தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Aug 26, 2013 5:09 pm

பத்துப்பாத்திரம் தேய்த்து
பத்திரமாய் வளர்த்தேன்
என் தங்க மகளை ....!!!

படிப்பு நேரம் தவிர
என்னுடனேயே
பணிபுரிவாள் - என்
தங்க மகள் ....!!!

நண்பர்களுடன் வீண்வம்பு
இல்லை ...
சுற்றி திரியும் வயதில்
வரும் காதல் நோய்
என் மகளிடம் இல்லை ..

படித்தாள்
பட்டதாரியானாள்
பாட்டிஎன்று அழைக்கவைத்தாள்
என் மகள் தங்க மகள் தானே ...?
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Aug 27, 2013 9:11 am

கை
வண்டியிழுத்து பிழைத்தேன்
ரிட்சா வந்தது
வண்டி பிழைப்பு போனது

ரிச்சா வாங்கினேன்
டாக்சி வந்தது
ரிச்சா பிழைப்பு போனது

டாக்சி வாங்கினேன்
ஆட்டோ வந்தது
டாக்சி பிழைப்பு போனது

புதுமையை நானும்
விரும்புகிறேன்
புதியத்தற்கு என்னையும்
தயார் படுத்துகிறேன்
வீடுதான் பழையதாக
இன்னும் இருக்கிறது ....

சேமியுங்கள் சேமியுங்கள்
என்கிறார்களே எப்படி சேமிப்பது
புதுமையின் வேகத்துக்கு ...?
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Aug 27, 2013 9:37 am

நினைத்து பார்க்கிறேன்
கோயில் திருவிழாவை
பத்து நாள் திருவிழாவில்
படாத பாடு பட்டத்தை ...!!!

முதல் நாள் திருவிழாவிற்கு
குளித்து திருநீறணிந்து
பக்திப்பழமாய் சென்றேன்
பார்ப்பவர்கள்
கண் படுமளவிற்கு....!!!

இரண்டாம் நாள் திருவிழாவில்
நண்பர்களுடன் கோயில் வீதி
முழுவதும் ஓடித்திரிவதே வேலை
பார்ப்பவர்கள் எல்லோரும்
திட்டும் வரை ....!!!

மூன்றாம் நாள் திருவிழாவில்
மூண்டது சண்டை நண்பர்கள்
மத்தியில் - கூட்டத்துக்குள்
மறைந்து விளையாட்டு ....!!!

நாளாம் நாள் திருவிழாவில்
நாலாதிசையும் காரணமில்லாது
அலைந்து திரிவேன் ...!!!

ஐந்தாம் நாள் திருவிழாவில்
சேர்த்துவைத்த காசை
செலவளித்து விட்டு
வெறும் கையோடு இருப்பேன் ...!!!

ஆறாம் நாள் திருவிழாவை
ஆறுதலான நாளாக கருதி
வீட்டிலேயே இருந்து விடுவேன் ...!!!

காத்திருப்பேன்
தேர் திருவிழாவை -அப்பாவின்
ஆசீர் வாதத்துடன் செல்வதற்கு
அப்பாவும் படியளர்ப்பார்
அம்மாவும் படியளப்பா ....!!!

தேர் திருவிழா இறைவனின்
அழித்தல் தொழிற்பாடாம்
அழித்துவிடுவோம்
முன்னர் ஏற்பட்ட
நண்பர் பகையையும்
கொண்டு சென்ற காசையும் ...!!!

காலம் தான் மாறினாலும்
அந்த நினைவுகள் -காலம் காலமாய்
திருவிழா வரும் போது
வந்து கொண்டெ இருக்கிறது ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by முழுமுதலோன் on Tue Aug 27, 2013 9:43 am

கே இனியவன் wrote:காலம் தான் மாறினாலும் 
அந்த நினைவுகள் -காலம் காலமாய் 
திருவிழா வரும் போது 
வந்து கொண்டெ இருக்கிறது ...!!!
வாழ்க்கை கவிதைகள் சூப்பர் சூப்பர் சூப்பர்

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by Muthumohamed on Tue Aug 27, 2013 10:04 am

இனிமையான வாழ்க்கை கவிதை பதிவுகளுக்கு மிக்க நன்றி கவியே
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Aug 27, 2013 10:19 am

நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Aug 30, 2013 4:48 pm

வெளிச்சம் வரும் போது
நிழல் வருவதுபோல்
வசதி வரும் போதுதான்
உறவுகள் பெருகும் ...!!!

வறுமையில் இருந்த போது
பார்க்காத உறவு -வசதியில்
வருவது வினோதமல்ல ...!!!

உறவுகள் இருக்கும் போதே
நல்ல உறவை தேடிவிடு ...
நல்ல உறவென்பது -நீ
அழுதால் அழும் உறவல்ல ..!!!
நீ அழுதால் கண்ணீரை
துடைத்துவிடும் உறவு ...!!!

avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by முரளிராஜா on Sat Aug 31, 2013 7:44 am

கவிதை அருமை
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Aug 31, 2013 8:51 am

நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by சரண் on Sat Aug 31, 2013 10:34 am

உறவுகள் இருக்கும் போதே
நல்ல உறவை தேடிவிடு ...
நல்ல உறவென்பது -நீ
அழுதால் அழும் உறவல்ல ..!!!
நீ அழுதால் கண்ணீரை
துடைத்துவிடும் உறவு ...!!!
அருமை! அருமை!
கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
avatar
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Aug 31, 2013 12:01 pm

நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Sep 12, 2013 4:58 pm

தலைவர் ...
மேடையில் முழக்கம்
குழந்தை தொழில் ஒழிக
தலைவர் கார் கதவு திறந்தது
சிறுவன் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Sep 12, 2013 5:48 pm

கே இனியவன் wrote:தலைவர் ...
மேடையில் முழக்கம்
குழந்தை தொழில் ஒழிக
தலைவர் கார் கதவு திறந்தது
சிறுவன் ...!!!
அழகிய முரண்... அரசியல்வாதிகள் இப்படித்தான் செய்கிறார்கள்... விதிவிலக்காக இருப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Sep 12, 2013 6:02 pm

அழகிய முரண்... அரசியல்வாதிகள் இப்படித்தான் செய்கிறார்கள்... விதிவிலக்காக இருப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்
நிச்சயம் நல்ல அரசியல் வாதிகள் உள்ளனர்
அவர்களை நான் அரசியல் ஞானிகள் என்பேன்
நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by சரண் on Fri Sep 13, 2013 6:50 am

கே இனியவன் wrote:
அழகிய முரண்... அரசியல்வாதிகள் இப்படித்தான் செய்கிறார்கள்... விதிவிலக்காக இருப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்
நிச்சயம் நல்ல அரசியல் வாதிகள் உள்ளனர்
அவர்களை நான் அரசியல் ஞானிகள் என்பேன்
நன்றி நன்றி
நல்ல பதில்.கைதட்டல் கைதட்டல் 
avatar
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by sawmya on Fri Sep 13, 2013 8:50 am

சூப்பர் கைதட்டல் சூப்பர்
avatar
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Sep 13, 2013 8:48 pm

நன்றி சரண்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Sep 17, 2013 3:40 pm

அதிகாலை எழுந்து
அம்மாக்கள் படும் பாடு
அம்மாடியோ சொல்லமுடியாத
அத்தனை துன்பம் ...!!!

அவசர அவசரமாக
உணவு தயாரிப்பு -அதை
பொட்டலமாக கட்டும் அவசரம் ,,,,!!!
கட்டிய பொட்டலத்தையும்
பிள்ளையையும் அவசர அவசரமாய்
பஸ்ஸில் ஏற்றி பிள்ளை வளர்க்கும்
அம்மாக்கள் படும் பாடு அப்படியோ
சொல்லமுடியாத கதைதான்

என் இந்த அவலம் ...?
கூட்டு குடும்ப சிதைவுதான்
தனிக்கையாய் அவஸ்தை படுகிறது ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Sep 24, 2013 4:00 pm

அதிகாலையில் துயில் எழுந்து
அகமுகத்துடன் ஆரம்பித்தால்
அகத்தில் ஆண்டவன் குடியிருப்பான்

ஆலயம் செல்ல தேவையில்லை
ஆலயமாக வீட்டை நோக்கினால்
ஆனந்தம் பெருகும் வாழ்வில்

இல்லறம் என்பது என்றும்
இன்பமாய் வாழ்வதற்கே
இதை உணர்ந்தால் உனக்கு வெற்றி

ஈசன் பாதம் நினைத்திடு
ஈகை பண்பை வளர்த்திடு
ஈரேழு ஜென்மமும் இன்பமே

உண்டியை அளவோடு உண்
உழைப்பையும் அளவோடு செய்
உயிராற்றல் வழுவாய் பெருகும்

ஊர் வம்பு பேசாமல்
ஊன் உண்பதை தவிர்த்தால்
ஊர் போற்றும் அரசன் நீ

எறும்பு போல் உழைத்திடு
எடுத்தெறிந்து பேசாதே
என்றும் இனிமையாக வாழ்வாய்

ஏர்பிடித்தவன் இறைவன்
ஏகாந்தம் பேசியே காலத்தை கழிக்காதே
ஏன் பிறந்தோம் என்று நினைக்காதே

ஐம்பொறியை அடக்கு
ஐம் பூதங்களை மதி
ஐயம் இன்றி வாழ்வாய்

ஒற்றுமையோடு உறவாடு
ஒன்று பட்டு உழைத்திடு
ஒரு நாள் நீ அரசன்

ஓர்மம் கொண்டு உழைத்திடு
ஓதுவதை தொடர்ந்திடு
ஓர் இனமே வாழ்ந்திடு

ஔவை சொன்னதை கேள்
ஔடதம் இன்றி வாழ்ந்திருவாய்
அஃதே நீடூடி வாழ்வாய் .....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Sep 25, 2013 9:46 pm

உன்னை மணர்ந்தபின்
பூக்களில் வாசம் இல்லை
உன்னை அடைந்தபின்
வாழ்கையில் வீணாக்குவதில்லை
யார் நெஞ்சில் யார் இருப்பார்
என்று ஆண்டவன் போட்ட
முடிச்சு திருமணம் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Sep 30, 2013 8:20 am

வறுமை யாருக்கும் அழிவதில்லை

பசித்த வயதில் உணவில்லை.....
மாற்றியுடுக்க உடையில்லை .....
கிழிந்த காற்சட்டையுடன் இடுப்பில்.....
நிற்காத காற்சட்டையுடன் ஓடிய போது.....
வறுமையின் கொடுமை பசித்தால்....
மட்டும் புரியும் -உணவு கிடைத்தால்.....
அடங்கிவிடும் உணவு வறுமை .....!!!

படித்த வயதில் மக்கு மண்டைக்கு.....
படிப்பதில் வறுமை - எல்லோரும் .....
திட்டினாலும் அகங்காரம் விடாது .....
படிக்க யார் எனக்கு என்ன சொல்வது .....
என்ற இறுமாப்பு - நண்பன் படித்தான் .....
நானும் படித்தேன் -படிப்பு கிடைத்தது .....
அடங்கி விடும் படிப்பு வறுமை ....!!!

உழைக்கும் வயதில் வருமானத்துக்கு....
வறுமை - வீட்டில் இருந்து சாப்பிட்டால் .....
மரியாதைக்கு வறுமை - அலைந்து திரிந்து.....
வேலையை பெற்றவுடன் -வருமானம் கிடைத்தது..
அடங்கி விடும் வருமான வறுமை ....!!!

திருமணமான பின் அன்புக்கு வறுமை ....
உறவுகள் வார்த்தையால் துளைபோடும்....
இருக்கின்ற அன்பிலும் மிகப்பெரிய வறுமை....
வேசம் போட்டு நாடகமாடினேன் -அன்பு கிடைத்தது
அடங்கி விடும் அன்பு வறுமை ...!!!

கிடைக்கவில்லை ....
கிடைக்க போவதுமில்லை ...
நஞ்சில்லாத உணவு ....
மனதை வளப்படுத்தும் கல்வி ...
தூய உள்ளத்தின் அன்பு ....
இறக்கும் போதும் இவை கிடைக்காததால்
வறுமையுடனேயே இறக்கப்போகிறேன்
வறுமை யாருக்கும் அழிவதில்லை
எப்படி பிரித்தார்கள் உலகை ...?
வறியநாடு செல்வந்த நாடு என்று ....?
வருமானம் படும் தான் உலகில் வறுமையா ...?
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by sawmya on Mon Sep 30, 2013 9:33 am

கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி
avatar
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Sep 30, 2013 12:14 pm

நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by kanmani singh on Mon Sep 30, 2013 12:19 pm

கவிதைகள் அனைத்தும் மனதில் பதிந்துவிட்டன..

கண்மணி சிங்

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Sep 30, 2013 5:21 pm

நன்றி இப்படிபட்டவர்கள் இருப்பதால் தான் எழுத முடிகிறது
நன்றி உள்ளத்தால் சொன்னதற்கு
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum