தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by rammalar

» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by rammalar

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by rammalar

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by rammalar

» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by rammalar

» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by rammalar

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...!!
by rammalar

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by rammalar

» பாதை எங்கு போகிறது...?
by rammalar

» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை
by rammalar

» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
by rammalar

» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி
by rammalar

» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by rammalar

» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்
by rammalar

» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
by rammalar

» மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு
by rammalar

» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்
by rammalar

» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்
by rammalar

» ஒரு சுயசரிதைக் கவிதை
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்:
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி
by rammalar

» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்
by rammalar

» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி
by rammalar

» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட
by rammalar

» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்
by rammalar

» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar

» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,
by rammalar

» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது
by rammalar

» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்
by rammalar

» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு? ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி
by rammalar

» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி
by rammalar

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் 143 வது பிறந்த தின சிறப்பு பதிவு

View previous topic View next topic Go down

கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் 143 வது பிறந்த தின சிறப்பு பதிவு

Post by முழுமுதலோன் on Fri Sep 05, 2014 10:36 am

வாணிபம் செய்வதற்காக இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு வந்தஆங்கிலேயர் இங்கு வலிமை மிக்க ஆட்சி இல்லாத நிலையைப் பயன் படுத்திக் கொண்டு  மெல்ல மெல்ல அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டனர். 

ஆங்கில வல்லாட்சியின் இரும்புப் பிடியில் இருந்து இந்திய நாட்டை விடுவிக்க ஆயிரம் ஆயிரம் தியாகிகள் தங்கள் வியர்வை, கண்ணீர், இரத்தத்தைச் சிந்தி அறப்போரில் ஈடுபட்டனர். அத்தகைய புகழ்மிக்க தியாகிகளில் உன்னதமான இடத்தைப் பெற்றவர் கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார்!

[You must be registered and logged in to see this link.]

 கேரளாவில் உள்ள வைக்கத்தில் ஜாதி ஆணவத்தையும், தீண்டாமையையும் எதிர்த்து அறப்போர் நடத்திய தந்தை பெரியார் பிறப்பதற்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்னால் 1872 செப்டம்பர் 5ஆம் நாள் உலகநாதப் பிள்ளைக்கும் பரமாயி அம்மையாருக்கும் ஓட்டப்பிடாரத்தில் பிறந்தார். 

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில், சேதுபதி சமஸ்தானத்தைச் சேர்ந்த பாண்டித்துரைத் தேவரைத் தலைவராகக் கொண்டு மதுரைத் தமிழ்ச்சங்கம் இயங்கி வந்தது. 1905 மே மாதம் வ.உ.சி. சங்கத்தில் ஓர் உறுப் பினராகச் சேர்ந்தார். பாண்டித்துரைத் தேவரின் நட்பு வ.உ.சி.க்கு சுதேசிக் கப்பல் நிறுவனம் அமைக்கப் பேருதவியாக இருந்தது. அக்காலத்தில் தூத்துக் குடி நகருக்கும் இலங்கைக்கும் இடையே ஆங்கிலேயருக்குச் சொந்தமானபிரிட் டிஷ் இந்தியா ஸ்டீம் நேவிகேஷன் என்ற நிறுவனத்தின் கப்பல்களே வணிகப் போக்குவரத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தன.

ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை ஒழிக்க எண்ணிய வ.உ.சி. 1906 அக்டோபர் 16ஆம் நாள் சுதேசிக் கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தார். நிறுவனத்தின்தலைவராகப் பாண்டித்துரைத் தேவரும், வ.உ.சி. செயலராகவும் பதவி ஏற்றுக் கொண்டனர். 

வ.உ.சி. ஷா லைன் ஸ்டீமர்ஸ் என்ற நிறுவனத்திடமிருந்து கப்பலை குத்தகைக்கு வாங்கி தூத்துக் குடிக்கும் - ஈழத் தீவிற்கும் இடையே கப்பல் போக்குவரத்தைத் தொடங்கினார். இதைக் கண்டு ஆங்கிலேய நிறுவனத்தாருக்குப் பொறாமை ஏற்பட்டது. ஷா லைன் ஸ்டீமர்ஸ் நிறுவனத்தாரை மிரட்டிக் கப்பல் குத்தகையை ரத்து செய்ய வைத்து, குத்தகைக்குக் கொடுத்திருந்த கப்பலைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வைத்தது.

[You must be registered and logged in to see this link.]


சுதேசிக் கப்பல் நிறுவனத்திற்கு என்று வ.உ.சி.யின் விடாமுயற்சியால்காலிபா, லாவோ என்ற இரு கப்பல்கள் சொந்தமாக வாங்கப்பட்டன. இதற்கு தூத்துக்குடி வணிகப் பெருமக்கள் தங்களால் ஆன நிதி உதவி அளித்தனர். மும்பை, கொல்கத்தா போன்ற வட இந்திய நகரங்களில் உள்ள வணிகர்களும் சுதேசிக் கப்பல் நிறுவனத்திற்கு நிதி வழங்கினார்கள். 1907 ஜூன் மாதம் முதல் தூத்துக்குடிக்கும் - கொழும்பிற்கும் இடையே பயணக் கப்பல்கள் ஓடத் தொடங்கின.  வ.உ.சி.யின் சாதனையைத் தேசியப் பத்திரிகைகள் எல்லாம் புகழ்ந்தன!

தமிழர்கள் அனைவரும் இன உணர்வுடன் சுதேசிக் கப்பலிலேயே ஈழத் தீவிற்குப் பயணம் செய்தனர். தங்களின் வாணிபப் பொருள்களையும் சுதேசிக் கப்பலிலேயே அனுப்பி வைத்தார்கள்.

ஆங்கிலேயக் கப்பல் நிறுவனத்தார் சுதேசிக் கப்பல் நிறுவனத்தை அழிக்கப் பல்வேறு வழிகளில் முயற்சித்தனர்.

இந்தியா ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் கட்டுப்பட்டு அடிமை நாடாக இருக்கும் வரை சமூக, கல்வி, பொருளாதாரத் துறைகளில் முன்னேற முடியாது என்பதை வ.உ.சி. அறிந்து கொண்டார். நாட்டு மக்களிடையே விடுதலை வேட்கையை ஏற்படுத்தி வெள்ளையர் ஆட்சியை இந்திய மண்ணிலிருந்து அகற்ற அரும்பாடுபட்டார். தனது நண்பர் சுப்பிரமணிய சிவாவுடன்இணைந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடு பட்டார். 

காவல் துறை அனுமதியின்றிப் பொதுக் கூட்டம் நடத்தியது ; அரசுக்கு எதிராகப் பொது மக்களைத் தூண்டி  விட்டது ஆகிய குற்றங்களுக் காக மாவட்ட நீதிமன்றத்தில் வ.உ.சி. மீது வழக்கு தொடரப்பட்டது. 1908 ஜூலை 7ஆம் நாள் வெள்ளைக்கார நீதிபதி வ.உ.சி.க்கு இரட்டை ஆயுள் தண்டனைவிதித்து தீர்ப்பு கூறினார்! 

தனக்கு விதிக்கப்பட்ட 40 ஆண்டுகள் ஆயுள் தண்டனையை ரத்து செய்யக் கோரி வ.உ.சி. சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். தீர்ப்பில் ஆயுள் தண்டனை  6 ஆண்டுக் கடுங்காவல் தண்டனையாகக்குறைக்கப்பட்டது! கோயம்புத்தூர் மற்றும் கண்ணனூர் சிறைகளில் தாங்கொணாத் துன்பங் களை அனுபவித்து விட்டு 1912 டிசம்பர் மாதம்கண்ணனூர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 
[You must be registered and logged in to see this image.]
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் 143 வது பிறந்த தின சிறப்பு பதிவு

Post by முழுமுதலோன் on Fri Sep 05, 2014 10:39 am

வ.உ.சி. விடுதலைப் போரில் தீவிரப் பங்கு எடுத்ததைப் போல் தமிழுக்கும்புகழ்மிக்க தொண்டு செய்துள்ளார். திருவள்ளுவரின் திருக்குறளுக்கு எளிய உரை எழுதி வெளியிட்டார்.


[You must be registered and logged in to see this link.]

1936ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் நாள் சிதம்பரனார் இயற்கை எய்தினார். தமிழகத்தின் தலைநகர் சென்னைத் துறைமுகத்தின் வாயிலில் உள்ள சிதம்பரனார் சிலையும் ; புதுச்சேரி சட்டமன்றத்திற்கு எதிரில் உள்ள அவர் சிலையும் அவரின் தியாக வாழ்வை என்றென்றும் தமிழர்களுக்கு நினைவூட்டுவனவாகும்!


[You must be registered and logged in to see this link.]

முக்கியமான சிலைகள்.


[list="color: rgb(75, 99, 32); font-family: sans-serif; line-height: 19.1875px; list-style-image: none; margin: 0.3em 0px 0.5em 3.2em; padding-right: 0px; padding-left: 0px; background-color: white;"]
[*]சென்னை ராயப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலக முகப்பு.(1939)
[*]திருநெல்வேலி பாளையங்கோட்டை நுழைவாயில்.
[*]சென்னை மெரீனா கடற்கரை.
[*]தூத்துக்குடி துறைமுகம்.(முன்னாள் பிரதம மந்திரி திருமதி. [You must be registered and logged in to see this link.] அம்மையாரால் திறந்து வைக்கப்பட்டது.)
[*]மதுரை சிம்மக்கல் (முன்னாள் முதல் அமைச்சர் திரு. [You must be registered and logged in to see this link.] அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.)
[*]திருநெல்வேலி வ.உ.சி. நினைவு இல்லம். (முதல் அமைச்சர் செல்வி. [You must be registered and logged in to see this link.] அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.)
[/list]


நினைவு இல்லங்கள்.  • ஓட்டப்பிடாரத்தில் உள்ள வ.உ.சி. யின் இல்லம்.[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.] வ.உ.சிதம்பரனார் பிறந்த [You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.] ஊரில் [You must be registered and logged in to see this link.] அமைத்துள்ளது. இதில் நூலகம் ஒன்று அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. இங்கு வ.உ.சி. அவர்களின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.

  • திருநெல்வேலி வ.உ.சி. நினைவு இல்லம்.வ.உ.சி. யின் நூற்றாண்டு விழாவின் போது முன்னாள் பிரதம மந்திரி திருமதி. [You must be registered and logged in to see this link.] அம்மையாரால் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.


தூத்துக்குடி துறைமுகம் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடியைத் தலைநகராகக் கொண்டு 1986-ல் மாவட்டம் உருவாக்கப்பட்ட போது இவருடைய பெயர் அந்த மாவட்டத்துக்கு வைக்கப்பட்டது.


வ.உ.சி. யின் வாழ்க்கை வரலாறு 'கப்பலோட்டிய தமிழன்' என்ற பெயரில் வெளியானது. நடிகர் திலகம் திரு. சிவாஜி கணேசன் அவர்கள் வ.உ.சி. யாகத் தோன்றினார். திரு. டி. ஆர். பந்துலு அவர்கள் படத்தைத் தயாரித்து இயக்கினார்.

[You must be registered and logged in to see this link.]

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 
[You must be registered and logged in to see this image.]
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் 143 வது பிறந்த தின சிறப்பு பதிவு

Post by முழுமுதலோன் on Fri Sep 05, 2014 10:42 am

[You must be registered and logged in to see this link.]
வ. உ. சி. இழுத்த செக்கு சென்னை காந்தி மண்டபத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.


[You must be registered and logged in to see this link.] -luxurycar9999.blogspot.in/

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 
[You must be registered and logged in to see this image.]
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் 143 வது பிறந்த தின சிறப்பு பதிவு

Post by செந்தில் on Fri Sep 05, 2014 10:45 am

பகிர்வுக்கு நன்றி அண்ணா

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் 143 வது பிறந்த தின சிறப்பு பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum