தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கத்திப்பாராவில் தூண்களின்றி அமைகிறது மேம்பாலம்!

View previous topic View next topic Go down

கத்திப்பாராவில் தூண்களின்றி அமைகிறது மேம்பாலம்!

Post by Muthumohamed on Thu Jun 06, 2013 12:27 am

சென்னை: கோயம்பேடு - பரங்கிமலை இடையே, 12 கி.மீ., தூரம் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணியில், 11 கி.மீ., தூரம் பாதை அமைக்கப்பட்டுவிட்டது. கத்திப்பாரா அருகே, ஜி.எஸ்.டி., சாலை, 100 அடி சாலை இடையே, தூண்களின்றி, 75 மீ., நீளத்திற்கு, மேம்பாலம் அமைக்கும் பணி துவங்கியது.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் முதல் கட்டமாக, கோயம்பேடு - பரங்கிமலை இடையே, வரும், 2014, ஜனவரியில், ரயில் போக்குவரத்து துவங்கப்பட உள்ளது. இதற்காக, இப்பகுதிகளுக்கு இடையே, மெட்ரோ ரயில் பாதை பணி விரைவாக நடந்து வருகிறது. இந்த திட்டத்தில், கோயம்பேடு - பரங்கிமலை இடையே, 12 கி.மீ., தூரம், சிமென்ட் தூண்கள் மீது பாலம் அமைக்கப்பட்டு, அதன் மீது, ரயில் பாதை அமைக்கப்பட வேண்டும். இதில், தற்போது வரை, 11 ஆயிரத்து, 250 மீ., தூரம் பாலப் பணி முடிந்துள்ளது. மீதமுள்ள, 750 மீ., தூரம் பாலம் அமைக்கப்படுவதற்காக, சிமென்ட் தூண்கள் அமைக்கும் பணியில், இன்னும் மூன்று தூண்கள் மட்டுமே கட்டப்பட வேண்டி உள்ளது. மற்ற தூண்களுக்கு இடையே, "செக்மென்ட்'கள் இணைப்பு மூலம், பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

12 கி.மீ., தூரம் தண்டவாளம்:


இப்பாதையில், கோயம்பேடு - வடபழனி - அசோக்பில்லர் இடையே, தண்டவாளம் அமைக்கும் பணியில் இதுவரை, இருவழி மார்க்கத்திலும், 12 கி.மீ., தூரம் வரை, தண்டவாளம் அமைக்கும் பணி முடிந்துள்ளது. இப்பாதையில், சிட்கோ - ஆலந்தூர் ரயில் நிலையம் இடையே, 500 மீ., தூரமும், ஆலந்தூர் - பரங்கிமலை இடையே, 250 மீ., தூரம் என, 750 மீ., தூரம், சிமென்ட் தூண்களின் மீது பாலம் அமைக்கும் பணி மீதம் உள்ளது. இப்பணிகள், செப்டம்பருக்குள் முடிக்க, திட்டமிடப்பட்டு உள்ளது. இப்பாதையில், கோயம்பேடு, கோயம்பேடு பேருந்து நிலையம், அரும்பாக்கம், வடபழனி, அசோக் நகர் - கே.கே., நகர், சிட்கோ, ஆலந்தூர், பரங்கிமலை ரயில் நிலைய பணிகள், 70 சதவீதம் பணி முடிக்கப்பட்டு உள்ளது என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

75 மீ., நீள மேம்பாலம்:


மெட்ரோ ரயில் திட்ட பணியில், கோயம்பேடு - பரங்கிமலை இடையே, சிமென்ட் தூண்கள் இடையே, இடவசதிக்கு ஏற்ப, 31 மீ., நீளம் முதல், 12 மீ., நீளம் வரை, தொடர் மேம்பாலம் அமைக்கப்பட்டு, அதன் மீது, ரயில் தண்டவாளம் அமைக்கப்பட்டு வருகிறது. இப்பாதையில், ஆலந்தூர் ரயில் நிலையம் அருகில், ஜி.எஸ்.டி., சாலை மற்றும் கத்திப்பாரா மேம்பாலத்தில் வாகன போக்குவரத்திற்கு இடையூறு இன்றி, பாலம் அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால், கத்திப்பாரா பாலம் - ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் இடையே, தூண்கள் இன்றி, "கேன்டி லீவர்' தொழில்நுட்பத்தில், 75 மீ., நீளத்திற்கு மேம்பாலம் கட்டப்படுகிறது. இதில், இரண்டு தூண்களுக்கும் இடையே, 3 மீட்டர் நீளமும், கீழ் பகுதி தேவையான அளவு வளைவுடனும் வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்டு உள்ள, 12 ஜோடி, "செக்மென்ட்'களும் (மொத்தம், 24 செக்மென்டுகள்), இத்துடன், பாலத்தின் மையப்பகுதிகளை இணைக்கும் வகையில், 3 மீ., நீளத்தில் செவ்வக வடிவில் தயாரிக்கப்பட்டுள்ள ஒரு செக்மென்ட் என, 25 செக்மென்டுகள் இணைக்கப்பட்டு, இப்பாலம் கட்டப்படுகிறது. இந்த பணி துவங்கப்பட்டு, இரண்டு தூண்களுக்கு இடையே, தலா, 3 மீ., நீளத்தில், இரண்டு செக்மென்டுகளை இணைக்கும் பணி, நடந்து வருகிறது. முழுப்பணியும், வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள்ளாக முடிக்கப்படும். கோயம்பேடு - பரங்கிமலை இடையே, 12 கி.மீ., ரயில் பாதை மற்றும் நிலையங்கள் அமைக்கும் பணி, வரும் அக்டோபருக்குள் முடிக்கப்பட்டு, டிசம்பரில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடத்தவும், இப்பாதையில், வரும், 2014, ஜனவரியில், பயணிகள் ரயில் போக்குவரத்து துவக்கவும் திட்டப் பணிகள் விரைவாக முடிக்கப்பட உள்ளன.

நன்றி : தினமலர்
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: கத்திப்பாராவில் தூண்களின்றி அமைகிறது மேம்பாலம்!

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Jun 06, 2013 7:03 am

கத்திப்பாரா பாலம் - ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் இடையே, தூண்கள் இன்றி, "கேன்டி லீவர்' தொழில்நுட்பத்தில், 75 மீ., நீளத்திற்கு மேம்பாலம் கட்டப்படுகிறது.

அம்மாடியோ.... பாலம் கீழே விழாம இருந்தா சரிதான்...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum