தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கற்போம் கற்பிப்போம்

View previous topic View next topic Go down

கற்போம் கற்பிப்போம்

Post by நாஞ்சில் குமார் on Tue Sep 23, 2014 4:44 pmநீராரும் தண்கடலில் கண்டெடுத்த நித்திலமே!
ஆசை தவிர்க்கவந்த ஆணழகே சித்திரமே!
ஓசை யளித்துமலர் உண்ணுகின்ற தேன்வண்டே!
உள்ளம் எதிர்பார்த்த ஓவியமே என்மடியில்
பிள்ளையாய் வந்து பிறந்த பெரும்பேறே!

குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை ஏன் நடக்கிறது என்று யோசித்ததுண்டா? இந்தப் பாதகத்தை செய்பவர்களும் ஒரு காலத்தில் குழந்தையாக இருந்திருப்பார்களே? ஒரு தாயின் வயிற்றில் பிறந்து, ஒரு தந்தையின் அருகில் உறங்கி, ஒரு குடும்பம் என்னும் கூரையில் இருந்திருப்பார்களே? எங்கே அவர்கள் தடம் புரண்டார்கள் என்பதை ஆராய வேண்டுமல்லவா? ‘எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே... பின் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே’ என்பது சத்தியமான வார்த்தை.

இந்த நெஞ்சம் பதற வைக்கும் செயலை செய்தவர்களின் பின்புலத்தை ஆராய்ந்தால், அவர்களின் மன வக்கிரங்களின் காரணம் தெரியும். பொதுவாகவே நம் நாட்டில் குழந்தைகளிடம் பேச வேண்டியது, வேண்டாதது என்று ஆயிரம் விஷயங்களைப் பட்டியலிட்டு வைத்திருக்கிறோம். 50 ஆண்டுகளுக்கு முந்தைய நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் எதுவும் இல்லாத காலத்தில் கடைபிடிக்கப்பட்ட அனைத்தையும் கண்மூடி அப்படியே பின்பற்ற வேண்டிய அவசியம் உண்டா?

அதே நேரம் இன்றைய அபரிமித அறிவியல் வளர்ச்சியில் இணையத்தை திறந்தால் கொட்டும் ஆபாசங்கள் அனைத்தையும் கற்றுத் தெளிதலும் அவசியமா? எது தேவை எது அவசியம் எது அனாவசியம் என்று குழந்தைகளுக்கு எடுத்துரைப்பதற்கு முன், பெற்றோர் தெளிவடைந்தாலே போதும். எதெற்கெடுத்தாலும் ‘அந்தக் காலத்தில’ என்று ஆரம்பிப்பதை விட்டு, இந்தக் காலத்தில் வாழ்வதும் அதனை சமவிகிதமாக கொண்டு செல்வதும் முக்கியம்.

அது என்ன சம விகிதம்? அதற்கும் குழந்தைகளுக்கும் என்ன சம்பந்தம்?

அடிப்படையான உடல் சார்ந்த அறிவு ஒவ்வொரு குழந்தைக்கும் அவசியம் தேவை. எதையும் வெளிப்படையாக பேசாத நம் கலாசாரத்தில்தான் பாலியல் குற்றங்கள் அதிகம். அனைத்தையும் மிக வெளிப்படையாக பேசக்கூடிய வெளிநாடுகளில் இந்தத் தொல்லை இல்லையா என்றால், அங்கும் உண்டு. ஏன் இந்த முரண்பாடு? எதையும் தெரியாதவர்கள் உடனே தெரிந்து கொள்ள முயல்வதும், அனைத்தும் எளிதாக கிடைக்கப் பெறுபவர்கள் அதனை வெகு விரைவில் சோதித்துப் பார்க்க முயல்வதுமே காரணம்.

அளவுக்கு மிஞ்சிய அமிர்தம் விஷமாவது போல, அளவுக்கு மிஞ்சிய கட்டுப்பாடும் அளவுக்கு மிஞ்சிய சுதந்திரமும் எதிர்விளைவுகளை கொடுக்கும். அப்படியென்றால் குழந்தைகளிடம் என்னவெல்லாம் பேசலாம்? யார் பேசலாம்? வேறு யார்? பெற்றோர்தான் பேச வேண்டும். அன்னையோ தந்தையோ என்பது முக்கியமல்ல... ‘பேச வேண்டும்’ என்பதே முக்கியம்.

நாம் சரியாக பேசி புரியவைக்காவிட்டால் அடுத்தவர்கள் அந்த இடைவெளியை பயன்படுத்தி தவறாக புரிய வைப்பார்கள். சென்ற இதழில் தொடங்கிய ஆண் குழந்தைகள் அறிமுகத்தை இன்னும் விரிவாக பார்க்கலாம். பெண் குழந்தைகளின் மனநிலை அவர்களின் வயதைப் பொறுத்து மாறுவது போலவே, ஆண் குழந்தைகளும் ஹார்மோன் வசத்தால் ஏகப்பட்ட மாற்றங்களை அடைகின்றனர்.

அவர்களின் சந்தேகத்தை புரிய வைத்து தெளிய வைப்பதே, பிற்காலத்தில் அவர்களை சமூகத்தில் பொறுப்புடன் நடக்கச் செய்யும் முதல் விதை. ஆணோ, பெண்ணோ - 5 வயது வரை மட்டுமே பொதுவான வளர்ச்சியில் இருக்கிறார்கள். அதன் பிறகு அவர்களின் உடல், உருவம், மனநிலை அனைத்தும் சுற்றுப்புறக் காரணிகளால் மாற்றம் அடைகின்றன. நம்மையே ஓர் ஆண் குழந்தையாக நினைத்து இந்த விஷயத்தை அணுகுவது நல்லது.

10 வயது பையன், அவன் உடலில் ஏற்படும் மாற்றங்களை அதிகமாகக் கண்டுகொள்ள மாட்டான். டீன் ஏஜ் எனப்படும் விடலைப்பருவ பையனிடம் முதலில் நாம் காண்பது அவன் அதிகம் தனிமையை விரும்புவதைத்தான். எதற்கெடுத்தாலும் கோபப்படுவது, வெட்கம், ஒருவித படபடப்பு, சந்தோஷம், பரபரப்பு, டென்ஷன், திடீரென காரணமின்றி உற்சாகம், தர்மசங்கடம், தேவையற்ற விவாதம்... இவை அனைத்தும் டீன் ஏஜ் ஆண் குழந்தைகளுக்கு இயல்பானவையே.

டீன் ஏஜில் பொதுவாக ஏற்படும் உடல் மற்றும் மன மாற்றங்கள்...குரல்வளர்ச்சி அடைந்த ஆண் தன்மை என்பது ஒரு நாளில் உருவாகாது. டீன் ஏஜ் என்பது அதன் முதல் பருவம். குரல் உடைவது முதல் கட்டம். மென்மையான குழந்தைத் தன்மையான குரல் மாறி, சிறிது கரகரப்பு சேர்வதும், தொண்டையில் ஆதாம் ஆப்பிள் பகுதி உருவாவதும் இப்போதுதான். குரல் உடைவது பற்றி கவலை கொள்ளத் தேவையில்லை.

நாளடைவில் வளர்ந்த குரல் செட் ஆகிவிடும்.ரோமங்கள் ஆண் குழந்தைகள் அதிகம் கவலைப்படுவது அவர்களின் மீசை, தாடி பற்றி. சிலருக்கு 10 வயதில் ஆரம்பிக்கும்... சிலருக்கு 18 வயதானாலும் ஷேவிங் செய்யும் அவசியம் வராது. இதுவும் தனிப்பட்ட ஹார்மோன்களின் வேலைதான். ஒருவரைப் போல கண்டிப்பாக மற்றொருவர் இருக்க மாட்டார். முகத்தில் மட்டுமல்ல... உடலெங்கும் முடி வளர்தலும் ஆண் குழந்தைகள் ஹார்மோன் வளர்ச்சிப் பருவத்தில் இருப்பதன் அடையாளமே.

இப்பருவத்தில் ஆண் குழந்தைகளுக்கு உடலின் மாற்றத்தையும் ஷேவிங் செய்வது போன்ற விஷயங்களையும் சொல்லித் தருவது  குடும்பத்தில் உள்ள பெரிய ஆண்களின் கடமை. சின்ன விஷயங்களை சொல்லித் தராத பட்சத்தில் பிற்காலத்தில் அதுவே அவர்களை பாதிக்கும் விஷமாக மாறி பயமுறுத்தும்.

இந்த காலகட்டத்தில் வியர்வை போன்றவை கூட பையன்களை தனிமைப்படுத்தும். இந்த வயதை எப்படி கையாளுவது என்று தந்தைதான் சொல்ல வேண்டும் என்பதில்லை... தாய் சொல்லுவதிலும் தவறே இல்லை.

ஆண் உறுப்புகளும் பொய்யான நம்பிக்கைகளும் உண்மையும் நம் நாட்டில் அனைத்து ஊர்களிலும் லாட்ஜ்களில் கிழமைவாரியாக அட்டவணை இட்டு பாலியல் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க தயாராக இருப்பதற்குக் காரணமே பெற்றோர் சரியான வழியில் உடற்கல்வியை போதிக்காததே. 15 வயதானா லும் அவனை பச்சைக் குழந்தையாக பாவித்து, அம்மா-அப்பா நடுவில் படுக்க வைக்கும் நம் கலாசாரத்தில் ஆண் குழந்தைகளுக்கான தனிமையை தர மறுக்கிறோம்.

‘10 வயதுக்கு மேல் ஆண் உறுப்பு வளர்ச்சி அடைவதும், தன்னிச்சையாக விந்து வெளியாவதும் - மிகச் சாதாரணமாக தண்ணீர் குடிப்பது போல, தூங்குவது போல இயல்பான ஒன்றுதான்’ என்பதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். சில குடும்பங்களில் இதனை பெரிய குற்ற செயலாக சிறு வயதிலிருந்து பயமுறுத்துவதால், குடும்பத்தில் விவாதிக்கப் பயப்படும் குழந்தைகள் வெளியிடங்களில் தவிக்கின்றன.

கயவர்கள் இதனை சாதகமாக்கி கொள்கின்றனர். குறிப்பிட்ட வயதுக்கு மேல் ஆண் குழந்தைகளை தனியே தூங்க அனுமதிப்பது அவர்களின் தேவையற்ற மன அழுத்தத்தை குறைக்கும். ‘அவர்களின் ஆண் உறுப்புக்கும் அவர்களின் திருமண வாழ்வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’ என்பதையும் அறிவியல் ரீதியாக உணர வைத்தாலே பாதி பாலியல் குற்றங்கள் குறையும்.

பெண்கள் மீதான ஈர்ப்பு இப்போதெல்லாம் சர்வசாதாரணமாக 5ம் வகுப்பு மாணவன் காதல் கடிதம் எழுதுவதாகக் கேள்விப்படுகிறோம். பெண்கள் மீதான ஈர்ப்பு என்பது இயல்பான விஷயமே. அறிவியல் கூற்றின் படி அடுத்த சந்ததியினரை உருவாக்கத்தானே ஆணும் பெண்ணும் படைக்கப்படுகின்றனர். எனவே, இதனை குற்றமாக கருதி தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாமே... ஆண் குழந்தைகளை குழப்பாமல் வாழ்க்கையின் ப்ரையாரிட்டி எது என உணர்த்தி, அதில் பெண்கள் எந்த இடத்தில் இருக்கின்றனர் என்பதை புரியவைத்தல் எளிதுதான். பதற்றமும் மன அழுத்தமும் டீன் ஏஜில் இயல்பானவை என்பதால் அவர்களின் கவனத்தை வேறு விதங்களில் திருப்பலாம். இசை, விளையாட்டு அல்லது அவர்களுக்கு விருப்பமான செயல்களில் ஈடுபடச் செய்வது நல்லது.

நன்றி: தினகரன்
avatar
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

Re: கற்போம் கற்பிப்போம்

Post by முரளிராஜா on Mon Apr 06, 2015 12:13 pm

சிறப்பான கட்டுரை
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum