தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» அன்று சொன்னவை இன்று நடக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» பெண்களுக்காக பொது கூட்டம் நடத்தப் போறாராம்...!!
by rammalar

» மனைவிக்கும் டாக்டர் பட்டம் வேண்டுமாம்…!!
by rammalar

» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நம்பிக்கை – குட்டி கதை
by rammalar

» சாதுர்யம் – ஒரு பக்க கதை
by rammalar

» நீட் எக்ஸாம்…
by rammalar

» ரிசல்ட் – ஒரு பக்க கதை
by rammalar

» கொடுப்பினை – ஒரு பக்ககதை
by rammalar

» கண்டிஷன் – ஒரு பக்க கதை
by rammalar

» நைட்ல தூக்கம் வரமாட்டேங்குது டாக்டர்…!
by rammalar

» எதிரி ஆணவத்தோட அலைகின்றானாம்..!
by rammalar

» நிகழ்ச்சிக்கு பேரு பியூட்டி வைத்தியம்!
by rammalar

» புகழ்ச்சி பிடிக்காது என்றீர்களே…மன்னா..?
by rammalar

» டாஸ்மாக் திறந்த பிறகு சரக்கு வந்துவிடும் மன்னா!
by rammalar

» கடன் பாட்டு…!!
by rammalar

» ரேஷன் கார்டு கதைகள்…!
by rammalar

» ஓங்கி அடிச்சா…!
by rammalar

» ஆறு வித்தியாசம்…
by rammalar

» சிரிக்கலாம்வாங்க..
by rammalar

» உன் லவ்வர் கிரிக்கெட் பிளேயரா…?
by rammalar

» எதை விட்டுக் கொடுப்பது? – தென்கச்சி கோ. சுவாமிநாதன்
by rammalar

» இது டஸ்ட் அலர்ஜி மாதிரி கெஸ்ட் அலர்ஜி…!
by rammalar

» நாட்டுல தண்ணி கரைபுரண்டு ஓடுது..!
by rammalar

» உட்கட்சி ஜனநாயகம் காணாம போயிருச்சு..!
by rammalar

» தார் வாங்கியதில் அரசுக்கு ரூ.750 கோடி இழப்பு: போலீஸ் விசாரணை கேட்டு வழக்கு
by rammalar

» இலங்கையில் சுற்றுப்பயணம் செய்யும் இந்தியா போட்டி அட்டவணை அறிவிப்பு
by rammalar

» தகவல்.நெட் விதிமுறைகள்
by Pazhanimuthu

» அறிமுகம்
by Pazhanimuthu

» ஆன்மீகம்- காதல் -கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» அஸ்ஸாமில் புலிகள் எண்ணிக்கை உயர்வு!
by rammalar

» பாலாற்றில் ஆந்திராவின் தடுப்பணை: அதிகாரிகள் எச்சரித்தும் அரசு மவுனம்
by rammalar

» மாட்டிறைச்சி சாப்பிடுவோரை தூக்கிலிட சாத்வி கூறிய யோசனையால் சர்ச்சை
by rammalar

» சுனிலிடம் கேளுங்கள் – சினிமா செய்திகள்
by rammalar

» நடிக்க வருகிறார்களா நதியா மகள்கள்?
by rammalar

» ’மாம்’ திரைப்படம்
by rammalar

» இன்டெர்நெட் என்றால் என்ன? உதவுங்கள்
by Thuvakaran

» கவிப்புயல் - ஹைகூக்கள் - சென்ரியூகள்
by கவிப்புயல் இனியவன்

» சந்திரனில் புதிய கிராமம் | Villages on the Moon
by vickneswaran

» TOP 10 2017 Android Applications - 2017 ஆம் வருடத்தில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலி
by vickneswaran


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சாலை விபத்து தடுப்பும், அவசர சிகிச்சையும்

View previous topic View next topic Go down

சாலை விபத்து தடுப்பும், அவசர சிகிச்சையும்

Post by நாஞ்சில் குமார் on Mon Apr 14, 2014 5:06 pmமோட்டார் வாகன சாலை விபத்துகளை தடுப்பதும், அவசர சிகிச்சைகளை பற்றி கோவை என்.ஜி.மருத்துவமனை சேர்மன் மற்றும் லேப்ராஸ்கோபி,  எண்டாஸ்கோபி சிறப்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் மனோகரன் விழிப்புணர்வு அளித்தார். அவர் கூறியதாவது: விபத்து என்பது யாரும் எதிர்பாராமல்  நடக்கும் ஒரு நிகழ்வு, விபத்துக்களை பலவிதமாக பிரிக்கலாம். சாலை விபத்து, நில நடுக்கம், தீ விபத்து, வெள்ள விபத்து, மின்சார விபத்து என்று  கூறலாம்.

மேற்கூறிய விபத்துகளில் மக்கள் அதிகமாக பாதிக்கப்படுவது சாலை விபத்து. நம் இந்திய நாட்டில் ஒரு மணி நேரத்திற்கு 14 பேர் இறக்கிறார்கள்.  தேசிய குற்றவியல் துறையின் கணக்கின்படி வருடத்திற்கு 135000 பேர் இறக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும், இக்கணக்கெடுப்பின்படி 25 வயதுக்கு  உட்பட்டவர்களின் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. அதுவும் இரு சக்கர வாகனத்தினால் ஏற்படும் விபத்தின் சராசரி விகிதம் அதிகமாக உள்ளது.  விபத்தில் 44 சதவிகிதம் இறப்பு இரு சக்கர வாகனங்கள் ஓட்டுபவர்களாகவும், 34 சதவிகிதம் இறப்பு சாலையில் நடந்து செல்பவர்களாகும்.

விபத்திற்கான காரணங்கள்

குடிப்பழக்கம், கவனக்குறைவு, கைபேசியை உபயோகித்து கொண்டே வாகனங்களை ஓட்டுவது, சாலை விதிகளை கடைபிடிக்காமல் இருப்பது,  அதிவேகமாக வாகனத்தை ஓட்டுவது, தலை கவசம் அணியாதது, வாகனங்களை சரியாக பராமரிக்காமல் இருப்பது, உறக்கமின்மை, அசதி, சீட் பெல்ட்  அணியாமல் வாகனத்தை இயக்குவது, போட்டி போட்டு கொண்டு வாகனங்களை இயக்குவது.

சாலை விபத்தை தவிர்க்கும் முறைகள்:

குடி மற்றும் போதையில் இல்லாத போது வாகனங்களை இயக்குவது, வாகனங்களை ஓட்டும் போது முழு  கவனம் சாலையில் இருக்க வேண்டும். கைபேசியே உபயோகிக்காமல் வாகனத்தை ஓட்டுவது, 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் தனியாக வாகனங்களை  ஓட்டுவதற்கு ஊக்குவிக்காமல் இருப்பது, 60 வயதிற்கு மேல் உள்ளவர்கள் தனியாக வாகனங்களை ஓட்டுவதற்கு அனுமதிக்காமல் இருப்பது. சாலை  விதிகளை முறைப்படி கடைபிடிப்பது, தலை கவசம் அணிவது, சீட் பெல்ட் அணிவது.

சாலை விபத்தில் அடிபட்டவர்களுக்கு முதலுதவி:

அடிபட்டவரால் பேச முடிகிறதா, பெயர் என்ன? சீராக சுவாசிக்கிறாரா என்றும் நாடி துடிப்பையும் அறிய வேண்டும். உடனடியாக அவசர ஊர்தியை  வரவழைத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். மருத்துவரிடம் நடந்தவற்றை கூற வேண்டும். சுவாசம் இல்லை என்றால்  அடிபட்டவரின் வாயை திறந்து சுவாசிப்பதற்கு ஏதாவது இடைஞ்சல் இருக்கிறதா என்று அறிய வேண்டும். ஏதாவது இடைஞ்சல் இருந்தால், வாயினுள்  ஆள்காட்டி விரலையோ அல்லது நடுவிரலையோ உள் செலுத்தி இடைஞ்சலை சரிப்படுத்த வேண்டும்.

அவ்வாறு செய்யும் பொழுது, அடிபட்டவர் விரலை கடிக்கும் வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நாடித் துடிப்பு குறைந்து, சுவாசம்  குறைந்து காணப்பட்டால் வாய்க்கு வாய் சுவாசமும், வாய்க்கு, மூக்கு சுவாசம் கொடுக்க வேண்டும். வாயில் ரத்த கசிவு அல்லது வாந்தி எடுத்தால்  அவருடைய உடம்பையும், தலையையும் ஒரு புறமாக சாய்த்து படுக்க வைக்க வேண்டும். இதனால் புறை போவதை தவிர்க்கலாம். ஒரு புறமாக  படுக்க வைக்கும் பொழுது கீழ் இருக்கும் கை நீட்டியும், மேல் உள்ள கை அவருடைய மார்பின் மேல் இருக்க வேண்டும்.

இரத்தக்கசிவு அதிகமாக இருந்தால் அந்த பாகத்தை அழுத்தி பிடிக்க வேண்டும். நம்முடைய உள்ளங்கையை வைத்தோ அல்லது கைவிரல்களை  வைத்தோ அழுத்தி பிடிக்க வேண்டும். அடிபட்டவர் விழுந்திருக்கும் போது அவருடைய உடம்பின் நிலை மாறுபட்டு காணப்பட்டால் அவரை அசைக்க  கூடாது. உடனடியாக மருத்துவரின் சிகிச்சைக்கு கொண்டு போக வேண்டும். இவ்வாறு இருக்கும் போது குடிக்க தண்ணீர் கொடுக்க கூடாது.  ஏனென்றால் புறை ஏற்பட்டு மூச்சு திணறல் ஏற்படும்.

நோயாளியை மருத்துவமனைக்கு கொண்டு போகும் போது கவனத்தில் வைக்க வேண்டியவை. நோயாளியை ஸ்ட்ரெட்சர் கொண்டு அவரை  மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். அவருடைய முதுகையும், கழுத்தையும் நேரடியாக வைக்க வேண்டும். நோயாளி நேராக படுத்திருக்க  வேண்டும். கை அல்லது காலில் ரத்த கசிவு இருந்தால், அப்பாகத்தை உயர்த்தி பிடித்து ரத்த கசிவை அழுத்தி பிடிக்க வேண்டும். அவர் தொடர்ந்து  மூச்சு விடுகிறாரா? அவருடைய நாடி துடிப்பும் சீராக இருக்கிறதா என்று கண்காணிக்க வேண்டும்.


நன்றி: தினகரன்
avatar
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

Re: சாலை விபத்து தடுப்பும், அவசர சிகிச்சையும்

Post by mohaideen on Mon Apr 14, 2014 7:07 pm

பயனுள்ள தகவல்கள்

சொன்னா யார் கேட்கிறா◌ாகள் இன்னும் போன் உபயோகிக்கத்தான் செய்கிறார்கள்.

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
avatar
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum