Latest topics
» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்by rammalar
» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar
» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar
» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar
» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar
» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar
» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar
» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar
» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar
» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar
» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
by rammalar
» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
by rammalar
» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
by rammalar
» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
by rammalar
» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
by rammalar
» 'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
by rammalar
» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
by rammalar
» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
by rammalar
» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
by rammalar
» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
by rammalar
» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
by rammalar
» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by rammalar
» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by rammalar
» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by rammalar
» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by rammalar
» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by rammalar
» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by rammalar
» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...!!
by rammalar
» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar
» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar
» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar
» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by rammalar
» பாதை எங்கு போகிறது...?
by rammalar
» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை
by rammalar
» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
by rammalar
» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி
by rammalar
» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by rammalar
இன்று அன்னை தெரசா நினைவு தினம்
இன்று அன்னை தெரசா நினைவு தினம்
[You must be registered and logged in to see this image.]
1910ம் ஆண்டு ஆக்ஸ்ட் 27ம் தேதி யூகோஸ்லாவியாவில் Agnes Gonxha Bojaxhiu என்ற குழந்தை பிறந்தது. பிற்காலத்தில் அன்பின் முகவரியாக அந்தக் குழந்தை விளங்கும் என்பது அப்போது அதன் பெற்றோருக்குத் தெரியாது. ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில் கன்னிகாஸ்த்திரியான பிறகு அவர் சகோதரி தெரேசா என்று பெயர் மாற்றிக் கொண்டார்.
1929ம் ஆண்டு ஐனவரி ஆறாம் தேதி தமது 19வது வயதில் கல்கத்தாவில் காலடி வைத்தார் அன்னை தெரேசா. அடுத்த 68ஆண்டுகள் அந்த அன்னையின் கருணை மழையில் நனையும் பாக்கியத்தைப் பெற்றது இந்திய மண். சுமார் 17 ஆண்டுகள் Lorettaகன்னிமார்கள் குழுவில் சேர்ந்து ஆசிரியராகப் பணியாற்றிய போது கல்கத்தாவின் நெருக்கமான தெருக்களில் மிக மோசமான நிலையில் வாழ்ந்தோரின் நிலையும் ஆதரவின்றி மாண்டோரின் அவலமும் அன்னையின் மனத்தைப் பிழிந்தன.
1946ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதி ஓய்வுக்காக இந்தியாவின் டார்ஜீலிங் நகருக்கு ரயில் பயணம் மேற்கொண்டிருந்த போதுதான் அவரது வாழ்க்கையையும் பல்லாயிரக்கணக்கான ஆதரவற்றோரின் வாழ்க்கையையும் மாற்றியமைக்கப் போகும் ஒரு தெய்வீக அழைப்பை அவர் உணர்ந்தார். நலிந்தோருக்கும் நோயாளிகளுக்கும் உதவ கடவுளிடமிருந்து வந்த அழைப்பாக அதனை ஏற்றுக் கொண்டு Lorettaகன்னிமார்கள் குழுவிலிருந்து விலகினார்.
கல்கத்தாவின் மிக ஏழ்மையான சேரிகளுள் ஒன்றான மோட்டிஜில் சேரிக்கு 1948ம் ஆண்டு டிசம்பர் 21ம் நாள் வந்து சேர்ந்தார். அப்போது அவரிடம் இருந்ததெல்லாம் வெறும் ஐந்து ரூபாயும் மனம் நிறைய அன்பும்தான். கடுமையான வறுமையில் இருந்த அந்த ஏழைகள் மத்தியில் தமது அறப்பணியைத் தொடங்கிய அன்னை தெரேசா 1950ல்Missionaries of Charity என்ற அமைப்பை உருவாக்கினார்.
1952ல் Nirmal Hriday என்ற இல்லத்தைத் திறந்தார். அந்த இல்லம்தான் பல்லாயிரக்கணக்கானோருக்கு அவர்களின் கடைசிக் காலத்தில் கருணை இல்லமாகச் செயல்பட்டது. கல்கத்தாவின் தெருக்களிலிருந்து உயிர் ஊசலாடிய நிலையில் காப்பாற்றப்பட்ட சுமார் 42 000 ஆண்கள்,பெண்கள், சிறுவர்கள் அந்த இல்லத்திற்குக் கொண்டு வரப்பட்டனர். சக மனிதர்களாலேயே புறக்கணிக்கப்பட்ட அந்த ஆத்மாக்களுக்கு அதீத அமைதியைத் தந்தது அன்னையின் இல்லம். சுமார் 19 000 பேர் ஆதரவின்றி மடிந்து போயிருப்பர். ஆனால் அந்த இல்லத்திற்குக் கொண்டு வரப்பட்ட அவர்கள் தங்கள் இறுதி நிமிடங்களில் அன்னையின் அரவணைப்பில் அன்பை உணர்ந்து மகிழ்ச்சியுடன் மரணத்தைத் தழுவினர்.
ஒருமுறை ஏழைகளுக்கு உதவ அன்னை தெரேசா ஒரு செல்வந்தரிடன் கையேந்தி நின்ற போது அந்த செல்வந்தர் அன்னையின் கைகளில் காரி உமிழ்ந்தார். அப்போது அன்னை என்ன சொன்னார் தெரியுமா? கைக்குள் விழுந்த எச்சிலைக் கைக்குள்ளேயே மூடிக் கொண்டு இந்த எச்சில் எனக்குப் போதும்; என் ஏழைகளுக்கு ஏதாவது கொடுங்கள் என்றார். திக்குமுக்காடிப் போன அந்த செல்வந்தர் அன்னையின் கால்களில் கதறியழுது வாரி வழங்கினார்.
1953ல் ஓர் அனாதை இல்லத்தையும் 1957ல் தொழுநோயாளிகளுக்கான இல்லத்தையும் தொடங்கி தமது பணியை அகலப்படுத்தினார் அன்னை தெரேசா.
பலர் அருவருத்து ஒதுங்கும் போது அன்னையும் அவரது சகோதரிகளும் தொழு நோயாளிகளின் ரணங்களுக்கும் உள்காயத்துக்கும் மருந்திட்டனர். அவர்களுக்கு அன்பு எனும் விருந்திட்டனர். ஆரம்பத்தில் 12 கன்னிமார்களுடன் தொடங்கிய அவருடைய Missionaries of Charity அமைப்பு தற்போது 500க்கும் மேற்பட்ட நிலையங்களாக விரிவடைந்து 132 நாடுகளில் இயங்கி வருகின்றன.
தனது பணிக்கு விளம்பரம் தேடாத அன்னை தெரேசாவை நோக்கி விருதுகளும் பட்டங்களும் படையெடுத்தன. 1979ல் அமைதிக்கான நோபல் பரிசு, 1980ல் இந்தியாவின் பாரத ரத்னா விருது, 1985ல் அமெரிக்க அதிபரின் சுதந்திரப் பதக்கம். 1962ல் அவருக்குக் குடியுரிமை வழங்கிக் கெளரவித்தது இந்தியா.
அன்பென்ற மழையில் இந்த அகிலத்தை நனைய வைத்த அந்த உன்னத அன்னையின் உயிர்மூச்சு 1997ம் ஆண்டு செப்டம்பர் ஐந்தாம் தேதி அவரது 87வது வயதில் நின்ற போது எதற்கும் கலங்காத கண்களும் கசிந்தன.
தாம் வாழ்ந்த போது அவரிடமிருந்த சொத்தெல்லாம் மூன்று வெள்ளைச் சேலைகளும் ஒரு சிலுவையும் ஒரு ஜெபமாலையும்தான். ஆனால் விலைமதிப்பற்ற அன்பை மட்டும் அவர் அமுத சுரபியாக அள்ளியள்ளி வழங்கினார். அதனால்தான் ஒரு கவிஞர் அவரைசாக்கடையோரச் சந்ததிக்கும் சாமரம் வீசிய பூமரம் என்று வருணித்தார். அன்பிற்கு அன்னை தெரேசா என்ற புதிய இலக்கணத்தை இன்று இவ்வுலகம் கற்றுக் கொண்டிருக்கிறது. அன்னை தெரேசா போன்றவர்களை எண்ணித்தான் நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை என்ற பாடலை ஔவையார் எழுதியிருக்க வேண்டும்.
நாம் அன்னை தெரேசா போல் வலிக்கும் வரை கொடுக்க வேண்டியதில்லை; நமது உயிரை உருக்கி ஏழைகளிடமும் ஆதரவற்றோரிடமும் அன்பு செலுத்த வேண்டியதில்லை. நமக்கு வேண்டியவர்களிடம் உண்மையான அன்பு செலுத்தினாலே போதும் அந்த வானம் வசப்படும்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!
முழுமுதலோன்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இன்று அன்னை தெரசா நினைவு தினம்
அன்பின் அடையாளமாகிய அன்னை அவர்களை பற்றிய பகிர்வுக்கு நன்றி அண்ணா
நட்புடன் செந்தில்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum