தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வீரப் பெண்மணி தில்லையாடி வள்ளியம்மை!

View previous topic View next topic Go down

வீரப் பெண்மணி தில்லையாடி வள்ளியம்மை!

Post by மகா பிரபு on Sat Sep 07, 2013 3:12 pm

[You must be registered and logged in to see this image.]


1915-ம் வருடம், ஏப்ரல் மாதம், 30-ம் தேதி. தரங்கம்பாடியிலிருந்து புறப்பட்ட இரண்டு மாட்டு வண்டிகள், தஞ்சை மாவட்டத்தில் உள்ள தில்லையாடியை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றன. முதல் வண்டியில் மகாத்மா காந்தியும், அன்னை கஸ்தூரிபாயும் அமர்ந்திருக்கிறார்கள்.


வண்டிகள் தில்லையாடி எல்லையை மிதிக்கின்றன. உணர்ச்சியை வென்ற மகாத்மாவின் மனம் அப்பொழுது உணர்ச்சி வசப்படுகிறது. கண் கலங்குகிறார். வண்டியை விட்டு இறங்குகிறார். கீழே குனிகிறார். இரு கரங்களையும் குவித்து மண்ணை அள்ளி எடுக்கிறார். கண்களில் ஒற்றிக் கொள்கிறார்.


என்ன புண்ணியம் செய்து விட்டது அந்த மண்? அது சாதாரண மண் அல்ல; காந்திஜி தென்னாப்பிரிக்காவில் தொடங்கிய சத்தியாக்கிரகப் போராட்டத்தில் உயிர் நீத்த வள்ளியம்மை, நாகப்பன், நாராயணசாமி ஆகிய தியாகச் செம்மல்களைத் தந்த வீர மண் அது. தென்னாப்பிரிக்க அரசாங்கம் சத்தியாக்கிரகிகளுக்குக் கொடுத்த தொல்லைகள் பயங்கரமானவை. அந்தத் தொல்லைகளைக் கண்டு கொஞ்சமும் அஞ்சாமல் லட்சியம் ஒன்றையே உயிராகக் கொண்டு சிறை சென்ற வீரப் பெண்மணி, தில்லையாடி வள்ளியம்மை.


போராட்டத்தில் ஈடுபட்டு, உடல் நலிவுற்று படுக்கையில் இருந்தார் அந்த வீரப் பெண்மணி. அப்பொழுது காந்திஜி கேட்டார்: ”வள்ளியம்மை! நீ சிறை சென்றதற்காக வருந்துகிறாயா?”


”வருத்தமா? இப்போது கூட இன்னொரு தடவை கைது செய்யப்பட்டால், நான் சிறைக்குச் செல்லத் தயார்” என்று வள்ளியம்மை பதில் அளித்தாள்.


”அதனால் நீ இறந்து போக நேர்ந்தால்?” என்று புன்முறுவலுடன் தொடர்ந்து கேட்டார் காந்திஜி.


”அதை நான் பொருட்படுத்த மாட்டேன். தாய்நாட்டிற்காக உயிரைக் கொடுக்க யார்தான் விரும்ப மாட்டார்கள்?” என்று கேட்டு காந்தியையே நெஞ்சுருக வைத்தாள் வள்ளியம்மை.


அதற்குப் பிறகு, வள்ளியம்மை சில நாட்கள் கூட உயிருடன் இருக்கவில்லை.


அவள் மரணத்தைப் பற்றி மகாத்மா கூறினார்: ”வள்ளியம்மையின் தொண்டு அழியாதது. தென்னாப்பிரிக்கா சத்தியாக்கிரக சரித்திரத்தில் வள்ளியம்மையின் பெயர் நீங்காத இடம் பெற்றிருக்கும்.”

விகடன்
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: வீரப் பெண்மணி தில்லையாடி வள்ளியம்மை!

Post by மகா பிரபு on Sat Sep 07, 2013 3:14 pm

அன்றைய அப்பழுக்கற்ற தலைவர்களும், தியாகிகளும் தங்கள் இன்னலையும், இன்னுயிரையும், இல்லற வாழ்வையும்கூட பொருள்படுத்தாது ரத்தமும், வேர்வையும் சிந்திப் போராடி சுதந்திரம் பெற்றுத் தந்தனர். சில காலம் வரை சிறப்பாகப் பராமரிக்கப்பட்ட அந்த சுதந்திர ஆலமரத்தில், இன்று ஊழல் கரையான்கள் உற்சாகமாகப் பெருக்கெடுத்து விழுதுகளை விழுங்க முயன்று கொண்டிருக்கின்றன.
 
ஊழல் வழக்குகளில் சிக்குவோர் நாட்டுக்காக தியாகம் செய்துவிட்டு சிறை செல்வதுபோல சிரித்துக் கொண்டே சிறைக்குச் செல்வதும், ஜாமீனில் வெளிவரும்போது சிரித்துக்கொண்டே வருவதும், நாட்டின் நிலையை எண்ணி மக்கள்தான் அதிருப்தியும், கவலையும் அடைய வேண்டியுள்ளது.
  
சுதந்திரப் போராட்டத்தின்போது சிறை சென்ற தியாகிகளோ, அங்கு கடும் துன்பங்களுக்கு உள்ளாகி, வெளியில் வரும்போது எலும்பும் தோலுமாகவும்தான் வந்திருக்கின்றனர். வ.உ.சி. சிறையில் செக்கிழுத்து பட்டபாடு எவரும் படாதது. தியாகி சுப்பிரமணிய சிவாவுக்கு சிறை வாழ்க்கை தந்தது மிகக் கொடிய தொழுநோயை.
 
இதேபோல, கவலைகளை மறந்து களிப்புடன் திரிய வேண்டிய காலமான பதின்பருவத்தில் 3 மாதக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட தமிழ்ப் பெண் ஒருவருக்கு சிறை வாழ்க்கை தந்தது கடுமையான காய்ச்சலை. அதன் விளைவாக வெளியே வந்த சிறிது காலத்தில் அவர் மரணமடைந்தார் என அறியும்போது வேதனைதான் விஞ்சுகிறது.
 அந்தத் "தமிழ்ப் பெண்'தான் உரிமைக்காகவும், சுயமரியாதைக்காகவும் போராடிய தில்லையாடி வள்ளியம்மை.
 
நாகப்பட்டினம் மாவட்டம் தில்லையாடியில் வசித்துவந்த முனுசாமி-ஜானகியம்மாள் தம்பதி, தென்னாப்பிரிக்காவில் அதிக தங்க, வைரச் சுரங்கங்களைக் கொண்ட ஜோகன்னஸ்பர்க் நகரில் வேலை செய்வதற்காகச் சென்றனர். அங்குதான் 1898-இல் தியாகச் சுரங்கமான வள்ளியம்மை பிறந்தார்.
 
பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோதே, அங்கு நிலவிய நிறவெறி அவரது நெஞ்சை முள்ளாய் தைத்தது. மனிதர்களுக்குள் ஏன் இந்த மதிற்சுவர் என அவரது பிஞ்சு நெஞ்சைக் கேள்விக்கணைகள் துளைத்தன. விளைவு... உரிமைகளுக்காகப் போராட வேண்டும் என்ற துணிவு அவரது உள்ளத்தில் பிறந்தது. நிறவெறிக் கொடுமைகளை எதிர்த்து அந்த மண்ணில் மகாத்மா காந்தி நடத்திய அறவழிப் போராட்டம் அவரது நெஞ்சத்தில் வேகத்தை ஏற்படுத்தியது.
 
தான் பிறந்தது தென்னாப்பிரிக்கா என்றபோதும், தனது தாய் நாட்டில் தனது மக்களுக்கு ஆங்கிலேயர் ஏற்படுத்திய அடிமை விலங்கு குறித்தும் அந்த சின்னஞ்சிறு உள்ளம் எண்ணிக் கலங்கியது; தன்னுடைய தாய்நாடு அந்த விலங்கை உடைத்துக்கொண்டு விடுதலை பெற வேண்டும் என்று விழைந்தது.
 
இந்த நிலையில், 14.3.1913-இல் அங்குள்ள கேப் நகரத்தில் விசித்திரத் தீர்ப்பு ஒன்று வெளியானது. அந்தத் தீர்ப்பு, அங்கு குடியேறி வாழ்ந்துவந்த இந்திய மக்களைப் பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. "தென்னாப்பிரிக்காவில் திருமணப் பதிவாளர் சட்டப்படியும், கிறிஸ்தவ சடங்குப்படியும் நடைபெறாத எந்தத் திருமணமும் செல்லாது' என்பதுதான் அந்தத் தீர்ப்பு.
 
பல ஜாதி, மதங்களைச் சேர்ந்த இந்திய நாட்டினர் அங்கு வசித்து வந்தனர். அவர்கள் தங்கள் மத, ஜாதிப்படி செய்துகொண்ட திருமணங்கள் அனைத்தும் செல்லாது என்ற இக்கட்டான நிலைமையை அந்தத் தீர்ப்பு ஏற்படுத்தியது. தீர்ப்பால் ஏற்படப்போகும் தீய பின்விளைவுகளை எண்ணி அந்த மக்கள் தவித்தனர்.
  
இந்தத் தீர்ப்பை எதிர்த்து அண்ணல் காந்தி அறப்போராட்டத்தைத் தொடங்கினார். அதில், அங்குள்ள இந்திய மக்கள் சாதி, சமயப் பாகுபாடின்றி பங்கேற்றனர். பட்டாம் பூச்சியாய்த் திரிய வேண்டிய, விளையாட்டுப் பருவத்தின் விளிம்பில் நின்றிருந்த வள்ளியம்மையும் கலந்துகொண்டார். அப்போது அவருக்கு வயது பதினைந்து.
 
தீர்ப்பை எதிர்த்து நடைபெற்ற பிரம்மாண்ட பேரணியில் வள்ளியம்மை தனது தாயுடன் பங்கேற்றார். அவர்கள் வால்க்ஸ்ரஸ்டு என்ற இடத்தில் 22.12.1913-இல் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு 3 மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டனர்.
 
சிறகடித்துப் பறக்க வேண்டிய பருவத்தில் சிறைக்குள் சிக்கிக் கொண்டோமே என வள்ளியம்மை வருந்தவில்லை. வைரத்தைப்போல மன உறுதியுடன் அதை எதிர்கொண்டார். ஆனால் அங்கு அவர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். சிறைத் தண்டனை முடிந்து அவர் வெளியே வந்தபோது எலும்பும் தோலுமாக அவரது உருவமே உருக்குலைந்திருந்தது.
 
மரணத்தின் பிடியில் விழுந்த அவர் விநாடிகளை எண்ணத் தொடங்கினார். ஆனால் அப்போதும் உள்ளம் கலங்கவில்லை. "மரணத்தை நான் பொருள்படுத்தவே மாட்டேன். தாய்நாட்டுக்காக உயிரைக் கொடுக்க விரும்பாதவர்கள் யார் இருப்பார்கள்?' என்றார். 22.2.1914-இல் அவர் இறந்தார் (வரும் 22.2.2014 வள்ளியம்மையின் நூறாவது நினைவு தினம்). காலத்தை வென்ற அவரை, காலன் அழைத்தபோது அவரது வயது 16.
  
தமிழர்கள் மீதும், தமிழகத்தின் மீதும், தமிழின் மீதும் காந்தியடிகளுக்கு தனி அபிமானம் பிறக்க வள்ளியம்மையும் ஒரு காரணம் எனக் கூறலாம். வள்ளியம்மையின் தன்னலமற்ற தியாகத்தின் காரணமாக அவரைத் தனது சுயசரிதையில் நினைவுகூர்ந்துள்ளார் காந்தி. மேலும் தென்னாப்பிரிக்காவில் அமைக்கப்பட்ட வள்ளியம்மை நினைவுச் சின்னத்தை அவர் திறந்து வைத்துள்ளார்.
 
அநீதியை எதிர்த்துப் போராடிய வள்ளியம்மைக்கு தென்னாப்பிரிக்க சத்தியாகிரக வரலாற்றில் மட்டுமன்றி இந்திய வரலாற்றிலும் என்றும் தனியாக ஓரிடம் உண்டு.

தினமணி
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum