தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» மழை வந்தது ஏன்?
by rammalar

» முருகனுக்கு அப்பாவான சிவாஜி
by rammalar

» ஓஷோவின் குட்டிக் கதைகள..
by ந.கணேசன்

» அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
by rammalar

» தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
by rammalar

» இடது கையால் தானம்…
by rammalar

» போதை குறையாமல் இருக்க….!! –
by rammalar

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by rammalar

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by rammalar

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by rammalar

» அவசரப்படாதே மச்சி!!
by rammalar

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by rammalar

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by rammalar

» நமக்கு வாய்த்த தலைவர்
by rammalar

» கடல் போல் இருக்கும் மனைவி!
by rammalar

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by rammalar

» ரதிதேவியா நடிக்கிறது யாரு மேடம்...?
by rammalar

» பாப்பி - நகைச்சுவை
by rammalar

» நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை
by rammalar

» மனம், பாசம் – கவிதை
by rammalar

» முல்லாவின் கதை.
by ந.கணேசன்

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» ராஜஸ்தானில் காந்தி ஜெயந்திக்கு லீவு இல்லை
by rammalar

» சுவையான மீன் இனங்களை பெருக்க மேற்கு வங்க அரசு தீவிரம்
by rammalar

» இந்திய ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்
by rammalar

» கொடிய வால் நட்சத்திரங்கள் ஒருநாள் பூமியை தாக்கி பயங்கர அழிவுகளை ஏற்படுத்தும் - நாசா
by rammalar

» இஸ்லாமிய பெண்ணின் பர்தாவை நீக்கிய குற்றத்திற்காக ரூ.54 லட்சம் இழப்பீடு
by rammalar

» திரைப்பட தணிக்கை வாரியத்தின் உறுப்பினர்களாக நடிகைகள் கவுதமி- வித்யாபாலன் நியமனம்
by rammalar

» ‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்
by rammalar

» தனி மனிதன் தருகின்ற தண்டனை பற்றிய கதை
by rammalar

» வைரலாகும் சமந்தா நாக சைத்தன்யாவின் திருமண அழைப்பிதழ்!!
by rammalar

» கூட்டத்தில் ஒருத்தன் – திரைப்பட விமரிசனம்
by rammalar

» துணை கலெக்டராக பொறுப்பேற்றார் சிந்து
by rammalar

» ஜெயலலிதா பாணியில் எடப்பாடி பழனிசாமி சொன்ன குட்டிக்கதை!
by rammalar

» சைகை மொழியில் உருவான தேசிய கீதம்; நடிகர் அமிதாப் பச்சன் நாளை வெளியிடுகிறார்
by rammalar

» பாபர் மசூதி விவகாரம்; சர்ச்சைக்குரிய பகுதியில் ராமர் கோவிலை கட்டலாம் ஷியா வாரியம் அபிடவிட்
by rammalar

» சிறந்த மருத்துவ முன்னேற்றம்: நானோ சிப் மூலம் சேதமடைந்த உறுப்புகளை வளர வைக்க முடியும்
by rammalar

» அம்மா ! நீயும் நானும்
by nakasundaram

» இனி இணைய தளங்களை தமிழிலேயே திறக்கலாம்.
by nakasundaram

» கூழாங்கற்கள்...!!
by ந.கணேசன்


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Page 10 of 11 Previous  1, 2, 3 ... , 9, 10, 11  Next

View previous topic View next topic Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Jul 16, 2014 1:29 pm

First topic message reminder :




பெண்ணே நீ யார் ....?
-------------------------------

என் கண்ணில் மின்னலாய்...
பட்டவளே - பெண்ணே ....!!!

நீ - பிரம்மன் படைப்பில் ...
தங்க மேனியை தாங்கிய
நான் கண்ட தெய்வீக தேவதையா ...?

தோகை விரித்தாடும் மயில்
அழகியா ..?

எனக்காகவே இறைவனால்
படைக்கப்பட்ட ....
மானிட பெண் தாரகையோ ...?

கண்ட நொடியில் வெந்து
துடிக்குதடி -மனசு
பெண்ணே நீ யார் ....?

குறள் - 1081

தகையணங்குறுத்தல்

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு.
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down


Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Aug 17, 2015 6:07 pm

பனிபோல் உருகுகிறாய் ,,,,?

மனமே ....
என்னை நினைக்காமல் ....
இருக்கும் என்னவனின் ....
மனம் கல்லாய் இருக்கும் ...
போது மனமே நீமட்டும் ....
ஏன் துடிக்கிறாய் ....?

கல் நெஞ்சுடைய .....
என்னவனுக்காய் ....
என் மனமே எதற்கு ....?
பனிபோல் உருகுகிறாய் ,,,,?
+
குறள் 1291
+
நெஞ்சொடுபுலத்தல்
+
அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீஎமக்கு ஆகா தது.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 211
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Aug 17, 2015 6:24 pm

மனமே உனக்கு தெரிகிறது ...!!!

ஓ மனமே ....
உனக்கு தெரிகிறது ...
என்னவன் நம்மை ....
நினைக்காதபோதும் ...
எம்மில் பகையில்லை ...!!!

மனசே .....
நாம் என்னவனிடம் ....
சென்றால் அவன் ....
மன்னிப்பான் என்று ....
தெரிந்ததாலோ எனக்கு ...
முன் நினைக்கிறாயோ....?

+
குறள் 1292
+
நெஞ்சொடுபுலத்தல்
+
உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 212
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Aug 17, 2015 6:38 pm

என் அனுமதியில்லாமல் ...

என் மனமே ....
என் அனுமதியில்லாமல் ...
எப்படி எனவனிடம் -நீ
அடிகடி சென்று வருகிறாய் ...?

இந்த உலகில் .....
இரக்கமில்லாத மனசுக்கு ....
இரக்கத்தை கற்பிக்க - நீ
சென்றாயோ ....?

+
குறள் 1293
+
நெஞ்சொடுபுலத்தல்
+
கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ
பெட்டாங்கு அவர்பின் செலல்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 213
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Aug 17, 2015 6:52 pm

எனைவனை கண்டவுடன் ....

என் மனசே ....
எனைவனை கண்டவுடன் ....
இன்பம் கொள்ள ஓடுகிறாய் ....
என்னவனின் தவறுகளை ....
புரிந்தால் நீ அவரை ....
அணுகமாட்டாய்......!!!

ஏதோ என் மனமே ....
நீயும் அவரும் பட்டுதெளி ....
என்னால் முடியாது மனசே ....
உன்னை சமாதானபடுத்த....!!!

+
குறள் 1294
+
நெஞ்சொடுபுலத்தல்
+
இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண் மற்று.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 214
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Aug 18, 2015 12:05 am

பிரிந்துவிடுவாரோ

என் மனம்படும் ......
வேதனையை கேளீர் ....
என்னவன் அருகில் இருந்தால் ...
பிரிந்துவிடுவாரோ என்று .....
ஏங்கும் - அவர் இல்லை என்றால் ....
இல்லையே என்று ஏங்கும் ....!!!

என்னவன் இருந்தாலும் .....
இல்லாவிட்டாலும் ....
என் மனம் வேதனையில் ...
வேந்தே போகிறது .....!!!
+
குறள் 1295
+
நெஞ்சொடுபுலத்தல்
+
பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 215
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Aug 18, 2015 12:13 am

நினைவுகள் கொல்லும்.....!!!

தனிமை ஒரு கொடுமை
என்னவனை தனியே ...
இருந்து நினைக்கும்போது ....
அதன் வலியோ கொடுமை ....!!!

காதலனை பிரிந்து ...
வாழும் காதலியை ....
அணு அணுவாய் ......
நினைவுகள் கொல்லும்.....!!!

+
குறள் 1296
+
நெஞ்சொடுபுலத்தல்
+
தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததென் நெஞ்சு.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 216
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Aug 18, 2015 12:24 am

கண்டவுடன் என் மனம் ....

என்னவனை ....
மறக்கமுடியாமல் ....
அவஸ்தைப்படும் ...
என் மனமோ ஒரு ....
மடந்தை ......!!!

என்னவனை .......
கண்டவுடன் என் மனம் ....
நாணத்தை மறந்து ....
கூடலையே மனமும் ....
நாடுதே .....!!!
+
குறள் 1297
+
நெஞ்சொடுபுலத்தல்
+
நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்
மாணா மடநெஞ்சிற் பட்டு.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 217
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Aug 18, 2015 12:33 am

என்னவன் பிரிவு வதைக்கிறது

என் உயிரோடு கலந்த ....
காதலை கொண்ட மனமே .....
என்னவன் பிரிவு உன்னை ...
வதைக்கிறது உண்மையே ....!!!

மனமே ....
என்னவனை இழிவுபடுத்தாதே ....
என்னவனை கண்டதும் ....
கலவி கொள்வாய் -நீ
தலைகுனிவாய் .....!!

+
குறள் 1298
+
நெஞ்சொடுபுலத்தல்
+
எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 218
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Aug 18, 2015 12:41 am

துன்பத்தை தாங்குவதே மனதின் கடமை

துன்பத்தை தாங்குவதே ......
மனதின் கடமை ....
துன்பத்தை தாங்காத ......
மனமொன்று இருந்து ....
என்ன பயனுண்டு ......?

ஒருவனுக்கு ....
உற்ற தோழன் அவனின் ....
மனமே - அதுவே ....
மனமுடைந்தால் -மனம்
என்ற ஒன்றிருந்து பயனில்லை .....!!!
+
குறள் 1299
+
நெஞ்சொடுபுலத்தல்
+
துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 219
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Aug 18, 2015 1:01 am

என்னுடைய மனமே ....
என்னுடைய மனமே ....
எனக்கு உறுதுணையாக....
இல்லாதபோது - என் மனமே
எனக்கே எதிரியாக உள்ளபோது ....!!!

என் உறவுகள் எனக்கு ....
உறவாக இல்லாது ....
எதிரியாக இருப்பது ......
புதிரான விடையமல்ல .....!!!
+
குறள் 1300
+
நெஞ்சொடுபுலத்தல்
+
தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 220
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Sep 08, 2015 9:33 am

ரசிப்போம் வா மனமே .....!!!

ஏய் மனமே ....
நானும் நீயும் என்னவனுடன் ....
கூடுவோம் வா மனமே வா ....
என்னவன் படும் வேதனையை ....
ரசிப்போம் வா மனமே .....!!!

அவசரபடாதே மனமே .....
அவரின் வேதனையை ....
ரசிக்கும் வரை கூடல் செய்யாதே
ஊடல் செய்வோம் மனமே ....!!!


+
குறள் 1301
+
புலவி.
+
புல்லா திராஅப் புலத்தை அவர்உறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 221
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Sep 08, 2015 9:47 am

உணவுக்கு உப்பு அளவோடு ...

உப்பில்ல பண்டம் குப்பையில் ......
உப்பு அதிகமானாலும் குப்பையில் ...
உணவுக்கு உப்பு அளவோடு ....
இருப்பதுபோல் தான் ஊடலும் ....!!!

கூடலுக்கு முன் ஊடல் தேவை ....
ஊடலின்றிய கூடல் இன்பமில்லை ...
அளவுக்கு அதிகமான கூடல் ....
ஊடலில் சலிப்பை தரும் ....!!!

+
குறள் 1302
+
புலவி.
+
உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 222
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Sep 08, 2015 9:48 am

துன்பப்படுத்துவதற்கு சமன்

என்னவள் ஊடல் செய்கிறாள் ......
ஊடல் அதிகமாகின் கூடல் ....
செய்யணும் என் மனமே ....!!!

ஊடல் செய்த என்னவளை ...
கூடல் செய்யாமல் விடுவது ....
துன்பத்தில் இருக்கும் ஒருவரை ....
மேலும் துன்பப்படுத்துவதற்கு சமன்

+
குறள் 1303
+
புலவி.
+
அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 223
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Sep 08, 2015 9:49 am

நீரின்றி வாடும் பயிரை ...

என்னவளோடு ....
ஊடல் செய்தவளோடு ....
கூடல் செய்யாமல் விடின் ....!!!

நீரின்றி வாடும் பயிரை ...
அதன் ஆணிவேரோடு ...
அறுதெறிவதுபோல் ....
ஆகிவிடும் மனமே .....!!!

+
குறள் 1304
+
புலவி.
+
ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 224
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Sep 08, 2015 9:50 am

மலர்போன்ற கண்ணுடைய ....

ஒருவனின் அழகு உடலில் ....
அல்ல அவனது நற் குணங்களில் ...
தானே உள்ளது ......!!!

அந்த நற்குணத்தை ஆடவன் ....
மலர்போன்ற கண்ணுடைய ....
மனைவியின் ஊடலின் தாகத்தை ....
அறிந்த ஆடவனே உயர் மனிதன் ....!!!

+
குறள் 1305
+
புலவி.
+
நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை
பூஅன்ன கண்ணார் அகத்து.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 225
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Sep 08, 2015 10:15 am

இல்லாத காதல் வாழ்க்கை ....

பெரும் பிணி கொண்ட ஊடலும் ...
புதுமை கொண்ட புலவியும் ....
இல்லாத காதல் வாழ்க்கை ....
இன்பம் தரா காதலே ....!!!

ஏக்கமும் புதுமையும் ....
இல்லாத காதழ் வாழ்கை ....
முற்றி பழுத்த பழம் ....
பயனற்று அழுகி விழுவதும் ...
இளம் பிச்சு காய் பழுத்தது ...
போல் தெரிந்தாலும் வெம்பி ...
பழுத்தது போல் ஆகிவிடும் ....!!!

+
குறள் 1306
+
புலவி.
+
துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 226
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Sep 08, 2015 10:24 am

இன்பத்திலும் அது துன்பம் ....!!!

கூடலும் புணர்ச்சியும் ....
கூடிச்சென்றால் இன்பம் ....
இடையில் நின்றுவிட்டால் ....
ஏக்கமே மிஞ்சும் ....!!!

ஏக்கத்தோடு ....
கூடிகொண்டிருத்தல் ....
இன்பமாக இருந்தாலும் ....
இன்பத்திலும் அது துன்பம் ....!!!

+
குறள் 1307
+
புலவி.
+
ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவ தன்றுகொல் என்று.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 227
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Sep 08, 2015 10:34 am

அந்த காதலில் என்ன பயன் ....?

காதல் என்றால் துன்பம் ....
இருக்கத்தான் செய்யும் ....
என்னால் அவளும் ...
அவளால் நானும் ....
துன்பப்படுவதே காதல் ....!!!

துன்பத்தை உணராமல் ....
காதல் செய்தால் அந்த ,,,,
காதல் இன்பத்தை தராத ....
வெற்று காதல் உயிரே ....
அந்த காதலில் என்ன பயன் ....?

+
குறள் 1308
+
புலவி.
+
நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்
காதலர் இல்லா வழி.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 228
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by smanivasakam on Tue Sep 08, 2015 10:45 am

திருக்குறள் கவிதைகள் அனைத்தும் பிரமாதம் போங்க!
avatar
smanivasakam
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 34

Back to top Go down

Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Sep 08, 2015 10:46 am

குளிர்ந்த நீர்போல் இருக்கிறது .

நிழலின் கீழ் இருக்கும் -நீர்
குளிர்ந்த தண்ணீராகும் ....
பருக பருக இன்பம் தான் ....!!!

என்னவனே ....
அன்புகொண்ட உன் கூடல் ....
குளிர்ந்த நீர்போல் இருக்கிறது ....
பருக பருக இன்பம் தான் ...!!!

+
குறள் 1309
+
புலவி.
+
நீரும் நிழலது இனிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 229
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Sep 08, 2015 10:49 am

திருக்குறள் கவிதைகள் அனைத்தும் பிரமாதம் போங்க!

நன்றி நன்றி

இது கவிதை மரபில் ஒரு சின்ன புது முயற்சி
அத்துடன் முதல் முயற்சியும் தான் இவ்வாறு
கவிதை வெளிவந்த்ததை யான் அறியேன்

மிக்க நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Sep 08, 2015 10:55 am

நச்சரிக்கிறதே மனசு ....!!!

இன்பத்தை தணிக்காத ....
காதலுடன் இணைந்திருப்பது ....
தவிர்க்க விட்டு வேடிக்கை ....
பார்ப்பதுபோன்ற செயல் ....!!!

தவிர்க்க விட்டு வேடிக்கை ....
பார்த்தாலும் கூடு கூடு ....
என்று நச்சரிக்கிறதே மனசு ....!!!

+
குறள் 1310
+
புலவி.
+
ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்
கூடுவேம் என்பது அவா.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 230
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by ஸ்ரீராம் on Tue Sep 08, 2015 10:58 am

@கவிப்புயல் இனியவன் wrote:
திருக்குறள் கவிதைகள் அனைத்தும் பிரமாதம் போங்க!

நன்றி நன்றி

இது கவிதை மரபில் ஒரு சின்ன புது முயற்சி
அத்துடன் முதல் முயற்சியும் தான் இவ்வாறு
கவிதை வெளிவந்த்ததை யான் அறியேன்

மிக்க நன்றி நன்றி

உண்மைதான் அண்ணா. இது பெரிய முயற்சிதான். முன்பே கவியருவி அவர்களும் குறள்லில் கவிதை வடித்தது நினைவுக்கு வருகிறது.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 37648 | பதிவுகள்: 230846  உறுப்பினர்கள்: 3517 | புதிய உறுப்பினர்: Balaji0507








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Sep 08, 2015 11:06 am

உண்மைதான் அண்ணா. இது பெரிய முயற்சிதான். முன்பே கவியருவி அவர்களும் குறள்லில் கவிதை வடித்தது நினைவுக்கு வருகிறது.

ஆம்

அது திருக்குறள் சென்றியூவோ ...?
அதுவும் நான் எழுதினேன் ...
அதுவும் ஒரு வகைதான்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Sep 12, 2015 11:46 am

நான் நாடமாட்டேன் .....!!!

என்னவனின் ....
அழகு மார்பை ....
நான் வெறுக்கிறேன் .....
வீதியில் வந்தவர்கள் ....
ரசித்த அந்த மார்பை
வெறுக்கிறேன் .....!!!

எச்சில்
பட்ட என்னவனின் .....
மார்பை இனிமேல் நான் ...
நாடமாட்டேன் .....!!!


+
குறள் 1311
+
புலவி நுணுக்கம்
+
பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 231
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Page 10 of 11 Previous  1, 2, 3 ... , 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum