தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...!!
by rammalar

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by rammalar

» பாதை எங்கு போகிறது...?
by rammalar

» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை
by rammalar

» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
by rammalar

» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி
by rammalar

» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by rammalar

» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்
by rammalar

» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
by rammalar

» மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு
by rammalar

» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்
by rammalar

» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்
by rammalar

» ஒரு சுயசரிதைக் கவிதை
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்:
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி
by rammalar

» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்
by rammalar

» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி
by rammalar

» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட
by rammalar

» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்
by rammalar

» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar

» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,
by rammalar

» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது
by rammalar

» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்
by rammalar

» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு? ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி
by rammalar

» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி
by rammalar

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar

» பாப் பாடகர் மீது துப்பாக்கி சூடு
by rammalar

» வி.எச்.பி. தலைவராக கோக்ஜே தேர்வு
by rammalar

» விரைவில் "மேட் இன் இந்தியா" திட்டத்தில் வெளிநாட்டு துப்பாக்கிகள்
by rammalar

» காமன்வெல்த் போட்டி; பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்
by rammalar

» மக்களை கவர்ந்தவர்கள் பட்டியலில் ஏஞ்சலினா ஜோலி முதலிடம் - பிரியங்கா சோப்ரா?
by rammalar

» அமெரிக்காவுக்கு எதிராக ஐநா சபையில் ரஷியா கொண்டுவந்த தீர்மானம் தோல்வி
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Go down

சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்

Post by சுபபாலா on Fri Mar 28, 2014 12:05 am

சூரியனாகவே ஆசைபட்டேன்
முடியவில்லை
ஒரு மெழுகு திரியையாவது
ஏற்றிவிடவே
இப்போது போராடிக்கொண்டு இருக்கிறேன்


/சுய நம்பிக்கையோடு சுபபாலா /


Last edited by சுபபாலா on Fri Mar 28, 2014 12:08 am; edited 1 time in total
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்

Post by சுபபாலா on Fri Mar 28, 2014 12:05 am

சாதியை பார்க்காதே
சாதிக்க பார்....!!!
உயர்வு என்பது மட்டுமே அடையாளாம்
நீ உயர பறக்காவிட்டால்
நீ பிறந்ததே அவமானம்


/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்

Post by சுபபாலா on Fri Mar 28, 2014 12:09 am

காத்திருக்கும் மட்டும்
மனம் வருடும் காற்றாக இரு
புறப்பட்டால்
பூமியே நடுங்கும்
புயலாக உருவெடு .....!!!
/காத்திருக்கும் மட்டும்
மனம் வருடும் காற்றாக இரு
புறப்பட்டால்
பூமியே நடுங்கும்
புயலாக உருவெடு .....!!!


/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்

Post by சுபபாலா on Fri Mar 28, 2014 12:12 am

எறும்புகள்
கண்டன ஊர்வலம் போகிறது
யாரும் உதவியற்ற கொதி மணலில்
அத்துமீறி
குடியேறி இருக்கும் பாம்பினை
வெளியேற சொல்லி ........!!!!

/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்

Post by சுபபாலா on Fri Mar 28, 2014 12:13 am

ஆசிரியர்களே ....!!!
மாணவர்கள் ஒவ்வொருவரும்
மணி முத்துக்கள்
ஒருவரையும் புறம் தள்ளி விடாதிர்கள்
உங்களால் மட்டுமே
வரலாறுகளை சொல்லி கொடுத்து
நாளைய வரலாறுகளை
உருவாக்கிவிட முடியும்
.ஆசிரியர்களே ....!!!
மாணவர்கள் ஒவ்வொருவரும்
மணி முத்துக்கள்
ஒருவரையும் புறம் தள்ளி விடாதிர்கள்
உங்களால் மட்டுமே
வரலாறுகளை சொல்லி கொடுத்து
நாளைய வரலாறுகளை
உருவாக்கிவிட முடியும்


/சுய நம்பிக்கையோடு சுபபாலா /

avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்

Post by சுபபாலா on Fri Mar 28, 2014 12:14 am

எழுதாத ஒவ்வொரு நிமிடமும்
இறந்த நிலையை உணர்கிறான்
எழுதிகொண்டிருக்கும் படைப்பாளி ....!!!!


/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்

Post by சுபபாலா on Fri Mar 28, 2014 12:15 am

ஒருவனுடைய வெற்றிக்கு காரணம்
பொறுமை ....!!!
அவனுடைய தோல்விக்கு காரணம்
"நான்"என்று தொடங்கும் கோபமே ....!!!!

/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்

Post by சுபபாலா on Fri Mar 28, 2014 12:17 am

தொலைகாட்சிகளிலும் வானொலிகளிலும்
பத்திரிகைகளிலும் வெளிவராத
படைப்பாளிகள்
மண்வாசத்தோடும் தமிழ் நேசத்தோடும் பூத்து குலுங்கு கிறார்கள்
முகநூலின் உலக மேடையில் ......!!!!
படைப்பாளிகளே .....!!!!
யாருக்காகவும் உங்கள் எண்ணங்களை
கைவிட்டு ஒதுங்கிவிடாதிர்கள்
விமர்சிப்பவனுக்கு நாக்கு மட்டுமே சொத்து .......!!!!
விளக்காய் எரியும் உங்களுக்கு
இந்த உலகமே சொத்து .....!!!
வரும் அத்தனை விமர்சனங்களையும்
அன்னை தமிழால் அடித்து வெல்லுங்கள் .......!!!!
வளரும் தலைமுறைக்கு நம்பிக்கையை எடுத்து சொல்லுங்கள் .....!!!!!
இல்லையேல்
உங்களில் கருவான தாய் தமிழ்
உங்களை ஒருபோதும் உண்மையாய் உறங்கவிடாது ......!!!
(முகநூலை விட்டு போகும் படைப்பாளிகளுக்கு )


/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்

Post by சுபபாலா on Fri Mar 28, 2014 12:18 am

ஒரு நொடியில் முடிந்து விடுகிறது
உயிரின் வாழ்க்கை ......!!!
ஆனாலும்
ஒரு கோடி கவலையோடு அலைவதே
மனித வேட்கை .......!!!!

சுய நம்பிக்கையோடு சுபபாலா /
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்

Post by சுபபாலா on Fri Mar 28, 2014 12:19 am

வாழ்க்கை நினைப்பது போல்
இலகுவானதும் அல்ல /கடினமானதும் அல்ல
உங்கள் எண்ணங்களும் செயல்களுமே
வாழ்வின் உண்மையை தீர்மானிக்கின்றது .......!!!!

/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்

Post by சுபபாலா on Fri Mar 28, 2014 12:21 am

முடியாது என்று சொல்லி கொண்டிப்பவனுடனும்
தோல்வியை பற்றியே பேசிக்கொண்டு இருப்பவனோடும் கூட்டணி வைக்காதே
அதனால்
உன் வாழ்க்கை தொகுதியில் கூட
வெற்றி பெற முடியாது

/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்

Post by சுபபாலா on Fri Mar 28, 2014 12:23 am

சொல்ல முடியாத சோகமா ?
தவிர்க்க முடியாத தனிமையா ?மனது எப்போதும் வெறுமையாய் விருப்பங்கள் இன்றி துடிக்குதா ?
எதிலும் விருப்பம் இல்லாமல் மனது முதுமைக்குள் குடியிருக்கிறதா ?
வாழ்க்கைக்கு ஆறுதல் தராமல்
எப்போதும் வலிகள் குடை பிடிக்கிறதா ?
இப்படி ஏதாவது ஒன்று உங்களை நாளும் துரத்துமானால்
உங்களுக்குள் உங்களால் இன்னும் அறியபடாத அதிசயம் தூங்கி கொண்டு உங்களை துயர்படுத்துகிறது ஆதலால் ....!!!
உங்களை நீங்களே கண்டடைய
உங்கள் எண்ணங்களை வலிகளை
தினமும் எழுதி வாருங்கள்
கவிதையாகவோ ......!!!வாழ்வாகவோ!!!
குறிப்பிட்ட காலத்தில்
உங்கள் மனம்
உங்களிடம் வசப்படும்
புது வசந்தம் துளிர்விடும் ......!!
தங்கள் அன்புக்கும் நட்புக்கும் வாழ்த்துக்கள் .........!!!

/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்

Post by சுபபாலா on Fri Mar 28, 2014 12:24 am

நம்பிக்கையை மட்டும் விதைத்து கொண்டே இருப்போம்
வளரும் தலை முறை இதயங்களில் .......!!!!
வானத்தை நம்பியும் அல்ல
பூமியை நம்பியும் அல்ல
புதிய பாரத விழுதுகளால் முடியும்
வானத்தையும் பூமியையும் இணைத்து
வரம் கொடுக்க
புதியவழி திறக்க ............!!!
ஆதலால் நம்பிக்கையை மட்டும்
விதைத்துக்கொண்டே இருப்போம்..........!!!!

/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்

Post by சுபபாலா on Fri Mar 28, 2014 12:27 am

எல்லோருக்காகவும் அழுது கொண்டு இருக்காதிர்கள்
ஒரு நாள்
உங்களுக்காக அழுவதற்கு
உங்கள் கண்ணீர் கூட இருக்காது
ஆறுதல் சொல்ல ....!!!
ஆதலால்
............!!!!
கண்ணீர் கூட காசு போன்றது
கண்டபடி செலவு செய்யாதீர்....!!!

/சுய நம்பிக்கையோடு சுபபாலா /

avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்

Post by சுபபாலா on Fri Mar 28, 2014 12:29 am

யானை போல பிறக்கவில்லை
புலியை போல பிறக்கவில்லை என்று
சிறுமைபடுத்தி கொள்ளாதே ...உன்னை
எறும்பை போல பிறந்து இருந்தாலும்
சுறு சுறுப்போடு இயங்கி கொண்டே இரு ....!!!
தோல்வி சூழ்ந்து படை எடுத்தாலும்
வெற்றியும் வாழ்வும் உன்னை தேடி
வந்து சபை ஏற்றும் ......!!!

/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்

Post by சுபபாலா on Fri Mar 28, 2014 12:33 am

நித்திரைகான பொழுது வந்தும்
இதயம் தூங்காது
கடந்த கால தோல்விகளை நினைக்க வைத்து
சித்திரை வெயிலாய் மனம் சுடும் போதுதான்
இந்த வாழ்க்கை
என்னடா வாழ்க்கை என்று தோன்றுகிறது .......!!!!
இருந்தும் அதை நினைத்து ஆய்வு செய்வதால் தான்
நாளைய நாளையாவது
நமக்காக வாழ ஆவல் படுத்துகிறது

/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்

Post by சுபபாலா on Fri Mar 28, 2014 12:34 am

உங்களின் நகைசுவை பேச்சை
ஒருவர் கேட்டு மகிழவில்லையானால்
ஒன்று அவர் தன்னிலேயே கோபமாக இருக்கிறார்
இல்லையேல் உங்களில் அந்த கோபத்தை
கொட்ட காத்திருக்கிறார்

/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்

Post by சுபபாலா on Fri Mar 28, 2014 12:36 am

தியானம் தவம் திருக்குறள் என்று
மனதை பக்குவபடுத்தினாலும்
கயிற்றையும் அறுத்து கொண்டு
ஓடும் நாயாய்
மனம் எங்காவது ஓடிபோய்
அடிபட்டு தான் அடங்குகிறது ....!!!

/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்

Post by சுபபாலா on Fri Mar 28, 2014 12:36 am

இயேசு நபிகள் புத்தன் காந்தி
கூட காயப்பட்டதால் தான்
மீண்டும் பிறக்கவில்லை ......!!!


/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்

Post by சுபபாலா on Fri Mar 28, 2014 12:37 am

உடற்காயங்களை விட
மனகாயங்கள் மரணம் வரை
வலிதர கூடியது .......!!!
நரம்பில்லா நாக்கும்
நாசமாய் போன மனசும் எடுக்கும் முடிவுகளை
எப்போதும் ஒத்திகை பார்த்து
வெளியிடுங்கள் .......!!!
அது உங்களை ஆறுதல் படுத்தினாலும்
இன்னொருவனின் இதயத்தை அணு அணுவாய் கொல்லும் சக்தி வாய்ந்தது ........!!!!

/சுய நம்பிக்கையோடு சுபபாலா /

avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்

Post by சுபபாலா on Fri Mar 28, 2014 12:40 am

முகநூல் ......!!!
சொந்த நாட்டில்
தாய்வீட்டில் இருப்பவனுக்கு ...சாதாரணம் ......!
தாய் தந்தை உறவுகளை பிரிந்து
வேலை தேடி வந்து வெளிநாடுகளில்
தனிமையோடும் கண்ணீரோடும்
இருப்பவனுக்கு ....!
முகநூல் சரித்திரம்
அவன் பார்க்கும் தொலைகாட்சி
அவன் படிக்கும் பத்திரிக்கை
அவனின் தியான வழிபாடு யாவும்
முகநூல் வீடே .....!!!
காரணம்
எல்லாம் கிடைக்கும் நாடுகளில்
கிடைக்காத ஒன்று "அன்பு மட்டுமே "
அதையும் தந்து வாழவைத்தது
நம்பிக்கை தந்தது
இந்த முகநூல் வீடு மட்டுமே ...!!!

/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்

Post by சுபபாலா on Fri Mar 28, 2014 12:42 am

ஒருவன் உங்களை நேசிக்கிறான் என்றாள்
நீங்கள் வானுக்கும் கடலுக்குமான தலைவனாக நினைத்து கொள்ளாதிர்கள்
இந்த வாழ்வுக்குரிய ஒரு துளி புனிதத்தை உங்களிடம் அவன் கண்டெடுத்து இருக்கிறான் என நினைத்து மகிழுங்கள் ....!!!

/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்

Post by சுபபாலா on Fri Mar 28, 2014 12:42 am

எல்லாவற்றையும் சரியாக செய்து விட்டு
வீட்டு சாவியையும்
பயணசீட்டையும்
மறந்துவிடுகிறார்கள் .....!!!
அதுவோ ....!
அந்த நாளையே அவலமாக்கி விடுகிறது

/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்

Post by சுபபாலா on Fri Mar 28, 2014 12:43 am

விட்டு கொடுத்து போதலை
ஒரு குற்றமாக பார்க்கும் வரை
எந்த யுகம் வந்தாலும்
விட்டு கொடுத்து மனம் மகிழ தெரியாதவர்கள்
மந்தை யுகம் தான் .....!!!

/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்

Post by சுபபாலா on Fri Mar 28, 2014 12:46 am

எல்லோரும் இரவானதும்
வேண்டா வெறுப்போடுதான் நித்திரைக்கு செல்கிறார்கள் ......!!!
துயரங்களும் பிரச்சனைகளும்
விழித்தே இருக்கிறது
விடிந்தவுடன் அவன் தோளில் ஏறி
பயணிக்க ......!!!

/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum