தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» என்னவனே என் கள்வனே
by கவிப்புயல் இனியவன்

» அவ்வை குறள்.
by ந.கணேசன்

» உடைந்து வரும் பிம்பங்கள்...!!
by ந.கணேசன்

» இனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது
by கவிப்புயல் இனியவன்

» செய்திகள் என்ன சொல்லுது?
by ந.கணேசன்

» இருவரி திருவரி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» சுறா - ஒரு வெளிநாட்டு ரசிகனின் கதறல் இணையத்தில் எடுத்தது
by Balaji Gunasekaran

» கூவத்தூரில் பரபரப்பு : ரிசார்ட்டில் இருந்து எம்.எல்.ஏ.க்கள் வெளியேற போலீஸ் உத்தரவு; மின்சாரம் துண்டி
by rammalar

» ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பி.எஸ். - ஜெ.தீபா : இன்று முதல் அரசியல் பயணம் தொடங்குகிறது : தீபா
by rammalar

» ஜெயலலிதா சார்பில் ரூ.100 கோடி அபராதம் செலுத்த வேண்டுமா?
by rammalar

» அமெரிக்க விமான நிலையத்தில் ‘நாசா’ விஞ்ஞானியை பிடித்து வைத்து விசாரணை
by rammalar

» ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள் - இன்று விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ!
by rammalar

» எல்லாமே காதல் காதல்
by கவிப்புயல் இனியவன்

» வட மாநிலங்களில் கடும் பனிமூட்டம்: 67 ரயில்கள் தாமதம்
by rammalar

» பெங்களூருவில் சர்வதேச விமான கண்காட்சி இன்று துவக்கம்
by rammalar

» முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் சார்பில் இரவு 7 மணிக்கு மைத்ரேயன் ஆளுநரை சந்திக்கிறார்
by rammalar

» Hi All
by Rithika

» இனிக்கும் ​இன்பகாதல் கவிதை
by கவிப்புயல் இனியவன்

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» சிதம்பரம் நடராஜர் கோயிலில் பிப்.24-இல் நாட்டியாஞ்சலி விழா
by rammalar

» அடுத்த பரபரப்புக்கு தயாராகுங்கள்: மார்ச் 7ஆம் தேதி பனாமா பேப்பர்ஸ் விவகாரம் குறித்து விசாரணை
by rammalar

» பாகிஸ்தானில் காதலர் தின கொண்டாட்டங்களுக்கு 'தடா'!
by rammalar

» 2ஜி ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கனிமொழி வெளிநாடு செல்ல அனுமதி
by rammalar

» கவிப்புயலின் பல இரசனை கவிதை
by கவிப்புயல் இனியவன்

» சிங்கம் 3: பிப்ரவரி 9-ல் வெளியீடு!
by ஸ்ரீராம்

» முதல் பார்வை: போகன் - இணைந்த கைகளின் மேஜிக்!
by ஸ்ரீராம்

» 33 போட்டிகளில் விளையாடி 1 ரன்கூட எடுக்காத வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரிட் பும்ரா
by ஸ்ரீராம்

» உணர்ச்சிகள் உங்களுடன் பிறந்தவைகள் அல்ல
by ஸ்ரீராம்

» அறிவை அழிக்கும் ஊடகம்...!
by ஸ்ரீராம்

» கனவு காணத் தயங்காதீர்கள்
by ஸ்ரீராம்

» குழந்தைகளை சாப்பிடச் சொல்லி நச்சரிக்காதீங்க
by ஸ்ரீராம்

» மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request)
by ஸ்ரீராம்

» தண்டனை - ஒரு பக்க கதை
by முரளிராஜா

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன்

» முதல்வராக பதவியேற்கிறார் சசிகலா! முதல்வர் பன்னீர் செல்வம் ராஜினாமா!
by rammalar

» விழிப்புணர்வு கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» 151-வது படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாகிறார் அனுஷ்கா
by rammalar

» திரைப்பட விழாவில் பார்த்தது: இங்கே போல அங்கேயும்...!
by rammalar

» இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் இந்திய அணி இமாலய வெற்றி
by rammalar

» நீங்களே முதல்வராக இருக்க வேண்டும்: தேவையான சக்தியை நாங்கள் தருகிறோம் - முதல்வரை பாராட்டிய துரைமுரு
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


முத்தம்மா பாட்டி

View previous topic View next topic Go down

முத்தம்மா பாட்டி

Post by kanmani singh on Wed Jun 11, 2014 5:17 pm

முத்தம்மா பாட்டிக்கு முன்னூறு புள்ளைக
நம்பாம பாக்காதீக
நாஞ்சொல்றது நெசந்தாங்க..
எங்கூருல புதுசா பொறக்குற
அம்புட்டு புள்ளைகளையும்
ஆளாக்கி விடுறதுதான் அவ வேல..
பொறந்த பச்சப்புள்ளக்கி
சக்கரத்தண்ணி குடுக்குறதுல ஆரம்பிப்பா
நெதம் போயி குளிக்க வச்சி
வெளாட்டு காட்டி சிரிக்க வச்சி
நடவண்டி புடிச்சி நடக்க வச்சி
பொரண்டு அழுவுத புள்ளக்கி
தேன் மிட்டாய் வாங்கிக் குடுத்து
பள்ளிக்கொடம் கூட்டிப் போவா
அம்மா அடிக்கையில
அள்ளிப் போயி அரவணைப்பா
அப்பா வையும்போது
அவன் கெடக்கான் நீ வான்னு
அலட்சியமா அங்கிட்டு அழச்சிப் போவா
பண்டம் பலகாரம் பழம் பட்சணம்
எது கெடச்சாலும்
தேடி வந்து பங்கு வைப்பா
படிக்க பட்டணம் போவையிலயும்
வேலைக்கு வெளியூர் போவையிலயும்
முத்தம்மா கிட்ட சொல்லாம
ஒரு புள்ளயும் போவாது
கண்ணாலம் கட்டி
புருசன் வீடு போற புது பொண்ணுவளும்
அவ கால்ல விழுகாம போகாதுக
புள்ள பெத்து எடுத்து வர்றவளும்
அவகிட்டதான் புள்ளய குடுப்பா
காதலிக்குத ஆணுக்கும் பொண்ணுக்கும்
அவ அடைக்கலச்சாமியா இருப்பா
கோயில் கொடையிலயும்
பண்டிகை கொண்டாட்டத்துலயும்
அவளுக்கு வந்து சேருத
அம்புட்டு புடவையவும்
வாரி குடுப்பா வயசு பொண்ணுகளுக்கு
ஊருக்குள்ள ஆபத்துன்னு யாருக்குன்னாலும்
மொத ஆளா ஒதவிக்கு நிக்குதவ
அவளாத்தான் இருக்கும்
சண்ட போட்டு
வெட்டுவேன் குத்துவேன்னு
சிலுத்துகிட்டு நிக்குதவனும்
அவ வந்து சத்தம் போட்டா
பொசுக்குன்னு அமைவானுக
பொட்டி பாம்பாட்டம்
இம்புட்டு செய்யுதாளே
அவளுக்குன்னு ஆருமில்லையா
குடும்பம் குட்டிக
இல்லியான்னுதான கேக்குதீக
அவ குடிகார மாமன்
அவள கட்டிகிட்ட மேடையிலயே
சுருண்டு விழுந்து செத்துப் போனான்
கள்ளால குடல் அவிஞ்சி போனதால
அப்பன் ஆத்தா இல்லாதவ
ஆதரவுக்கு எங்கிட்டும் போவாம
ஊரோடவே ஒண்ணாயிட்டா
தொண்ணூத்தியொரு வயசாச்சி
முத்தம்மா பாட்டிக்கு
இப்ப எங்கூரு சனங்களோட
ஒத்த வேண்டுதல் என்னாங்குதீக
அவ நூறு வயசு பொறந்தநாள
பதினெட்டு பட்டிக்கும்
கறி சோறாக்கிப் போட்டு
பத்து நாளு கொண்டாடணும்
எங்கூரு குலசாமி
அவ உசுர காத்து வைக்கணுமுன்னு
ஊரு மக்க கும்புடாத நாளில்ல
நீங்களும் கும்புடுங்க
சொல்லியனுப்புதோம்
குடும்பத்தோட வந்து சேருங்க
முத்தம்மாவோட
நூறாவது பொறந்தநாளுக்கு!

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4188

Back to top Go down

Re: முத்தம்மா பாட்டி

Post by செந்தில் on Wed Jun 11, 2014 5:28 pm

எங்கூரு குலசாமி
அவ உசுர காத்து வைக்கணுமுன்னு
ஊரு மக்க கும்புடாத நாளில்ல
நீங்களும் கும்புடுங்க

நிச்சயமா கும்புடுதேன்.
 எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன் 

_________________________________________________

நட்புடன் செந்தில்

செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15104

Back to top Go down

Re: முத்தம்மா பாட்டி

Post by ரானுஜா on Wed Jun 11, 2014 5:53 pm

சூப்பர் 

ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: முத்தம்மா பாட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum