தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அதிசய விஞ்ஞானி ஜி.டி.நாயுடு

View previous topic View next topic Go down

அதிசய விஞ்ஞானி ஜி.டி.நாயுடு

Post by செந்தில் on Wed Oct 24, 2012 8:16 pm

[You must be registered and logged in to see this image.]
அதிசய விஞ்ஞானி ஜி.டி.நாயுடு: அரசு ஊக்கம் தராததால் ரேடியோவை உடைத்து நொறுக்கினார்
அதிசய மனிதர், விஞ்ஞான மேதை என்று புகழப்பட்டவர் ஜி.டி.நாயுடு. கோவையை சேர்ந்த தொழில் அதிபராக விளங்கிய அவர் தன்னுடைய அயராத உழைப்பால் பல அரிய பொருட்களை கண்டுபிடித்து இவ்வுலகிற்கு வழங்கினார்.

கோவை மாவட்டம் கலங்கல் என்ற கிராமத்தில் 31-3-1894-ல் ஜி.டி.நாயுடு பிறந்தார். அவருடைய தந்தை பெயர் கோபால் நாயுடு. சிறு வயதிலேயே தந்தையை இழந்தார். பிறகு மாமனார் வீட்டில் வளர்ந்தார். ஆனால் அங்கு அவரால் சரியாகப் படிக்க முடியவில்லை. எனவே, அவரது கவனம் தொழில் துறையில் திரும்பியது.

வாலிப வயதில் மருந்து வியாபாரம் செய்தார். பின்னர் மோட்டார் சைக்கிள் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். தனது விடாத முயற்சியாலும், தொழில் நுட்ப திறமையாலும் விரைவில் பஸ் அதிபர் ஆனார். அவரது முதல் பஸ் பழனிக்கும் _ பொள்ளாச்சிக்கும் இடையே ஓடியது. அதை ஓட்டிய டிரைவரும் அவரே.

பிறகு படிப்படியாக முன்னேறி பல தொழிற்சாலைகளை நிறுவினார். பல புதிய இயந்திரங்களையும், விஞ்ஞான கருவிகளையும் கண்டுபிடித்தார். ஜி.டி.நாயுடு பல வெளிநாடுகளுக்கு சென்றிருக்கிறார். ஜெர்மன் சென்றிருந்தபோது, ஹிட்லரை சந்தித்துப் பேசினார்.

வெளிநாட்டு தொழில் நுட்ப திறன்களை நேரில் கண்டறிந்து, அதைப்போன்ற தொழில் நுட்ப கருவிகளை உருவாக்கினார். அப்படி அவர் உருவாக்கிய தொழில் கருவிகள் அனைத்தையும் ஒன்று சேர்த்து கோவையில் விஞ்ஞான கூடமாக அமைத்தார்.

இது இன்று எல்லோரும் கண்டுகளிக்கும் காட்சிக் கூடமாக இருக்கிறது. குறைந்த விலையில், ஒரே நாளில் வீடு கட்டி முடித்துக் காட்டியது அவரது சிக்கன திறனுக்கும், தொழில் திறமைக்கும் எடுத்துக்காட்டு ஆகும். தொழில் மேதையான ஜி.டி.நாயுடு, விவசாயத் துறையிலும் வல்லவர். அவர் கண்டுபிடித்த பப்பாளி மரங்கள், பூசணிக் காய் அளவுள்ள பப்பாளிக்காய்களை கொடுத்தது. அதோடு அவர் கண்டு பிடித்த அவரைச்செடி, மரம் போல் வளர்ந்து நல்ல பலனை தந்தது. அதிகப்படிப்பு படிக்காமலேயே, பல அரிய காரியங்களை ஆற்றி அதிசய மனிதர் என்று பெயர் பெற்றார். இவருக்கு சித்த வைத்தியத்தில் மிகுந்த ஆர்வம் உண்டு. சித்த வைத்திய ஆராய்ச்சியும் செய்து வந்தார்.

ஜி.டி.நாயுடு போட்டோ கலையில் அதிக விருப்பம் உள்ளவர். அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில், மேல் நாட்டு வகையைச் சேர்ந்த சிறிய காமிராவால், அவரே படம் எடுத்து விடுவார். இவரது பிரசிடெண்டு ஹாலில் பெரிய -பெரிய போட்டோக்கள் நிரம்பி உள்ளன. தனது கண்டுபிடிப்புகளுக்கு மத்திய அரசு ஊக்கம் அளிக்கவில்லை என்பதற்காக, 1953-ல் சென்னை கடற்கரையில் மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்தி, மறைந்த ஈ.வெ.ரா. பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் முன்னிலையில் ரேடியோக்களையும் மற்றும் பல விஞ்ஞான கருவிகளையும் உடைத்து நொறுக்கி பரபரப்பை உண்டாக்கினார்.

ஜி.டி.நாயுடுவுக்கு செல்லம்மாள், ரெங்கநாயகி என்று 2 மனைவிகள். முதல் மனைவிக்கு கிட்டம்மாள், சரோஜினி என்ற 2 மகள்களும், 2-வது மனைவிக்கு கோபால் என்ற ஒரே மகனும் பிறந்தார்கள்.

ஜனாதிபதி வி.வி.கிரியும், மறைந்த தலைவர் பெரியாரும் நண்பர்களாக இருந்தார்கள். 1973-ம் ஆண்டு இறுதியில் 80 வயது ஆனபோது ஜி.டி.நாயுடுவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. ரத்தக்கொதிப்பினாலும், வாத நோயினாலும் அவதிப்பட்டார். இதற்காக வேலூர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு ஒரு மாத காலம் சிகிச்சை பெற்றார். அதன் பிறகு கோவைக்கு திரும்பி வந்து வீட்டில் இருந்தவாரே சிகிச்சை பெற்றார்.

ஜி.டி.நாயுடு உடல் நலம் இல்லாமல் இருப்பதை அறிந்த ஜனாதிபதி வி.வி.கிரி, மனைவி சரசுவதி அம்மாளுடன் கோவைக்கு வந்து அவரை பார்த்து உடல் நலம் விசாரித்தார். அவருடன் ஜி.டி.நாயுடு பேசினார்.

4-1-1974 அன்று அதிகாலையில் ஜி.டி.நாயுடு உடல் நிலை மோசம் அடைந்தது. நினைவு இழந்தார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆயினும் சிகிச்சை பலன் இன்றி காலை 9-45 மணி அளவில் ஜி.டி.நாயுடு மரணம் அடைந்தார். உயிர் பிரிந்தபோது மனைவி ரெங்கநாயகி, மகன் கோபால், மகள்கள் கிட்டம்மாள், சரோஜினி, மருமகள் சந்திரலேகா ஆகியோர் அருகில் இருந்தார்கள்.

ஜி.டி.நாயுடுவின் உடல் அவர் வீட்டில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. தமிழக அரசு சார்பிலும், முதல்-அமைச்சர் கருணாநிதி சார்பிலும் ஜி.டி.நாயுடு உடல் மீது மாவட்ட கலெக்டர் சிவகுமார் மலர் வளையம் வைத்தார். தொழில் அதிபர்கள் ஜி.கே.சுந்தரம், ஜி.கே.தேவராஜ×லு, ஜி.ஆர்.கோவிந்தராஜ×லு, பி.ஆர்.ராம கிருஷ்ணன் மற்றும் பிரமுகர்கள் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

மாலையில் அவருடைய உடல் அலங்கரிக்கப்பட்ட தேரில் அவருடைய வீட்டுக்கு எதிரே உள்ள பிரசிடெண்டு மண்டபத்துக்கு கொண்டு போகப்பட்டது. இந்த இறுதி ஊர்வலத்தில், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் சுந்தர வடிவேலு, கோவை வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் ரெங்கசாமி, பழைய மந்திரி அவினாசிலிங்கம் செட்டியார் மற்றும் அனைத்துக் கட்சியினர் கலந்து கொண்டனர். பிரசிடெண்டு மண்டபத்தில், சிதை அடுக்கப்பட்டு இருந்தது. அதன் மீது, உடல் வைக்கப்பட்டது. சடங்குகள் நடந்த பின் சிதைக்கு, ஜி.டி.நாயுடுவின் மகன் கோபால் தீ மூட்டினார்.

தகனம் நடந்த இடத்தில் ஜி.டி.நாயுடுவுக்கு நினைவு சின்னம் அமைக்கப்பட்டது. ஜி.டி.நாயுடு மறைவுக்கு ஜனாதிபதி வி.வி.கிரி, கவர்னர் கே.கே.ஷா, முதல்-அமைச்சர் கருணாநிதி, முன்னாள் முதல்-அமைச்சர் பக்தவச்சலம், பெருந்தலைவர் காமராஜர் மற்றும் ம.பொ.சிவஞானம் (தமிழரசு கழகம்), ராமையா (இ.காங்), ராமமூர்த்தி (இ.கம்யூ), எம்.கல்யாணசுந்தரம் (வ.கம்யூ), ஜி.கே.சுந்தரம் (சுதந்திரா கட்சி), தொழில் அதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம் ஆகியோர் அனுதாப செய்தி வெளியிட்டார்கள்.

ஜனாதிபதி வி.வி.கிரி தனது அனுதாப செய்தியில் கூறியிருந்ததாவது:-

40 ஆண்டுகளுக்கு மேலாக நான் அறிவேன். புதிய விஞ்ஞான கருவிகளை கண்டுபிடிப்பதில் அவர் ஆற்றல் மிக்க மேதை. திறமையிலும், புத்தி கூர்மையிலும் அவர் லட்சத்தில் ஒருவர் என்று, விஞ்ஞானி சி.வி. ராமன் அடிக்கடி கூறுவார். ஏழைகளிடம் அன்பும், இரக்கமும் கொண்டவர். அவர்கள் நலனுக்காக பாடுபட்டு வந்தார். அவருடைய மரணம், தேசத்திற்கு பெரும் இழப்பு.

இவ்வாறு ஜனாதிபதி கிரி கூறினார்.

முதல்_அமைச்சர் கருணாநிதி விடுத்த அனுதாப செய்தியில் கூறி இருந்ததாவது:-

புதுமையாக சிந்தனை செய்யக்கூடிய விஞ்ஞானியை தமிழகம் இழந்து விட்டது. துணிவுடன் கருத்துக்களை சொல்லக்கூடிய பெரியவர் அவர். அவருடைய மறைவு பெரும் இழப்பாகும். என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேற்கண்டவாறு கருணாநிதி கூறியிருந்தார்.

பவானி நகரின் அருகே பவானி ஆறும், காவிரி ஆறும் கலக்கும் இடமான கூடுதுறையில் ஜி.டி.நாயுடு அஸ்தியை மகன் கோபால் கரைத்தார். கோவையில் அவினாசி ரோட்டில் குடியிருந்த ஜி.டி.நாயுடு தனது வீட்டு எதிரிலேயே பெரிய வளாகம் ஒன்றை அமைத்தார். அங்கு மிகப்பெரிய காட்சிக்கூடம், கலை அரங்கம், திருமண மண்டபம் போன்றவை இடம் பெற்றுள்ளன. பிரசிடெண்ட் ஹால் என்று அது அழைக்கப்படுகிறது.

இந்த காட்சி கூடத்தில் ஜி.டி.நாயுடு கண்டுபிடித்த அனைத்து கருவிகள், பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவருடைய சாதனைகளை சித்தரிக்கும் புகைப்படங்களுடன் அலங்கரிக்கப்படுகின்றன. நுழைவு வாயிலில் அமைந்துள்ள இரு பெரிய கண்ணாடிகள் நம்மை திகைப்பில் ஆழ்த்திவிடும். (நம் உருவத்தை நாமே நம்ப முடியாத அளவுக்கு குட்டை நெட்டையாக காட்டும்). வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள், கல்லூரி, பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் இந்த காட்சிக்கூடத்தை பார்க்காமல் ஊர் திரும்பமாட்டார்கள்.

அந்த அளவுக்கு அது பிரசித்தி பெற்று விளங்குகிறது. ஜி.டி.நாயுடுவின் அயராத உழைப்புக்கும், கண்டுபிடிப்புக்கும் சான்று கூறுவது போல அது அமைந்திருக்கிறது.
நன்றி — Sathishkumar
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: அதிசய விஞ்ஞானி ஜி.டி.நாயுடு

Post by பூ.சசிகுமார் on Wed Oct 24, 2012 10:33 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா
avatar
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

Re: அதிசய விஞ்ஞானி ஜி.டி.நாயுடு

Post by ஸ்ரீராம் on Thu Oct 25, 2012 11:06 am

நம்ம நாடு ஒரு பக்கம் வீணா போவதற்கு இது ஒரு நல்ல உதாரணம்... நல்ல திறமையானவர்களை, படைப்பாளிகளை, விஞ்ஞானிகளை ஊக்குவிக்க இங்கே அரசு முன் வருவது இல்லை. இதற்கு விஞ்ஞானி ஜி.டி.நாயுடு, சுழல் பந்து வீச்சாளர் முரளிதரன் தொடங்கி நேற்று வந்த மின்சார பிரச்சனையை தீர்க்கும் கருவி முதல் அனைத்தும் சாட்சிகள்....

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233201  உறுப்பினர்கள்: 3599 | புதிய உறுப்பினர்: Thas VN Thasan

[You must be registered and logged in to see this link.]


avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: அதிசய விஞ்ஞானி ஜி.டி.நாயுடு

Post by மகா பிரபு on Sat Oct 27, 2012 8:49 pm

நன்றி அண்ணா.
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: அதிசய விஞ்ஞானி ஜி.டி.நாயுடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum