தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
by rammalar

» தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
by rammalar

» நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
by rammalar

» போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
by rammalar

» போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
by rammalar

» நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
by rammalar

» புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
by rammalar

» மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
by rammalar

» வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
by rammalar

» வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
by rammalar

» சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
by rammalar

» மேய்ச்சல் - கவிதை
by rammalar

» பயம் - கவிதை
by rammalar

» மென்பொருள் தேவைக்கு....
by sanji

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar

» தகவல் துணுக்குகள்
by rammalar

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar

» நடிகை இந்துஜா
by rammalar

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar

» நம்மைப்போல் - கவிதை
by rammalar

» இப்படி எல்லாம் சட்டம் போட்டா நல்லாத்தான் இருக்கும்...!!
by rammalar

» தினசரி மனைவிக்கு நன்றி சொல்லுங்கள்...!!
by rammalar

» மனைவிக்கு உள்ள சிறப்புகள்
by rammalar

» தலைவர் எப்படி அல்பாயுச போனாரு,..?
by rammalar

» சிந்தனை கார்னர் - ஒன்று முதல் பத்து வரை
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அன்னை தெரசா

View previous topic View next topic Go down

அன்னை தெரசா

Post by மகா பிரபு on Wed Sep 04, 2013 10:32 am

[You must be registered and logged in to see this image.]அன்னையின் பிறப்பு!


"ஸ்கோப்ஜே' அல்பேனிய அரசின் சிறு பகுதி. அமைதியின் சரணாலயம். அன்பின் எழில் நகரம். 25 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட தடாகத்தில்தான் அன்னை தெரசாள் என்ற ஆன்மீகத் தொண்டுமலர் பூத்தது.


யுகோஸ்லேவியா, ஏட்ரியாடிக் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள நாடு. யுகோஸ்லேவியாவிற்கு வடக்கே டினாரிக்ஸ், தெற்கே வளைகுடா மலையடி வாரத்தில் பெரிய பெரிய மரங்கள். அண்ணாந்து பார்த்தால், மரங்களின் உச்சியை பார்க்கக் கூட முடியாது அவ்வளவு உயரமான மரங்கள். புவியியல் ரீதியாக அழகான இந்த நாட்டில் தான் புவி முழுவதும் தன் சேவையால் அன்பின் அழகினை பரப்பி புகழ் பெற்ற அந்த பெண் பிறந்தாள்.


அந்த பெண்ணுக்கு அப்பா; நிக்கோலாஸ், அம்மா; டிரனாபில் பெர்னாய். ஆக்னஸ் கோன்ஷா பேஜாகியூ என்று அப்பெண்ணுக்கு பெயரிட்டனர் பெற்றோர். ஆக்னஸ் கோன்ஷா என்றால் அல்பேனிய மொழியில் "மலர் மொட்டு' என்று பொருள். பேஜாகியூ என்பது அவர்களது குடும்ப பெயர். ஆக்னஸ் கடைக்குட்டி, பெற்றவர் களுக்கு அவளே செல்லக்குட்டி, ஆக்னஸ் படிப்பிலோ படுச்சுட்டி. ஆக்னஸ் அப்பா சிறிய அளவில் மளிகை கடை ஒன்று நடத்தி வந்தார்.


ஆக்னஸ் 1910ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி பிறந்தார். ஆக்னஸின் அம்மா மிகுந்த இறைப்பற்று கொண்டவர். கிறிஸ்துவ சமயத்தை சேர்ந்த இக்குடும்பம் இயேசுநாதரின் போதனைகளின் படி வாழ்ந்து வந்த குடும்பம். அம்மா தன் மூன்று குழந்தைகளுக்கும் பைபிள் கற்று கொடுத்தார். தினமும் மாதாகோவில் சென்று பிரார்த்தனை செய்ய சொல்லி கொடுத்தார்.


ஆக்னஸின் அம்மா அறுசுவை உணவு அளித்தார். அதோடு, "பிறரை நேசி' என்ற ஆன்மீக உணர்வையும் ஊட்டினார்.


ஆக்னஸ் அன்னையானதற்கு காரணமான அவரின் அம்மா!


1914ம் ஆண்டு, "முதல் உலகப்போர் மூண்டது. போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளுள் ஒன்று யுகோஸ்லேவியா. பஞ்சமும், பிணியும், பசியும் தலைவிரித்து ஆடின.


ஆக்னஸின் பெற்றோரும் அவதிப்பட்டனர். அதன் பின்னர் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ஆக்னஸின் தந்தை மறைந்தார்.


குடும்பம் கடுமையாக தத்தளித்தது. ஆனாலும் அம்மாவின் உழைப்பினாலும், மன உறுதியினாலும் அவர்கள் குடும்பம் ஓரளவு உயிர் பெற்றது. அம்மா தினமும் தன் குழந்தைகளுடன் பிரார்த்தனையில் ஈடுபடுவார்.
அம்மா துணிக்கடை ஒன்றை தொடங்கி நடத்தினார். பூ வேலைகளை அழகாக துணிகளில் செய்து பார்ப்போரை பரவசப் படுத்தினார். பூவேலைகளுடன் கூடிய ஆடைகள் ஆக்னஸை கவர்ந்தன. தினமும் ஒரு புத்தாடை அணிந்து மகிழ ஆக்னஸ் ஆர்வம் காட்டினாள். அப்பா இல்லாத குறை தெரியாமல் பிள்ளைகளை வளர்த்தார் அம்மா. பள்ளிக்கூடங்கள் என்பது தாய்ப்பால் போல் உரமும், உறுதியும் தரக் கூடியது. அதோடு முக்கியமாய் பாடங்களையும், ஒழுக்கங்களையும் கற்று தருவது. அவற்றை தொடர்ந்து இல்லங்களிலும் இப்பயிற்சி தொடரப்பட வேண்டும். இதை நன்கு தெரிந்து வைத்திருந்தார் ஆக்னஸின் அம்மா.


ஆக்னஸ் பண்பாடும், ஒழுக்கமும் நிரம்பப் பெற்றவளாக வளர்ந்தாள். ஆக்னஸின் ஒவ்வொரு செயலையும் உன்னிப்பாக கவனித்து வந்தார் அவள் அம்மா. ஆக்னஸ் தன்னுடன் படிக்கும் தோழிகள் அனைவரிடமும் சிரித்து பேசி நட்பாய் பழகி வந்தாள். தீயவர்களின் நட்பை நீக்க வேண்டும் நல்லவர்களின் நட்பை நாட வேண்டும் என்ற அம்மாவின் அறிவுரைப்படி ஆக்னஸ் நல்ல தோழிகளுடன் மட்டுமே உரையாடினாள், உறவாடினாள்.


பள்ளிப்பருவம் கற்பனை உலகில் பவனிவரும் பருவம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும் லட்சியம் இருக்கும். எழுத்து, பேச்சு, ஆடல், பாடல், கலை, விளையாட்டு என பல்வேறு துறைகளில் மாணவர்களுக்கு ஆர்வம் ஏற்படும். ஆக்னஸின் லட்சியம் சற்று வித்தியாசமாக விளங்கியது. அம்மா சொல்லி தந்த பண்பாடு, அடுத்தவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற திசையில் அவளை திருப்பிற்று. துன்பம், வறுமை முதலியவற்றின் கொடுமைகளை கண்டு ஆக்னஸ் மனம் வருந்தினாள். எனவே, ஏழை எளியவர்களுக்கு என்றும் சேவை செய்வதே தனது லட்சியம் என கொண்டாள்.


பன்னிரண்டு வயதில் பளிச்சென்று இப்படி ஓர் உயரிய நோக்கு வர காரணம் இருந்தது. அது ஆக்னஸின் அம்மாவின் வளர்ப்பு. அன்னை தெரசாவின் அன்பு பணியை நாமும் செய்ய முயல்வோம்!
***
தினமலர்
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: அன்னை தெரசா

Post by கவிப்புயல் இனியவன் on Wed Sep 04, 2013 3:37 pm

தாயே வணக்கம்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21233

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: அன்னை தெரசா

Post by முரளிராஜா on Sat Jan 25, 2014 7:18 am

ஏழை எளியவர்களுக்கு என்றும் சேவை செய்வதே தனது லட்சியமாக கொண்ட அன்னை தெரசாவின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.

_________________________________________________

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum