தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


செய்தி கதம்பம் - இதையும் படிங்க

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

செய்தி கதம்பம் - இதையும் படிங்க

Post by ஸ்ரீராம் on Tue May 14, 2013 10:55 am

ஒரு தமிழனின் சாதனை

ஒரு தமிழனின் சாதனையைப் பார்த்து இன்று கோக கோலா, பெப்சி நிறுவனங்கள் பயப்படுகிறது.

பவண்டோ குடித்திருக்கிறீர்களா.. தென்மாவட்டத்தைச் சேர்ந்த காளிமார்க் நிறுவனம் தயாரிக்கும் குளிர் பானம். ஒரு முறை குடித்தால் மீண்டும் மீண்டும் குடிக்கத் தோன்றக்கூடிய ருசி கொண்டது.

pepsi, coca cola போன்ற பூச்சி மருந்து வியாபாரிகள் பயந்து நடுங்குவது `BOVONTO'வை கண்டு தான். பெப்ஸி , கோலாவை விட பொவெண்டோ விரைவில் விற்பனையாகிறது என்ற பயம். இதனால் பல கடைகளில் பொவெண்டோவை விற்கக்கூடாது என்று வியாபாரிகளுக்குக் கட்டுப்பாடு போடுகிறார்கள்.

உங்களில் பலர் பூச்சி மருந்தான பெப்ஸி, கோக் குடிக்க கூடும். அதற்கு மாற்றாக ஒரே ஒரு முறை நம்மூர் தயாரிப்பான `BOVONTO'வை குடித்துப்பாருங்கள்.. அப்புறம் பெப்ஸி, கோக் பூச்சி மருந்துகளை வாங்கவே மாட்டிர்கள்பூச்சி கொல்லி மருந்துகளான PEPSI, கோக், போன்றவற்றிலிருந்து மக்களைக் காப்பாற்றவும், ஒரு தமிழனைத் தமிழன் தூக்கி விடவேண்டும்

***********************************


ஆன்லைன் காயலாங்கடை!சென்னையை சேர்ந்த ஜெகன் மற்றும் சுஜாதா குப்பையை கையாளுவதில் புதிய அணுகுமுறையை உருவாக்கியுள்ளனர்.

இவர்களுடைய குப்பைத்தொட்டி டாட்காம் என்னும் இணையதளத்தில் பதிவு செய்துகொண்டால் வீட்டுக்கே வந்து மறுசுழற்சி செய்யக்கூடிய குப்பைகளான புத்தகங்கள்,பாட்டில்கள்,அலுமினியம்,எலக்ட்ரானிக் பொருட்கள்,தாமிரம் என அனைத்தையுமே பெற்றுக்கொள்கின்றனர்.

அதாவது ஆன்லைன் காயலாங்கடையை போன்ற ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளனர். பெறப்படும் குப்பைகளுக்கு உரிய பணத்தினையும் நியாயமான முறையில் தந்தும் விடுகின்றனர்.

இதன் மூலம் ஆபத்தை விளைவிக்கும் குப்பைகளை தெருவில் கொட்டுவது குறைவதோடு சுற்றுசூழலுக்கும் நல்லது , அதோடு மக்காத குப்பைகளை மக்கும் குப்பைகளோடு கலந்து கொட்டுவதும் தடுக்கப்பட்டுள்ளது என்கிறார் ஜெகன்.

இம்முயற்சிக்கு சென்னையின் பலபகுதி மக்களிடையேயும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.. மேலும் விபரங்களுக்கு –http://www.kuppathotti.com/ என்ற இணையதளத்தை காணலாம்.

***********************************

எனக்கு இல்லை..அது எனக்கில்லை....!

அமெரிக்காவில் குண்டு துளைக்காத கண்ணாடிகள் தயாரிக்கும் நிறுவனமொன்று விளம்பரத்தின் பொருட்டு பொது இடம் ஒன்றில் தனது தயாரிப்பான கண்ணாடிகளின் நடுவே மூன்று மில்லியன் டாலர்களை வைத்து எடுத்துக் கொள்ளச் சவால் விட்டிருக்கிறது. நீங்கள் அந்த கண்ணாடியை உடைத்து காட்டினால் அந்த 3 மில்லியன் டாலர்களும் உங்களுக்கு தானாம்...அதை உடைக்க சிலர் முயற்சிப்பதை படத்தில் காணலாம்..நன்றி முகநூல்

செய்தி கதம்பம் தொடரும்...


இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் சமூக வலைத்தளங்கள் வழியே உங்கள் நண்பர்களுக்கும் அறிய தாருங்கள் சகோதர சகோதரிகளே._________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233202  உறுப்பினர்கள்: 3600 | புதிய உறுப்பினர்: vinodh
avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: செய்தி கதம்பம் - இதையும் படிங்க

Post by mohaideen on Tue May 14, 2013 1:18 pm

நான் இப்போது ஊருக்கு போயிருக்கும்போது BOVONTO குடித்தேன்.

உண்மையில் இந்த பூச்சி மருந்துகளை விட நன்றாக இருக்கிறது.

அனைவரும் இதை பின்பற்றினால் நன்றாக இருக்கும்.

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
avatar
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

Re: செய்தி கதம்பம் - இதையும் படிங்க

Post by ஸ்ரீராம் on Tue May 14, 2013 2:20 pm

உண்மைதான் முகைதீன். நானும் குடித்து பார்த்தேன்.

200 மிலி பெப்சி அடக்கவிலை 50 பைசாதான், ஆனால் விற்ப்பது 8 ரூபாய்க்கு அதனால் நம் பணம் வெளிநாட்டுக்கு செல்வது (வரி மற்றும் இதர செலவுகள் தவிர) 6.50... இந்தியர்கள் யோசிக்க வேண்டும்.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233202  உறுப்பினர்கள்: 3600 | புதிய உறுப்பினர்: vinodh
avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: செய்தி கதம்பம் - இதையும் படிங்க

Post by ஸ்ரீராம் on Tue May 14, 2013 2:25 pm

ராமேசுவரத்தில் பாறைகள் தண்ணீரில் மிதக்கின்றனஎன்னது... பாறை மிதக்குதா? அதுவும் தண்ணீரிலா? நம்பவே முடியலீயே... என்கிறீர்களா?

"ராமர் தானே கடலில் பாறைகளை மிதக்க விட்டு, அதன் மூலம் இலங்கைக்கு சீதையை மீட்கச் சென்றார் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அதுவா இது" என்று பலர் கேட்கலாம்? அதுக்கும், இதுக்கும் நிறையவே சம்பந்தம் உள்ளது என்கிறார்கள்.

அதற்குமுன், தண்ணீரில் மிதக்கும் பாறைகள் பற்றி பார்ப்போமே...

ராமேசுவரத்தில் உள்ள துளசி பாபா மடத்திற்கு சென்றபோது இந்த மிதக்கும் பாறைகளைப் பார்த்தேன். அங்கு, தண்ணீரில் மிதந்து கொண்டிருந்த பாறைகளை பார்க்க வந்த சிலருக்கு சந்தேகம் வர (எனக்கும் சந்தேகம் வந்தது), அங்குள்ளவர்கள் பாறை தூக்கி வேண்டுமானாலும் பாருங்கள் என்று கூறினார்கள். அதன்படி, பாறையை தூக்கிப்பார்த்தவர்கள், "அம்மாடியோவ்... என்ன அழகா பாறை தண்ணீரில் மிதக்கிறது" என்று முகபாவனையாலேயே வியப்பை தெரிவித்தனர். நானும் தூக்கிப் பார்த்து வியந்தேன்.

பாறையைக் கூர்ந்து கவனித்த போது, உண்மையிலேயே இது பாறை தானா என்று சந்தேகம் வந்தது எனக்கு. அந்த மடத்தின் ஊழியர் ஒருவரிடம் அதுபற்றி கேட்டேன்.

"இதுவும் பாறை தான். ஆனால், வழக்கமான பாறை அல்ல. இதற்கு பெயர் பவளப்பாறை" என்றவர், அந்த பாறை இந்த மடத்திற்கு எப்படி வந்தது என்ற சம்பவத்தையும் என்னிடம் சொன்னார்.

"17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ராமபிரான் இலங்கைக்கு சீதையை மீட்க சென்றபோது குறுக்கிட்ட கடலை எப்படி கடப்பது என்று யோசித்தார். அப்போது பாறைகளை கடலுக்குள் தூக்கிப்போட்டார். அந்த பாறைகள் எல்லாம் கடலில் மூழ்காமல் மிதந்தன. மிதந்த பாறைகளின் வழியாக இலங்கை சென்று சீதையை மீட்டு வந்தார் ராமர்.

இந்த பாறைகள் தனுஷ்கோடிக்கும், இலங்கைக்கும் இடையில் அமைந்துள்ளன. இதைத் தான் ராமர் பாலம் என்று அழைக்கிறோம்.

தற்போது, இந்த மடத்தில் உள்ள பாறைகள் தனுஷ்கோடியில் இருந்து எடுக்கப்பட்டவைதான். ராமர் இலங்கை செல்ல கடலுக்குள் தூக்கிப்போட்ட பாறைகள் தான் இவை. ராமர் தனுஷ்கோடி வழியாக இலங்கை சென்றதன் நினைவாக தனுஷ்கோடியில் ராமர் கோவில் ஒன்று இருந்தது. 1964ல் ஏற்பட்ட புயலில் தனுஷ்கோடியே சின்னாபின்னாமானபோது இந்த கோவிலும் சிதைந்து போனது.

அந்த புயலுக்கு பின்னர், அங்கிருந்த ராமர், சீதை, லட்சுமணர் ஆகியோரது சிலைகள் இங்கு கொண்டு வரப்பட்டன. அப்போது, வடநாட்டு சாதுக்கள் தனுஷ்கோடி கடல்கரையில் ஏராளமான பாறைகள் மிதந்து கொண்டிருந்ததை கண்டு ஆச்சரியப்பட்டனர். அந்த பாறைகளில் சுமார் 2 ஆயிரம் பாறைகளை அவர்கள் சேகரித்து எடுத்தனர். அவர்கள் எடுத்துச் சென்ற பாறைகளில் 60 பாறைகள் இந்த மடத்தில் வைக்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள பாறைகளை வட நாட்டிற்கு கொண்டு சென்றனர். இன்று பூரி ஜெகநாதர் கோவில், குஜராத் மாநிலத்தில் உள்ள துவாரகா கிருஷ்ணர் கோவில் மற்றும் ரிஷிகேஷ், பத்திரிநாத், அலகாபாத், திரிவேணி சங்கமம் ஆகிய இடங்களில் காணப்படும் மிதக்கும் பாறைகள் இங்கிருந்து கொண்டு செல்லப்பட்டவையே! புதுச்சேரியில் உள்ள அனுமார் கோவிலிலும் இந்த மிதக்கும் பாறைகளை காணலாம்...." என்று நீண்ட விளக்கம் கொடுத்தார் அந்த ஊழியர்.

இந்த துளசி பாபா மடத்தில் ராமர் பயன்படுத்தியதாக கூறப்படும் பாறைகள் தவிர, தனுஷ்கோடியில் இருந்த ராமர் கோவிலில் அமைக்கப்பட்டிருந்த ராமர், சீதை, லட்சுமணர் ஆகியோரது சிலைகளும் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. ராமேசுவரம் வரும் சுற்றுலா பயணிகள், யாத்திரீகர்கள் இங்கும் வந்துவிட்டு செல்கிறார்கள்.

தண்ணீரில் கல்லைப் போட்டால் அது மூழ்கிவிடும். ஆனால் ராமபிரானும் மற்றவர்களும் இலங்கைக்குச் செல்வதற்காக கடலில் சேது அணை கட்டப்பட்டது.

அப்போது நளன் என்பவன் மற்ற வானர வீரர்கள் கொண்டு வந்து கொடுத்த கற்களை வாங்கிக் கடலில் வைத்த போது அவை மூழ்கவில்லை. இது ஏன் தெரியுமா?

விஸ்வகர்மாவின் மகனாகிய நளன் ஒரு சமயம் கங்கைக் கரையில் மரங்களின் கனிகளைப் பறித்துத் தின்பதும் மரக்கிளையில் தாவித் திரிவதுமாக இருந்தான்.

அப்போது சற்று தூரத்தில் ஒரு அந்தணர் சாளக்கிராமத்தை வைத்துப் பூஜை செய்து கொண்டிருப்பது அவன் கண்களில் பட்டது.

மெதுவாகச் சென்று விளையாட்டுத்தனமாக அந்தச் சாளக்கிராமத்தை எடுத்துக் கங்கை நீரில் வீசி எறிந்து விட்டான்.

கோபம் கொண்ட அந்தணர் நீ தண்ணீரில் எதை எறிந்தாலும் அது மூழ்காமல் மிதக்கட்டும் என்று சாபமிட்டார். அதனால்தான் கடலில் நளன் வைத்த கற்கள் மூழ்கிவிடாமல் நின்றன.

இந்த சாபம் ராமருக்கு உதவியாகிப் போய் விட்டது.

நன்றி : ஓம்முருகா


************


பேஸ்புக், டுவிட்டரை கண்காணிக்க போலீசில் தனிப்படை அமைப்பு

சென்னை: இணையதளத்தில் பேஸ்புக், டுவிட்டர் பக்கங்களை கண்காணிக்க போலீசில் இணை கமிஷனர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.இளைஞர்கள் மட்டுமல்லாது பெரியவர்கள், சிறியவர்கள் என்று அனைவரும் இணைய தளத்தில் பேஸ்புக், டுவிட்டர் பக்கங்களை பயன்படுத்துகின்றனர். கம்ப்யூட்டரில் மட்டுமே அதிகமாக பயன்படுத்தப்பட்டு வந்த இணையதளங்கள், இப்போது செல்போனுக்கும் வந்த பிறகு அதன் பயன்பாடு அதிகரித்துள்ளது.இந்த இணையதள பக்கங்களை சிலர் தவறான நோக்கத்திற்காகவும் பயன்படுத்துகின்றனர். இது தொடர்பாக அவ்வப்போது போலீசுக்கு புகார்களும் வருகிறது. இதனால் சென்னை போலீசார் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கங்களை கண்காணிக்க முடிவு செய்துள்ளனர். இது குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், நேற்று காலையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.அப்போது, சமூக வலைதளங்களை கண்காணிப்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் வலைதளங்களை கண்காணிக்க, இணை கமிஷனர் அருண் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இது குறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, கடந்த சில மாதங்களாகவே இணைய தளங்களை கண்காணித்தபோது, சமீபத்தில் மாணவர் போராட்டத்தை பேஸ்புக், டுவிட்டர் என இணையதளங்கள் மூலமாகவே ஒருங்கிணைத்ததை கண்டுபிடித்தோம். செல்போனில் தனித்தனியாக அழைப்பது கடினம். எஸ்எம்எஸ் கொடுத்தாலும் போலீசார் எளிதாக கண்டுபிடித்துவிடுவார்கள். இதனால், அவர்கள் பேஸ்புக்கை பயன்படுத்தியது தெரியவந்தது. இது குறித்து ஏற்கனவே 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால், இனி பேஸ்புக், டுவிட்டர் இணையதளத்தை நாங்கள் கண்காணிப்போம். அதில் சட்டத்துக்கு எதிரான நடவடிக்கைகள், தகவல்களை பரிமாறும் பயன்பாட்டாளர்களுக்கு முதலில் எச்சரிக்கை செய்வோம். அதையும் மீறி செயல்பட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதோடு குறிப்பிட்ட பேஸ்புக் முகவரியை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

நன்றி: தினகரன்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233202  உறுப்பினர்கள்: 3600 | புதிய உறுப்பினர்: vinodh
avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: செய்தி கதம்பம் - இதையும் படிங்க

Post by மகா பிரபு on Tue May 14, 2013 2:28 pm

பூச்சி கொல்லி மருந்துகளான PEPSI, கோக், போன்றவற்றிலிருந்து மக்களைக் காப்பாற்றவும், ஒரு தமிழனைத் தமிழன் தூக்கி விடவேண்டும்
எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன்
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: செய்தி கதம்பம் - இதையும் படிங்க

Post by ஸ்ரீராம் on Wed May 15, 2013 10:21 am

உலகம் போற்றும் தமிழனின் சாதனைகே.ஆர். ஸ்ரீதர்
- இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர்....

இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமேஇவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது . இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே.

அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்?
கே.ஆர். ஸ்ரீதர்....திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தி ல் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு, அதே பல்கலைக்கழகத்தி ல் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர். மிகப்பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது.அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபரட்டரியின் இயக்குநராக அவரை நியமித்தது.

செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? அதற்குத் தேவையான சாத்தியக்கூறுகள ைக் கண்டுபிடிப்பது எப்படி?என்பது பற்றி ஆராய்ச்சிசெய்வதே ஸ்ரீதரின் வேலை.முக்கியமாக செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை தயார் செய்ய முடியுமா என்கிற ஆராய்ச்சியை மேற்கொண்டார். இந்த ஆராய்ச்சியில் மிகப் பெரிய வெற்றியும் பெற்றார்.ஆனால் அமெரிக்க அரசாங்கமோ திடீரென அந்தஆராய்ச்சியை ஓரங்கட்டிவிட்டத ு. என்றாலும் தான் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த விஷயத்தை ஸ்ரீதர் அப்படியே விட்டுவிடவில்லை . அந்த ஆராய்ச்சியை அப்படியே ரிவர்ஸில் செய்து பார்த்தார் ஸ்ரீதர். அதாவது, ஏதோ ஒன்றிலிருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக அதை ஒரு இயந்திரத்துக்கு ள் அனுப்பி, அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியை சேர்த்தால் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தார். அட, என்ன ஆச்சரியம்! மின்சாரம் தயாராகி வெளியே வந்தது.

இனி அவரவர்கள் அவரவருக்குத் தேவையான மின்சாரத்தை இந்த இயந்திரம் மூலம் தயார் செய்து கொள்ளலாம் என்கிற நிலையை ஸ்ரீதர் உருவாக்கி இருக்கிறார். தான் கண்டுபிடித்த இந்தத் தொழில் நுட்பத்தை அமெரிக்காவில் செய்து காட்டிய போது அத்தனை விஞ்ஞானிகளும் அதிசயித்துப் போனார்கள். ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வர்த்தக ரீதியில் மின்சாரம் தயாரிக்க வேண்டுமெனில் அதற்கான இயந்திரங்களை உருவாக்க வேண்டும். இதற்கு பெரிய அளவில் பணம் வேண்டும்.இப்படிப்பட்ட தொழில்நுட்பத்தை உருவாக்கும் பிஸினஸ் பிளான்களுக்கு வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள்தான் பணத்தை முதலீடு செய்யும். ஸ்ரீதருக்கும் அப்படி ஒருவர் கிடைத்தார். அவர்பெயர், ஜான் டூயர். சிலிக்கன் பள்ளத்தாக்கில் பிரபலமாக இருக்கும் மிகப் பெரிய வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனமான கிளீனர் பெர்க்கின்ஸை சேர்ந்தவர் இந்த ஜான் டூயர். அமெரிக்காவில் மிகப் பெரும் வெற்றி கண்ட நெட்ஸ்கேப், அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்கள் இன்று பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கக் காரணம், ஜான் டூயர் ஆரம்பத்தில் போட்ட முதலீடுதான்.

கூகுள் நிறுவனத்தை ஆரம்பிக்க ஜான் டூயர் தொடக்கத்தில் போட்ட முதலீடு வெறும் 25 மில்லியன் டாலர்தான். ஆனால், ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை வர்த்தக ரீதியில் செயல்படுத்த ஜான் டூயர்போட்ட முதலீடு 100 மில்லியன் டாலர்.இது மிகப் பெரும் தொகை. என்றாலும் துணிந்து முதலீடு செய்தார் ஜான். காரணம், ஸ்ரீதர் கண்டுபிடித்த தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக் கு உகந்தது. பொதுவாக மின் உற்பத்தி செய்யும்போது சுற்றுச்சூழல் பிரச்னைகள் நிறையவே எழும். அது நீர் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி, அனல் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி. எனவே சுற்றுச்சூழலுக் கு எந்த வகையிலும் பங்கம் வராத மின் உற்பத்தித் தொழில்நுட்பத்து க்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று நினைத்தார் அவர். தவிர, ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை க் கொண்டு குறைவான செலவில்மின்சாரம் தயார் செய்ய முடியும். இந்த பாக்ஸிலிருந்து உருவாகும் மின்சாரம் குறைந்த தூரத்திலேயே பயன்படுவதால் மின் இழப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. இது மாதிரி பல நல்ல விஷயங்கள் ஸ்ரீதரின் கண்டுபிடிப்பில் இருப்பதை உணர்ந்ததால் அவர் அவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்தார். நல்லவேளையாக, ஜான் டூயரின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டு பலரும் உழைத்ததன் விளைவு இன்று 'ப்ளூம் பாக்ஸ்' என்கிற மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸ் தயார் செய்துள்ளார்.

சுமார் 10 முதல் 12 அடி உயரமுள்ள இரும்புப் பெட்டிதான் ஸ்ரீதர் உருவாக்கியுள்ள இயந்திரம். இதற்கு உள்ளேஆக்ஸிஜனையும் இயற்கை எரிவாயுவையும் செலுத்தினால் அடுத்த நிமிடம் உங்களுக்குத் தேவையான மின்சாரம் தயார். இயற்கை எரிவாயுவுக்குப் பதிலாக மாட்டுச்சாண வாயுவையும் செலுத்தலாம். அல்லது சூரிய ஒளியைக் கூட பயன்படுத்தலாமாம ். இந்த பாக்ஸ்களை கட்டடத்துக்குள் ளும் வைத்துக் கொள்ளலாம். வெட்ட வெளியிலும் வைத்துக் கொள்ளலாம் என்பது சிறப்பான விஷயம்.

உலகம் முழுக்க 2.5 பில்லியன் மக்கள் மின் இணைப்புப் பெறாமல் இருக்கிறார்கள்ஆ ப்பிரிக்காவில் ஏதோ ஒருகாட்டில் இருக்கும் கிராம மக்களுக்கு மின்சாரம் கொடுத்தால், அதனால் அரசாங்கத்துக்கு எந்த லாபமும் இல்லை என்பதால்அவர்கள் மின் இணைப்புக்கொடுப்பதில்லை. கிராமத்தை விட்டு வந்தால் மட்டுமே பொருளாதார ரீதியில் முன்னேற முடியும் என்கிற நிலை அந்த கிராம மக்களுக்கு. ஆனால் இந்த 'ப்ளூம் பாக்ஸ்' மட்டும் இருந்தால் உலகத்தின் எந்த மூலையிலும் மின்சாரம் தயார் செய்யலாம்'' என்கிறார் ஸ்ரீதர். ஒரு 'ப்ளூம் பாக்ஸ்' உங்களிடம் இருந்தால் இரண்டு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். இதே பாக்ஸ் இந்தியாவில் இருந்தால் நான்கு முதல்ஆறு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும்.

அமெரிக்க வீடுகளில் அதிக மின்சாரம் பயன்படுத்தப்படு வதே அங்கு வீடுகளின் எண்ணிக்கை குறையக் காரணம். இன்றைய தேதியில்அமெரிக்காவின் 20 பெரிய நிறுவனங்கள் ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன. கூகுள் நிறுவனம்தான் முதன் முதலாக இந்தத் தொழில்நுட்பத்தை வாங்குவதற்கான கான்ட்ராக்ட்டில ் கையெழுத்திட்டது . 'ப்ளூ பாக்ஸ்' மூலம் கூகுள் உற்பத்தி செய்யும் 400 கிலோ வாட் மின்சாரமும் அதன் ஒரு பிரிவுக்கே சரியாகப் போகிறது. வால் மார்ட் நிறுவனமும் 400 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸை வாங்கி இருக்கிறது. இப்போது Fedex, E bay, கோக்கா கோலா, அடோப் சிஸ்டம், சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட் போன்ற பல நிறுவனங்களும் இந்த புதிய தொழில்நுட்பத்தை ப் பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன.

100 கிலோ வாட் மின்சாரம் தயார் செய்யும் ஒரு பாக்ஸின் விலை 7 முதல் 8 லட்சம் டாலர்! அட, அவ்வளவு பணம் கொடுத்து வாங்க வேண்டுமா? என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்தத் தொழில்நுட்பத்தை ப் பயன்படுத்தும் E bay நிறுவனம் கடந்த ஆண்டு ஸ்ரீதரிடமிருந்த ு ஐந்து பாக்ஸ்களை வாங்கியது. தனக்குத் தேவையான 500 கிலோ வாட் மின்சாரத்தை இந்த பாக்ஸின் மூலமே தயார் செய்துவிடுகிறது . இந்த பாக்ஸ்களை வாங்கிய ஒன்பதே மாதத்துக்குள் 1 லட்சம் டாலர் வரை மின் கட்டணத்தை சேமித்திருக்கிற தாம் E bay.

இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் பல வீடுகளில் இந்த 'ப்ளூம் பாக்ஸ்' இருக்கும். சாதாரண மனிதர்களும் இந்த பாக்ஸை வாங்கி பயன்படுத்துகிற அளவுக்கு அதன் விலை 3,000டாலருக்குள் இருக்கும்''என்கிறார் ஸ்ரீதர். அந்தஅளவுக்கு விலை குறையுமாஎன்று கேட்டால், ஒரு காலத்தில் லட்சத்தில் விற்ற கம்ப்யூட்டர் இன்று ஆயிரங்களுக்குள் கிடைக்கிறதே என்கிறார்கள் ஸ்ரீதரின் ஆதரவாளர்கள். ஸ்ரீதரின் இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் நிஜமாகும் பட்சத்தில் உலகம் முழுக்க மக்கள் அந்தத் தமிழரின் பெயரை உச்சரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை...

நன்றி: Aanand சந்ராஜ்

செய்திகள் தொடரும்....

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233202  உறுப்பினர்கள்: 3600 | புதிய உறுப்பினர்: vinodh
avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: செய்தி கதம்பம் - இதையும் படிங்க

Post by ragu on Wed May 15, 2013 3:14 pm

அனைத்தும் அருமை எற்றுக்கொள்கிறேன்
avatar
ragu
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 542

Back to top Go down

Re: செய்தி கதம்பம் - இதையும் படிங்க

Post by மகா பிரபு on Wed May 15, 2013 3:20 pm

நல்ல திரி அண்ணா.
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: செய்தி கதம்பம் - இதையும் படிங்க

Post by ஸ்ரீராம் on Mon May 27, 2013 3:26 pm

இன்றைய செய்தி கதம்பம்

சாதாரணமாக சிங்கப்பூர்,துபாய், மலேஷியா என சுற்றுலா சென்று வருபவர்களும் ,அங்கு வேலை பார்த்துவிட்டு வருபவர்களும் சந்தோசமாக வாங்கி வருவது LED அல்லதுLCD டி.வி. மேலும் சில எலெக்ட்ரானிக் பொருட்கள்..இனி இப்படி வெளிநாடுகளில் வாங்கி இங்கு கொண்டு வரப்படும் டி.வி க்களுக்கு இங்கு வாரண்ட்டி ,சர்வீஸ் சப்போர்ட் ஆகியவை இருக்காது என சோனி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன

பொதுவாக எலெக்ட்ரானிக் பொருட்கள் இந்தியாவில் விற்கும் விலையை விட அந்த நாடுகளில் இவற்றின் விலை மிகவும் குறைவு. உதாரணமாக SONY 46 அங்குல LCD TV யின் இந்திய விலை ஏறக்குறைய 60000 ரூபாய் அதே TVயை துபாயில் வாங்கினால் வெறும் 37000 ரூபாய்தான்.அதே போன்று இந்தியாவில் ஏறக்குறைய 25,500 ரூபாய்க்கு விற்பனையாகும் LG 32 INCH LED TV சிங்கப்பூரில் 14000 ரூபாய்க்கு கிடைக்கிறது .சாம்சங் நிறுவனத்தின் 40-inch 3D LED TV இங்கு 74000 ரூபாய் பாங்காங்கில் அதன் விலை 42000 ரூபாய்தான்.. டி.வி. மட்டுமின்றி நிறைய எலெக்ட்ரானிக் பொருட்களும் மற்ற நாடுகளில் விலை குறைவு.

இதன் காரணமாக இந்திய விமான நிலையங்களில் வந்து இறங்கும் பயணிகள் மூலமாக ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 3000 டி.வி க்கள் வருகிறது.என Consumer Electronics and Appliances Manufacturers Association என அழைக்கப்படும் CEAMA தெரிவிக்கிறது.

இவ்வாறு குறைந்த விலைக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் காரணமாக இந்தியாவில் மார்க்கெட் நடுநிலை, ,வியாபாரத்திட்டங்கள் மற்றும் சட்டப்படியான விநியோகத்திட்டம் ஆகியவை தடுமாறுகிறது.மேலும் இந்திய சந்தையில் பொருள் வாங்கும் மனநிலை குறைகிறது.என சோனி நிறுவனத்தின் இந்தியத் தலைவர் சுனில் நய்யார் தெரிவித்தார்.
இதனால் பல்லாயிரம் கோடி முதலீடு செய்து இந்தியாவில் தொழிற்சாலையை தொடங்கியுள்ள சாம்சங்,சோனி ,எல்ஜி மற்றும் பேனசானிக் போன்ற கம்பெனிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

எனவே இப்படி வெளிநாடுகளில் வாங்கி இங்கு கொண்டுவரப்படும் டி.வி க்களுக்கு இனி இங்கு வாரண்ட்டி ,சர்வீஸ் சப்போர்ட் ஆகியவை இனி இருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.அத்துடன் பனசானிக் நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து இங்கு கொண்டுவரப்பட்டுள்ள பொருட்கள் வாரண்டியுடன் இருந்தாலும் உதிரி பாகங்கள் மற்றும் சர்வீசுக்கு கட்டணம் வசூலிக்கப் போவதாக தெரிவித்துள்ளது.

மேலும் வெளிநாடுகளில் உள்ள தங்கள் கிளைகம்பெனிகளிடம் பேசி சர்வதேச வாரண்டிமுறையை நிறுத்தும் படி கேட்டுக்கொள்ளப்படும் எனவும் தெரிவித்ததனர்.

இதற்கிடையில் வெளிநாடுகளில் விலை மலிவாக கிடைக்கும் டிவி இங்கு ஏன்அதிக விலைக்கு விற்கப்படுகிறது என கேட்டபோது இங்கு மற்ற நாடுகளை விட வரி விதிப்பு முறைகளின் காரணமாக 30% முதல் 40% அதிக வரி ,உற்பத்தி செலவு மற்றும் பலகட்ட விநியோக முறை ஆகியவை இருப்பதால் இந்த கூடுதல் விலை என்று சாம்சங் நிறுவன தரப்பில் கூறினார்.மேலும் இப்படி வெளி நாடுகளில் இருந்து கொன்து வருவதன் காரணமாக அரசுக்கு வர வேண்டிய வரியிலும் பெரும் இழப்பு ஏற்படுவதாக கூறுகின்றனர்.

இதுபற்றி அரசு தெளிவான முடிவு எடுக்காத நிலையில் இனி வெளி நாடுகளிலிருந்து வாங்கி வரும் டி.வி.க்களை இங்கு சர்வீஸ் செய்வது என்பது இனி கடினம்தான்.அரசு வரிவிதிப்பு முறைகளை மாற்றி இங்கும் குறைந்த விலையில் டிவிக்கள் கிடைக்க ஏற்பாடு செய்தால்தான் இதற்கு ஒரு விடை கிடைக்கும்.

நன்றி
ஆந்தையார்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233202  உறுப்பினர்கள்: 3600 | புதிய உறுப்பினர்: vinodh
avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: செய்தி கதம்பம் - இதையும் படிங்க

Post by ஸ்ரீராம் on Mon May 27, 2013 4:42 pm

உனக்கு நேரம் சரி இல்லைன்னு கேள்வி பட்டு இருப்போம்..பார்த்து இருக்கிறீர்களா...?
இங்கே பாருங்கள்... சரியாய் பார்த்து சொல்லுங்க எத்தனை வாகனங்களில் மோதுகிறான்...என்று..?


_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233202  உறுப்பினர்கள்: 3600 | புதிய உறுப்பினர்: vinodh
avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: செய்தி கதம்பம் - இதையும் படிங்க

Post by ragu on Mon May 27, 2013 4:54 pm

எல்லாம் நல்லாருக்கு அண்ணே
avatar
ragu
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 542

Back to top Go down

Re: செய்தி கதம்பம் - இதையும் படிங்க

Post by Muthumohamed on Mon May 27, 2013 11:00 pm

இன்று தான் இந்த பதிவுகளை பார்த்தேன் அருமை அருமை
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: செய்தி கதம்பம் - இதையும் படிங்க

Post by mohaideen on Tue May 28, 2013 1:55 pm

செய்திகள் அனைத்தும் அருமை

தொடரட்டும் உங்கள் பணி

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
avatar
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

Re: செய்தி கதம்பம் - இதையும் படிங்க

Post by மகா பிரபு on Tue May 28, 2013 2:06 pm

ஹா ஹா வீடியோ அருமை.
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: செய்தி கதம்பம் - இதையும் படிங்க

Post by கவிப்புயல் இனியவன் on Tue May 28, 2013 5:18 pm

அருமையான பதிவுகள்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21275

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: செய்தி கதம்பம் - இதையும் படிங்க

Post by Manik on Tue May 28, 2013 5:44 pm

சூப்பரான பதிவு ஸ்ரீராம் அண்ணா போட்ட பதிவு மிகவும் அருமை

வாழ்த்துகள் அண்ணா மேலும் பதிய

_________________________________________________

வாழும் வரையாவது சந்தோசமாய் இரு
avatar
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

Re: செய்தி கதம்பம் - இதையும் படிங்க

Post by பித்தன் on Tue May 28, 2013 5:50 pm

கைதட்டல் நல்ல தகவல் நண்பரே கைதட்டல்
avatar
பித்தன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 584

Back to top Go down

Re: செய்தி கதம்பம் - இதையும் படிங்க

Post by செந்தில் on Tue May 28, 2013 9:16 pm

கைதட்டல் சூப்பர் கைதட்டல்

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: செய்தி கதம்பம் - இதையும் படிங்க

Post by ஸ்ரீராம் on Tue Jun 18, 2013 9:10 am

சாதி மதம் குறிப்பிடாமல் பள்ளியில் சேர்க்க முடியுமா..? 


முடியும்.  இளமாறனை சாதி மதம் குறிப்பிடாமல் பள்ளியில் சேர்த்தது தொடர்பான பதிவைப் பார்த்து நண்பர்கள் பலருக்கு தங்கள் குழந்தைகளையும் அப்படி சேர்க்க வேண்டும் என்ற ஆசை வந்திருக்கிறது. சில நண்பர்கள் தாங்களும் தங்கள் குழந்தைகளை அப்படி சேர்த்திருப்பதாக மகிழ்ச்சியுடன் தகவலை பகிர்ந்து கொண்டார்கள். 

ஆனால் எப்படி சேர்க்க முடியும் என்ற தயக்கம் சில நண்பர்களுக்கு இருக்கிறது. அவர்களுக்காக..

சாதி மதம் குறிப்பிடாமல் பள்ளியில் சேர்க்க முடியும். அதற்கான அரசாணை நகல் இது.சாதி மதம் குறிப்பிட விரும்பாதவர்கள் இதை நகல் எடுத்து விண்ணப்பப் படிவத்துடன் கொடுக்கலாம்.

அதேசமயம் இன்னும் இடஒதுக்கீட்டை பயன்படுத்தி மேல வரவேண்டிய தேவை உள்ள மக்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்பதால் இதை எல்லா மக்களுக்கும் பொதுப்படையாக கடைப்பிடிக்க கூற முடியாது. கட்டாயப்படுத்த முடியாது. 

அதனால் ஓரளவுக்கு பொருளாதார ரீதியில் முன்னேறியவர்கள், சாதி மதத்தை தூக்கி சுமப்பதிலிருந்து விடுதலையாக விரும்புபவர்கள் மற்றும் இடஒதுக்கீட்டை பயன்படுத்த விரும்பாதவர்கள் இந்த வசதியை பயன் படுத்திக்கொள்ளலாம். இது அவரவர் தனிப்பட்ட சுதந்திரம்.

இப்படி சேர்ப்பதால் பின்விளைவுகள் ஏதும் ஏற்படுமோ என்ற தயக்கம் வரலாம். அரசின் இடஒதுக்கீட்டு சலுகை கிடைக்காது என்பதை தவிர வேறு எந்த பின்விளைவும் கிடையாது.. மற்றபடி உங்கள் விருப்பம்.. 

நன்றி : Cartoonist Bala

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233202  உறுப்பினர்கள்: 3600 | புதிய உறுப்பினர்: vinodh
avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: செய்தி கதம்பம் - இதையும் படிங்க

Post by ஸ்ரீராம் on Tue Jun 18, 2013 9:15 am

சவுதி வாழ் இந்தியர்களுக்கு,,,

Exit செல்லும் தங்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் கீழ் கண்ட எண்களை தொடர்பு கொள்ளவும்...


நன்றி முகநூல் 

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233202  உறுப்பினர்கள்: 3600 | புதிய உறுப்பினர்: vinodh
avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: செய்தி கதம்பம் - இதையும் படிங்க

Post by ஸ்ரீராம் on Wed Jun 19, 2013 4:03 pmஎத்தனை காலமானாலும் கெட்டு போகாத ஒரே பொருள் "தேன் "....
தேன் என்று சொல்லி சக்கரைபாகுவை விற்று விடுவோரும் உண்டு .தேன் வாங்கும்போது உண்மையான தேன்தானா
என அறிந்துகொள்ள 2 வழிகள் ..

1) ஒரு காகிதத்தில் ஒரு துளி தேனை வைத்தால்
அது காகிதத்தால் உறிஞ்சப்படாமல்.பரவாமல்
. அப்படியே நிற்கும் .

2) ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு துளி தேனையிட்டால்
அது நீரோடு கரையாமல் , நேராக கீழே சென்று அமரும்


நண்பர்களிடம் பகிரவும்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233202  உறுப்பினர்கள்: 3600 | புதிய உறுப்பினர்: vinodh
avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: செய்தி கதம்பம் - இதையும் படிங்க

Post by ஸ்ரீராம் on Wed Jun 19, 2013 4:05 pmநாசா நடத்திய போட்டியில் புற ஊதாக்கதிர்கள் பற்றி கட்டுரை சமர்ப்பித்து நெதர்லாந்து சென்று முதல் பரிசை தட்டிக்கொண்டு வந்துள்ளனர் நம் தமிழக மாணவிகளான துர்காவும்,திவ்யாவும். இந்த மாணவிகளை கட்டுரைக்காக சந்தித்தபோது "பல ஐரோப்பிய நாடுகள் வெளிச்சம் இல்லாமல் பனியிலேயே மூழ்கிக் கிடக்கின்றன.மற்ற நாடுகளில் இல்லாத சூரியஒளி என்ற அற்புதம் நம்ம நாட்டுல அதிகமாவே இருக்கு.மின்சாரப் பற்றாக்குறை என்று குறைகூறும் நம் ஆட்சியாளர்கள் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரித்தால் என்ன என்று முற்போக்குத்தனமான தங்கள் கருத்தை கூறினர் இந்த மாணவிகள். நம்ம தமிழகத்துல இந்தியாவுக்கே மின்சாரம் தர நெய்வேலி, கல்பாக்கம் இருக்கு. ஆனா 12 மணிநேர பவர்கட். பல மாநிலங்களில் அணுவுலையும் இல்லை, நிலக்கரி சுரங்கமும் இல்லை. ஆனா அங்கெல்லாம் மின்சாரத் தடையே கிடையாது. அவர்களால் மட்டும் எப்படி சாத்தியப்படுத்த முடிகிறது? கூடங்குளம் அமைத்தால் மின்சாரத் தடையே இருக்காது என்பதெல்லாம் ஊரை ஏமாத்துற வேலை .. இதுக்கு அப்துல் கலாமும் உடந்தை..." என்றனர்.Vini Sharpana
-----------------------------------------------------------
நீங்கள் சோலார் மின்சாரம் பற்றிய எதிர் பிரச்சாரங்களையும், அணுவுலையை ஆதரிப்பவர்களின் பின்னால் இருக்கிற கமிஷன் காசு அடிக்கிற பொய் பிரச்சாரங்களையும் நம்புபவராக இருந்தால் .... சோலார் பேனல்கள் மற்றும் சோலார் மின்சாரம் தயாரிப்பாளர்களின் கம்பெனிகளின் ஆண்டு இறுதி அறிக்கையை பார்ப்பீர்களானால் உண்மையில் வியந்துப் போவீர்கள். சென்ற ஆண்டை விட இந்த ஆண்டின் மத்தியிலேயே அவை பெரும் வளர்ச்சியையும், லாபத்தையும் அடைந்துள்ளன. 2012 ஆம் ஆண்டில் அமெரிக்காவை சோலார் பேனல் மின்சார சக்தி திட்டங்கள் தான் ஆக்ரமித்து இருக்கும் அந்த துரையின் வளர்ச்சி தான் சீராக , நன்றாக வளர்ந்து வருகிறது என குறிப்பாக அமெரிக்காவில். அதிகமான சூரிய எரிசக்தி தொழில் கூட்டமைப்பு மற்றும் GTM ஆராய்ச்சி அறிக்கை கூறுகிறது, இதுவரை 742 மெகாவாட் பெறுகிற அளவுக்கு சோலார் பேனல்கள் நிறுவப்பட்டு 2012 இரண்டாம் காலாண்டில்.. இரு மடங்கு.. இருமடங்கு சூரிய தகடுகளின் தேவை அதிகரித்து இருக்கிறது.


இந்த ஆண்டு 3.2 GW இரண்டு பயன்பாட்டு அளவு சோலார் பேனல்கள் திட்டங்கள் வீடுகள், பள்ளிகள் , மருத்துவ மனைகள் , தனியார் அலுவலகங்கள் மற்றும் வணிக கூரைகளுக்கு நிறுவப்பட்ட இருக்கின்றன. 447 மெகாவாட் மற்றும் இன்னும் 20 திட்டங்கள் மூலம், மிகப்பெரிய சோலார் தகடுகளின்தேவைகள் அதிகரித்து இருக்கிறது.


அமெரிக்காவின் கலிபோர்னியா, அரிசோனா, மற்றும் நியூ ஜெர்சி போன்ற சில முக்கிய மாநிலங்களில் சோலார் வளர்ச்சி திட்டங்களுக்காக தனிப்பட்ட அரசு கொள்கைகள் வகுக்கப்பட்டு இருக்கின்றன. உள்ளன.
கலிபோர்னியாவில் சூரிய திறன் ஒரு கணிசமான அளவு ஏற்கனவே உள்ளது. நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை அணு உலை, ஒரு நிலக்கரி பயன்படுத்தபடும் அனல்மின் நிலையம் ஆகியவற்றுக்கு மாற்றாக சோலார் மின்சாரம் வளர்ந்து வருவதையும், வளர்ந்தாகவேண்டிய கட்டாயத்தையும் பற்றிய ஒரு கட்டுரையை இந்த வாரம் வெளியிட்டு இருக்கிறது. சோலார் சக்தியினை பற்றிய யோசனைக்கு இதுவே ஒரு உச்ச நேரம் என்று அது வருணித்து உள்ளது.


நன்றி: அறிவோம் அறிவியல்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233202  உறுப்பினர்கள்: 3600 | புதிய உறுப்பினர்: vinodh
avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: செய்தி கதம்பம் - இதையும் படிங்க

Post by ஸ்ரீராம் on Wed Jun 19, 2013 4:07 pmமரம் வளர்ப்போம் மழை பெறுவோம் 

நன்றி முகநூல்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233202  உறுப்பினர்கள்: 3600 | புதிய உறுப்பினர்: vinodh
avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: செய்தி கதம்பம் - இதையும் படிங்க

Post by ஸ்ரீராம் on Fri Jun 21, 2013 11:31 amஉபயோகமான செய்தி, பகிர்ந்து கொள்ளுங்கள்.... ஒருநாள் உங்களுக்கே உதவ நேரிடலாம்.....


நீங்கள் செல்லும்போது வழியில் ஏதாவது முக்கிய ஆவணங்களான,

~~~PASSPORT
~~~DRIVING LICENCE,
~~~PAN CARD,
~~~VOTER ID,
~~~RATION CARD,
~~~BANK PASSBOOK,
~~~ATM CARD முதலியவற்றில் ஏதாவதை கண்டால், உடனடியாக அவற்றை அருகில் உள்ள POST BOX - ல் போட்டு விடவும். அஞ்சலகம் அதனை உரிமையாளர்களிடம் சேர்த்து விடும்.

உதவும் மனப்பான்மை கொண்ட, நல்ல உள்ளங்கள் இதனை அதிகமாக SHARE செய்து மற்றவர்களுக்கும், விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இதனை SHARE செய்வதினால் எனக்கென்ன பயன் என்று நினைத்து, இதனை SHARE செய்யாமல் செல்லும் சகோதர சகோதரிகளே...... ஒரு நாள் இது உங்களுக்கும் உதவக்கூடும் என்பதனை மறந்திடவேண்டாம்.

அக்கறையுடன் இதனை SHARE செய்த, அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..நன்றி முகநூல் 

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233202  உறுப்பினர்கள்: 3600 | புதிய உறுப்பினர்: vinodh
avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: செய்தி கதம்பம் - இதையும் படிங்க

Post by ஸ்ரீராம் on Fri Jun 21, 2013 11:36 amஇரயில் பயணத்தில்.......
*************************

ஒரு நாள் தந்தையும் , அவரின் 14 வயது மகனும் ரயிலில் பிரயாணம் செய்து கொண்டிருந்தனர்.

அந்த சிறுவன் ஜன்னலின் வழியே வெளியே எட்டி பார்த்து,

"மேகம் நம் கூடவே வருகிறது", என அவர் தந்தையிடம் கூறினான்.

அதற்கு தந்தையும், "ஆமா "என்று சொன்னார் .

கொஞ்ச நேரம் கழித்து,

" அப்பா மரம்,செடியெல்லாம் நம்மை கடந்து செல்கின்றன !!!" என்று சொன்னார். அதற்கும் தந்தை "ஆமாம்" என்று சொன்னார்.

இதை கவனித்து கொண்டிருந்த எதிரில் இருந்த தம்பதியினர்,

"இவனை கொஞ்சம் மருத்துவ மனையில் சென்று காண்பிக்க கூடாதா? ... நீங்களும் அவன் சொல்வதை சரி என்று ஒப்புக்கொள்கிறீர்களே .. இது தவறு இல்லையா" என்று கேட்டனர்.

அதற்கு அந்த தந்தை சொன்னார்,

"ஆமாம்! நாங்கள் மருத்தவமனையில் காட்டி விட்டு தான் இப்போது வருகிறோம். அவருக்கு பிறவியில் இருந்து கண் பார்வை கிடையாது அந்த குறைபாடு இப்பொழுது தான் சரி செய்ய பட்டது."

==="ஒவ்வொருவருக்கும் அவரவர் வாழ்கையில் ஒரு விதமான கஷ்டம் இருக்கும். நாம் அதை தெரியாமல் விமர்சிக்க கூடாது!!!"

நன்றி: Jayant Prabhakar

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233202  உறுப்பினர்கள்: 3600 | புதிய உறுப்பினர்: vinodh
avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: செய்தி கதம்பம் - இதையும் படிங்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum