தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» எம்.ஜி.ஆர்- அம்மா தீபா பேரவையை தொடங்கி அரசியலில் நுழைந்தார் தீபா
by rammalar

» அமெரிக்காவில் இந்திய மென்பொறியாளர் சுட்டுக் கொலை: அமெரிக்க இனவெறியன் கைது!
by rammalar

» கோவை அருகே ஆதியோகி சிவன் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
by rammalar

» சூரிய மின் உற்பத்தியை 40 ஆயிரம் மெகாவாட் ஆக உயர்த்த திட்டம் மத்திய மந்திரிசபை ஒப்புதல்
by rammalar

» அவ்வை குறள்.
by ந.கணேசன்

» ஹிட்லரின் போன் ரூ.1.62 கோடிக்கு ஏலம்
by rammalar

» சொத்துக் குவிப்பு வழக்குச் செலவு: 12 ஆண்டுகளில் ரூ.12.04 கோடி!
by rammalar

» மஹிந்திராவின் மின்சார கார் அறிமுகம்
by rammalar

» இலங்கையில் நடைபெற உள்ள புத்த பூர்ணிமா விழா : பிரதமர் மோடி பங்கேற்கிறார்
by rammalar

» சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி: களமிறங்கிய மாணவர்கள், இளைஞர்கள்
by rammalar

» செங்கம் அருகே 64 வயது மூதாட்டி கண்கள் மற்றும் உடல் தானம் : கிராம மக்கள் நெகிழ்ச்சி
by rammalar

» தமிழகத்தில் குளிர் குறைய தொடங்கும்
by rammalar

» சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி?- தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்
by rammalar

» காவிரி நதிநீர் தீர்ப்பாயத்திற்கு புதிய தலைவர்
by rammalar

» ரிலையன்ஸ் ஜியோ கூடுதலாக 20 சதவீத டேட்டா வழங்கப்படும் முகேஷ் புதிய சலுகைகள் அறிவிப்பு
by rammalar

» தூக்கிப் போடுங்கள் ராக்கெட்களை…நதிகளை இணையுங்கள்! – சிவகுமார்
by rammalar

» சீருடையுடன் பள்ளி சென்று கலக்கும் மஹா., பாட்டிகள்
by rammalar

» கலை என்பதே சங்கமம்தான்: இளையராஜா
by rammalar

» தாயைப் போன்றே தமிழையும் பெருமைப்படுத்த வேண்டும்'
by rammalar

» நாட்டின் முதல் ஹெலிகாப்டர் நிலையம்: தில்லியில் அடுத்த வாரம் திறப்பு
by rammalar

» தூத்துக்குடி–சென்னை இடையே புதிய விமான சேவை தொடங்கியது
by rammalar

» முகநூல் வக்கிரங்கள்
by rammalar

» .மொழிகளில் சிறந்த மொழி…!
by rammalar

» வீடு -கவிதை
by rammalar

» குறுக்கு கோடு
by rammalar

» முகமறியா வேண்டுதல்
by rammalar

» நல்ல சமாரியனின் நாட்குறிப்பு
by rammalar

» தவணை முறையில் வாழ்நாள் இழப்பு
by rammalar

» கறுப்பு வெள்ளை
by rammalar

» வம்பு
by rammalar

» விவசாயி
by rammalar

» கானல் நீர்
by rammalar

» என்னவனே என் கள்வனே
by கவிப்புயல் இனியவன்

» பொண்ணுக்கு கல்யாணத்துல விருப்பமில்லை…!!
by rammalar

» உடைந்து வரும் பிம்பங்கள்...!!
by ந.கணேசன்

» இனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது
by கவிப்புயல் இனியவன்

» செய்திகள் என்ன சொல்லுது?
by ந.கணேசன்

» இருவரி திருவரி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» சுறா - ஒரு வெளிநாட்டு ரசிகனின் கதறல் இணையத்தில் எடுத்தது
by Balaji Gunasekaran

» கூவத்தூரில் பரபரப்பு : ரிசார்ட்டில் இருந்து எம்.எல்.ஏ.க்கள் வெளியேற போலீஸ் உத்தரவு; மின்சாரம் துண்டி
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வயல் காற்று கிராமிய காதல்

View previous topic View next topic Go down

வயல் காற்று கிராமிய காதல்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Aug 20, 2014 7:04 pmபார்க்கும் இடமெல்லாம் ...
பச்சை பசேரென இருக்கும் ..
அழகு மிகு அற்புத கிராமம் ...
ஆங்காங்கே சில குடிசைகள் ...!!!

அதிகாலையில் குருவிகளும்
பறவைகளும் சங்கீதம்
பாடும் ....!!!
மாலை நேரத்தில் அவை
இருப்பிடத்துக்கு திரும்பும்
அழகிய காட்சி ...!!!

நடு இரவில் ஆந்தையின் அலறல்
இடை இடையே நாய்களின்
ஒப்பாரி கண்மூடி கேட்டால்
தில் தில் மனதில் ஏதோ ஒரு தில் ...!!!

இந்த கிராமத்தில்
வாழ்ந்த எனக்கும் ஒரு காதல் ...!!!
கிராமிய மண்வாசனையுடன்
அழகாக பூத்தது என் மனதில் ...!!!

அவள் வரும் பாதையை
என் இரு விழி தேடும் ...
தூரத்தில் அவள் வரும்போது
வானத்தில் பறந்து கொண்டிருக்கும்
பருந்தைபோல் - என் இதயமும்
அவளை சுற்றி சுற்றி வட்டமிடும் ...!!!

+
+
கே இனியவன்
வயல் காற்று கிராமிய காதல்
காதலன் ஏக்க கவிதை 01

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: வயல் காற்று கிராமிய காதல்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Aug 20, 2014 7:42 pm

என்னவளின்
தலையில் இருக்கும் ஒருவரி
உச்சி போல் வயலின் ஓரத்தில்
இருக்கும் நடைபாதையும்
ஒற்றை வரம்பும் அழகுக்கு
அழகு ....!!!


அவள் வயலின் வரம்பில்
நடக்கவில்லை -என்
இதய நரம்பில் நடந்து
செல்கிறாள் - என்
இதய சுற்றோட்டமே
இதமாய் இருக்கிறது உயிரே ...!!!


ஒற்றை வரம்பில் சற்று
தடுமாறி அவள் விழுந்து
நான் பார்த்து விட்டேன்
என்ற போது நாணத்தால்
சிரித்த போது நான் செத்து
பிழைத்தேன் ....!!!

அது ஒன்றும் வலியில்லை
என்பதுபோல் அவள் மௌன
பார்வை அவளுக்கு மட்டுமே
ஆறுதல் - எனக்கோ அவள் சிறு
வலி -என் இதயத்தில் விழுந்த
பெருவலி ...!!!


இரக்கமற்ற வரம்பு ...
என்னவளை இரக்கம் இல்லாமல்
விழுத்தி விட்டது
அவள் விழுத்த இடத்தில்
அவளின் கால் வரைந்த ஓவியம்
லியானோ டார்வின் சி
வரைந்த ஓவியத்துக்கு நிகர் ...!!!

+
+
கே இனியவன்
வயல் காற்று கிராமிய காதல்
காதலன் ஏக்க கவிதை 02

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: வயல் காற்று கிராமிய காதல்

Post by செந்தில் on Wed Aug 20, 2014 8:26 pm

காதல்! காதல்!
 சூப்பர் சூப்பர் சூப்பர் 

_________________________________________________

நட்புடன் செந்தில்

செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15104

Back to top Go down

Re: வயல் காற்று கிராமிய காதல்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Aug 21, 2014 11:41 am

ஏய் சின்ன சிறுக்கியே ...
பச்சை தாவணியுடன் வயல்
பக்கம் வராதே .....!!!

நீ
வரும் வரம்பு பாதையும் ..
செடி கொடி அசைந்து வரும்
இடமாகி விட்டதடி ...
சின்ன சின்னனாய் இருந்த
சிறு வெளியும் சுத்தமாய்
மறைந்து விட்டதடி ....!!!

உன்னையும் பயிரையும்
வேறுபடுத்தி பார்க்க முடியாமல் ..
தட்டு தடுமாறுகிறது மனசு
பச்சை தாவணியில் பார்க்கும்
போதெல்லாம் பச்சோந்தியாய்
மாறுகிறது மனசு ....!!!
+
+
கே இனியவன்
வயல் காற்று கிராமிய காதல்
காதலன் ஏக்க கவிதை 03

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: வயல் காற்று கிராமிய காதல்

Post by முழுமுதலோன் on Thu Aug 21, 2014 12:02 pm

பச்சை தாவணியில் பார்க்கும் 
போதெல்லாம் பச்சோந்தியாய் 
மாறுகிறது மனசு ....!!!

 சூப்பர்

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்

முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: வயல் காற்று கிராமிய காதல்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Aug 21, 2014 12:05 pm

தலையில் புல்லு கட்டையும்
இதயத்தில் என்னையும்
சுமர்ந்து வரும் என் கிராமிய
கண்ணழகியே ....!!!

இரட்டை சுமையை உன்னால் ..
எப்படி சுமார்க்க முடிகிறது...
உன்னை நினைக்கும் சுமையே ...
என்னால் தாங்க முடியவில்லை ...
சுமைகளை தாங்குவதில் -நீ
ஒரு சுமைதாங்கிதான் ...!!!

புல் நுனிகள் உன் முகத்தை
மறைத்திருந்தாலும் ..
அருகில் வரும் வேளையில்
புல் நுனிகள் விலகிவந்து
உன்னை பார்க்க உதவுகிறது
புற்களுக்கே புரியுதடி -நம் காதல்
எப்போது நீ சொல்வாய்
நம் காதலை ...?
+
+
கே இனியவன்
வயல் காற்று கிராமிய காதல்
காதலன் ஏக்க கவிதை 04

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: வயல் காற்று கிராமிய காதல்

Post by முழுமுதலோன் on Thu Aug 21, 2014 12:12 pm

சுமைகளை தாங்குவதில் -நீ 
ஒரு சுமைதாங்கிதான் ...!!!இரட்டை சுமையை உன்னால் ..
எப்படி சுமார்க்க முடிகிறது... 
சுமார்க்க  அல்ல இது சுமக்க  என்று இருக்க வேண்டும்  என்று எண்ணுகிறேன் 

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்

முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: வயல் காற்று கிராமிய காதல்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Aug 21, 2014 12:37 pm

அதிகாலையில் துயில்
எழடா துயில் எழடா
அம்மாவின் அர்ச்சனை
தினம் தினம் முடியவே
இல்லை என்னால் ....!!!

நீ அதிகாலையில்
வயல் வரதொடங்கினாய் ...!!
இதயத்தில் அலாரம் அடிக்கிறது
தினம் தினம் உன்னை
வருகைக்காய் .....!!!

நீ வயல் வெளியில் காலை
வரும் நேரம் எனக்கு சூரிய உதயம்
நீ வயலை விட்டு மாலையில்
வீடு திரும்பும் வேளையே
எனக்கு சூரிய அஸ்தமனம் ...!!!
+
+
கே இனியவன்
வயல் காற்று கிராமிய காதல்
காதலன் ஏக்க கவிதை 05

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: வயல் காற்று கிராமிய காதல்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Aug 21, 2014 12:39 pm

சுமார்க்க அல்ல இது சுமக்க என்று இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்

இரட்டை சுமையை உன்னால் ..
எப்படி சுமார்க்க முடிகிறது... 
சுமார்க்க  அல்ல இது சுமக்க  என்று இருக்க வேண்டும்  என்று எண்ணுகிறேன் 

ஆம் எப்படி திருத்துவது என்று தெரியவில்லை

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: வயல் காற்று கிராமிய காதல்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Aug 22, 2014 7:02 pm

நிலத்தை
உழவு இயந்திரம் ஆழமாக
உழுகிறதோ இல்லையோ
என்னவளே உன் பார்வை
இதயத்தை ஆழமாக
உழுது விட்டது .....!!!

ஏக்கமும் தாக்கமும்
நிறைந்த என் இதயத்தை
எப்போது பண்படுத்த
போகிறாய் அன்பே ....!!!

உழுத நிலத்தில் பயிர்
வளர்வது உறுதி ..
உன் இதயத்தில் என் காதல்
வளர்வதும் உறுதி ....!!!
+
+
கே இனியவன்
வயல் காற்று கிராமிய காதல்
காதலன் ஏக்க கவிதை 06

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: வயல் காற்று கிராமிய காதல்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Aug 22, 2014 7:26 pm

பயிர்
வளர உரம் போடுகிறார்கள்
உயிரே
என் காதல் வளர நீ எப்போ
உரம் போடுவாய் ...?

சேதமடையும் பயிரை
கிருமிநாசினி பாதுகாக்கும்
என் இதயம் உன்னால் சேதம்
அடைகிறது உயிரே
எதை கொண்டு பாதுகாப்பாய் ...?

பசுமையான பயிர்கள்
ஒன்றை ஒன்று உரசுதடி
உன் நினைவுகளும் என்னோடு
ஒன்றை ஒன்று உரசும் போது
என் இதயத்திலும் பசுமை
புரட்சி தானடி ....!!!
+
+
கே இனியவன்
வயல் காற்று கிராமிய காதல்
காதலன் ஏக்க கவிதை 07

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: வயல் காற்று கிராமிய காதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum