு நம் ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்ளுவானேன்?

3. பிறரது அங்கீகாரத்தை எதிர்பார்க்காதீர்கள்:

யாருமே யாரையுமே அனாவசியமாக புகழுவதில்லை. நீங்கள் பதவியில் இருக்கும்போது சல்யூட் அடிப்பவர்கள், அதிகாரம் போனவுடன் உங்களையும், நீங்கள் செய்த நல்ல காரியங்களையும் மறந்து விடுவார்கள். இப்படிப்பவர்களிடம் அங்கீகாரத்தை எதிர்பார்த்து ஏன் ஏமாற வேண்டும்? உங்கள் கடமையை பலன் பாராமல் நல்ல மனதுடன் செய்யுங்கள்.

4. பொறாமை வேண்டாம்:

எல்லோருடைய வாழ்க்கையுமே முன்பே எழுதப்பட்ட ஒன்று. நீங்கள் பணக்காரன் ஆகவேண்டும் என்று இருந்தால் கட்டாயம் பணம் உங்களிடம் குவியும்; இல்லை என்றால் இல்லை. உங்களின் அதிருஷ்டம் அல்லது துரதிர்ஷ்டம் இரண்டுக்கும் வேறு யாரும் காரணம் அல்ல. மற்றவர்களுடைய அதிருஷ்டத்தை பார்த்துப் பொறாமை வேண்டவே வேண்டாம். பொறாமைப் படுவதால் எதுவும் மாறப் போவதில்லை; மன அமைதிதான் குலையும்.

5. சூழ்நிலைக்கு ஏற்ப மாறுங்கள்:

குல்லாய்க்குத் தகுந்தவாறு தலையை வெட்டுவதா? தலைக்கு தகுந்தவாறு குல்லாவை வெட்டுவதா? எது விவேகமான செயல்? சூழ்நிலைக்குத் தக்கவாறு உங்களை மாற்றிக் கொள்ளுவதால், பாதகமான சூழல் கூட சாதகமாக மாறும் அதிசயத்தை உணரலாம்.

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: சந்தோஷத்திற்கான 10 மந்திரங்கள் இதோ:

Post by முழுமுதலோன் on Sat Feb 07, 2015 3:26 pm

6. சரிசெய்ய முடியாததை பொறுத்துக் கொள்ளுங்கள்:

நம் அன்றாட வாழ்வில் பல விஷயங்கள் நம் கட்டுப் பாட்டில் இல்லாதவை. இவற்றை பொறுத்துக் கொள்ளுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? கஷ்டங்களை பொறுமையுடன் எதிர்கொள்ளுவதால் மன உறுதியும் எந்தவிதமான சூழ்நிலையிலும் நிதானம் தவறாமல் நடந்து கொள்ளும் பக்குவம் வரும்.

7. உங்கள் எல்லையை தெரிந்து கொள்ளுங்கள்:

எல்லோரையும் திருப்தி படுத்த வேண்டும் என்றோ, என்னால் முடியும் என்று காட்டவோ ஏகப்பட்ட பொறுப்புகளை தலையில் சுமக்காதீர்கள். ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு: Don’t bite more than you can chew என்று. நாம் எல்லோரும் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டிய பழமொழி இது. பொறுப்புக்களை நிறைவேற்றிய பின் இருக்கும் நேரத்தை இறைவனை பிரார்த்திக்கவும், தியானம் செய்யவும், சுயப் பரிசோதனை செய்யவும் பயன் படுத்துங்கள்.

8. தினமும் தியானம் பழகுங்கள்:

தியானம் மன அமைதியைக் கொடுப்பதுடன், பலவிதமான மன உளைச்சல்களிலிருந்தும் நம்மை காக்கிறது. அரை மணி நேரத் தியானம் மீதி இருக்கும் 23 ½ மணி நேரத்திற்கு நம்மை அமைதிப் படுத்தும். சின்னச் சின்ன விஷயங்கள் நம்மை அலை பாய வைக்காது. அரை மணி நேரம் உட்கார முடியுமா? எத்தனை வேலை இருக்கிறது என்று நினைக்காமல் தியானம் செய்யுங்கள்; உங்களது செயல் திறன் தியானத்தினால் பன்மடங்கு அதிகரிக்கும்.

9. மனதை எப்போதும் ஆக்க பூர்வமான வழியில் செலுத்துங்கள்:

மனம் காலியாக இருக்கும் போது தான் வேண்டாத எண்ணங்கள் வந்து குடியிருக்கும். உங்களுக்குப் பிடித்த ஒரு பொழுதுபோக்கை தொடர்ந்து செய்து வாருங்கள். சமூக நற்பணி அல்லது பக்கத்தில் தேவைப் படுபவர்களுக்கு உதவுதல் என்று ஏதாவது செய்து கொண்டே இருங்கள். இதனால் உங்களுக்கு பண வரவு இல்லாமல் போகலாம்; ஆனால் இவையெல்லாம் ஆத்மாவிற்கு நன்மை அளிப்பவை.

10. எந்தக் காரியத்தையும் தள்ளிப் போடாதீர்கள்:

ஒரு காரியத்தை எடுத்தால் உடனே செயல் பாட்டில் இறங்குங்கள். இப்போது செய்வதா, அல்லது பிறகா என்று குழப்பம் வேண்டாம். காலம் பொன்னானது. வீண் செய்யாதீர்கள். ஒரு முறை தோல்வி வந்தால் மனம் உடைய வேண்டாம். உங்கள் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள். முடிந்து போன விஷயத்தை நினைத்து புலம்பாதீர்கள். வருத்தப் படாதீர்கள். நடந்து முடிந்தது முடிந்ததுதான்.

கடந்த காலத்தை மாற்றி எழுத முடியாது; ஆனால் எதிர்காலம் நம் கையில் அதை ஆக்கபூர்வமாக மாற்றலாம்.

மகிழ்ச்சியாக இருப்பது நம் கையில் தான் இருக்கிறது


https://ranjaninarayanan.wordpress.com

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: சந்தோஷத்திற்கான 10 மந்திரங்கள் இதோ:

Post by mohaideen on Sun Feb 08, 2015 10:58 am

அவசியமான பதிவு

நன்றி

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
avatar
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

Re: சந்தோஷத்திற்கான 10 மந்திரங்கள் இதோ:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum