தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சுவாமி விவேகானந்தரின் சிந்தனை துளிகள்

View previous topic View next topic Go down

சுவாமி விவேகானந்தரின் சிந்தனை துளிகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Sep 07, 2013 3:04 pm

[You must be registered and logged in to see this image.]
சுவாமி விவேகானந்தர்
1893 - 1902

யாருக்குத் தன்னிடம் நம்பிக்கை இல்லையோ அவனே நாத்திகன். தன்னம்பிக்கை இல்லாதவனைத்தான் நாத்திகன் என்று புதிய மதம் சொல்கிறது.

********************
உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒரு போதும் நினைக்காதே. அப்படி நினைப்பது, ஆன்மீகத்திற்கு முற்றிலும் முரண்பட்டது.

********************

நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்.
உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்.

********************
நீங்கள் கடவுளின் குழந்தைகள். அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள். புனிதமும் பூரணத்துவமும் பெற்றவர்கள்.

********************
பலவீனத்திர்கான பரிகாரம், பலவீனத்தைக் குறித்து ஓயாது சிந்திப்பதல்ல. மாறாக வலிமையைக் குறித்துச் சிந்திப்பதுதான்.

Posted by Rajarajan Rajamahendiran
நன்றி மௌனம் பேசிய மொழிகள்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சுவாமி விவேகானந்தரின் சிந்தனை துளிகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Sep 07, 2013 3:06 pm

[You must be registered and logged in to see this image.]
மிகப் பெரிய உண்மை இது -
பலமே வாழ்வு; பலவீனமே மரணம்.

************************

'நான் எதையும் சாதிக்க வல்லவன்' என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால், பாம்பின் விஷம் கூட சக்தியற்றதாகிவிடும்.

***********************


மனிதனே மேலானவன். எல்லா மிருகங்களைவிடவும் எல்லா தேவர்களைவிடவும் உயர்ந்தவன்.
மனிதனைவிட உயர்ந்தவர் யாருமே இல்லை.

***********************


என்றைக்கு ஆன்மீகம் தனது செல்வாக்கை இழந்து உலகாயுதம் தலையெடுக்க ஆரம்பிக்கிறதோ, அன்று முதல் அந்த சமுதாயத்திற்கு அழிவும் ஆரம்பித்து விடுகிறது.

****************************

தனி மனிதனின் நிலை உயர்த்தப்பட்டால், தேசமும் அதன் நிறுவனங்களும் உயர்வடைந்தே தீரும்.

***************************

உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளே உள்ளன.

**************************

உயர்ந்த லட்சியம் கொண்ட மனிதன் ஒருவன் ஆயிரம் தவறு செய்தால், லட்சியம் ஒன்றும் இல்லாமல் வாழ்பவன் ஐம்பதினாயிரம் தவறுகளைச் செய்வான் என்று நான் உறுதியாக சொல்வேன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சுவாமி விவேகானந்தரின் சிந்தனை துளிகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Sep 07, 2013 3:08 pm

[You must be registered and logged in to see this image.]
தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும். இவை அனைத்திற்கும் மேலாக, அன்பு வேண்டும்.

********************************

ஒவ்வோர் உயிரிலும் தெய்வீகத் தன்மை மறைந்திருக்கிறது. வெளியேயும் உள்ளேயும் இருக்கும் இயற்கையைக் கட்டுப்படுத்தி, உள்ளே குடி கொண்டுள்ள இந்த தெய்வீகத் தன்மையை மலரும்படி செய்வதுதான் முடிவான லட்சியம்.


********************************

எழுந்திருங்கள்,
விழித்துக் கொள்ளுங்கள்,
இனியும் தூங்க வேண்டாம்.
எல்லா தேவைகளையும்
எல்லா துன்பங்களையும்
நீக்குவதற்கான பேராற்றல்
உங்கள் ஒவ்வொருவருக்குள்ளேயும் இருக்கிறது.

**********************************

மனிதனுக்குள் ஏற்கனவே மறைந்திருக்கும்
பரிபூரணத்தன்மையை
வெளிப்படுத்துவது தான் கல்வி.

**********************************

முதலில் கீழ்ப்படிவதற்குக் கற்றுக்கொள்.
கட்டளையிடும் பதவி பிறகு
உனக்குத் தானாக வந்துசேரும்.
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சுவாமி விவேகானந்தரின் சிந்தனை துளிகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Sep 07, 2013 3:10 pm

[You must be registered and logged in to see this image.]

தைரியமும் சிறப்பும் பெருமளவில் பெற்றிருப்பவர்கள் பலரின் நன்மைக்காக, பலரின் சுகத்திற்காக தங்களைத் தியாகம் செய்துதான் ஆகவேண்டும்.

******************************************

அச்சமே மரணம். அச்சத்திற்கு அப்பால் நீ போக வேண்டும்.


******************************************

நீ தூய்மை உள்ளாவனாக இருந்தால் வலிமை உள்ளவனாக இருந்தால்,
நீ ஒருவனே உலகிலுள்ள அத்தனை பேருக்கும் சமமானவனாவாய்.


******************************************

பாமரனைப் பண்புள்ளவனாவும், பண்புள்ளவனைத் தெய்வமாகவும் உயர்த்தும் கருத்தே மதம்.


******************************************

சுயநலம், சுயநலமின்மை என்பவற்றைத் தவிர கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.

******************************************

உற்சாகத்துடன் இருக்கத் தொடங்குவதுதான்
நீ ஆன்மீக வாழ்க்கை வாழ ஆரம்பிப்பதற்கான முதல் அறிகுறி.
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சுவாமி விவேகானந்தரின் சிந்தனை துளிகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Sep 07, 2013 3:11 pm

பிரம்மசரியம் - விவேகானந்தர்
பிரம்மசரியத்தை உறுதியாக அனுஷ்டிக்கிற ஒரே ஒரு காரணத்தாலேயே எல்லா விதமான கல்வியறிவையும் மிகக் குறுகிய காலத்தில் கற்றுத் தேர்ச்சி பெற்று விட முடியும். அத்தகையவன் ஒரே ஒரு முறை தான் கேட்டதையும் அறிவதையும் மறவாமல் நினைவில் வைத்துகொள்கிறான். இப்படிப்பட்ட பிரம்மசரியம் நம் நாட்டில் இல்லாமற் போனதால்தான் எல்லாமே இன்று அழிந்துபோகும் நிலையில் இருக்கின்றன.

- விவேகானந்தர்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சுவாமி விவேகானந்தரின் சிந்தனை துளிகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Sep 07, 2013 3:13 pm

[You must be registered and logged in to see this image.]
ஆன்மீக லட்சியத்தைப் புறக்கணித்துவிட்டு, மேலை நாட்டு நாகரீகத்தின் பின்னால் செல்லுவாயானால் மூன்றே தலைமுறையில் உனது இனம் அழிந்து போய்விடும்.

*************************************************************************

எனது சகோதரர்களே! நாம் அனைவரும் கடுமையாக உழைப்போம். உறங்குவதற்கு இது நேரமில்லை. எதிர்கால இந்தியா நமது உழைப்பைப் பொறுத்துத்தான் அமைந்திருக்கிறது.

**************************************************************************

கண்டனச் சொல் எதையுமே சொல்ல வேண்டாம். உதடுகளை மூடிக்கொண்டு உங்கள் இதயங்களைத் திறந்து வையுங்கள்.

***************************************************************************

உங்களுடைய நரம்புகளை முறுக்கேற்றுங்கள். நமக்குத் தேவை, இரும்பைப் போன்ற தசைகளும், எஃகைப் போன்ற நரம்புகளும் தாம். சுய வலிமை பெற்ற மனிதர்களாக எழுந்து நில்லுங்கள்.

************************************************************************************

உறுதியுடன் இரு. அதற்கு மேலாகத் தூய்மையாகவும், முழு அளவில் சிரத்தை உள்ளாவனாகவும் இரு
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சுவாமி விவேகானந்தரின் சிந்தனை துளிகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Sep 07, 2013 3:14 pm
[You must be registered and logged in to see this image.]
என் குழந்தைகளே! இரக்கம் கொள்ளுங்கள். ஏழைகள், அறியாமையில் இருப்பவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் ஆகியவர்களுக்காக இரக்கம் கொள்ளுங்கள். இதயமே நின்று போகும் வரையிலும், மூளை கொதித்துப் போகும் வரையிலும் இரக்கம் கொள்ளுங்கள்.

*********************************************************************************

சுயநலம் அற்றவர்களாக இருங்கள். ஒரு நண்பன் மற்றொருவரைத் தனிமையில் தூற்றுவதை ஒருபோதும் கேட்டுக் கொண்டிருக்காதீர்கள்.

*********************************************************************************

இன்றைய இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் நவீனத் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் ஆகிய உங்களிடம் தான் என் நம்பிக்கை இருக்கிறது. இவர்களிடமிருந்தே என் தொண்டர்கள் தோன்றுவார்கள்.

*********************************************************************************

மற்றவர்களுக்காக நாம் மேற்கொள்ளும் மிகக் குறைந்த அளவு உழைப்பும் நமக்குள்ளே இருக்கும் சக்தியைத் தட்டி எழுப்புகிறது.

*********************************************************************************

மற்றவர்களுடைய நன்மையைக் குறித்துச் சிறிதளவு நினைப்பதும்கூட சிங்கதிற்குச் சமமான ஆற்றலை நமது இதயத்திற்குப் படிப்படியாகத் தருகிறது.
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சுவாமி விவேகானந்தரின் சிந்தனை துளிகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Sep 07, 2013 3:15 pm

[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்னும் போர்க்களத்தில் அஞ்சாது எதிர்த்து நிற்கும் வீரன் ஒருவனுடைய மனநிலையே நமக்கு இப்போது தேவை.

******************************************************************

உங்களிடமே நம்பிக்கை வையுங்கள். ஒரு காலத்தில் நீங்கள் வேத காலத்தைச் சேர்ந்த ரிஷிகளாக இருந்தீர்கள். இப்போது வேறு வடிவம் நாங்கி வந்திருக்கிறீர்கள்.

*******************************************************************

என் மகனே! மரணம் நேருவதைத் தடுக்க முடியாது. கற்களைப் போலவும் கட்டைகளைப் போலவும் செத்து மடிவதைவிட வீரர்களைப் போல இறப்பது மேலானது அல்லவா? அதிலும் மற்றவர்களுக்கு ஒரு சிறிதளவாவது நன்மை செய்வதற்காக அழிந்து போவது மிகவும் நல்லது.

********************************************************************

எழுமின்! விழிமின்!
என்னும் இந்த அச்சமற்ற செய்தியை அறைகூவிச் சொல்வதற்காகவே நான் பிறந்திருக்கிறேன். இந்தப் பணியில் நீங்கள் என்னுடைய உதவியாளர்களாக இருங்கள்.
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சுவாமி விவேகானந்தரின் சிந்தனை துளிகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Sep 07, 2013 3:16 pm

[You must be registered and logged in to see this image.]
சொல், செயல், சிந்தனைகளில் ஒன்றாக விளங்கும் ஒரு சிலரால் உலகையே ஆட்டி வைக்க முடியும். இந்த உண்மையை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்.

******************************************************************************************

நீங்கள் உண்மையிலேயே என் குழந்தைகளானால், எதற்குமே அஞ்சி நின்றுவிட மாட்டீர்கள். நீங்கள் சிங்கக்குட்டிகளைப் போலத் திகழ்வீர்கள்.

******************************************************************************************


ஓ பாரத நாடே! உன் பெண்மையின் லட்சியம் சீதை, சாவித்திரி, தமயந்தி என்பதை மறந்துவிடாதே. தாழ்ந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள், அறியாமை மிக்கவர்கள், ஏழைகள், கல்வியறிவு அற்றவர்கள், சக்கிலியர், தோட்டிகள் ஆகியவர்கள் அனைவரும் உன்னுடன் ரத்தத் தொடர்புடைய நெருக்கமான உறவினர்களே, உன் உடன்பிறந்த சகோதரர்களே என்பதை மறந்துவிடாதே.

******************************************************************************************

மரணம் வரும் வரையிலும் வேலை செய். நான் உன்னுடன் இருக்கிறேன். நான் இறந்த பிறகும் என் ஆவி உன்னுடன் இருந்து வேலை செய்யும்.
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சுவாமி விவேகானந்தரின் சிந்தனை துளிகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Sep 07, 2013 3:16 pm

அறிவு, உள்ளம் ஆகிய இரண்டில் எதைப் பின்பற்றுவது என்ற போராட்டம் எழும்போது உள்ளம் சொல்வதையே நீங்கள் பின்பற்றுங்கள். ஏனென்றால் அறிவாற்றலால் ஒருபோதும் செல்லவே முடியாத மிகவும் உயர்ந்த மனநிலைக்கு, இதயம் ஒருவனை அழைத்துக்கொண்டு போகிறது.

***************************************************************************************

தாழ்ந்த உண்மையிலிருந்து உயர்ந்த உண்மைக்கு மனித குலம் செல்கிறது; தவறிலிருந்து உண்மைக்குச் செல்கிறோம் என்று நினைப்பது பொருந்தாது.

***************************************************************************************

உண்மை, தூய்மை, சுயநலமின்மை ஆகிய இந்த மூன்றும் எங்கெல்லாம் காணப்படுகின்றனவோ, அவற்றைப் பெற்றிருப்பவர்களை நசுக்கக் கூடிய ஆற்றல் விண்ணுலகிலோ மண்ணுலகிலோ எங்குமே கிடையாது. இந்த மூன்றையும் பெற்றுள்ள ஒருவனைப் பிரபஞ்சம் முழுவதுமே எதிர்த்து நின்றாலும் அதை எதிர்த்து நிற்கக்கூடிய ஆற்றல் அவனுக்கு உண்டு.

**************************************************************************************

நீ செய்த தவறுகளை வாழ்த்து; அந்தத் தவறுகள் நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன. துன்பங்களுக்கும் நல் வாழ்த்துக்கள்! இன்பங்களுக்கும் நல் வாழ்த்துக்கள்!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சுவாமி விவேகானந்தரின் சிந்தனை துளிகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Sep 07, 2013 3:18 pm


உன் நிலை எப்படிப்பட்டதாக இருந்தாலும், அதைக் குறித்து கவலைப்பட வேண்டாம். இலட்சியத்தைப் பற்றிக்கொண்டு முன்னேறியபடியே இரு!

**********************************************
மற்றவர்களுக்கு நன்மை செய்வது புண்ணியம்; தீமை செய்வது பாவம்.

**********************************************
மனிதன் எந்த அளவுக்கு உயர்ந்தவனாகிறானோ அந்த அளவுக்கு அவன் கடுமையான சோதனைகளையும் கடந்து சென்றாக வேண்டும்.

***************************************************** கீழ்த்தரமான தந்திரங்களினால் இந்த உலகில் மகத்தான காரியம் எதையும் சாதித்துவிட முடியாது. இது என் உறுதியான நம்பிக்கை.
*****************************************************
கோழைகளுடனோ அல்லது அர்த்தமற்ற அரசியலுடனோ எனக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை. கடவுளும் உண்மையும் தான் இந்த உலகிலுள்ள ஒரே அரசியல். மற்றவை எல்லாம் வெறும் குப்பை. **************************************

நன்றி ;மௌனம் பேசும் மொழிகள்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சுவாமி விவேகானந்தரின் சிந்தனை துளிகள்

Post by Muthumohamed on Sat Sep 07, 2013 11:01 pm

சிந்தனை துளிகளின் பகிர்வு சூப்பர் சூப்பர் சூப்பர்
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: சுவாமி விவேகானந்தரின் சிந்தனை துளிகள்

Post by ஸ்ரீராம் on Sun Sep 08, 2013 11:21 am

அருமையான பகிர்வு அண்ணா.
சிந்தனைகள் தொடரட்டும் ........

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233201  உறுப்பினர்கள்: 3599 | புதிய உறுப்பினர்: Thas VN Thasan

[You must be registered and logged in to see this link.]


avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: சுவாமி விவேகானந்தரின் சிந்தனை துளிகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Sep 08, 2013 12:21 pm

நன்றி நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சுவாமி விவேகானந்தரின் சிந்தனை துளிகள்

Post by சரண் on Sun Sep 08, 2013 2:55 pm

அருமையான பகிர்வு!
avatar
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

Re: சுவாமி விவேகானந்தரின் சிந்தனை துளிகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Sep 08, 2013 3:51 pm

நன்றி மிக்க சந்தோஷம்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சுவாமி விவேகானந்தரின் சிந்தனை துளிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum