தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» காலம் கற்றுத் தந்த பாடம்…!
by rammalar

» வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
by rammalar

» கைவிடுதல் – கவிதை
by rammalar

» வேண்டும் – கவிதை
by rammalar

» மிருக உவமை…! – கவிதை
by rammalar

» அது ஒரு காதல் அலை…! – கவிதை
by rammalar

» காதலைக் கற்றுத் தந்தாள் – கவிதை
by rammalar

» நகை – கவிதை
by rammalar

» தலையெழுத்து – கவிதை
by rammalar

» சபதம் எடுப்போம்! -கவிதை
by rammalar

» செத்த மீன்களின் கண்களில் நீலக்கடல்!
by rammalar

» காலத்தில் - கவிதை
by rammalar

» முரண்கள்- கவிதை
by rammalar

» வீழ்வதற்கல்ல! - கவிதை
by rammalar

» மீன்கள்- கவிதை
by rammalar

» கண்ணம்மா – கவிதை
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இம்மாதம் வெளியாகும் ஓவியாவின் புதிய படம்
by rammalar

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by rammalar

» மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
by rammalar

» ஏசுதாஸிற்கு பத்மநாப கோயில் அனுமதி
by rammalar

» முன்னோரிடம் நல்லாசி பெறுவோம் இன்று மகாளய அமாவாசை
by rammalar

» சஸ்பென்ஷன்’ பாலம்
by rammalar

» புஷ்கர ஸ்ரீரங்கத்து பழமொழிகள்
by rammalar

» பதுங்கு குழிக்கு கூர்க்கா போட்டது தப்பு மன்னா ! –
by rammalar

» செவ்’வாய்’ தோஷம் இருந்தால் ‘லிப்ஸ்டிக்’ போடக்கூடாது…!!
by rammalar

» பத்துப்பாட்டு பாடறேன்னு சொல்லிட்டு குத்துப்பாட்டு பாடறீங்களே...?
by rammalar

» இன்னுமா உப்பு கூட பார்க்க தெரியல!
by rammalar

» மனைவி சாப்பாட்டை மருந்து மாதிரி சாப்பிடுவேன்...!!
by rammalar

» இப்ப புரியுதா யாரு "தைரியசாலி" ன்னு...
by rammalar

» மனைவியைத் திட்டிக்கிட்டிருந்தேன்....!!
by rammalar

» தலைவருக்கு எது அலர்ஜி?
by rammalar

» எந்த அணியில் இருக்கிறோம் என்பதை மறந்துட்டாராம்...!!
by rammalar

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிநாடியரசர் இனியவன்

» புதுச்சேரியில் சி.பி.ஐ. கிளை அலுவலகம் அமைக்கவேண்டும் கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தல்
by rammalar

» குழந்தை புகைப்படத்தை வெளியிட்டார், செரீனா
by rammalar

» பிறந்து கொண்டிருந்தேன்
by gsgk.69

» பிறந்து கொண்டிருந்தேன் - கவிதை. - க. ச. கோபால கிருஷ்ணன், நிறை இலக்கியவட்டம், ஹைதெராபாத்.
by gsgk.69

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிநாடியரசர் இனியவன்

» கவிநாடியரசர் இனியவன்
by கவிநாடியரசர் இனியவன்


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உதாரண மனூஷி! - மேரி உல்ஸ்டோன்கிராஃப்ட்

View previous topic View next topic Go down

உதாரண மனூஷி! - மேரி உல்ஸ்டோன்கிராஃப்ட்

Post by நாஞ்சில் குமார் on Thu Jul 24, 2014 10:09 pm

[You must be registered and logged in to see this image.]

மேரி உல்ஸ்டோன்கிராஃப்ட். ஆங்கில எழுத்தாளர்... தத்துவவியலாளர்... கல்வியாளர்... பெண்ணுரிமைப் போராளி!

1759 ஏப்ரல் 27... லண்டனில் பிறந்தார் மேரி உல்ஸ்டோன்கிராஃப்ட். எட்வர்ட் ஜான் உல்ஸ்டோன்கிராஃப்ட், எலிசபெத் டிக்ஸன் தம்பதிக்குப் பிறந்த 7 குழந்தைகளில் இரண்டாவது குழந்தை மேரி. குடித்துவிட்டு, வன்முறையில் ஈடுபடக்கூடியவராக இருந்தார் மேரியின் அப்பா. நிலையான வருமானம் இல்லாமல் குடும்பம் மிகவும் சிரமப்பட்டது.

அப்பாவின் நடத்தையும் கடினமான வீட்டு வேலைகளும் மேரியை களைப்புறச் செய்தன. வீட்டை விட்டு வெளியேறி, வேலை செய்து, வருமானம் ஈட்ட முடிவு செய்தார் மேரி. பணக்காரக் குடும்பத்தில் குழந்தைகளுக்குக் கல்வி சொல்லித் தரும் வேலையில் சேர்ந்தார். ஓரளவு வருமானமும் வந்தது.

அடுத்தடுத்து அம்மாவும் அப்பாவும் இறந்து போக, சகோதரிகளிடம் வந்து சேர்ந்தார் மேரி. ஃபானி பிளட் என்ற அருமையான தோழியின் அறிமுகம் கிடைத்தது. ஃபானி, மேரி, அவரது சகோதரிகள் சேர்ந்து ஒரு பள்ளியை ஆரம்பித்தனர். குழந்தைகளுக்கான கல்வியில் பலவிதப் பரிசோதனைகளைச் செய்து பார்த்தார்... முன்னேற்றங்களைக் கொண்டுவந்தார் மேரி. பெண் குழந்தைகளுக்கான கல்வி குறித்து குறிப்புகளையும் எழுதி, வெளியிட்டார்.

1785ல், மேரியின் அன்புத் தோழி ஃபானி திடீரென இறந்து போனார். நிலைகுலைந்து போனார் மேரி. அயர்லாந்தில் உள்ள ஒரு குடும்பத்தில் கல்வி சொல்லிக் கொடுக்கும் வேலைக்குச் சென்றார். அப்போதுதான் சமூகத்தில் பெண்கள் நிலை எப்படி இருக்கிறது என்பதை உணர ஆரம்பித்தார். படிப்பு, வசதி எல்லாம் இருந்தாலும் கூட அவர் வேலை செய்த வீட்டில் உள்ள எஜமானி, எஜமானருக்கு இணையாக நடத்தப்படவில்லை என்பதைப் பார்த்தார்.

வீட்டுப் பொறுப்புகளிலும் குழந்தைகளின் பராமரிப்பிலும் பெண்ணே முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை இருந்தது. ஆண்களுக்கு அதுபோன்ற எந்தவித நிர்பந்தங்களும் சமூகம் கொடுக்கவில்லை. பெண்ணாகப் பிறந்ததால் இதுதான் தலைவிதி என்று ஏற்றுக்கொண்டு வாழ மேரி தயாராக இல்லை. பெண்ணின் முன்னேற்றத்தில் குடும்பம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்று எண்ணினார். சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பு, பெண்ணிய சிந்தனைகள் துளிர்க்க ஆரம்பித்த காலகட்டத்தில் மேரியின் சிந்தனைகள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவையாக இருந்தன.

3 ஆண்டுகளுக்குப் பிறகு லண்டன் திரும்பினார் மேரி. ஜோசப் ஜான்சன் புதுமையான கருத்துகளை ஆதரிக்கக்கூடிய பதிப்பாளராக இருந்தார். அவருடைய பத்திரிகையில் தொடர்ந்து மேரி தன்னுடைய கருத்துகளை ஆழமாக எழுதி வந்தார். நான்கே ஆண்டுகளில் ‘பெண்களின் உரிமைகள்’ என்ற தலைப்பில் ஒரு பெரிய புத்தகமாக அந்தக் கட்டுரைகள் வெளிவந்தன. ஏராளமான பாராட்டுகளையும் விவாதங்களையும் கிளப்பியது அந்தப் புத்தகம்.

‘எவ்வளவோ திறமை இருந்தும் வீட்டு வேலைகளை மட்டுமே தொடர்ச்சியாகச் செய்துகொண்டிருக்கும் பெண்கள் மிகுந்த மன அழுத்தத்துக்கு உள்ளாகிறார்கள். இந்த அழுத்தத்தில் இருந்து அவர்களை வெளிக்கொண்டு வர வேண்டும் என்றால், குடும்பத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமையும் வேலையும் வழங்கப்பட வேண்டும். பெண்களின் முன்னேற்றத்துக்கு கல்வியே ஆதாரம். ஆணுக்கு இணையாகப் பெண்ணுக்கும் கல்வி வழங்க வேண்டும்’ என்று அந்தப் புத்தகம் வலியுறுத்தியது. அதே போல ஆண்கள் உரிமைகளுக்கான புத்தகம் ஒன்றையும் எழுதி, வெளியிட்டார் மேரி.ஸ்வீடன், நார்வே, டென்மார்க் நாடுகளுக்குப் பயணம் செய்து, பயணக்கட்டுரைகளையும் எழுதி, நூலாக வெளியிட்டார். இது மிகவும் பிரபலமான புத்தகமாக இருந்தது.

1792ல் நண்பர்களைச் சந்திப்பதற்காக பிரான்ஸ் சென்றார் மேரி. கேப்டன் கில்பர்ட் இம்லே அறிமுகம் கிடைத்தது. இருவரும் விரைவில் காதலர்களாக மாறினார்கள். அன்புக்கு அடையாளமாக ஒரு குழந்தையும் பிறந்தது. தன்னுடைய தோழியின் நினைவாக ஃபானி என்றே பெயர் சூட்டினார். குழந்தை பிறந்த பிறகு இம்லே, மேரியை விட்டு விலக ஆரம்பித்தார். உண்மையான அன்பைச் செலுத்திய மேரியால் இதைத் தாங்கிக்கொள்ள இயலவில்லை. பேசிப் பார்த்தார்.

நிலைமை சுமுகமாகவில்லை. ‘சிறிது காலம் விலகியிருக்கலாம்’ என்ற முடிவில், பல இடங்களுக்கும் பயணம் செய்தார். பிரெஞ்சுப் புரட்சியைப் பற்றி நிறைய கட்டுரைகளை எழுதினார். அவர் திரும்பி வந்தபோது, இம்லே முற்றிலும் விலகி விட்டிருந்தார். வாழ்க்கையில் எத்தனையோ இன்னல்களை அனுபவித்து வந்தாலும் துணிச்சலாகப் பல விஷயங்களை எதிர்கொண்டாலும், மேரியால் காதல் தோல்வியை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. கடினமான மனஅழுத்தத்துக்கு உள்ளானார். விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற போது, காப்பாற்றப்பட்டார்.

இட மாற்றம் மன மாற்றத்தைக் கொண்டு வரும் என்ற நம்பிக்கையில் குழந்தையுடன் லண்டன் வந்தார் மேரி. ஏற்கனவே இருந்த மன அழுத்தம் அவர் உறுதியைக் கலைத்தது. தேம்ஸ் நதியில் குதித்தார். யாரோ ஒருவர் அவரைக் காப்பாற்றி, கரை சேர்த்தார். கொஞ்சம் கொஞ்சமாக அவரது மன அழுத்தம் குறைந்தது. குழந்தை மீது அதிக கவனமும் அன்பும் செலுத்த ஆரம்பித்தார் மேரி. குழந்தை வளர்ப்பு பற்றி புத்தகம் எழுதினார். குழந்தைகளுக்காகவும் புத்தகம் எழுதினார். வில்லியம் காட்வின், தாம்ஸ் பெய்ன், ஜோசப் ஜான்சன் போன்ற எழுத்தாளர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. நிறைய எழுதினார். விவாதித்தார்.  

வில்லியம் காட்வினும் மேரியும் பல விஷயங்களில் ஒருமித்த கருத்துடன் இருந்தார்கள். மேரியின் எழுத்துகள் மீதும், கருத்துகள் மீதும் வில்லியம் காட்வினுக்கு மிகப்பெரிய மரியாதை இருந்தது. மீண்டும் காதல் கனிந்தது. கர்ப்பமானார் மேரி. திருமணம் என்ற பந்தத்தின் மீது நம்பிக்கை இல்லாவிட்டாலும், கர்ப்பம் காரணமாக இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். தங்கள் சுதந்தரத்தை நிலைநாட்டிக்கொண்டும் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்திக் கொண்டும் மகிழ்ச்சியாக வாழ ஆரம்பித்தனர்.

1797 ஆகஸ்ட் 30... இரண்டாவது பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார் மேரி. ஆனால், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டார். அந்தக் காலத்தில் சரியான மருத்துவ வசதி இல்லாத தால் குழந்தை பிறந்த 10 நாட்களில் இறந்து போனார் மேரி. ‘‘இந்த உலகத்தில் மேரிக்கு இணையானது எதுவும் இல்லை. எங்கள் இருவருக்குமான உறவு நீண்ட காலம் மகிழ்ச்சியாக நிலைத்திருக்கும் என்று எண்ணினேன். மேரியுடனான மகிழ்ச்சியான வாழ்க்கையை இனி ஒருநாளும் நான் பெறப்போவதில்லை’’ என்று நண்பருக்குக் கடிதம் எழுதினார் வில்லியம் காட்வின்.

அடுத்த ஆண்டு மேரியின் வாழ்க்கையை புத்தகமாகக் கொண்டு வந்தார் காட்வின். அதுவரை மேரியின் எழுத்து களையும் கருத்துகளையும் மட்டுமே அறிந்திருந்தவர்கள், மேரியின் துயர வாழ்க்கையைப் படித்து அதிர்ந்து போனார்கள். மேரியின் இரண்டாவது மகள், மேரி காட்வின் புகழ்பெற்ற எழுத்தாளராக விளங்கினார். அவருடைய கணவரே உலகப் புகழ்பெற்ற கவிஞரும் எழுத்தாளருமான ஷெல்லி!மேரி ஷெல்லி மட்டுமல்ல... பிற்காலத்தில் எழுத வந்த பெண்களுக்கும் பெண் உரிமைகளுக்காகப் போராடியவர்களுக்கும் முன்னோடியாகவும் உதாரண மனுஷியாகவும்  கம்பீரமாக நிற்கிறார் மேரி உல்ஸ்டோன்கிராஃப்ட்!

‘‘எவ்வளவோ திறமை இருந்தும் வீட்டு வேலைகளை மட்டுமே தொடர்ச்சியாகச் செய்துகொண்டிருக்கும் பெண்கள் மிகுந்த மன அழுத்தத்துக்கு உள்ளாகிறார்கள்...’’

மேரி மொழிகள்


ஆண்கள் மீது ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று நான் சொல்லவில்லை... உங்கள் மீதே ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்கிறேன்.

திடமாகவும் தொலைநோக்குக் கொண்டதாகவும் இருக்கும் பெண்களின் மூளை, கண்மூடித்தனமான கீழ்ப்படிதலில் சுருங்கிப் போகும்.

தகுதி என்பது சமத்துவத்தில்தான் மலரும்!

நன்றி: தினகரன்
avatar
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

Re: உதாரண மனூஷி! - மேரி உல்ஸ்டோன்கிராஃப்ட்

Post by முரளிராஜா on Sat Aug 30, 2014 9:15 am

மேரி உல்ஸ்டோன்கிராஃப்ட் பற்றி அறியத்தந்தமைக்கு நன்றி

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: உதாரண மனூஷி! - மேரி உல்ஸ்டோன்கிராஃப்ட்

Post by செந்தில் on Sat Aug 30, 2014 12:56 pm

அறிய தந்தமைக்கு நன்றி அண்ணா

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum