தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பரிதியை உடலை பதம்பார்த்தது விநாயகம் அணியின் தோட்டாக்களா..???

View previous topic View next topic Go down

பரிதியை உடலை பதம்பார்த்தது விநாயகம் அணியின் தோட்டாக்களா..???

Post by Murali on Mon Nov 12, 2012 1:37 pm

பிரான்ஸ் தலைநகர் பாரிசில், விடுதலைப் புலிகளின் தளபதி என அறியப்பட்ட பரிதி நேற்று சுட்டுக்கொல்லப்பட்டார். இலங்கை உளவுத்துறையால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று சில மீடியாக்களில்குறிப்பிடப்பட்டுள்ளது. பரிதியை சுட்டவர்கள் அந்த மீடியா செய்திகளை பார்த்து வியந்திருப்பார்கள். (அல்லது சிரித்திருப்பார்கள்) நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) இரவு பாரிசில் நடைபெற்ற சம்பவம் இது. தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (TCC)அலுவலகத்தைவிட்டு பரிதி வெளிவந்தபோது, இரவு ஆகியிருந்தது. அவர் வருகையை எதிர்பார்த்து அந்தப்பகுதியில் ஸ்கூட்டர் ஒன்றில் இருவர் காத்திருந்தார்கள். பரிதி வெளியே வந்ததும், ஸ்கூட்டரில்இருந்தவர்கள் ஹெல்மெட் அணிந்து கொண்டார்கள். அவர்களது முகங்களை மூடும் வகையிலானஹெல்மெட் அது. ஸ்கூட்டரை ஸ்டாட் செய்து பரிதி இருந்த இடத்தை நோக்கி சென்றார்கள்.துப்பாக்கியால் ஒரு தடவை சுட்டார்கள். அது பரிதியில் படவில்லை.

இதையடுத்து தனது உயிரைக் காப்பாற்ற வீதியில் ஓடத் தொடங்கினார் பரிதி. ஆனால், தப்பியோடும் அவரதுமுயற்சி பலிக்கவில்லை. ஓட ஓட மொத்தம் 4 தடவைகள் சுடப்பட்டு, கீழே விழுந்து, அந்த இடத்தில் உயிரைவிட்டார், அல்லது, வீர மரணம் அடைந்தார். (விரும்பியதை எடுத்துக் கொள்ளலாம்) அவரைச் சுட்டவர்கள், ஸ்கூட்டரில் அங்கிருந்து வேகமாக சென்று மறைந்தனர். வெளிநாடுகளில் விடுதலைப் புலிகள் இயக்கம், நான்கு பிரிவுகளாக செயல்படுகிறது. இதில் இரு பிரிவுகள்பெரியவை, மற்றும் பலம் வாய்ந்தவை. அவற்றில் ஒன்று நார்வேயில் உள்ள நெடியவன் தலைமையிலான பிரிவு.கொல்லப்பட்ட தளபதி பரிதி, அந்தப் பிரிவைச் சேர்ந்தவர்.

விடுதலைப் புலிகள் நெடியவன் அணி, விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு சொத்துக்களை வைத்திருக்கும்அணி. ஒருகாலத்தில் புலிகளின் ஊடகங்கள் என அறியப்பட்டவையும், இவர்களிடம்தான் உள்ளது. அதுதான்,அவர்களது பலம்.
அந்த அணியின் அளவுக்கு தற்போது வளர்ந்துவிட்ட மற்றைய அணி, விநாயகம் தலைமையிலான அணி. இதன் தலைவர் விநாயகம், புலிகளின் உளவுப் பிரிவில் தளபதியாக இருந்தவர். தற்போது, பிரான்சிலும்,ஜெர்மனியிலும் மாறிமாறி இருந்து வருகிறார். இந்த அணிக்கு, களத்தில் யுத்தம் புரிந்துவிட்டு, தற்போதுவெளிநாடுகளில் வசிக்கும் போராளிகளின் ஆதரவு உண்டு. வெளிநாடுகளில் உள்ள கணிசமான புலி ஆதரவாளர்களும் தற்போது இவர்கள் பக்கம் சாயத்தொடங்கியுள்ளனர். கீழேயுள்ள போட்டோக்கள், பரிதி சுடப்பட்டபின், அந்த இடத்தில் எடுக்கப்பட்டவை.பார்த்துவிட்டு அடுத்த பக்கத்துக்கு வாருங்கள்.

விநாயகம் அணியின் பலம், களத்தில்யுத்தம் புரிந்தவர்கள், வெளிநாடுகளில்பண முறைகேடுகள் எதிலும் இதுவரைபெரிதாக சிக்காதவர்கள், பழையசெயல்பாட்டாளர்கள் (நெடியவன்அணி) செய்த பண முறைகேடுகளைதட்டிக் கேட்பவர்கள் என்ற பெயர்.இந்த அணியின் பலவீனம், மீடியா பலம்கிடையாது. விடுதலைப்புலி ஆதரவாளர்களைவாசகர்களாக கொண்டுள்ளபெரும்பாலான மீடியாக்கள் நெடியவன்குழுவின் கட்டுப்பாட்டில் இருப்பதால்,விநாயகம் குரூப்பின் நடவடிக்கைகள்மீடியாக்களில் துரோகச் செயல் எனவெளியாகும்.

அத்துடன், தமிழகஅரசியல்வாதிகளுக்கான மாதாந்த பண வழங்கல்களை கொடுப்பது, சொத்துக்களை வைத்திருக்கும்நெடியவன் குரூப் என்பதால், விநாயகம் குரூப்புக்கு அந்த பப்ளிசிட்டியும் இல்லை. சமீபத்தில், இளையராஜாவின் கனடா இசை நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த ஆட்கள், நெடியவன் குரூப்.அந்த எதிர்ப்புக்கு மீடியாக்களில் கிடைத்த அதீத முக்கியத்துவத்தை நீங்கள் கவனித்திருக்கலாம். அதுதான்,நெடியவன் குரூப்பின் பலம். இளையராஜாவின் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள் ‘சுற்றி வளைத்து தூரத்துசொந்தமாக’ விநாயகம் குரூப். இப்போது உங்களுக்கு பின்னணி புரிந்திருக்கும்.

இனி தளபதி பரிதியின் வீர மரணத்துக்கு வருவோம். பாரீஸில் உள்ள விடுதலைப் புலிகளின் சொத்துக்கள்(கடைகள், பில்டிங்குகள், வீடுகள், மற்றும் சில பண்ணைகள்) நெடியவன் குழுவின் கட்டுப்பாட்டில் இருக்கும்தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (TCC) என்ற அமைப்பின் கீழ் உள்ளது. இந்த அமைப்பின் பிரான்ஸ் பொறுப்பாளர், தற்போது கொல்லப்பட்டுள்ள பரிதி. விநாயகம் குரூப் எடுத்துள்ள நிலைப்பாடு என்னவென்றால், விடுதலைப் புலிகளின் சொத்துக்கள் என்பது, ஈழவிடுதலை போராட்டத்துக்காக மக்கள் கொடுத்த பணம். அதை நெடியவன் குழு மட்டும் எடுத்துக்கொள்ளமுடியாது. அதே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமக்கும் (விநாயகம் குரூப்) அதில் பங்கு உள்ளது என்பது. இந்த பணம் பற்றி கேள்வி கேட்க இப்போது யாரும் உயிருடன் இல்லாத நிலையில், நெடியவன் குரூப்எதற்காக அதில் மற்றைய அணிக்கு பங்கு கொடுக்க வேண்டும்? எனவே அவர்கள் பங்கு தர மறுக்கிறார்கள்.இதுதான், தகராறு.

கடந்த சில வாரங்களாக, இரு குழுக்களுக்கும் இடையே, இரு விஷயங்களில் பேச்சுவார்த்தைகள்நடைபெற்றன. கடந்த சில வாரங்களாக, இரு குழுக்களுக்கும் இடையே, இரு விஷயங்களில் பேச்சுவார்த்தைகள்நடைபெற்றன. ஒன்று, இந்த சொத்து பிரிக்கும் விவகாரம். மற்றையது, இம்மாத இறுதியில் வரப்போகும்மாவீரர் தினத்தை யார் நடத்துவது என்ற விவகாரம். பிரான்ஸில் உள்ள சொத்தில் கணிசமான பங்கை கேட்டது விநாயகம் அணி. அத்துடன், பாரீஸில் மாவீரர் தினநிகழ்ச்சியை நடத்தும் உரிமையை தமக்கு கொடுக்கும்படியும், அந்த டீலின் மறுபகுதியாக, பிரிட்டனில்நடக்கும் மாவீரர் தின நிகழ்வை நெடியவன் குரூப் நடத்திக் கொள்ளலாம் எனவும் ஒரு பாக்கேஜூடன்பேசியது விநாயகம் அணி.

லண்டன் மாவீரர் தின நிகழ்ச்சியில், பாரிஸைவிட லாபம் அதிகம் கிடைக்கும் என்பது ஒன்றும் ரகசியம்இல்லை. நெடியவன் அணியின் சார்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட தளபதி பரிதி, இந்த இரண்டையுமேமறுத்துவிட்டார். “உங்களால் செய்ய முடிந்ததை, செய்து கொள்ளுங்கள்” என்று சொன்னதாக கேள்வி.விநாயகம் குரூப்பும் புறப்பட்டு சென்றுவிட்டது. பாரீஸில் மாவீரர் தின நிகழ்ச்சியை நடத்தும் ஏற்பாடுகளைபரிதியே முன்னின்று செய்து கொண்டிருந்தார். சுருக்கமாக சொன்னால், விநாயகம் அணி, பொட்டம்மானின் ஆட்கள். யுத்தத்தின்போது களத்தில்நின்றவர்கள்.

நெடியவன் அணி, காஸ்ட்ரோவின் ஆட்கள். வெளிநாடுகளில் உள்ள ஓய்வு பெற்ற போராளிகள் மற்றும்,வீடியோவில் யுத்தம் பார்த்த வெளிநாட்டுப் புலிகள். இவர்களிடம் சொத்து உண்டு. அவர்களிடம் துடிதுடிப்புஉண்டு. இந்த இரு அணிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை முறிந்த இரண்டாவது நாள் இரவு, பாரிஸில்,இந்த அசம்பாவிதம் நடந்தது. என்ன அசம்பாவிதம்? சிங்கள ஏகாதிபத்திய அரசின் எல்லை கடந்த உளவுத்துறையைச் சேர்ந்த கயவர்களும், அவர்களதுகைக்கூலி அடிவருடி பாஸிஸ்ட்களும் பாரிஸ்வரை வந்து தாக்குதல் நடத்தியதில், களப்பலியாகி,வீரமரணமடைந்தார் தளபதி கர்னல் பரிதி என்று வைத்துக் கொள்வோமே… யாருக்கும் மனவருத்தம் ஏற்படாமல்.

நாங்கள் உண்மைய சொன்னாலும் எங்கள் தமிழன் நம்பவா போகிறான்? உடன் சொல்லும் ஒரே வார்த்தை இவன் சிங்களத்தின் கைக்கூலி அல்லது காட்டிக்கொடுத்தான் பட்டம். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் பாருங்கோ என்றைக்கு தமிழன் ஒன்று பட்டு நிற்கிறானே அன்றைக்குத்தான் தமிழீழம் கிடைக்கும். (ஒன்றுமையா தமிழன்கிட்டவா.. )

தமிழ் ஈழத்துக்காக போரிட்ட களத்தில் நின்ற தமது உறவுகளை யுத்த களத்தில் இழந்த சிங்களத்திடம் அடிவாங்கிய நமக்குள்ளேயே இந்தனை வேற்றுமைகள் இத்தனை குழுக்கள் இத்தனை காட்டிக்கொடுப்புகள் என்றால் இதில் சம்மந்தப்படாத எத்தனையோ உலகவாழ் தமிழனுக்குள் சுயநலம் இருப்பது ஒன்று பெரிய விடயமல்ல..

ஆக…. இன்னும் புலம்பெயர் புலிகளுக்கிடையில் ஆதரவாளர்களுக்கிடையில் காட்டிக்கொடுப்பவனும் கூட்டிக்கொடுப்பவளும் இருக்கும் வரை… பரிதியின் உடல் மட்டுமல்ல இன்னும் பல புலம்பெயர் புலிகளில் தலைகளையும் தோட்டாக்கள் துளைக்கும் என்பதில் வேடிக்கை ஒன்றும் இல்லை…!

நன்றி:- லங்காமுரசு இணையத்தளம்
avatar
Murali
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 9

Back to top Go down

Re: பரிதியை உடலை பதம்பார்த்தது விநாயகம் அணியின் தோட்டாக்களா..???

Post by Manik on Mon Nov 12, 2012 3:36 pm

அவர் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்

_________________________________________________

வாழும் வரையாவது சந்தோசமாய் இரு
avatar
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

Re: பரிதியை உடலை பதம்பார்த்தது விநாயகம் அணியின் தோட்டாக்களா..???

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum